PDA

View Full Version : புதுப் பாதை போட வா



Nanban
11-04-2003, 03:34 PM
கால மயக்கத்தில் வீழ்ந்து
உறைந்து போய்
நிற்கும் மொழிப் போராளிகள் -
இங்கு ஆயிரமாயிரம்.

நிகழ் காலத்தைப் புதைத்து விட்டு,
இறந்த காலத்தை தொட்டிலிட்டு,
தாலாட்டுப் பாடும் பாவணர்கள் -
தாரளமுண்டு இவ்விடத்து.

கண்ணகியே, நீ
மீண்டும் இங்கு வந்து
பிறக்காதே.
முலையைத் திருகி எறிந்தால்
மதுரை எறியுமென்று
இன்னமும் நம்புகிறார்கள்
இங்கே.

பகையரசன் சுமந்த கற்களுக்கு
சுண்ணாம்பு அடித்து
வெறும் கல்லாக்கிவிட்டு
மாய்ந்து மாய்ந்து கவிதை
வாசித்தவர்கள்
மறந்து போனார்கள் -
ஆயிரம் ஆண்டுகள் அல்ல,
அய்ம்பது ஆண்டுகளுக்குப்
பின்னர் நினைத்துப் பார்க்க
தாங்கள் எதையும் விட்டுப்போக
முயற்சிக்கவில்லையென்று.

பழம் பெருமை போதும் நமக்கு
புதுப்பெருமை தேட......
புதுப்பாதை போட......
முயற்சிக்கலாம்.

karikaalan
11-04-2003, 03:41 PM
உண்மையான வரிகள். வாழ்த்துக்கள், நண்பரே!

poo
11-04-2003, 04:08 PM
கவிதைக் கடலில் குளிக்க வைக்கும் கவியே பாராட்டுக்களை எப்படி சொல்வதென தெரியவில்லை!!!

இளசு
11-04-2003, 04:46 PM
பழம்பெருமை தலையணை
ஓய்வு நேரம் சுகம் தர தேடு
புதிய இலக்கு அரியணை
அயராது அதை நோக்கி நடை போடு..

Narathar
12-04-2003, 05:34 AM
பழம் பெருமை போதும் நமக்கு
புதுப்பெருமை தேட......
புதுப்பாதை போட......
முயற்சிக்கலாம்.
தமிழ் மன்றத்தோடு இணைந்து புறப்படு.................
திறமான கவிதை வாழ்த்துக்கள்...........

rambal
12-04-2003, 06:22 PM
இப்போதைய தேவை
பழம்பெருமைகள் அல்ல..
கொஞ்சம் புதிய முயற்சிகள்...
தெளிவுபட சொன்ன நண்பனுக்கு பாராட்டுக்கள்..

kavitha
28-01-2004, 09:29 AM
எல்லோரும் வரலாற்றைப்பற்றியே
பேசிக்கொண்டிருந்தால்
நாம் வரலாற்றில் இடம் பெறுவது எப்போது?

சரி தான் நண்பரே!

Nanban
01-02-2004, 09:48 AM
மன்றத்தின் ஆரம்பகால கவிதை ஒன்றை மறுபடியும் வாசித்த கவிதாவிற்கு நன்றிகள்... (மற்றவர்களுக்கும் தான் - முன்னரே நன்றி கூற மறந்து போய்விட்டது....)