PDA

View Full Version : வரம்...



rambal
01-04-2003, 11:32 AM
இன்பம்
அதில் கொஞ்சம்
பூசினாற்போல் துன்பம்...

அமுதம்
அதோடு தொட்டுக் கொள்ள
ஆலாலம்

சிந்து
அவ்வப்பொழுது அவசியமாய்
முகாரி...

நல்ல உணவு
உணவின் அருமை தெரிய
அவ்வப்பொழுது பட்டினி...

இப்படி ஒரு சமச்சீரான
வாழ்க்கையைத்தான் வரமாக
கேட்க வந்தேன்...

ஒரே வரத்தில்
அத்தனையும் தருகிறேன்
என்று கூறி
காதலை அல்லவா என்மீது
விட்டெறிந்துவிட்டாய்......

aren
01-04-2003, 12:41 PM
காதலுக்கு இனை வேறெதுவுமில்லை என்பதை தெள்ளத் தெளிவாக கூறிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

இளசு
01-04-2003, 07:13 PM
எல்லாம் காதல் தரும்.
காதல் தரும் எல்லாம் ராமின் கவிதை தரும்.

Nanban
05-11-2003, 01:43 PM
வாழ்வின் அணைத்து முரண்களையும் வழங்கி விடக்கூடிய சக்தி தான் காதல்....

அதனாலயே அழியாத வரமாய் காதல்.......

மூட்டப்படும் இதயங்கள் தான் வெந்து மடியும்.......

மூட்டிய தீ காயப்படாது......

சக்திக்கு அழிவில்லை; மாற்றம் மட்டுமே உண்டு...... காலத்தை ஒட்டினாற்போல....

அதனால் தான் காலம் காலமாய் காதலர்கள் வந்து கொண்டேயிருக்கிறார்கள்..............

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2003, 02:24 PM
அழகான கவிதை. இளசுவின் பாராட்டும் கவிதை.

நண்பனும் நன்றாகச் சொல்லியுள்ளார்

இளந்தமிழ்ச்செல்வன்
05-11-2003, 02:25 PM
அழகான கவிதை. இளசுவின் பாராட்டும் கவிதை.

நண்பனும் நன்றாகச் சொல்லியுள்ளார்

Nanban
10-01-2004, 11:03 AM
இருமுறை பாராட்டிய இ.த.செ. நன்றி..........