PDA

View Full Version : துச்சாதனப் பார்வைகள்.....



Nanban
11-04-2003, 03:46 PM
விழித்து, விழித்து
கண்கள் கரித்தது.

தொட்டி நிறைய
நீர் நிரப்பி
கண்களை
குளிரக் குளிர கழுவினேன்

பார்வை சுத்தமாகியது.

தொட்டி நீரிலோ -
உடைந்துபோன
துகிலுரியப்பட்ட
உடல்கள் அழுக்காய்
மிதந்தது.

இளசு
11-04-2003, 03:52 PM
கண் கழுவ நீருண்டு... மனக்
கறை கழுவ ஆருண்டு.....
பார்க்கவைத்து பதைக்கவைத்து
கழுவ வைத்து, கறையைவைத்து
கறையை மறைக்கவைத்து
கண்ணுக்கு உறைகொடுத்து
தீராத விளையாட்டுக்கு
தினம் தினம் வரச்சொன்னதாரு...??
புரியம் வரை ஆட்டம் உண்டு
என்றோ முடியும் நிச்சயம்
அதனால் இன்னைக்கு என்ன..
ஆரம்பித்தேன் மறுபடியும்!!!!!!

puppy
08-01-2004, 06:45 AM
அடடா.....நல்லா இருக்கே......பாராட்டுக்கள்

Nanban
08-01-2004, 07:48 AM
கண் பட்ருச்சு, சுத்தி போடுங்க என்று வீட்டில் சொல்லுவார்கள். அப்படி பார்வைகளை கழித்து பார்த்தால் எப்படி என்று தோன்றியது........... அதனால் தான் இந்தக் கவிதை............

Nanban
08-01-2004, 05:43 PM
விழித்து, விழித்து
கண்கள் கரித்தது.
தொட்டி நிறைய
நீர் நிரப்பி
கண்களை
குளிரக் குளிர கழுவினேன்
பார்வை சுத்தமாகியது.

தொட்டி நீரிலோ -
உடைந்துபோன
துகிலுரியப்பட்ட
உடல்கள் அழுக்காய்
மிதந்தது.

இதே கவிதையை இப்போ எழுதியிருந்தேன்னா -

விழித்து விழித்து
கரிக்கும் கண்களை
குளிர, குளிர கழுவினேன்
தொட்டியில் நீர் நிறைத்து.

பார்வை சுத்தமாகியது -
தொட்டி நீரோ
அழுக்கானது
துகிலுரியப்பட்டு மிதக்கும்
உடல்களால்.......

நிலா
08-01-2004, 05:56 PM
அருமை நண்பன்!
முந்தையதை மீண்டும் படிக்கையில் இப்படி எழுதினா நல்லாயிருந்திருக்கும்னு
தோணுவது இயல்பே.அதுவும் அனுபம் பேசும் போது?

இப்ப எழுதினது இன்னும் அருமை!

Nanban
08-01-2004, 06:05 PM
முந்தி எழுதினது குறைச்சலான அனுபவம்......

இப்பொழுது வார்த்தைகளை இன்னும் குறைத்து, ஒழுங்காக அடுக்கி........

நான் கற்றுக் கொண்டதெல்லாம், இந்த ஒரு வருடத்தில் தான் - ஆனால், அதற்காக நான் கொடுத்த விலையும், காலமும் அதிகம்.......

(என்னவோ, ஏதோ என்று பயந்து விடாதீர்கள் - வாங்கிய புத்தகங்களும், படித்த பொழுதுகளும் ---- அவ்வளவே........ என்றாலும் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது - குறிப்பாக வார்த்தைகள் - இதற்கு கொஞ்சம் பழமையான கவிதைகளையும் படிக்க வேண்டும் - பார்க்கலாம்....)

இ.இசாக்
08-01-2004, 06:09 PM
சுத்தமாதல்
அழகென்றால்
அழுக்காதல் அதற்கு மூலம்.

நிலா
08-01-2004, 06:10 PM
இசாக் கலக்கிபோட்டீங்க போங்க சூப்பர்!

இ.இசாக்
08-01-2004, 06:13 PM
இசாக் கலக்கிபோட்டீங்க போங்க சூப்பர்!

என்ன நிலா இப்படியெல்லாம் கவுக்கறீங்க.!

Nanban
08-01-2004, 06:15 PM
சுத்தமாதல்
அழகென்றால்
அழுக்காதல் அதற்கு மூலம்.

வாவ்...... முதலில் சரியாக புரியவில்லை......... பின்னர் புரிந்தபொழுது அட, அட...
கண்ணதாசன் ஒருமுறை கூறினார் ' உங்கள் எல்லோருக்கும் எப்படி
வாழ்வது என்று அறிவுரை கூற எனக்குத் தகுதியுண்டு...... நீங்கள் முகஞ்சுழிக்கும்
சாக்கடையில் வீழ்ந்து எழுந்தவன் என்பதால்........' என்றார். ஆமாம் தகுதி பெற
வேண்டுமென்றால், அதில் வீழ்ந்தவனுக்குத் தான் அந்த நரகம் முழுவதுமாக
தெரியும்.... அவன் தான் பேசலாம்.......

அழுக்காவது தான் சுத்தத்திற்கு மூலம்..........அழகான தத்துவம்........

நிலா
08-01-2004, 06:18 PM
என்ன நிலா இப்படியெல்லாம் கவுக்கறீங்க.!


உண்மை உண்மை இசாக்!
(கவுக்கறது இல்ல நீங்க கலக்கறது உண்மை!)