PDA

View Full Version : எங்கே இருக்கிறேன் .........



Nanban
11-04-2003, 04:56 PM
எங்கே இருக்கிறேன் .........

வெகு நாட்களுக்கு முன்
சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டேன் -
இந்தப் பூமியிலிருந்தும் தான்.

கடிகார முட்களிலிருந்தும் விலகினேன்.
காலபரிமானமற்ற பிரதேசத்தினுள்
நான் தூக்கி எறியப் பட்டேன்.

'எங்கு தான் இருக்கிறாய்? '
என எல்லோரும் கேட்டு
துளைத்தெடுக்கின்றனர்.

எப்படி சொல்வேன்?
என்னை ஊமையாக்கி
எங்கோ நீ எறிந்து விட்டதை?

உன் ஒரே பார்வையால்.......

poo
11-04-2003, 05:01 PM
காதலின் கொடுமை... அருமை!!!

இளசு
11-04-2003, 05:30 PM
எப்படி சொல்வேன்?
என்னை ஊமையாக்கி
எங்கோ நீ எறிந்து விட்டதை?

உன் ஒரே பார்வையால்

ஈர்ப்பு விசையும் அதுவே
தூக்கி விசிறுவதும் அதுவே

எவ்வளவு உயரம் போகிறோமோ
அவ்வளவு அடி விழும்போது

என்றாலும்
சமதளத்தில் மட்டும் நடப்பதைவிட
சவமாய்க் கிடக்கலாம்.

Narathar
12-04-2003, 06:41 AM
காதலுக்கு இத்தனை சக்தியோ????

Nanban
12-04-2003, 08:55 AM
சமதளத்தில் மட்டும் நடப்பதைவிட
சவமாய்க் கிடக்கலாம்.

சமதளத்தில்
உருளலாம்,
புரளலாம்.
எங்கும் செல்லாமலே.

நடப்பது
மேட்டிலோ, பள்ளத்திலோ -
எங்காவது பயணிக்க முடியும்.

rambal
12-04-2003, 07:09 PM
அந்த ஓரவிழிப்பார்வையில்
என்னை காகிதமாக்கி
புன்னகைமத்தாப்பைக்
கொளுத்தி போட்டுவிட்டு
ஓடி ஒளிந்து கொண்டாய்..
இங்கு நானல்லவா பற்றி எரிகிறேன்..


பாராட்டுக்கள் நண்பனுக்கு..

அமரன்
29-10-2007, 10:23 PM
இந்த ஓரவிழிப்பார்வை செய்யும் ஜாலங்கள்தான் எத்தனை.

உரசல் பார்வையால்
எங்கோ தூக்கி அடிக்கப்படும் அளவுக்கு
வல்லமை மிகுந்து...

சொர்க்கம் தாண்டிய
இன்ப உலகம் காட்டி...

சொல்லவொண்ணா தாக்கங்கள்..
அருமையான வண்ணப் பாக்கள்.