PDA

View Full Version : பிரியா விடை கொடு தோழியேNanban
11-04-2003, 04:33 PM
பிரியா விடை கொடு,
தோழியே......

நீ எழுதிய மின் அஞ்சல் கிடைத்தது,
ஒரு புனை பெயரில்.
பதில் எழுத வேண்டினாய் -
என் பெயரில் அல்ல,
நீ தந்த ஒரு புனை பெயரில்.

தொலைபேசியின் இணைப்பின்
ஒரு முனை உன் கணவனின்
மேஜையின் மீது....

பெண் தோழிகள் என்றாலும்
நாணமின்றி கடைக்கண்
பார்வை நோக்கும்...
காமத்தினால் அல்ல,
உனக்கு காமுகன் உண்டா
என்ற தவிப்பில்.

தபால்காரனை நேரிட்டு,
உன் கடிதங்கள் பறிக்கப் படுவதால்,
நீயும் தேடுகிறாய் ஒர் வழி......

புரிந்து கொள்ளுதல் இன்றி
புணர்ச்சிக்காக ஆகிப் போனது
உன் மண வாழ்க்கை என்கிறாய்...

புரிந்து கொள்ளுதல்
இருபாலருக்குமே பொதுவென்பதை
புரிந்து கொள்ளுதல்
உனக்கும் வேண்டும், தோழியே....

மனைவிக்குத் தோழன்
காதலன் தான்
என்ற சமூகக் கோட்பாட்டிற்கு
உன் கணவனை மட்டும்
பழிப்பதென்பது தவறு
என்ற புரிதல் உன்னிடம் உண்டா?

தொடர்புகள் நின்று போவதாலே
அன்பு விட்டுப்போம் என்ற
உன் மனம்
நம் நட்பைப் புரிந்து கொண்டதா?

பார்வையில் தோன்றாதது
பாருலகை விட்டுப் போயே விடும்
என்று சொல்லும், நீ
என்ன குழந்தையா?

வாழ்ந்திருப்பேன், உன்னைச் சந்திக்க
வாய்ப்புகள் வாழ்ந்திருக்கும் வரை...
வாய்ப்புகளும் வாழ்ந்திருக்கும்
நாம் வாழ்ந்திருக்கும் வரை....

காதலுக்கு ஒருவன்....
தோழமைக்கு இவ்வுலகம்...
காதலின் அன்பையும்
தோழமையின் அன்பையும்
வித்தியாசப் படுத்திப் பார்க்க
உன் கணவனுக்கு
மொழி கற்றுக் கொடு

புனை பெயரில் தொடர்புகள்
வேண்டாமடியே என் தோழி.
பின் காதலின், தோழமையின் மொழி
புரியாது போனது
நாமாகத் தான் இருப்போம்....

ஆதலால்,
பிரியாத விடை கொடு,
வாய்ப்புகள் வாழ்ந்திருக்கும் வரையிலும்....
நட்புடன்...

இளசு
11-04-2003, 05:21 PM
உதறும் பெருந்தன்மை உனக்குண்டு

கல்யாண உறவு வந்த பின்னே
ஒட்டி வரும் பழைய (ஆண்) நட்பை
ஒத்துக்கொள்ளும் உண்மை ஆண்மை
கணவரில் இங்கே
எத்தனை பேருக்கு உண்டு..

பேருக்கு சிரித்துவிட்டு
நாசூக்கான கேள்விகளில்
ஊசி ஏற்றா
உத்தமர்கள் யார் இங்கு..???

புது பொது நோக்கு தெரியா கணவன் இனம்..
திருந்தும் வரை
பிரியா விடையே பல நட்புக்கு
முடிவாய் விழும் திரை...

Narathar
12-04-2003, 05:18 AM
நண்பன் சம்பந்தப்பட்டவர் என்றால்
இளசு பாதிக்கப்பட்டவர் "போலல்லவா" இருக்கு?
இருவரது கவிதைகளும் பேசியது நிஜம்
நல்ல கவிதை இல்லை கவிதைகள்!!

puppy
08-01-2004, 07:09 AM
அருமையான கவிதைகள் .........நண்பனுக்கு பாராட்டுக்கள்

Nanban
08-01-2004, 07:13 AM
நன்றி - இளசு, நாரதர் மற்றும் பப்பி அவர்களுக்கு.

இது சுயசரிதையில் ஒரு சிறு துளி........

இக்பால்
08-01-2004, 07:26 AM
படித்தேன் நண்பரே. -அன்புடன் இக்பால்.

Nanban
08-01-2004, 09:46 AM
படித்தேன் நண்பரே. -அன்புடன் இக்பால்.

படித்துத் தெரிவிக்க கருத்து ஏதுமில்லையா......?

kavitha
08-01-2004, 10:16 AM
விளங்க வைக்க மொழி இருக்கிறதா நண்பரே?

நட்பிற்கும், காதலுக்கும் வரையறுத்துக்கூறி விட்டீர்கள். எத்தனை தெளிவு!!
நல்ல நட்புக்கவிதை!!!

சுய சரிதையா? எங்கே உள்ளது??

Nanban
08-01-2004, 10:32 AM
சுயசரிதை என்று தனித்து என்று ஒன்றுமில்லை......

எழுதிய கவிதைகளில் ஆங்காங்கே, ஒளிந்திருக்கும் செய்திகள் தான்......

அதில் இது ஒரு துளி என்று சொல்ல வந்தேன் - அவ்வளவு தான்.......

பாலமுருகன்
08-01-2004, 12:55 PM
ஒரு துளியே இவ்வளவு சிறப்பாக உள்ளதென்றால்...

பாராட்டுக்கள் நன்பனே

பாலா

Nanban
08-01-2004, 02:47 PM
நன்றி, இக்பால், கவிதா, பாலா........

இந்த கவிதை ரசனைகள் தொடரட்டும்.......

இ.இசாக்
08-01-2004, 05:59 PM
நட்பு பிரிதலால் முடியுமா.
எங்கும் நினைவுகளால் நிறைப்பது தான்
நட்பு.

அவ்வப்போது உண்மைகளை பேசுவதால்
நண்பன் உயர்ந்த இலக்கியவாதி தான்
(இங்கே யாரும் ஜெயமோகன்கள் இருந்தால் வாசிக்க வேண்டாம்)

Nanban
08-01-2004, 06:10 PM
நன்றி இசாக். சில சமயங்களில் சொந்த அனுபவங்களை எழுதும் பொழுது அது இயற்கையாக சிறப்பாக அமைந்து விடுகிறது. அந்த வகையில் இந்தக் கவிதையும் ஒன்று.....

நிலா
08-01-2004, 06:15 PM
அருமை நண்பரே!பாராட்டுகள்!
தலையின் கவிதையும் அருமை!
வாழ்த்துகள் இருவருக்கும்!

Nanban
08-01-2004, 06:20 PM
நன்றி நிலா........ மறந்து போன விஷயங்களை மீண்டும் உட்கார்ந்து அசை போட வைத்த பப்பிக்கும் தான்........