PDA

View Full Version : அம்மா.....



Nanban
11-04-2003, 04:11 PM
உனக்கு பணம் தேவை;
நல்ல நண்பர்களின் அன்பு தேவை;
உனக்கு உடல்நலம் தேவை;
உனக்கு சிரிப்பு தேவை;
இவை எல்லாவற்றையும் விட
மேலான தேவையை கொடுக்க
அவளால் மட்டுமே முடியும் -
உயிரோட்டமுள்ள
ஆசீர்வாதத்தை கொடுக்க
அவளால் மட்டுமே முடியும்.

இளசு
11-04-2003, 04:52 PM
உயிர் கொடுத்த தெய்வம்
ஓடும் உதிரம் கொடுத்த தெய்வம்
உயிரோட்டமுள்ள ஆசியும் தரும்...அதன்
உயிர் நோக அடித்தாலும் ஆசி மட்டுமே தரும்...

காணிக்கை கேட்காத கடவுள் அவள்
கண்காணா தேசத்தில் இருந்தாலும்
கண்மணி நல்லா இருக்கான்(ள்) என்ற சேதி
காதில் பட்டால் போதும் என்னும் விவேகி அவள்..

எங்கும் உலவ என்னால் ஆகாது என்று
ஒதுங்கிய கடவுளின் Proxy அவள்.

Narathar
12-04-2003, 05:31 AM
நண்பா நல்ல கவிதை!
இளசு உம் விஷயஞானம் கவிதையில் தெரிகிறது!!

Nanban
12-04-2003, 08:16 AM
உயிர் கொடுத்த தெய்வம்
ஓடும் உதிரம் கொடுத்த தெய்வம்
உயிரோட்டமுள்ள ஆசியும் தரும்...அதன்
உயிர் நோக அடித்தாலும் ஆசி மட்டுமே தரும்...

காணிக்கை கேட்காத கடவுள் அவள்
கண்காணா தேசத்தில் இருந்தாலும்
கண்மணி நல்லா இருக்கான்(ள்) என்ற சேதி
காதில் பட்டால் போதும் என்னும் விவேகி அவள்..

எங்கும் உலவ என்னால் ஆகாது என்று
ஒதுங்கிய கடவுளின் Proxy அவள்.

இந்த மாதிரியானக் கவிதைகளைத் தனி தலைப்பிட்டு வழங்குகள் - நிறைய பேர் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.......

chezhian
12-04-2003, 10:26 AM
நன்று நண்பர்களே

இளசு
12-04-2003, 12:07 PM
கடவுளின் Proxy அவள்.

இந்த மாதிரியானக் கவிதைகளைத் தனி தலைப்பிட்டு வழங்குகள் - நிறைய பேர் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.......

அன்னையின் காலுக்குக் கொடுத்த கொலுசு
அப்படியே கீழேயே இருக்கட்டும்.
பிற்பாடு வேறு நெற்றிசுட்டி செய்து பூட்டிவிட்டால் போகிறது!!!

rambal
12-04-2003, 05:09 PM
அம்மாவைப் பற்றிய அழகான பதிவு..
அதற்கு இன்னும் கொஞ்சம் வலிமை சேர்ப்பது போல்
அண்ணனின் கவிதை வேறு..
பாராட்டுக்கள் இருவருக்கும்..

அமரன்
29-10-2007, 09:47 PM
எத்தனை முறை அழைத்தாலும் அலுக்காத வார்த்தை.
எவ்வளவு எழுதினாலும் கடுகளவும் திகட்டாத கவிதை.
எப்போது படித்தாலும் எள்ளளவும் சலிக்காத வித்தை.
எப்படிச் சொன்னாலும் அட்டக்கமுடியா ஆதார வாழ்க்கை.

நெற்றிச்சுட்டி, கொலுசு எல்லாமே பளபளக்குது..