PDA

View Full Version : சமைஞ்ச பொண்ணு



Nanban
11-04-2003, 03:52 PM
சமைஞ்ச பொண்ணு

படபடப்புடனும், தவிப்புடனும்
உன்னருகிலே நின்றிருந்தேன் -
மாலையும் கழுத்துமாக.
நீ நேசத்துடன் புன்னகைத்து
என் நண்பர்களுடன்
கை குலுக்கினபொழுதிலே
நான் உன்னை மதித்தேன்.

மோதிர விரலின் எடை
குறைவென்று
உன் சொந்தம் ஒன்று
குதித்த பொழுது
ஒரு கடைக் கண் பார்வையால்
நீ கீழடக்கிய பொழுது
உன்னிடத்தில்
நான் நன்றியுடையவளானேன்.

நெருப்பின் வெக்கையில்
வேர்த்துப் போன மேனியும்
புகையின் கரிச்சலில்
கலங்கிப் போன கண்களுமான
என்னைத் தொல்லை செய்யாது
முதலிரவிலே எனக்கு ஓய்வு தந்த
உன்மீது காதலுடையவளானேன்.

உன்னவளான பின்பு
முதன்முதலாய்
என் முதல்தேதியின் வரவை
எனக்கே
நீ திருப்பித் தந்த பொழுது
உன்னை
நான் மனிதனாக உணர்ந்தேன்.

இவையத்தனையும்
இணைந்தென்னை
உணரச் செய்தது
என்னை,
உனக்காக
சமைஞ்ச பொண்ணாக.

poo
11-04-2003, 04:02 PM
பாராட்டுக்கள் நண்பரே... அருமையாய் வடிக்கிறீர்..

இளசு
11-04-2003, 04:34 PM
ஓரளவு பாடுபொருளாய் இருந்தவன் நான்...
ஓரளவுக்கு மேல் இருக்கமுடியாமல்
நெருக்கடி கொடுத்தவன் நான்...

நாயகனாக எல்லாருக்கும்தான் ஆசை
வில்லனாகாமல் இருப்பதே பிரயத்தனம்..
விதூஷகன் ஆகாமல் இருப்பது அதிர்ஷ்டம்...

Narathar
12-04-2003, 05:40 AM
நண்பா........ அழகிய வரிகள்
பாராட்டுக்கள்!!

Nanban
12-04-2003, 07:58 AM
நாயகனாக எல்லாருக்கும்தான் ஆசை
வில்லனாகாமல் இருப்பதே பிரயத்தனம்..
விதூஷகன் ஆகாமல் இருப்பது அதிர்ஷ்டம்...

முதல் இரண்டு வரிகள் சரிதான். விதூஷகன் மீது அப்படியென்ன கோபம்? எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்வதே அவனது தொழிலல்லவா?

இளசு
12-04-2003, 12:21 PM
நாயகனாக எல்லாருக்கும்தான் ஆசை
வில்லனாகாமல் இருப்பதே பிரயத்தனம்..
விதூஷகன் ஆகாமல் இருப்பது அதிர்ஷ்டம்...

முதல் இரண்டு வரிகள் சரிதான். விதூஷகன் மீது அப்படியென்ன கோபம்? எல்லோரும் இன்புற்றிருக்கச் செய்வதே அவனது தொழிலல்லவா?

நான் எண்ணியது :

தனைத்தானே மெல்ல நகும் தன்மையும் அல்ல (நன்றி: ராம்)
தம் கவலை மறந்து சிரிக்க வைக்கும் கலைவாணரல்ல
கேட்காமலே தேடி வரும் இ- குரூப் மெம்பர் பதவி (நன்றி: மனோG)

rambal
12-04-2003, 06:01 PM
பாராட்டுக்கள் நண்பனுக்கு.. பாடுபொருளில் தெரியும் முதிர்ச்சிக்கு..
மற்றும் அண்ணனுக்கு
இந்த இடத்தில் என் கவிதையை நினைவுகூர்ந்தமைக்கு

அமரன்
29-10-2007, 09:09 PM
நண்பர்கள் குலாமுடன் குலாவுவதை தப்பாக எண்ணாது மதிப்பவன்
வரதட்சணை மதம்பிடித்து மனிதத்தை துவம்சம் செய்பவர்களை மிதிப்பவன்.
உணர்வுகளுக்கு மதிப்புகொடுத்து உணர்ச்சிகளை புரிந்துகொள்பவன்.
தன்னில் பாதியானதை, அவள் ஆளானதை அவளுக்கே அடையாளம் காட்டுபவன்.நாயகனாவதுக்கு இருக்க வேண்டிய தகுதிகளில் நண்பன் சொல்லும் இவை கொடுத்து வைத்த வாழ்க்கை வாழ்வதற்கு வழிகாட்டுகின்றன

ஓவியன்
04-11-2007, 01:54 AM
உணர்வுகள் இருபாலாருக்கும் பொதுவானவை, நம் உணர்வுகளுக்கு வடிகாலை நம் துணையிடமிருந்து எதிர் பார்க்கையில் நாமும் நம் துணையின் உணர்வுகளை மதித்தாலே போதும் எல்லோருமே நாயகர்களாகிவிடலாம் - அது ஒன்றும் கடினமானதில்லை....!!

பிச்சி
04-11-2007, 09:31 AM
கவிதை அருமையாக இருக்கிறது. அதுவும் ஒரு பொண்ணின் பார்வையில்.