PDA

View Full Version : வெட்கங்கெட்டத் தாய்......



Nanban
11-04-2003, 04:07 PM
மகளே,
உன்னை
ஒவ்வொருவரும் முத்தமிட்டுப் போனதும்
ஆவலுடன் ஓடி வந்துப் பார்க்கிறேன் -
உன் கன்னங்கள்
எப்படிச் சிவந்திருக்கின்றன என்று......

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி,
நான் சமைத்ததை
சமயங்களில் எனக்கே விருந்தாக
மாற்றிப் பரிமாறும்பொழுது
திணறித்தான் போகிறேன்.
என்றாலும் திரும்பத் திரும்ப
நுழைந்துப் பார்க்கிறேன் -
எத்தனை பேர் ருசித்தார்கள்
என் படையலை என்று.

நானே பிரசவித்தாலும்
உன்னை தமிழ்மன்றத் தொட்டிலில்
இட்ட பின்பும்
எனக்கேன் என்று போகமுடியவில்லை.

மகளே,
உன்னை
ஒவ்வொருவரும் முத்தமிட்டுப் போனதும்
ஆவலுடன் ஓடி வந்துப் பார்க்கிறேன் -
உன் கன்னங்கள்
எப்படிச் சிவந்திருக்கின்றன என்று......

நான் ஒரு வெட்கங்கெட்டத் தாய்.

இளசு
11-04-2003, 04:43 PM
படைத்ததே படையலுக்குத்தான்
ஆதவனுக்கு ஆடை என்ன...
ஆதங்கத் தாய்க்கு வெட்கமென்ன...

Narathar
12-04-2003, 05:36 AM
இதோ நானும் முத்தமிட்டேன்.........
கன்னங்கள் சிவந்திருக்கின்றனவா?
உந்தன் சின்னவளின்!!!

Nanban
12-04-2003, 08:10 AM
இதோ நானும் முத்தமிட்டேன்.........
கன்னங்கள் சிவந்திருக்கின்றனவா?
உந்தன் சின்னவளின்!!!

கிள்ளி விட்டு விட்டு, தொட்டிலை ஆட்டாமல், முத்தமிட்டதற்கே ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சொல்லவேண்டும்.

Emperor
12-04-2003, 08:16 AM
நாராயனா!!!

Narathar
18-04-2003, 04:19 AM
இதோ நானும் முத்தமிட்டேன்.........
கன்னங்கள் சிவந்திருக்கின்றனவா?
உந்தன் சின்னவளின்!!!

கிள்ளி விட்டு விட்டு, தொட்டிலை ஆட்டாமல், முத்தமிட்டதற்கே ஆயிரம் ஆயிரம் நன்றிகள் சொல்லவேண்டும்.

என்னடா இது?
நாம நல்லது செய்யப்போனாலும் கெட்டதையே ஞாபகப்படுத்துகிறார்களே?
நல்லதுக்கு காலமில்லை நாராயனா காலமில்லை!!!

subavaanan
18-04-2003, 06:11 AM
நண்பனே உன் கவிதைவரிகள்
என் உள்மனதை திறக்க வைத்தது...
வலித்தது..என்னால் ஏன்
இப்படி முடியவில்லை என்று...
இது வெட்கங்கெட்டத் தாய் அல்ல
பாசம் பாராட்டும் உன்னதத்தாய்............

மன்மதன்
23-11-2004, 03:18 PM
ஆகா... முத்ததிற்கா பஞ்சம்..இதோ என் முத்தமும்..
அன்புடன்
மன்மதன்

ஓவியன்
01-10-2007, 07:06 PM
:)அட, அட....

ஒரு படைப்பாளியின் பரிதவிப்பை இதனை விட அழகாக வெளிக்கொணர முடியுமா...

அசந்து நிற்கின்றேன் அர்த்த மிகு அசத்தல் வரிகளில்.....

இன்னும் நிறையப் பேர் இந்தக் குழந்தையை முத்தமிட வேண்டுமே, ஆதலால் அள்ளி அணைத்து மேலே தூக்குகிறேன்.....!!! :)

பூமகள்
01-10-2007, 07:22 PM
படைப்பாளி தாயாகி கருவுற்று ஈன்ற கவி மழலைக்கா முத்தப் பஞ்சம்..???!!
இதோ என் அன்பு முத்தங்களும்...!!
சிவக்கட்டும் கன்னம்...!!
சிரிக்கட்டும் கவித்தாயின் மனம்..!!
பலரை மேல் தூக்கும் பலசாலி பாச அண்ணன் ஓவியருக்கு மீண்டும் இந்த பாசத்தங்கை பூமகளின் நன்றிகள்..!!

சிவா.ஜி
02-10-2007, 04:42 AM
வாசிப்பெனும் முத்தங்களும்.பின்னூட்ட முதுகுதட்டலும்,தன் சின்னக்குழந்தைக்கு கிடைக்க,கிடைக்க அதைப் பெற்றதாய் வெட்கமின்றி ஓடிவந்து பார்ப்பது சிலிர்க்கவைக்கிறது.அத்தனை அருமையான வரிகள்.பல நேரங்களில் இப்படிப்பட்ட புதைந்துகிடக்கும் புதையல்களை வெளிக்கொண்டுவந்து..எங்களையும் அவற்றை ருசிக்க வைக்கும் ஓவியனுக்கு நன்றி.

அமரன்
02-10-2007, 01:42 PM
எந்த ஒரு படைப்பும் அடுத்தவர் மனதினுள் ஆழ ஊடுறுவி அவர்கள் அனுபவங்களை வெளியேற்றினால் பாதி நிறைவடைகிறது.
படைப்பை அடுத்தவர்கள் ஆழ உழுது புரட்டிப்போட்டு வளமாக்கி வளர்த்து விளைச்சலை பரிமாறும்போது முழுநிறைவாகிறது. இரண்டும் கண்ட படைப்பாளி அப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுவான். அதை தாய்மை கலந்து தூய்மையாக சொன்ன நண்பனை நாடுகிறது என் மனம்.

ஒருங்குறிக்கு மாற்றிய அக்னிக்கும் இழையை பார்வைக்கு கொண்டுவந்த ஓவியனுக்கும் நன்றி.

ஆதவா
05-10-2007, 03:27 AM
எல்லா படைப்பாளிகளும் வெட்கங் கெட்டவர்களே!

எந்த ஒரு படைப்பாளியும் தான் சமைத்த விருந்தை அடுத்தவருக்குப் பரிமாறி அதன் ருசியை அறிந்துகொள்ள ஆவல் இருக்கும். பணம் பார்க்கும் படைப்பாளிகளுக்குக் கூட ருசியில்லையேல் விருந்துக்கு ஆள் இல்லாமல் போய்விடும்.

படையல் எப்படிப்பட்டது என்று சொல்ல விருந்தினர்கள் உண்டு. படையலை சிறப்பாக்க பல மருந்தினர்களும் உண்டு. மன்றச் சமையலறையில் பலவித உணவு வகைகள்.

இப்போதைக்கு பதினைந்து முத்தங்கள் மட்டுமே கிடைத்திருக்கிறது...

ஷீ-நிசி
06-10-2007, 01:38 AM
இதோ நானும் முத்தமிடுகிறேன்... ஆனால் இந்த குழந்தை இன்று தொட்டிலில் இல்லை. நான்கு வயது ஐந்து மாதம் நிறைவுற்று இங்கே துள்ளி ஓடி விளையாடிக்கொண்டிருக்கிறது. இதோ நானும் முத்தம் இடுகிறேன். அட மீண்டும் முத்தமிடுமோ இக்குழந்தை எனக்கு??..

பின்னூட்டமிட்டு............................... வா நண்பா.........

விகடன்
02-07-2008, 10:48 AM
சத்தமில்லா முத்தம் கொடுக்க
வந்தேன் இந்தப்பக்கம் .
அந்தத்தில்,
சுட்டிக்காட்ட
அண்ணாவின் உள்ளவுத்துறை....
கண்டதும் பகிரங்கப்படுத்தி விட்டேன்
முத்தத்தை சத்தமாக.

பாலகன்
02-07-2008, 11:04 AM
ஐயோ என் செல்வமே, எல்லாரும் முத்தமிட்டு உன் கன்னங்கள் இப்படி சிவந்துவிட்டதே, மருத்துவ செலவு நிறைய ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன், உன் வங்கி கணக்கும் குறைந்து கடனாளி தாயாய் இருக்கிறாயே,,,,,,, கவலை படாதே இந்த அண்ணா உனக்கு ஒரு 100 இணைய காசுகள் அன்பளிப்பாக தருகிறேன் போய் நல்ல மருத்துவராக பார்த்து உன் கன்னத்தை காட்டு

ஹி ஹி ஹி ஹி நானும் ஒரு முத்தம் வலிக்காமல் உனக்கு வைக்கிறேன் சரியா

அன்புடன்
பில்லா