PDA

View Full Version : வேகத்தடைகள்..............



Nanban
10-06-2004, 07:45 PM
வேகத்தடைகள்

வேகத்தடைகள்
வீதியெங்கும் உண்டு -
எங்கென்று தான்
யாரும் அறிவதில்லை.

தாண்டும் உயரத்தில்
தரையிலும் கிடக்கலாம் -
அல்லது மலையைப் போல
மதிலாகவும் நிற்கலாம்.
கடப்பதற்கு
எளிதாகவும் இருக்கலாம்
கடக்கவே இயலாமல்
வாழ்க்கையே
அடைந்து போகவும் செய்யலாம்.

சிலரால் தன்னாலயே
தாண்டிவிட முடிகிறது.
சிலரால் தூக்கிவிட்டாலும்
தாண்ட முடியாமலே போய்விடுகின்றது.

மனம் உணரும் தடைகளை
கண்கள் அறிவதில்லை -
வடிவமற்றதனால்.

கண்ணுக்குத் தெரியாவிட்டாலும்
கை நழுவிப் போகும் வாய்ப்புகளை
மறைப்பதில்லை -
தடை தாண்டா தவிப்பின் வலியில்
வளர்ந்து கொண்டே போகும்
தடைகளையும் தான்.

எம்பிக் குதித்து
எகிறிக் குதித்து
தாண்டத் துடிக்கும் என்னால்
வாகனங்களைத் தான்
மாற்றிப் பார்க்க முடிகிறது -
தடைகளை அல்ல.

தட்டுத் தடுமாறி,
உருண்டு புரண்டு
ஒரு நாள் தடை தாண்டிவிட்டுத்
திரும்பிப் பார்த்தால்,
காணாமல் போயிருந்தது -
வேகத்தடை மட்டுமல்ல,
வேகத்தடைகளைத் தூக்கி நிறுத்தி
வழி மறித்து நின்ற
மனதையும் தான்.

thamarai
10-06-2004, 09:00 PM
வேகத்தடைகள் கொண்டு அருமையாய் ஓர் கவி.
வேகத்தடையோடு மனதினை ஒப்பிட்ட விதம் அருமை.

வாழ்த்துக்கள் நண்பன்....

இளசு
10-06-2004, 10:30 PM
சிந்திக்க வைத்த வரிகள்..
பாராட்டுகள் நண்பன்..


எகிறிக் குதித்து
தாண்டத் துடிக்கும் என்னால்
வாகனங்களைத் தான்
மாற்றிப் பார்க்க முடிகிறது -
தடைகளை அல்ல.


ஆதிவாசி கால்நடைகள்
அரச குமாரன் புரவிப்பாய்ச்சல்...

திண்ணை முடங்கிய சோம்பேறி
கால் முடங்கிய பரிதாபி..

விமானப் பயண வியாபாரி
விண்வெளிப் பயண விஞ்ஞானி...

காலம், பலம், பணம்...
இரு முனை இருப்பாருக்கு ஏது இங்கே தடை..

நடுவில் அல்லாடும்
நடுத்தர வர்க்கத்துக்கு...
இது சரி, அது தவறு..
இங்கே நேரம் காத்திடு.. இங்கே இப்படிப் பேசிடு..
இது உன் நிலை என்றால்.. அதற்கு ஆசைப்படாதே..

எத்தனை தளைகள்.. தடைகள்..
மனமென்னும் இரும்புருக்கி
தலைமுறை சொத்தாய் தந்த தளைகள்..

விட்டு விடுதலையானால்....?

தடை அமைத்த மனம்..
தடையோடு அதுவும் காணாமல் போகும்..

பாரதி
11-06-2004, 01:45 AM
நண்பரே...

சில வேகத்தடைகள் ஆபத்தானவை
சில வேகத்தடைகள் அகற்றப்பட வேண்டியவை
சில வேகத்தடைகள் மிகவும் அவசியமானவை.
................

samuthira
11-06-2004, 04:26 AM
நண்பரே நல்ல சிந்தனை., பாராட்டுக்கள்.,

தடைகளை கண்டு
தடுமாற்றம் கொள்ளாமல்
தன் நம்பிக்கை கொண்டு
தடைகளை தள்ளு....

அங்கா இங்கா
எங்கே என
குழம்பி நின்றால்
தடைகள் மலையளவு

இங்கு தான்
இப்படி தான்
என நிலைத்து நின்றால்
தடைகள் தரையோடு...

முளைக்கும் விதைக்கு
மண் தடையில்லை
அரும்பும் மொட்டுக்கு
காம்பு தடையில்லை..

இன்னும் சொன்னால்
இயற்கையாய் தடை
ஏது மில்லை செயற்கையாய்
தடை நம் சிந்தனை.....

samuthira
11-06-2004, 04:28 AM
எத்தனை தளைகள்.. தடைகள்..
மனமென்னும் இரும்புருக்கி
தலைமுறை சொத்தாய் தந்த தளைகள்..

விட்டு விடுதலையானால்....?

தடை அமைத்த மனம்..
தடையோடு அதுவும் காணாமல் போகும்..


தன் நம்பிகை தரும் வரிகள்., பாராட்டுக்கள் நண்பர் இளசு அவர்களே.,

kavitha
11-06-2004, 04:37 AM
நண்பன் அவர்களை தொடர்ந்து இளசு அண்ணா, சமுத்திரா... ஆஹா என்னையும் எல்லாத்தடைகளையும் உடைத்து கவிதை எழுத உந்துகிறது கை!
மனம் மகிழ்ச்சியில்...
நண்பனின் வார்த்தைகள் கரைபுரண்டு ஓடுகிறது.. தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசிக்க காத்திருக்கிறேன் நண்பரே!

Nanban
11-06-2004, 07:32 PM
சிந்திக்க வைத்த வரிகள்..
பாராட்டுகள் நண்பன்..

[quote] எகிறிக் குதித்து
தாண்டத் துடிக்கும் என்னால்
வாகனங்களைத் தான்
மாற்றிப் பார்க்க முடிகிறது -
தடைகளை அல்ல.

ஆதிவாசி கால்நடைகள்
அரச குமாரன் புரவிப்பாய்ச்சல்...

திண்ணை முடங்கிய சோம்பேறி
கால் முடங்கிய பரிதாபி..

விமானப் பயண வியாபாரி
விண்வெளிப் பயண விஞ்ஞானி...

காலம், பலம், பணம்...
இரு முனை இருப்பாருக்கு ஏது இங்கே தடை..

நடுவில் அல்லாடும்
நடுத்தர வர்க்கத்துக்கு...
இது சரி, அது தவறு..
இங்கே நேரம் காத்திடு.. இங்கே இப்படிப் பேசிடு..
இது உன் நிலை என்றால்.. அதற்கு ஆசைப்படாதே..

எத்தனை தளைகள்.. தடைகள்..
மனமென்னும் இரும்புருக்கி
தலைமுறை சொத்தாய் தந்த தளைகள்..

விட்டு விடுதலையானால்....?

தடை அமைத்த மனம்..
தடையோடு அதுவும் காணாமல் போகும்..

இந்தக் கவிதைக்கு, இதைவிட பொருத்தமாக எந்தப் பாராட்டுரையும் இருக்க முடியாது. நன்றி, இளசு அவர்களே....

Nanban
11-06-2004, 07:34 PM
வேகத்தடைகள் கொண்டு அருமையாய் ஓர் கவி.
வேகத்தடையோடு மனதினை ஒப்பிட்ட விதம் அருமை.

வாழ்த்துக்கள் நண்பன்....

வேகத்தடைகளை எழுப்பி நிற்பதே மனம் தான். அந்த மனதின் கட்டுப்பாடுகளை நம் கட்டுக்குள் வைத்துக் கொள்வதே நம் வாழ்க்கைப் போராட்டம்....

நன்றி தாமரை.....

Nanban
11-06-2004, 07:37 PM
நண்பரே...

சில வேகத்தடைகள் ஆபத்தானவை
சில வேகத்தடைகள் அகற்றப்பட வேண்டியவை
சில வேகத்தடைகள் மிகவும் அவசியமானவை.
................

வேகத் தடைகள் நிதானத்தைக் கூட்ட என்ற அளவில் தேவை தான்....

ஆனால், அடுத்த பக்கம் என்ன என்று அறிய இயலா அளவில் மதிலாக எழும்பி நிற்குமானால் அது ஆபத்தானது - அகற்றப் பட வேண்டியது தான்... நன்றி பாரதி.....

Nanban
11-06-2004, 07:39 PM
நண்பரே நல்ல சிந்தனை., பாராட்டுக்கள்.,

தடைகளை கண்டு
தடுமாற்றம் கொள்ளாமல்
தன் நம்பிக்கை கொண்டு
தடைகளை தள்ளு....

அங்கா இங்கா
எங்கே என
குழம்பி நின்றால்
தடைகள் மலையளவு

இங்கு தான்
இப்படி தான்
என நிலைத்து நின்றால்
தடைகள் தரையோடு...

மூளைக்கும் விதைக்கு
மண் தடையில்லை
அரும்பும் மொட்டுக்கு
காம்பு தடையில்லை..

இன்னும் சொன்னால்
இயற்கையாய் தடை
ஏது மில்லை செயற்கையாய்
தடை நம் சிந்தனை.....


தடைகளைத் தாண்டும் விதமாக சமுத்திராவின் முத்திரை பதித்த கவிதை.... தனியாகவும் இதை வெளியிடுங்கள் சமுத்திரா... பாராட்டுகளும், வாழ்த்துகளும்.....

Nanban
11-06-2004, 07:40 PM
நண்பன் அவர்களை தொடர்ந்து இளசு அண்ணா, சமுத்திரா... ஆஹா என்னையும் எல்லாத்தடைகளையும் உடைத்து கவிதை எழுத உந்துகிறது கை!
மனம் மகிழ்ச்சியில்...
நண்பனின் வார்த்தைகள் கரைபுரண்டு ஓடுகிறது.. தொடர்ந்து உங்கள் கவிதைகளை வாசிக்க காத்திருக்கிறேன் நண்பரே!

எழுத உந்தும் கையை
கட்டிப் போட்டது
எந்தத் தடையோ....

பரஞ்சோதி
12-06-2004, 04:30 AM
நண்பர் நண்பன் அவர்களே உங்கள் கவிதை அருமை, அத்துடன் இளசு அண்ணாவின் கருத்து கவிதையும், அன்பர் சமுத்திரா அவர்களின் பதில் கவிதையும் அருமை. பாராட்டுகள்.

தஞ்சை தமிழன்
12-06-2004, 05:14 AM
நண்பணின் தடைபற்றிய கவிதை அருமை.
அந்த தடையை மீறவைக்கும் இளசு, சமுத்திரா வின் தன்னன்பிக்கை கவிதைகள் மீண்டும் அருமை.

kavitha
12-06-2004, 05:33 AM
நடுவில் அல்லாடும்
நடுத்தர வர்க்கத்துக்கு...
இது சரி, அது தவறு..
இங்கே நேரம் காத்திடு.. இங்கே இப்படிப் பேசிடு..
இது உன் நிலை என்றால்.. அதற்கு ஆசைப்படாதே.
இக்கருத்தை ஆமோதிக்கிறேன்.



எழுத உந்தும் கையை
கட்டிப் போட்டது
எந்தத் தடையோ....
_________________
நண்பன்


இப்படி வார்த்தைகளை கேட்டு ஏங்கிய மனம் நண்பரே!



நிறைந்த செங்காய்களில்
பழுத்த கனியினைத்தேடும்
இனிய உளவாக குறள்
ஒரு தடை!

ஒவ்வொன்றுக்கும்
ஒரு எதிர்வினை
உண்டென
சொன்ன ஐன்ஸ்டீன் ஒரு தடை!


ஆர்வமுந்தும் மூளையால்
ஓடும் கைகளை
இழுத்து நிறுத்தும்
அவமானம் எனும்
அந்நியனும் ஒரு தடை!

எல்லாம் உடைந்த பின்னும்
ஏதும் உடையாதிருக்க
வேண்டுமென
அடித்துக்கொள்ளும்
நெஞ்சம் ஒரு தடை!

மன்மதன்
12-06-2004, 10:49 AM
மனம் போடும் வேகத்தடைகள் பற்றிய அருமையான கவிதை பதிவு.. பாராட்டுக்கள் நண்பன்..

அன்புடன்
மன்மதன்

Nanban
12-06-2004, 08:03 PM
எல்லாம் உடைந்த பின்னும்
ஏதும் உடையாதிருக்க
வேண்டுமென
அடித்துக்கொள்ளும்
நெஞ்சம் ஒரு தடை!


இதைத் தான் எதிர்பார்த்தேன்....

நன்றி கவிதா.....

நன்றி மன்மதன் - மனம் எழுப்பும் தடைகளைத் தாண்டுவது கஷ்டமல்ல - அப்படி தடைகளை எழுப்பி இருக்கிறதை அறிவது தான் கடினமான காரியமாகும்

இக்பால்
13-06-2004, 11:58 AM
வேகமில்லாமல் போய் வேகத் தடைகளை வெல்ல...வாழ்த்துகள்.

தொடருங்கள் பயணத்தை.-அன்புடன் அண்ணா.

Nanban
15-06-2004, 07:53 PM
வேகமில்லாமல் போய் வேகத் தடைகளை வெல்ல...வாழ்த்துகள்.

தொடருங்கள் பயணத்தை.-அன்புடன் அண்ணா.

வேகமில்லாமல் பயணிக்க முடியாது. எத்தனை வேகமோ, அத்தனைக்கத்தனை வாய்ப்புகள். வேகமாக முடிவெடுக்க தயங்குவதினாலே வாய்ப்புகள் கை நழுவிப் போக வாய்ப்புண்டு. வேகமாக முடிவெடுக்கிறேன் என்று விழையும் பொழுது, அத்தனை ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று பலரும் காட்டும் பயம்....

வேகம், வேகமில்லாமை - இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட போராட்டம் தானே, வேகத் தடைகள்...

இளசு
15-06-2004, 10:23 PM
கவிதா, சமுத்திரா...

நண்பனின் கவிதைக்கு ஜரிகை சேர்த்தமைக்கு பாராட்டுகள்..

kavitha
16-06-2004, 04:10 AM
நன்றி அண்ணா :)

samuthira
17-06-2004, 03:20 AM
நன்றி நண்பர் இளசு அவர்களே....