PDA

View Full Version : முகமூடியணிந்தவன்......



Nanban
11-04-2003, 03:43 PM
அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை

அன்று ஒருநாள்
நான்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
ஒரு மிருகம்
உறுமிக் கொண்டே
ஜன்னல் கம்பிகளினூடாக
அப்பாவின் அறையில் நுழைந்தது.
முடிநிறைந்த தேகம்.
தள்ளாடும் கால்கள்.
மமிசமும் புகையும் நாறும் வாய்.
கடுகடுக்கும் சிவப்பு கண்கள்.

அன்றிலிருந்து அப்பாவின் அறைக்குள்
நான் நுழைவதில்லை.

வாசனைமிக்க சோப்பால்
உடல் நாற்றம் போக்கும்.
நறுமணத் தூவாளையை
பீச்சியடிக்கும்
நாகரீக உடையின் மேலே.
பின் எடுத்து மாட்டும்
அப்பாவின் முகத்தை.

சீறி சீறிப் பாயும் - அம்மாவின் மீது.
என்னை மட்டும் பார்த்துப் புன்னகைக்கும்
நான் அப்பாவின் அறைக்கு
வெளியே நிற்கும் வரைக்கும்.

காலையில் போகும் வேட்டைக்கு -
அலுவலகத்தில் புள்ளிமான்கள் உண்டாம்
எதிர்க்க திராணியற்ற அப்பிராணிகள்..
இரவில் வரும் நேரம் எனக்குத் தெரியும்
என்னை அணைத்துப் படுத்திருக்கும்
அம்மா
தன் ஆத்மாவை மட்டும்
என் மீது போர்த்திவிட்டு,
உடலை மட்டும் எடுத்துப்போவாள் -
முகமூடியை கழற்றி வைத்த
அப்பாவின் அறைக்கு.

அப்பாவே,
நீ எப்போதும் முகமூடி
மாட்டியே இரு -
எனக்குப் பிடித்த மாதிரியே?

poo
11-04-2003, 04:10 PM
பிஞ்சு நெஞ்சில் விதைத்த விதை ....

அறுவடையை அழகாய் சொல்லியுள்ளீர்..

இளசு
11-04-2003, 04:54 PM
ஒரு பக்கம் அப்பாயணம்
மறுபக்கம் இந்த தப்பாயணம்

அமுதமும் விஷமும் ஒரு கடலில் கிடைத்தது
எது எது எவர்க்கென எவன் வந்து விதித்தது...

Narathar
12-04-2003, 05:30 AM
வித்தியாசமான கவிதை..........
யதார்த்தமான கவிதை..........
மொத்தத்தில் சிறந்த கவிதை!!

Nanban
12-04-2003, 08:29 AM
ஒரு பக்கம் அப்பாயணம்
மறுபக்கம் இந்த தப்பாயணம்

அமுதமும் விஷமும் ஒரு கடலில் கிடைத்தது
எது எது எவர்க்கென எவன் வந்து விதித்தது...

அமுதும், விஷமும் எல்லோரிடத்தும் உண்டு. தன் குழந்தையைப் பார்த்து புன்னகைக்கும் அதே மனிதன், மற்றவர்களிடத்தில் வேறுபடுகிறான். இங்கே அமுதும் கொஞ்சம் இருக்கத் தான் செய்கிறது..... ஆனால், கவிதையின் பொருளாக மனிதனின் இருண்ட பகுதியை எடுத்துக் கொண்டதால், அதை மேலும் வீர்யமடையச் செய்ய, மகளின் உருவில் ஒரு விமர்சனக் கண்ணோட்டம்......

rambal
12-04-2003, 04:53 PM
முகமூடி எல்லோரிடமும் உண்டு..
சிரிப்பாய்..
கண்ணீராய்...
வக்கிரமாய்...
வன்முறையாய்..
காதலாய்..
இப்படி பலவித முகமூடிகள் உண்டு..
என்ன செய்ய..
சில முகமூடிகள் சிலரை பாதிக்கும்..
அந்த வகையில் இந்த (முகமூடி) கவிதை

பாராட்டுக்கள் நண்பனுக்கு..