PDA

View Full Version : வெட்கங்கெட்ட மகளா?!!!

poo
11-04-2003, 05:22 PM
அம்மா...
ஓடிவராதே..
சிவந்த கன்னங்களை கணக்கெடுக்க.
அங்கே பார் அந்த சிந்திக்காரன்
கணக்கில் பாக்கி வைத்துப் போகிறான்...

உன் சமையல்
பலமாம் பல நளமகா ராஜர்கள்
பூரித்துப் போகிறார்கள்..
தமயந்திகளை ஏப்பம் விட்டபடி..

உன் படையல்
பல பிரம்மாக்களுக்குத்தான் விருந்தாகின்றன..
அந்த பிரம்மாக்கள் கருத்தடை
முறையாய் போட்டிருக்கிறார்களாவென
நுழைந்து பாரம்மா நுழைவறையிலே நிறுத்தி..

நீதான் எனக்கு பாலூட்டினாய்..

விபச்சாரத் தொட்டிலில்
வறுமையில் நீ இட்டாலும்
தாய்க்கே பாலூட்டும்
என் பாக்கியம் கண்டு
வெட்கங்கள் விலகிப் போகின்றன
அம்மா..

ஏனம்மா ..நான் வெட்கங்கெட்ட மகளென
எவரேனும் சொல்வார்களா இனியும்?!!

Nanban
11-04-2003, 05:30 PM
மிக்க நன்று நண்பரே - கொஞ்சம் edit செய்தால், உற்றுக் கவனியுங்கள்....

poo
11-04-2003, 05:47 PM
மிக்க நன்று நண்பரே - கொஞ்சம் edit செய்தால், உற்றுக் கவனியுங்கள்....

உற்று நோக்கினால் அர்த்தம் புரியுமே?!!! (வியப்பாய் உள்ளது நண்பரே.. தாங்களா?!... சரி உங்களுக்காக!!...)

Nanban
11-04-2003, 05:56 PM
மிக்க நன்று நண்பரே - கொஞ்சம் edit செய்தால், உற்றுக் கவனியுங்கள்....

உற்று நோக்கினால் அர்த்தம் புரியுமே?!!! (வியப்பாய் உள்ளது நண்பரே.. தாங்களா?!... சரி உங்களுக்காக!!...)

வியப்பு ஏதுமில்லை. அந்த இணையத் தளத்தின் பெயரை ஒருமுறை உபயோகித்து விட்டேன். அதைக் கத்தரித்து விட்டு, எல்லாவற்றையுமே ' * ' ஆக்கிவிட்டிருந்தார்கள். இந்தப் புது identityஐ பழயதோடு கலப்பது விரும்பப்படவில்லை என்பதனால் சொன்னேன்.....

அவ்வளவு தான்.....

இளசு
11-04-2003, 05:56 PM
இன்னும் எனக்கு இருபொருள் தம்பீ
என் (மனக்) கண்ணில் கோளாறா...
தமிழுக்கே உண்டான வரலாறா...????

அருமைக் கவிதை தந்த தம்பிக்கு
அண்ணனின் அன்பு முத்தம்..!!!!!

poo
11-04-2003, 06:12 PM
அண்ணா எனக்கு விளங்கவில்லை... ஏன் என்(ன) குற்றமோ?!!!

poo
11-04-2003, 06:12 PM
வியப்பு ஏதுமில்லை. அந்த இணையத் தளத்தின் பெயரை ஒருமுறை உபயோகித்து விட்டேன். அதைக் கத்தரித்து விட்டு, எல்லாவற்றையுமே ' * ' ஆக்கிவிட்டிருந்தார்கள். இந்தப் புது identityஐ பழயதோடு கலப்பது விரும்பப்படவில்லை என்பதனால் சொன்னேன்.....

அவ்வளவு தான்.....

அய்யா... நான் இங்கே கவிதையில் குறிப்பிட்டது அந்த இணையத்தின் பெயரையல்ல... அவளின் தொழிலை... இதை புரிந்து கொள்ளாமல் கூறியுள்ளீர்கள் என்று சொன்னேன்!!!

Nanban
11-04-2003, 06:25 PM
நான் இங்கே கவிதையில் குறிப்பிட்டது அந்த இணையத்தின் பெயரையல்ல... அவளின் தொழிலை...

அப்படியும் இருக்கலாமோ? சில சமயங்களில் சில கவிதைகள் படைத்தவனால் தான் விளங்கச் செய்ய முடிகிறது!!! என்ன செய்ய?

மிக்க நன்றி விளக்கத்திற்கு......

Narathar
12-04-2003, 05:08 AM
இவ்வாரனவர்களை சமுதாயத்தில் உருவாக்கிவிடும்
சமுகத்தில் நாமும் வாழ்கிறோமே என்று கவலைப்படுகிறேன்
நல்ல கவிதை!!

gans5001
22-04-2003, 02:11 AM
உன் படையல்
பல பிரம்மாக்களுக்குத்தான் விருந்தாகின்றன..
அந்த பிரம்மாக்கள் கருத்தடை
முறையாய் போட்டிருக்கிறார்களாவென
நுழைந்து பாரம்மா நுழைவறையிலே நிறுத்தி..

உள்ளத்தில் அறைந்த வரிகள் பூ. வாழ்த்துக்கள்

gankrish
22-04-2003, 06:41 AM
பூ எப்படி உதித்தது இக்கவிதை. அருமை...