PDA

View Full Version : நானும், நானும்



Nanban
11-04-2003, 04:13 PM
குற்றால அருவிதான் என்றாலும்
பார்த்துக் கொண்டேயிருப்பதா சுகம்.?
உள்ளே நுழைந்து சுகமனுபவிக்கனும்
நீ சற்று நேரம் என்னுள்ளே சும்மாயிரு.

நான் குளிக்கப் போகிறேன்.

சற்றுநேரம் என்னை விட்டு விலகிப் போ
வாசித்துக் கொண்டேயிருந்தால்
நான் எப்போது தான் எழுதுவதாம்?

இளசு
11-04-2003, 04:59 PM
இதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....

Narathar
12-04-2003, 05:26 AM
சற்றுநேரம் என்னை விட்டு விலகிப் போ
வாசித்துக் கொண்டேயிருந்தால்
நான் எப்போது தான் எழுதுவதாம்?


இதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....


நீங்களெல்லோரும் இப்படியே எழுதிக்கொண்டிருந்தால்
நாங்கள் எப்படி வாசித்து முடிப்பதாம்?????

மன்மதன்
23-11-2004, 03:05 PM
எப்பொழுது வேண்டுமானாலும் வாசிக்கலாம்.. எப்பவும் புதியதாய்..
அன்புடன்
மன்மதன்

manitha
13-12-2004, 03:24 AM
Originally posted by Narathar@Apr 12 2003, 01:26 PM
நீங்களெல்லோரும் இப்படியே எழுதிக்கொண்டிருந்தால்
நாங்கள் எப்படி வாசித்து முடிப்பதாம்?????

3005


ஒரு தாய்க்கு எத்தனை
சேய் இருந்த போதும்
தாய் பிரிவினை பார்ப்பதில்லை
அது போல் தான் நம் தளமும்
வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குவது போல்
எழுதுவதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும்
நமது மன்ற உறுப்பினர்கள் அனைவரும்......

அசன் பசர்
13-12-2004, 03:11 PM
Originally posted by இளசு@Apr 11 2003, 09:59 PM
இதை இன்றைக்கு நானல்லவா சொல்லவேண்டும் நண்பனே....

2899



இளசு அண்ணன் கேட்டதின் பொருள்
நண்பர்களுக்கு புரியவில்லை போலும்