PDA

View Full Version : முதல் காதல்



kavitha
24-05-2004, 05:02 AM
முதல் காதல்

முதன் முதலில்
சந்திக்கப்போகிறேன் அவனை...
என் காதலியை
நாளை மணமுடிக்கப்போகும்
அவனை...
எப்படி இருப்பானோ?
என்னை விட அறிவானவனோ?
என்னை விட அந்தஸ்தானவனோ?
எனக்குத்தெரியும் - அவள்
அழகிற்கு மயங்குபவள் அல்லள்!

எப்படி பேசுவது அவனிடம்?
பொறாமைத் தீயை
வார்த்தைகள் கொப்பளித்துவிடுமோ?
அவமானம் தாங்காமல்
கண்ணீர் குண்டுகளை
கண்கள் பொழிந்துவிடுமோ?
குரல் அடைத்து
நா தழுதழுத்துவிடுமோ?

ஒத்திசைவில்லா மனதால்
ஒத்திகைகள் கூட
ஒத்திப்போடப்பட்டன!

ஆனால் அவனோ
என் வாசலுக்கே
வந்துவிட்டான்
பத்திரிக்கை ஏந்தியவாறு!

யாரோ ஒருவர்
என் பெயரையும்
பணியையும் கூறி
அறிமுகம் செய்துவைக்க
உடனடி புன்னகையை
உதட்டில் ஒட்டவைத்துக்கொண்டேன்..

எப்படியும் அவனிடம்
சொல்லிவிட வேண்டும்..
அவள் தான் என் கனவு தேவதை என்று
அவள் என் உயிராய் இருந்தாள் என்று
அவளை நீ
இரவு பகல் பாராமல்
கண்ணில் மணிபோல் எப்போதும்
காக்கவேண்டும் என்று
காசு பணம் கேட்டு அவளை
களங்கப்படுத்திவிடக்கூடாது என்று

என் உதட்டை பிரிக்கும்முன்
பத்திரிக்கையை கையில் கொடுத்தான்
"இருபத்து நான்கு மணி நேர
இலவச மருத்துவமனை
ஆரம்பிக்கப்போகிறேன்
வந்து விடுங்கள்" என்று

மகிழ்ச்சி பொங்க
எதுவும் பேசாமல்
வாங்கிக் கொண்டேன்

அவன்
எங்கள் ஊரின்
முதல் மருத்துவன்.

இக்பால்
24-05-2004, 05:31 AM
அழகாக உணர்ச்சிகளைக் காட்டி, கட்டுப்படுத்தி இருக்கிறீர்கள் தங்கை.
சிறுகதை போல் இருக்கிறது.-அன்புடன் அண்ணா.

kavitha
24-05-2004, 06:04 AM
நன்றி அண்ணா!
இது என் அனுபவம் தான்.. மிகச்சொற்பமாய் கற்பனை கலந்து எழுதிய கவிதை.
சிறு கதை எழுதி பழக்கமில்லை! கதையாக எழுதிவிடலாமா என்று நினைத்தபோது..இன்னும் இன்னும் வார்த்தைகளை சுருக்கவே விரும்பினேன். உடன் தந்ததால் அத்தனை மன நிறைவு (வார்த்தை சுருக்கத்தில்) இல்லை என்றாலும்.. ஏதோ பாரத்தை இறக்கி வைத்த திருப்தி..

இக்பால்
24-05-2004, 06:11 AM
பாரத்தை இறக்கி வைத்த திருப்தி..


பிரித்து கொடுத்து விட்டீர்கள் தங்கை.

kavitha
24-05-2004, 06:20 AM
கண்ணீர் கசிய... :)

இக்பால்
24-05-2004, 06:23 AM
:mad:

mythili
24-05-2004, 06:24 AM
நன்றி அண்ணா!
இது என் அனுபவம் தான்.. மிகச்சொற்பமாய் கற்பனை கலந்து எழுதிய கவிதை.
சிறு கதை எழுதி பழக்கமில்லை! கதையாக எழுதிவிடலாமா என்று நினைத்தபோது..இன்னும் இன்னும் வார்த்தைகளை சுருக்கவே விரும்பினேன். உடன் தந்ததால் அத்தனை மன நிறைவு (வார்த்தை சுருக்கத்தில்) இல்லை என்றாலும்.. ஏதோ பாரத்தை இறக்கி வைத்த திருப்தி..

அனுபவம் என்று கவிதை நடையே சொல்கிறது கவி.
உணர்சிகளை மிக அழகாக உதிர்த்து இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
மைதிலி

mythili
24-05-2004, 06:26 AM
ஏதோ பாரத்தை இறக்கி வைத்த திருப்தி..

இறக்கிய பாரத்தை மனதில் சுமக்க நாங்கள் தயார் கவி.
இன்னும் எழுதுங்கள்.

அன்புடன்,
மைதிலி

kavitha
24-05-2004, 06:55 AM
நன்றி மைதிலி

இளசு
24-05-2004, 11:32 PM
நெகிழ்கிறேன் கவீ.

kavitha
25-05-2004, 04:15 AM
நன்றி இளசு அண்ணா!
(எங்கே சில நாட்களாக தங்களை காணோம்?)

poo
25-05-2004, 10:18 AM
கதைகளை கவிதையில் வைப்பதில் தனிசுகம்.

பாராட்டுக்கள் கவியே!!

kavitha
25-05-2004, 10:45 AM
நன்றி பூ! :)

பரஞ்சோதி
25-05-2004, 10:52 AM
அருமையான சகோதரி, பாராட்டுகள். பாராட்டுவதா அல்லது ஆறுதல் சொல்லுவதா என்று கேட்க வைக்கும் கவிதை.

kavitha
25-05-2004, 11:26 AM
நன்றி பரம்ஸ் அண்ணா! :)

gans5001
26-05-2004, 08:47 AM
அவன்
எங்கள் ஊரின்
முதல் மருத்துவன்.

மொத்த கேள்விகட்கும் ஒற்றைவரி பதிலாய் அழகிய முடிவு.. சில சமயங்களில் காதல் "அழகி"யாக இல்லாமலும் போகலாம் (இல்லையா இளசு?)

kavitha
26-05-2004, 10:44 AM
மொத்த கேள்விகட்கும் ஒற்றைவரி பதிலாய் அழகிய முடிவு..
நன்றி கன்ஸ்!