PDA

View Full Version : கிலுக்கி

இளசு
03-06-2004, 11:29 PM
கிலுக்கி
__________________________________

குச்சியொன்றில்
நத்தையோட்டை மாட்டி
வளைக்குள் விட்டு
சிலுசிலுவென ஆட்டி
தண்ணீர் வந்ததென்று
என்னை நினைக்கவைத்து...

வெளிப்பட்ட என்னைப்
பிடித்து உண்ணப்போகும்
மனிதன் சொன்னான்:

"நண்டு கொழுத்தால்
வளையில் தங்காது.."

kavitha
04-06-2004, 04:04 AM
கவிதை நன்றாக உள்ளது.... ஆனால், கிலுக்கி என்றால் என்ன அர்த்தம் அண்ணா?

mythili
04-06-2004, 04:24 AM
கிலுக்கி
__________________________________

குச்சியொன்றில்
நத்தையோட்டை மாட்டி
வளைக்குள் விட்டு
சிலுசிலுவென ஆட்டி
தண்ணீர் வந்ததென்று
என்னை நினைக்கவைத்து...

வெளிப்பட்ட என்னைப்
பிடித்து உண்ணப்போகும்
மனிதன் சொன்னான்:

"நண்டு கொழுத்தால்
வளையில் தங்காது.."

கவிதை நல்லா இருக்கு அண்ணா.
அடடே இப்பெல்லாமெனக்கு கூட ஒரு தடவைப் படித்தால் சில கவிதைகள் புரிகிறதே !!!!!!
"கிலுக்கி" என்றால் என்ன?

அன்புடன்,
மைதிலி

kavitha
04-06-2004, 05:22 AM
அடடே இப்பெல்லாமெனக்கு கூட ஒரு தடவைப் படித்தால் சில கவிதைகள் புரிகிறதே !!!!!!
"கிலுக்கி" என்றால் என்ன?

புரிஞ்சிடுச்சா மைதிலி?
இவங்க ரேஞ்சே வேற மைதிலி!
தலைப்பும் தெரிஞ்சா தான் முழுசா புரியும்...

thamarai
04-06-2004, 09:57 AM
"கிலுக்கி" என்றால் என்ன?

:rolleyes:

செந்தில்
04-06-2004, 10:18 AM
வளைக்குள் கிலுகிலுப்பை போன்று ஒன்றை கம்பில் கட்டி ஆட்டுவார்கள்.அதனை அசைக்கும்போது மழையினை ஒத்த ஒருவித ஓசை வரும்.நண்டு மழைதான் என்று நினைத்து வெளிவரும்போது பிடித்துவிடுவார்கள்!ஆனால் அக்கருவிக்கு "கிலுக்கி" என்பதுதான் பெயரா என்று தெரியவில்லை!

mythili
04-06-2004, 10:38 AM

சென்ஸ் நானும் அப்படி தான் எதாவது ஒன்று இருக்கும் என்று நினைத்தேன்..எதுக்குப்பா இங்க நான் ஒண்ணு சொல்ல போய் ஏதாவதா ஆகிட்டா..அதான் .....மௌனம். விளக்கம் தந்ததற்கு நன்றி.
அன்புடன்,
மைதிலி.

mythili
04-06-2004, 10:41 AM
அடடே இப்பெல்லாமெனக்கு கூட ஒரு தடவைப் படித்தால் சில கவிதைகள் புரிகிறதே !!!!!!
"கிலுக்கி" என்றால் என்ன?

புரிஞ்சிடுச்சா மைதிலி?
இவங்க ரேஞ்சே வேற மைதிலி!
தலைப்பும் தெரிஞ்சா தான் முழுசா புரியும்...

ஏய் கவி, மக்குதான் அதுகுன்னு எப்படியா....
"கிலுக்கி" exact meaning தெரியலைனாலும் அது ஏதோ ஒரு கருவின்னு தெரிஞ்சதுடா....எனக்கே புரிஞ்சிடுச்சுன்னு உனக்கு பொறாமை....;-)

இவங்க ரேஞ்சே வேற மைதிலி!

இது என்னவோ சரிதான்...இந்த கவிதை தான் புரிஞ்சுதுன்னு சொன்னேன், மற்ற கவிதைகள் யாராவது பக்கத்துல உட்கார்ந்து மண்டைல ரெண்டு போட்டா தான் புரியும்னு நினைக்கிறேன். என்ன அண்ணா உங்களின் மற்ற கவிதைகளை படித்த பின்புதான் இந்த conclusion -கு வந்து இருக்கிறேன் :roll:

அன்புடன்,
மைதிலி.

kavitha
04-06-2004, 11:06 AM
ஏய் கவி, மக்குதான் அதுகுன்னு எப்படியா....
"கிலுக்கி" exact meaning தெரியலைனாலும் அது ஏதோ ஒரு கருவின்னு தெரிஞ்சதுடா....எனக்கே புரிஞ்சிடுச்சுன்னு உனக்கு பொறாமை....;-)

அட, அப்படி ஒரு கருவி இருக்குனு கூட தெரியாத மக்கு நான் மைதிலி!

உனக்கு அதாவது தெரிஞ்சிருக்கு!
அண்ணாவோட பழைய கவிதைகள் ... அதிலும் குறிப்பா... 'நதிக்கரையில் இளவரசி' படித்து பாரேன்... நான் ஏன் அப்படி சொன்னேன்னு உனக்கே புரியும்..

உணவுச்சங்கிலியை ஒரே வளையத்தில் விளக்கிவிட்டார் அண்ணன்!
அருமை அருமை!

மன்மதன்
04-06-2004, 11:08 AM
அருமையான கவிதை.. பாராட்டுக்கள் இளசு..

பரஞ்சோதி
04-06-2004, 11:18 AM
ரசிக்கத் தக்க கவிதை, சின்ன வயதில் செய்ததை எல்லாம் நினைவு படுத்தும் கவிதை. பாராட்டுகள் அண்ணா.

சின்ன வயதில் பெரிய தேள் (நட்டுவக்காலி) பிடித்தது நினைவுக்கு வருது..

poo
04-06-2004, 01:26 PM
உதட்டின் ஈரத்தில் சாயங்கள் பூசி நியாயங்கள் பேசி.....

உலகமே நீயின்னும் நிறைய யோசி....நிறைய இருக்கிறது வாசி..

- தொட்டுவிட்டு சென்றால் போதாது.. தொடர்ந்தெழுதுங்கள் அண்ணா..

இக்பால்
04-06-2004, 01:50 PM
எங்கேயோ...எப்பொழுதோ...பார்த்ததை...
இங்கே...இப்பொழுது கவிதையாக கொண்டு வந்திருக்கும் அருமை.
பாராட்டுகள் திரு. இளசு அவர்களுக்கு.

ஏமாற்றுக்கார மனிதன் தான் செய்யும் தந்திரங்களுக்கு, தவறுகளுக்கு
அடுத்தவனை குற்றம் கூறி விடுவான்.
இச்சிறு கவிதையில் ஒரு கதையும், அறிவுரையும் இருக்கிறது.

மீண்டும் நன்றி. :)

-அன்புடன் இக்பால்.

rambal
04-06-2004, 04:30 PM
கிலுக்கி..
தூண்டில் புழு போல் உணர்சிகளைத் தூண்ட வைக்கும்
ஒரு கருவி..

மனித மனங்கள் முன் எத்தனை கிலுக்கிகள்..
எண்ணிப்பார்க்கையில் நாமும் நண்டுகள்தான்..
எத்தனையோ கிலுக்கிகளுக்கு
அகப்பட்டு தவிக்கும் நண்டுகள்தாம் நாமும்..
அருமையான சிம்பலிச கவிதை..

இதை இந்த இசத்திற்குள் அடைக்கவேண்டும் என்று எண்ணி சொல்லவில்லை..

இதைப் படித்ததும் எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தின் விளைவுதான் இது..

பாராட்டுக்கள் அண்ணனுக்கு...

பாரதி
04-06-2004, 04:58 PM
கிலுக்கி போட்டு
உலுக்கும் கவிதை....

Nanban
04-06-2004, 07:01 PM
அடடே இப்பெல்லாமெனக்கு கூட ஒரு தடவைப் படித்தால் சில கவிதைகள் புரிகிறதே !!!!!!
"கிலுக்கி" என்றால் என்ன?

புரிஞ்சிடுச்சா மைதிலி?
இவங்க ரேஞ்சே வேற மைதிலி!
தலைப்பும் தெரிஞ்சா தான் முழுசா புரியும்...
ஏய் கவி, மக்குதான் அதுகுன்னு எப்படியா....
"கிலுக்கி" exact meaning தெரியலைனாலும் அது ஏதோ ஒரு கருவின்னு தெரிஞ்சதுடா....எனக்கே புரிஞ்சிடுச்சுன்னு உனக்கு பொறாமை....;-)

இவங்க ரேஞ்சே வேற மைதிலி!

இது என்னவோ சரிதான்...இந்த கவிதை தான் புரிஞ்சுதுன்னு சொன்னேன், மற்ற கவிதைகள் யாராவது பக்கத்துல உட்கார்ந்து மண்டைல ரெண்டு போட்டா தான் புரியும்னு நினைக்கிறேன். என்ன அண்ணா உங்களின் மற்ற கவிதைகளை படித்த பின்புதான் இந்த conclusion -கு வந்து இருக்கிறேன் :roll:

அன்புடன்,
மைதிலி.

:D :D :D எளிமையின் மறு வடிவமானவர்களெல்லாம், இன்று புரியாது போய்விட்டதா.....? வியப்பாக இருக்கிறது.....

நண்பர் இக்பால் சொன்ன கருத்தும், ராம்பால்; சொன்ன விளக்கமும் இந்த கவிதைக்கு வெகுவாகப் பொருந்தும்...

பாராட்டுகள் - இளசுவிற்கு........

anbu
04-06-2004, 07:20 PM
பிரட்ச்சனைகளை உண்டுபண்ணிவிட்டு...
வேதாந்தம் பேசும் வேடிக்கை மணிதர்களுக்கு
சரியான சவுக்கடி உங்களின் அழகான கவிதை...

நன்றி இளசு அண்ணா....

kavitha
05-06-2004, 03:39 AM
ஏமாற்றுக்கார மனிதன் தான் செய்யும் தந்திரங்களுக்கு, தவறுகளுக்கு
அடுத்தவனை குற்றம் கூறி விடுவான்.
இச்சிறு கவிதையில் ஒரு கதையும், அறிவுரையும் இருக்கிறது.

இதைத்தான் அண்ணா ஆரம்பத்தில் நானும் நினைத்தேன்..

பருவக் குளத்தில்
பார்வைக்கல் எறிந்தவள்
அலை வளையல்களை மட்டும்
அழகாய் போட்டுக்கொண்டு
பின்னால் வந்தவனை
'பேடி' என்றாள்

தஞ்சை தமிழன்
05-06-2004, 06:59 AM
இளசுவின் கவிதை அருமை.
நண்டுகள் பார்கத்தான் பயம்,
ஆனால் பாவம் அவை என
காட்டும் கவிதை.

பருவக் குளத்தில்
பார்வைக்கல் எறிந்தவள்
அலை வளையல்களை மட்டும்
அழகாய் போட்டுக்கொண்டு
பின்னால் வந்தவனை
'பேடி' என்றாள்

பேடிதான் நண்டோ???????

இளசு
05-06-2004, 10:18 PM
இச்சிறு படைப்புக்கு கிடைத்த வரவேற்பு திக்குமுக்காடவைக்கிறது..

அனைவருக்கும் நன்றி..

ஏதம் (ரிஸ்க்) என்ற சொல்லை முன்பு மன்றத்தில் கற்றேன்.. (நண்பன் சொன்னது அது)

கிலுக்கி என்ற புதுச்சொல் அண்மையில் கேட்டு
அதை மனதில் பதித்துக்கொள்ள இப்படி ஒரு பதிவு செய்தேன்..

விளக்கம் இதுபோல் வந்தால்
புதுச்சொல் பலருக்கும் இன்னும் விளங்கும் என நினைத்தேன்..

பங்கெடுத்த அனைவருக்கும் என் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்..

கவிதாவின் பதில் கவிதைக்கும் விளக்கம் கேளுங்க மக்கா..

தஞ்சை தமிழன்
06-06-2004, 05:13 AM
இச்சிறு படைப்புக்கு கிடைத்த வரவேற்பு திக்குமுக்காடவைக்கிறது..
கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா?

thempavani
06-06-2004, 08:00 AM
அருமையான படைப்பு அண்ணா

thempavani
06-06-2004, 08:02 AM
உதட்டின் ஈரத்தில் சாயங்கள் பூசி நியாயங்கள் பேசி..... உலகமே நீயின்னும் நிறைய யோசி....நிறைய இருக்கிறது வாசி.. - தொட்டுவிட்டு சென்றால் போதாது.. தொடர்ந்தெழுதுங்கள் அண்ணா.. _________________ என்றென்றும் அன்புடன் அன்பு- பூ....
இதென்ன கலாட்டா
கவிதைக்கே கவிதையா ?!?!?

பரஞ்சோதி
06-06-2004, 02:57 PM
ஏமாற்றுக்கார மனிதன் தான் செய்யும் தந்திரங்களுக்கு, தவறுகளுக்கு அடுத்தவனை குற்றம் கூறி விடுவான். இச்சிறு கவிதையில் ஒரு கதையும், அறிவுரையும் இருக்கிறது. மீண்டும் நன்றி.
இதைத்தான் அண்ணா ஆரம்பத்தில் நானும் நினைத்தேன்..

பருவக் குளத்தில்
பார்வைக்கல் எறிந்தவள்
அலை வளையல்களை மட்டும்
அழகாய் போட்டுக்கொண்டு
பின்னால் வந்தவனை
'பேடி' என்றாள்

பதில் கவிதையும் அருமையாகவே இருக்கிறது. இளசு அண்ணாவின் கவிதை முதல் முறையில் படித்த போது புரியாத ஒன்றை பதில் கவிதையின் மூலமாக புரியவைத்து விட்டீங்கள், பாராட்டுகள்.

kavitha
07-06-2004, 03:23 AM
பதில் கவிதையும் அருமையாகவே இருக்கிறது. இளசு அண்ணாவின் கவிதை முதல் முறையில் படித்த போது புரியாத ஒன்றை பதில் கவிதையின் மூலமாக புரியவைத்து விட்டீங்கள், பாராட்டுகள்.

அது தான் அண்ணா நான் எழுதியதன் நோக்கமும்... மனதுக்கு நிறைவாக இருக்கிறது.. நன்றி!
(இளசு அண்ணா, என்னை வையாதீங்க! :()

அறிஞர்
07-06-2004, 06:35 AM
வாழ்த்துக்கள்... இளசு....

மன்றத்தில் புது புது தமிழ் வார்த்தைகளை கற்கிறோம்

அன்புரசிகன்
17-01-2009, 08:31 AM
ராம்பாலும் இக்பாலும் அழகாக சொல்லி விட்டார்கள் கவிதையின் சாரத்தை.

அமரன்
17-01-2009, 07:02 PM
கிலுக்கி.
என்னைப் போன்ற பல
ஈழத்தவரின்
இன்னொரு தாயென்பேன்.

கடுப்படிக்கும் அடுப்புடன்
அடுக்களையில் அம்மா.

அம்மாவின் பழஞ்சேலையில்
அமைந்த ஏணையில்
பழச்சோலையில் படுத்திருப்பதுபோல்
ஆழ்ந்த உறக்கத்தில் பிள்ளை..

ஏதோ அதிர்வு
அருட்ட அழுங்குழந்தை
கால்களை உதைக்கும்.

கிலுக்கி நகைக்கும்
தாலாட்டுப் படிக்கும்..
குழந்தையில் ஒட்டிக்கொள்ளும்
கிலுக்கியின் சங்கீதம்.

அடுப்படி தொடங்கி
தோட்டம் வரை தொடரும்
கிலுக்கியின் தாயவதாரம்.

கொஞ்சம் வளர்ந்ததும்
கோவில் திருவிழாக்களில்
அதே கிலுக்கி
காகித மதிப்பில் சற்றே அதிகமாய்.
ஆனாலும்
மதிப்பில் சற்றே குறைவாய்.

இளசு
17-01-2009, 10:20 PM
ஒருங்குறிக்கு மாற்றிய அன்புக்கு என் அன்பு..

அமரா....

Imitation is the best form of flattery -
மிமிக்ரி கலைஞர்களுக்காகச் சொன்ன வாசகம்!

பதில் கவிதையே மிகச்சிறந்த பாராட்டு!
மன்றக் கவிகளுக்கு நான் சொல்லும் வாசகம்!

இன்னொரு தீபத்தை ஏற்றுவதைவிட
முன் தீபத்துக்கு வேறென்ன வேண்டும்?

கிலுகிலுப்பை என அழைக்கப்படும் இன்னொரு தாய்!

இதைப்பற்றி கலைஞர் சொன்ன பிரச்சார வாசகம் -

குழந்தை (= வாக்காளர்கள்) திருவிழாவில் ( =பிரச்சாரத்தில்)
கிலுகிலுப்பைக்கு மயங்கி கொஞ்சம் நிற்கலாம்..
(= மற்ற கட்சிகளின் கவர்ச்சியில் மயங்கலாம்..)
ஆனாலும் சிறிது நேரத்தில் தன் தாயைத் தேடி மீண்டும் ஓடிவரும்..

ஆதவா
18-01-2009, 06:55 AM
உங்கள் கவிதை அபாரம்..

கிலுக்கியின் புகைப்படம் கிடைக்குமா இளசு அண்ணா?

ஆவலுடன்
ஆதவன்