PDA

View Full Version : பிரயத்தனம்இளசு
05-06-2004, 11:04 PM
பிரயத்தனம்

=======================


ஜன்னலைத் திறந்து
மின்மினிகளைப் பிடித்தேன்
சூரியனிடம் சொல்லச்சொல்லி
விடிவெள்ளிக்கு தந்தி அடித்தேன்

கவிதைப் புத்தகம் கொளுத்தி
வெளிச்சம் வரவைத்தேன்
சேவலின் மேல் கல்லெறிந்து
கொக்கரக்கோ கூவ வைத்தேன்

வரும்போது விடியல் வரட்டும் என்று
வாளாவிருக்க முடிகிறதா என்ன?

பாரதி
06-06-2004, 01:38 AM
விடியலையே நினைக்கும் போது வரவழைக்க முயற்சி செய்யும் உங்கள் முயற்சி....! பிரமிப்பூட்டுகிறது அண்ணா...

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் - இல்லையா அண்ணா...?? தொடரட்டும் உங்கள் முயற்சி..!

தஞ்சை தமிழன்
06-06-2004, 04:55 AM
விடியலின் அவசரம் ஏனோ?

வசந்தராகம் பாடவோ?

புதுமை எண்ணங்களை திக்கெட்டும் அளித்திடவோ?

புரட்சிகள் பல புரிந்திடவோ?

மன்மதன்
06-06-2004, 11:44 AM
விடியலை தேடி என்றில்லாமல் .. வாழ்வை தேடி என்றிருந்தது உங்கள் சிறு கவிதை.. அருமை அண்ணா..

இக்பால்
06-06-2004, 12:53 PM
முதலில் விடியப் போகும் விடியலை முன்கூட்டி வரவழைக்கும் முயற்சியை
அழகிய கவிதையாக தந்த திரு. இளசு அவர்களுக்கு பாராட்டுகளுடன்
நன்றியும். :)

ஆமாம், மிக நெருக்கமானவர்கள் திருமண நாளின் போது எப்பொழுது
விடியும் எப்பொழுது விடியும் என காத்திருப்போம்.

ஆனாலும் விடியும்பொழுதுதான் விடியும் அல்லவா. :wink:

இப்படித்தான் சமீபத்தில் பத்தாம் வகுப்பு எழுதிய என் மகளின் தேர்வு
முடிவுகள் இந்திய நேரம் காலை 8.00 மணிக்கு வருகிறது என்றார்கள்.
தோஹா நேரம் அதிகாலை 5.30 ஆகும்.

12.30, 1.30, 2.30 என்று விழித்திருந்து எல்லா அரையிலும் பார்த்துக்
கொண்டிருந்தேன். கடைசியாக 3.30 மணிக்கு வந்தது.

ஆங்கிலம் -92
ஹிந்தி -55
கணிதம் -78
அறிவியல் -90
சமூக அறிவியல்-92
சராசரி- 81.4%

வாங்கி இருந்தார். நீங்களும் பார்க்கலாம். CBSE RESULTS.

NAME: KAISERAY JAHAN S.

ROLL NUMBER: 6104544.

-அன்புடன் இக்பால்.

kavitha
07-06-2004, 03:44 AM
வரும்போது விடியல் வரட்டும் என்று
வாளாவிருக்க முடிகிறதா என்ன?

நமக்கு மிகப்பிடித்தவற்றை சந்திக்கப்போவதற்கு முன்னால் இருக்கும் சில மணித்துளிகளின் அவஸ்தையை வார்த்தைகளில் கொண்டுவந்திருக்கிறீர்கள்..
எனக்கென்னவோ இப்போதெல்லாம் விடியலைவிட அமைதியான இரவு தான் மிகப்பிடித்திருக்கிறது! என் கவிதைகளின் தாய்மடியாக உள்ளது!

கவிதை சிறப்பாக உள்ளது அண்ணா.. தொடருங்கள்.

சேரன்கயல்
07-06-2004, 04:32 AM
என் தங்கையின் திருமணத்திற்கு முந்தைய நாளும், என் திருமணத்திற்கு முந்தைய நாளும் இப்படித்தான் கழிந்தன. வாழ்க்கையில் முக்கியமான மாற்றங்களால் இப்படி நமக்கு அனுபவங்கள் ஏற்படத்தான் செய்கின்றன. ஆனால், சிலவேளைகளில் எந்த ஒரு முக்கியமான சங்கதியும் இல்லாதபோதும், தூக்கம் வராத காரணத்தால்....கடுப்படிக்கும் இரவின் நிசப்தத்தை துரத்த
விடியலை (பொறுமையே இல்லாமல்) எதிர்பார்த்து விழித்திருந்ததுண்டு...(இன்சோம்னியா) :roll: அதுதான் மிகப் பெரிய இம்சை... :cry:

இந்த விடியலை துரத்தும் மனித எண்ணங்களை இங்கே வடித்த இனிய இளசு...பாராட்டுக்கள்...

அறிஞர்
07-06-2004, 06:30 AM
விடியலை நோக்கி நல்ல காத்திருப்பு....

அருமை இளசு.. வாழ்த்துக்கள்...

இளசு
07-06-2004, 10:29 PM
இப்படித்தான் சமீபத்தில் பத்தாம் வகுப்பு எழுதிய என் மகளின் தேர்வு
முடிவுகள் இந்திய நேரம் காலை 8.00 மணிக்கு வருகிறது என்றார்கள்.
தோஹா நேரம் அதிகாலை 5.30 ஆகும்.

12.30, 1.30, 2.30 என்று விழித்திருந்து எல்லா அரையிலும் பார்த்துக்
கொண்டிருந்தேன். கடைசியாக 3.30 மணிக்கு வந்தது.

ஆங்கிலம் -92
ஹிந்தி -55
கணிதம் -78
அறிவியல் -90
சமூக அறிவியல்-92
சராசரி- 81.4%

வாங்கி இருந்தார். நீங்களும் பார்க்கலாம். CBSE RESULTS.

NAME: KAISERAY JAHAN S.

ROLL NUMBER: 6104544.

-அன்புடன் இக்பால்.


எங்கள் அனைவரின் மனமகிழ்ந்த வாழ்த்துகள்.. இனிக்கும் பாராட்டுகளை
தெரிவியுங்கள் இக்பால் அவர்களே,,,,

உங்கள் குடும்பத்துடன் மன்றமும் களிப்பில்..

பாரதி
08-06-2004, 01:36 AM
மகள் தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்றதை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் மகிழ்ச்சி இக்பால் அண்ணா.

kavitha
08-06-2004, 03:50 AM
விடியலின் அவசரம் ஏனோ?

வசந்தராகம் பாடவோ?

புதுமை எண்ணங்களை திக்கெட்டும் அளித்திடவோ?

புரட்சிகள் பல புரிந்திடவோ?

இதன் பதில்களை அடுத்து வரும் கவிதைகளில் அண்ணா தருவார்!

போ.வா - தங்கை

இக்பால்
08-06-2004, 04:29 AM
இளசு அவர்கள், பாரதி தம்பி அவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி. :)

குழந்தையிடம் சொல்லுகிறேன். -அன்புடன் இக்பால்.

thamarai
08-06-2004, 06:39 PM
வரும்போது விடியல் வரட்டும் என்று
வாளாவிருக்க முடிகிறதா என்ன?

விடியலுக்காய் எடுத்துக்கொண்ட வர்ணனை நன்றாகயிருந்தது.
வாழ்த்துக்கள்....

ஆனால்...... கவிதைப் புத்தகம் கொளுத்தி என்ற வரி கண்டு மனதில் சற்றே... கலக்கம்.

poo
09-06-2004, 07:26 AM
விடியலின் வேகத்தை கூட்டுவதேனோ.... எனக்குள்ளும் எழுவது இதுவே...

அவஸ்தைகள்... இன்பத்தை எதிர்நோக்கியோ.. துன்பத்தை துரத்திடவோ...

- இன்னும் எழுதுங்கள் அண்ணா!

தாமரை....
- கவிதைப் புத்தகம் கொளுத்தி...
காதல் தோல்வியின் அவஸ்தைகளை விலக்கிட விடியலை துணைக்கழைத்திடவோ?!! (இது தவிர்த்து அந்நிகழ்வை ஏற்றல் கொஞ்சம் கலக்கமே..)

Nanban
12-06-2004, 07:51 PM
இந்தப் பிரயத்தன முயற்சிகள் ஆயிரம் உண்டு... எல்லாவற்றையும் சொல்லி விளங்க வைக்க முயற்சிக்கவில்லை, இந்தக் கணம் வரைக்கும்... இளசுவின் கவிதை கண்டதும் மீண்டும் அந்தப் பழைய ஞாபகங்கள்.....

ஓடும் வண்டிக்குள்ளே ஓடுவதால், சீக்கிரம் பயணம் முடிந்துவிடும் என்று சில சமயம் தோன்றும்... என்றாலும், எத்தனை வேகம் தான் இருந்தாலும், அந்தக் குறைந்த பட்ச நேர செலவுகளைத் தாங்குவது என்பது சமயத்தில் சிரமம் ஆகிவிடுகிறது. அதுவும் இந்த ப்ராஜக்ட் வேலைகள் இருக்கிறதே - இந்த வகையைச் சார்ந்தது தான். இந்த சமயத்தில் எல்லாம் ஒரே ஆறுதல் - வேலையைச் செய்து கொண்டே இரு - அதற்கான பலன் நிச்சயம் வரும் என்ற கீதை மொழி தான்....

நன்றி நண்பர் இளசுவிற்கு.....