PDA

View Full Version : சில ஆலோசனைகள்.தேவை.- (அவசரமாக)



poo
11-05-2004, 01:35 PM
எங்களிடம் மொத்தம் 7 கணனிகள் உள்ளன.

அவற்றை modem-> internet server-> hub வழியாக இணைத்திருக்கிறோம்.

இப்போது இருக்கும் ஆபரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ்'2000 NT.

வைரஸ் ஸ்கேனர் AVG.

அனைத்து கணினிகளும் அடிக்கடி பிரச்சினைக்குள்ளாகிறன. குறிப்பாக அடிக்கடி பிரவுசரில் ஏதேனும் தேடுபொறி விலாசம் வந்து உட்கார்ந்து கொள்கிறது. Tools சென்று about blank கொடுத்தாலும் போவதில்லை. Registry-யில் அவையெல்லாம் தங்கியிருக்கிறது. அங்கேயும் மாற்றம் செய்யமுடியவில்லை. செய்தாலும் அவை சேமிக்கப்படுவதில்லை.. மூடி திறந்தால் பழைய நிலையையே காட்டுகிறது .

மிக மிக மெதுவாக ஒவ்வொரு பக்கமும் திறக்கிறது.. இணையம் அல்லாமல் கணனியை திறந்தாலும் மெதுவாகவே திறக்கிறது..

நான் அனைத்து கணினிகளையும் format செய்துவிட்டு மீண்டும் நிறுவலாம் என்றிருக்கிறேன். என்ன ஆபரேட்டிங் சிஸ்டம் போடுவது?!

இதுநாள் வரை விண்'2000 போட்டதற்கான காரணம். அதற்கு சில restrictions உருவாக்கி வைத்திருந்தமையாலே.. அதாவது கீழே கொடுத்துள்ளேன் பாருங்களேன்..

for restrict:



REGEDIT4

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer]
"NoDriveTypeAutoRun"=dword:00000091
"EditLevel"=dword:00000000
"NoSaveSettings"=dword:00000001
"NoThemesTab"=dword:00000001
"NoChangeKeyboardNavigationIndicators"=dword:00000000
"NoChangeAnimation"=dword:00000000
"NoAddPrinter"=dword:00000001
"NoDeletePrinter"=dword:00000001
"NoPrinters"=dword:00000000
"NoDriveAutoRun"=dword:00000001
"RestrictRun"=dword:00000000
"DisallowRun"=dword:00000000
"NoSharedDocuments"=dword:00000000
"NoDesktop"=dword:00000000
"ClassicShell"=dword:00000000
"NoViewContextMenu"=dword:00000000
"NoFileMenu"=dword:00000000
"NoShellSearchButton"=dword:00000000
"ClearRecentDocsOnExit"=dword:00000000
"NoWinKeys"=dword:00000000
"NoFileAssociate"=dword:00000000
"NoDFSTab"=dword:00000000
"NoHardwareTab"=dword:00000000
"DisablePersonalDirChange"=dword:00000000
"DisableMyPicturesDirChange"=dword:00000000
"DisableMyMusicDirChange"=dword:00000000
"DisableFavoritesDirChange"=dword:00000000
"NoSetTaskbar"=dword:00000000
"NoSMConfigurePrograms"=dword:00000000
"NoRecentDocsMenu"=dword:00000000
"NoSMMyPictures"=dword:00000000
"NoStartMenuMyMusic"=dword:00000000
"NoSMMyDocs"=dword:00000000
"NoFavoritesMenu"=dword:00000000
"NoSMHelp"=dword:00000000
"NoCommonGroups"=dword:00000000
"NoFind"=dword:00000000
"NoWindowsUpdate"=dword:00000000
"NoChangeStartMenu"=dword:00000000
"NoUserNameInStartMenu"=dword:00000000
"NoStartMenuMorePrograms"=dword:00000000
"NoStartMenuEjectPC"=dword:00000000
"NoSimpleStartMenu"=dword:00000000
"ForceStartMenuLogoff"=dword:00000000
"StartMenuLogoff"=dword:00000000
"NoLogOff"=dword:00000000
"NoStartMenuSubFolders"=dword:00000000
"NoDisconnect"=dword:00000000
"NoSetFolders"=dword:00000000
"NoTrayContextMenu"=dword:00000000
"LockTaskbar"=dword:00000000
"HideClock"=dword:00000000
"NoToolbarsOnTaskbar"=dword:00000000
"NoStartBanner"=hex:00,00,00,00
"NoActiveDesktop"=dword:00000000
"ForceActiveDesktopOn"=dword:00000000
"NoFileUrl"=dword:00000000
"NoInternetIcon"=dword:00000000
"NoBandCustomize"=dword:00000000
"NoToolbarCustomize"=dword:00000000
"NoInstrumentation"=dword:00000000
"NoExpandedNewMenu"=dword:00000000
"SpecifyDefaultButtons"=dword:00000000
"EnforceShellExtensionSecurity"=dword:00000000
"NoLowDiskSpaceChecks"=dword:00000000
"NoClose"=dword:00000000
"NoRunasInstallPrompt"=dword:00000000
"PromptRunasInstallNetPath"=dword:00000000
"NoResolveTrack"=dword:00000000
"NoResolveSearch"=dword:00000000
"LinkResolveIgnoreLinkInfo"=dword:00000000
"NoDevMgrUpdate"=dword:00000000
"NoCDBurning"=dword:00000001
"NoRecentDocsHistory"=dword:00000001
"NoStartMenuPinnedList"=dword:00000001
"NoStartMenuMFUprogramsList"=dword:00000001
"NoWelcomeScreen"=dword:00000001
"NoDrives"=dword:00000004
"NoComputersNearMe"=dword:00000001
"NoNetHood"=dword:00000001
"NoNetConnectDisconnect"=dword:00000001
"NoManageMyComputerVerb"=dword:00000001
"NoRun"=dword:00000001
"NoNetworkConnections"=dword:00000001
"NoRecentDocsNetHood"=dword:00000001
"NoPropertiesRecycleBin"=dword:00000001
"NoPropertiesMyComputer"=dword:00000001
"NoControlPanel"=dword:00000001
"NoFolderOptions"=dword:00000001
"NoStartMenuNetworkPlaces"=dword:00000001

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesSystem]
"NoDispCPL"=dword:00000001
"NoDispAppearancePage"=dword:00000001
"NoDispBackgroundPage"=dword:00000001
"NoDispScrSavPage"=dword:00000001
"NoVisualStyleChoice"=dword:00000000
"NoColorChoice"=dword:00000000
"NoSizeChoice"=dword:00000000
"DisableTaskMgr"=dword:00000001
"DisableLockWorkstation"=dword:00000001
"HideLogonScripts"=dword:00000000
"HideLogoffScripts"=dword:00000000
"HideLegacyLogonScripts"=dword:00000000
"NoDispSettingsPage"=dword:00000001
"DisableRegistryTools"=dword:00000000
"DisableCMD"=dword:00000001

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesWindowsUpdate]
"DisableWindowsUpdateAccess"=dword:00000001

[HKEY_LOCAL_MACHINESoftwarePoliciesMicrosoftWindowsInstaller]
"DisableMSI"=dword:00000001

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesNetwork]
"NoWorkgroupContents"=dword:00000001
"NoEntireNetwork"=dword:00000001

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesActiveDesktop]
"NoChangingWallPaper"=dword:00000001
"NoComponents"=dword:00000000
"NoAddingComponents"=dword:00000001
"NoDeletingComponents"=dword:00000001
"NoEditingComponents"=dword:00000001
"NoCloseDragDropBands"=dword:00000000
"NoMovingBands"=dword:00000000
"NoHTMLWallPaper"=dword:00000001

[HKEY_LOCAL_MACHINESoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer]
"NoDriveTypeAutoRun"=dword:00000001


இந்த file regedit முறையில் சேமிக்கப்பட்டுள்ளது. இதை நான் திறந்து ok செய்து logoff செய்தால்
control panel,internet tools,folder options, c:, Display properties- இவை அனைத்தும் செயலிழந்துவிடும்.

இவைகளை பயன்படுத்த வேண்டுமெனும்போது கீழே உள்ள கோப்பை திறந்து உபயோகப்படுத்தி மீண்டும் மேலே உள்ளதை
வைத்து தடைசெய்திடுவோம்.

for remove:


REGEDIT4

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer]
"NoDriveTypeAutoRun"=dword:00000091
"EditLevel"=dword:00000000
"NoSaveSettings"=dword:00000000
"NoThemesTab"=dword:00000000
"NoChangeKeyboardNavigationIndicators"=dword:00000000
"NoChangeAnimation"=dword:00000000
"NoAddPrinter"=dword:00000000
"NoDeletePrinter"=dword:00000000
"NoPrinters"=dword:00000000
"NoDriveAutoRun"=dword:00000000
"RestrictRun"=dword:00000000
"DisallowRun"=dword:00000000
"NoSharedDocuments"=dword:00000000
"NoDesktop"=dword:00000000
"ClassicShell"=dword:00000000
"NoViewContextMenu"=dword:00000000
"NoFileMenu"=dword:00000000
"NoShellSearchButton"=dword:00000000
"ClearRecentDocsOnExit"=dword:00000000
"NoWinKeys"=dword:00000000
"NoFileAssociate"=dword:00000000
"NoDFSTab"=dword:00000000
"NoHardwareTab"=dword:00000000
"DisablePersonalDirChange"=dword:00000000
"DisableMyPicturesDirChange"=dword:00000000
"DisableMyMusicDirChange"=dword:00000000
"DisableFavoritesDirChange"=dword:00000000
"NoSetTaskbar"=dword:00000000
"NoSMConfigurePrograms"=dword:00000000
"NoRecentDocsMenu"=dword:00000000
"NoSMMyPictures"=dword:00000000
"NoStartMenuMyMusic"=dword:00000000
"NoSMMyDocs"=dword:00000000
"NoFavoritesMenu"=dword:00000000
"NoSMHelp"=dword:00000000
"NoCommonGroups"=dword:00000000
"NoFind"=dword:00000000
"NoWindowsUpdate"=dword:00000000
"NoChangeStartMenu"=dword:00000000
"NoUserNameInStartMenu"=dword:00000000
"NoStartMenuMorePrograms"=dword:00000000
"NoStartMenuEjectPC"=dword:00000000
"NoSimpleStartMenu"=dword:00000000
"ForceStartMenuLogoff"=dword:00000000
"StartMenuLogoff"=dword:00000000
"NoLogOff"=dword:00000000
"NoStartMenuSubFolders"=dword:00000000
"NoDisconnect"=dword:00000000
"NoSetFolders"=dword:00000000
"NoTrayContextMenu"=dword:00000000
"LockTaskbar"=dword:00000000
"HideClock"=dword:00000000
"NoToolbarsOnTaskbar"=dword:00000000
"NoStartBanner"=hex:00,00,00,00
"NoActiveDesktop"=dword:00000000
"ForceActiveDesktopOn"=dword:00000000
"NoFileUrl"=dword:00000000
"NoInternetIcon"=dword:00000000
"NoBandCustomize"=dword:00000000
"NoToolbarCustomize"=dword:00000000
"NoInstrumentation"=dword:00000000
"NoExpandedNewMenu"=dword:00000000
"SpecifyDefaultButtons"=dword:00000000
"EnforceShellExtensionSecurity"=dword:00000000
"NoLowDiskSpaceChecks"=dword:00000000
"NoClose"=dword:00000000
"NoRunasInstallPrompt"=dword:00000000
"PromptRunasInstallNetPath"=dword:00000000
"NoResolveTrack"=dword:00000000
"NoResolveSearch"=dword:00000000
"LinkResolveIgnoreLinkInfo"=dword:00000000
"NoDevMgrUpdate"=dword:00000000
"NoCDBurning"=dword:00000000
"NoRecentDocsHistory"=dword:00000000
"NoStartMenuPinnedList"=dword:00000000
"NoStartMenuMFUprogramsList"=dword:00000000
"NoWelcomeScreen"=dword:00000000
"NoDrives"=dword:00000004
"NoComputersNearMe"=dword:00000000
"NoNetHood"=dword:00000000
"NoNetConnectDisconnect"=dword:00000000
"NoManageMyComputerVerb"=dword:00000000
"NoRun"=dword:00000000
"NoNetworkConnections"=dword:00000000
"NoRecentDocsNetHood"=dword:00000000
"NoPropertiesRecycleBin"=dword:00000000
"NoPropertiesMyComputer"=dword:00000000
"NoControlPanel"=dword:00000000
"NoFolderOptions"=dword:00000000
"NoStartMenuNetworkPlaces"=dword:00000000

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesSystem]
"NoDispCPL"=dword:00000000
"NoDispAppearancePage"=dword:00000000
"NoDispBackgroundPage"=dword:00000000
"NoDispScrSavPage"=dword:00000000
"NoVisualStyleChoice"=dword:00000000
"NoColorChoice"=dword:00000000
"NoSizeChoice"=dword:00000000
"DisableTaskMgr"=dword:00000000
"DisableLockWorkstation"=dword:00000000
"HideLogonScripts"=dword:00000000
"HideLogoffScripts"=dword:00000000
"HideLegacyLogonScripts"=dword:00000000
"NoDispSettingsPage"=dword:00000000
"DisableRegistryTools"=dword:00000000
"DisableCMD"=dword:00000000

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesWindowsUpdate]
"DisableWindowsUpdateAccess"=dword:00000000

[HKEY_LOCAL_MACHINESoftwarePoliciesMicrosoftWindowsInstaller]
"DisableMSI"=dword:00000000

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesNetwork]
"NoWorkgroupContents"=dword:00000000
"NoEntireNetwork"=dword:00000000

[HKEY_CURRENT_USERSoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesActiveDesktop]
"NoChangingWallPaper"=dword:00000000
"NoComponents"=dword:00000000
"NoAddingComponents"=dword:00000000
"NoDeletingComponents"=dword:00000000
"NoEditingComponents"=dword:00000000
"NoCloseDragDropBands"=dword:00000000
"NoMovingBands"=dword:00000000
"NoHTMLWallPaper"=dword:00000000

[HKEY_LOCAL_MACHINESoftwareMicrosoftWindowsCurrentVersionPoliciesExplorer]
"NoDriveTypeAutoRun"=dword:00000000


விண்டோஸ் எக்ஸ்.பி போட்டாலும் இது வேலை செய்கிறது. ஆனால் internet explorer-ல் மட்டும் address-ஐ "www. என தொடங்கினால் வேலை செய்வதில்லை. (internet explorer could not search the page என வந்து இணையம் உள்ளே போகாது.. பிறகு மூன்றாவது நபரின்(வி.எஸ்.என்.எல் அல்லது சத்யம்) எக்ஸ்ப்ளோரர் நிறுவினால் வேலை செய்யும்!)

எனக்கு இப்போது தேவையான தகவல்கள்..

அனைத்தையும் format செய்து எந்த ஆபரேட்டிங் சிஸ்டம் போடலாம்? என்னிடம் உள்ள விண். எக்ஸ்.பி- ரெஜிஸ்டர் கீ
கேட்கிறது. (அது என்ன?!)

சில சமயம் விண்'2000 NT நிறுவி முடித்தபின் மவுஸ் வேலை செய்வதில்லை. (எந்த மவுஸ் மாற்றினாலும் தேடிக்கண்டுபிடிப்பதில்லை!)

அனைத்து சிஸ்டங்களும் P-3 வகையை சேர்ந்தவை. அதனால் எக்ஸ்.பி போட்டால் வேகம் குறையுமா?!

அடுத்த வாரத்தில் பிராட்பேண்ட் லைன் வாங்குகிறோம். (எங்களிடம் router இல்லை. ஆனாலும் அது இல்லாமல் ஏதோ net server(?!) மூலம் இணைக்கமுடியும் என்கிறார்களே.. அது சாத்தியமா?!!).

கொஞ்சம் ஆலோசனைகள் சொல்லுங்களேன் நண்பர்களே..

(பிரவுசிங் செண்டர் என்பதால் அடிக்கடி வாடிக்கையாளர்கள் மூலம் தொல்லைகள் வரும். பெரும் தலைவலியாக இருக்கிறது. கொஞ்சம் எளிதாக (பிரச்சினைகளை சமாளிக்கும்படியான ஆபரேட்டிங் சிஸ்டம்) இருக்கும்படியாக ஏதேனும் வழிமுறைகள் இருக்கிறதா?!!)

பாலமுருகன்
12-05-2004, 03:59 AM
நண்பர் பூ அவர்களே...

windows2000 நிலையான ஆபரேட்டிங் சிஸ்டம். அதை நிறுவி மேலும் அதற்குண்டான பராமரிப்பு பதிப்பு மற்றும் நேரிடையாக மைக்ரோசாப்ட் இணையத்திலிருந்து ஸ்கேன் செய்து கிரிட்டிகல் பேஜ் போன்றவற்றை நிறுவி உங்கள் கணினியை அப் டு டேட்டாக வைத்திருந்தாலே போதும்.. எந்த ஒரு வைரசும் உங்கள் கணினியை அவ்வளவு எளிதில் தாக்காது. அதிலும் நான் சொன்ன ஆபரேட்டிங் சிஸ்டம் மிகவும் நிலையானது.. என்ன... வீடியோ கேம் போன்றவைகளை 2000 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் விளையாட முடியாது. அதற்கு 98SE நிறுவிகொள்ளுங்கள்.

உங்கள் IE address bar பிரச்சினைக்கு உங்கள் பிரவுசிங் செண்டர் வருபவர்கள் ஏதாவது டவுன்லோடு என்று கவர்சிகரமான விளம்பரங்கள் இனையத்தில் வரும்போது அதை உண்மையென நம்பி டவுன்லோடு செய்வதால் உங்கள் IE முடக்கப்பட்டுவிடும். இதற்கும் IE critical patch போட வேண்டும்.

இங்கே சென்று இந்த மென்பொருளை இறக்கிக்கொள்ளுங்கள்...

http://www.shareup.com/Npust_Homepage_Guar...nload-9758.html (http://www.shareup.com/Npust_Homepage_Guard-download-9758.html)

நன்றி
பாலா

பாலமுருகன்
12-05-2004, 04:03 AM
நீங்கள் windows 2000 தற்போது உபயோகபடுத்திகொண்டிருந்தால் புதிதாக ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து அதன்வழியாக உள்ளே சென்று இப்பிரச்சினை வருகிறதா என்று பாருங்கள். சில நேரங்களில் புரொபைல் மாற்றுவதன் மூலம் தற்காலிகமாக தடுக்கலாம்.

மேலும் உங்கள் பிரச்சினை தொடர்பான விபரங்களை அள்ளிதர நம் நன்பர்கள் வருவார்கள் .. அதுவரை சற்று பொறுத்திருங்கள்..

நன்றி
பாலா

poo
12-05-2004, 05:11 AM
உதவிக்கு நன்றி பாலா..



windows2000 நிலையான ஆபரேட்டிங் சிஸ்டம். அதை நிறுவி மேலும் அதற்குண்டான பராமரிப்பு பதிப்பு மற்றும் நேரிடையாக மைக்ரோசாப்ட் இனயத்திலிருந்து ஸ்கேன் செய்து கிரிட்டிகல் பேஜ் போன்றவற்றை நிறுவி உங்கள் கனினியை அப் டு டேட் வைத்திருந்தாலே போதும்..

நன்றி
பாலா

இவைகளை எப்படி செய்யவேண்டும்.. அதாவது நிறுவியபின் பராமரிப்பு கிரிட்டிகள் பேஜ்.. என சொல்லியிருக்கிறீர்களே.. அவைகளை எப்படி எங்கிருந்து இறக்கவேண்டும்?!

பாலமுருகன்
12-05-2004, 07:00 AM
முதலில் உங்களுக்கு தேவையான கோப்புகள் அனைத்தையும் ஒரு வன்தகட்டில் சேமித்துக் கொள்ளாவும். இப்போது அதை தனியே கணினியில் இருந்து பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அனைத்து கணினிகளிலும் நெட்வொர்க் கேபிளை பிடுங்கி விடவும். எந்த கணினியும் நெட்வொர்க்கில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் ஒரு கணினியில் மட்டும் அதில் உள்ள வன்தகட்டை முழுமையாக பார்மேட் செய்யவும். உங்களுக்கு தேவையான ஆபரேட்டிங் சிஸ்டத்தை நிறுவிக் கொள்ளுங்கள். (ஒரிஜினல் சி.டி வழியாக). கைவசம் சி.டியில் சர்வீஸ்பேக் இருந்தால் நிறுவவும். இல்லையென்றால் நேரிடையாக இணைய இணைப்பை அந்த கணினியில் ஏற்படுத்தவும். பிறகு கீழே உள்ள சுட்டிக்கு செல்லுங்கள்:

http://v4.windowsupdate.microsoft.com/en/default.asp

அங்கு "scan for updates" என்ற சுட்டியை தட்டினால்....உங்கள் கணினி பரிசோதிக்கப்படும்.. 100% முடிந்த உடன்.. இடது புறம் பார்த்தால் .."Critical Updates and Service Packs" என்ற இடத்தில் நீங்கள் அவசியமாக நிறுவவேண்டிய மென்பொருள்கள் அங்கு தானாக குறிப்பிடப் பட்டிருக்கும். பிறகென்ன... அந்த சுட்டியை தட்டி அங்குள்ள அனைத்து பராமரிப்பு பதிப்புகளையும் நிறுவிக்கொள்ளுங்கள்.
கடைசியாக ஒருமுறை பரிசோதித்து பார்க்கவும். இப்போது இடதுபுறம் "(0)" என்று வந்தால் உங்கள் கணினி அப் டு டேட் அன்று அர்த்தம். பின்னர் உங்களுக்கு தேவையான வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் மற்றும் வேண்டியவைகளை நிறுவிக்கொள்ளுங்கள்.

இவ்வாறே.. அனைத்து கணினிகளிலும் பின்பற்றவேண்டும். அதற்குமுன் எந்த ஒரு கணினியையும் நீங்கள் நெட்வொர்க்கில் இணைக்கக் கூடாது.

கடைசியாக(வைரஸ் நீக்கும் மென்பொருள்... நிச்சயம் அதற்குண்டான அப்டேட் உடன்) நீங்கள் பாதுகாத்த கோப்புகள் அடங்கிய வன்தகட்டை அந்த கணினியில் இணைத்து வைரஸ் உள்ளதா என்று சோதியுங்கள். வைரஸ் இருந்தால் நீக்கிவிட்டு பிறகு எங்கு வேண்டுமோ அங்கே காப்பி செய்துகொள்ளுங்கள்.

இது அதிகம் வேலை வாங்கும் விசயம்தான். ஆனால் பெரிய தலைவலியை குறைக்கவேண்டுமென்றால்.. இப்படி சின்ன சின்ன தலைவலிகளை பொறுத்துக் கொள்ளதான் வேண்டும்....

வெற்றியாக அமைய வாழ்த்துகள்.

பாலா

poo
12-05-2004, 09:11 AM
ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி பாலா..

எந்த வைரஸ் ஸ்கேனர் நன்றாக இருக்கும்?!!
ஒரிஜினல் சி.டி. விலை என்ன இருக்கும்?!!.. எங்கே கிடைக்கும்?. இங்கே பெரும்பாலும் பைரட்டட் சி.டி.க்கள்தானே இருக்கிறது!

பாலமுருகன்
12-05-2004, 09:47 AM
ஒரிஜினல் சி.டி என்றால் காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.. உங்கள் நண்பர்களிடம் யாராவது அவர்கள் அலுவலகத்தில் உபயோகிப்பதை இரவல் வாங்கி நிறுவிக்கொள்ளுங்கள். (சட்டப்படி தவறு)

வைரஸ் ஸ்கேனர் பற்றி நம் நண்பர்கள் சொல்வார்கள். ரொம்ப நாளா விண்டோசுக்கும் எனக்கும் தொடர்பு அறுந்துவிட்டது... அதனால் எனக்கு அவ்வளவாக தெரியவில்லை.

நன்றி
பாலா

இராசகுமாரன்
12-05-2004, 01:12 PM
எங்கள் அலுவலகத்தின் சர்வர் விண்டோஸ்2000-ல் Norton AntiVirus Corporate Edition உபயோகிக்கிறோம். அது மிக நன்றாக வேலை செய்கிறது. அவ்வப்போது அவர்கள் வெளியிடும் update-களை தானாகவே இறக்கி, அனைத்து கணினிகளிலும் தானாகவே update செய்து விடுகிறது.

எனது கணினியில் விண்டோஸ்98se தான் உள்ளது. அதில் Norton-னுடன், SpySweeper மற்றும்,Window Washer உபயோகிக்கிறேன். அதனால் கணினியில் எந்தவித பிரச்சனையும் இல்லை. நிறைய பேருக்கு அனாவசிய pop up வந்து, எனது SpySweeper தான் கை கொடுத்தது. முயற்சித்துப் பார்க்கவும்.

பாரதி
12-05-2004, 02:08 PM
அன்பு பூ..
எந்த ஆபரேட்டிங் சிஸ்டம் பிரவுசிங் செண்டருக்கு உகந்தது என்பதை அந்த தொழிலில் உள்ளவர்களால்தான் சிறப்பாக கணிக்க முடியும். நீங்கள் அருகில் உள்ள பிரவுசிங் செண்டர்கள் சிலவற்றிற்கு சென்று எந்த வகையான ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது எனப்பாருங்கள். அது உங்களுக்கு முடிவெடுக்க வசதியாக இருக்கும்.

எக்ஸ்-பியை பொறுத்த மட்டில் அடிக்கடி நச்சுநிரலின் பாதிப்புக்கு உள்ளாவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். இதை தவிர்க்க வழி - ஒரிஜினல் ஆபரேட்டிங் சிஸ்டம் வாங்கி ரெஜிஸ்டர் செய்து கொள்வதும், ஒரிஜினல் வைரஸ் ஸ்கேனர் வாங்கி நிறுவி அப்டேட் செய்து வருவதுமே..

நீங்கள் கணினிகள் எல்லாம் மிக மெதுவாக இயங்குகின்றன என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒரு வேளை நச்சுநிரலால் பாதிக்கப்பட்டிருக்கும் என்றே எண்ணுகிறேன். வேறு ஸ்கேனரை நிறுவி முதலில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். பிரபல கம்யூட்டர் நிறுவனங்களிலோ அல்லது புதிய மதர்போர்டு சி.டி.யுடனோ வைரஸ் ஸ்கேனர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

வேகம் குறைவதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். தொலைபேசி லைனில் இரைச்சல், இணையத்தொடர்பில் அதிக பயனாளர்கள் இருப்பது, ஹப்-பிலிருந்து தனிக்கணினிகளுக்கு வரும் கேபிளின் அதிக நீளம்.... இப்படி நிறைய இருக்கிறது.

என்னைப்பொறுத்த வரைக்கும் தனிப்பட்ட உபயோகத்திற்கு விண்டோஸ் 98SE சிறந்தது என்று நினைக்கிறேன்.

poo
14-05-2004, 01:46 PM
கூடுதல் தகவல்களுக்கு நன்றி திரு.இராசகுமாரன் மற்றும் பாரதி அவர்களுக்கு!

பாலமுருகன்
14-05-2004, 01:51 PM
பூ உங்கள் பிரச்சினை தீர்ந்ததா ??? இல்லன்ன சொல்லுங்க .... நாங்க வந்து ஒரு கை!!! பாத்துடுரோம்.... ...

பாலா

poo
15-05-2004, 08:01 AM
கொஞ்சம் கொஞ்சமா தீர்ந்துகிட்டே வருதுங்க பாலா...

(ஆனாலும் வந்து ஒரு கை கொடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்...(கணனிக்கு மட்டுமல்ல... ஹிஹிஹி!!))

என் சிஸ்டம் ஒன்றில் display driver அதுவாகவே நிறுவிக்கொண்டது விண்'2000. (மீண்டும் நிறுவியபோது..) ஆனால் resolution 640x480-யில் இருந்து 800x600-க்கு மாற்றினால் கோடுகோடாக மிக சிறியதாக நிறைய விண்டோக்கள் உருவாகி flickering ஆகிக்கிட்டே இருக்கு..
அதாவது 800-க்கு மேலே தெரிவுசெய்தால் ஆகுமே அப்படி..

என்ன செய்வது?!! ஏன் 600x800-ல் வைக்கமுடியவில்லை.. (இப்போ பெருசு பெருசா இருக்குங்க...)

சாகரன்
15-05-2004, 08:52 AM
டிரைவரில் தான் பிராப்ளம் பூ....

என்ன கிராபிக் கார்ட்னு தெரியுமா? தெரிந்தால் டிரைவரை... இணையத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்...

தானாக நிறுவிக்கொண்ட விண்'2000 டிரைவரின் பிராபர்டியில் சென்று, generic 800/600 resolution monitorக்கு உள்ள டிரைவரை load பண்ண டிரை பண்ணுங்கள்... ஒரு வேளை சரியாகலாம்....

poo
15-05-2004, 11:05 AM
டிரைவரை மீண்டும் (intel) நிறுவினாலும் சரியாகவில்லை. வேறு சிஸ்டமும் அந்த மானிட்டரை இணைத்தபோதும் இதே பிரச்சினை. அநேகமாக இது மானிட்டர் பிரச்சினையாக இருக்குமோ?!

பாரதி
15-05-2004, 02:14 PM
பூ..CPU - உடன் வேறு கணினித்திரையை உபயோகித்து பாருங்கள். எதில் பிரச்சினை என்பதை நீங்களே கண்டு பிடித்து விடலாம்.

baranee
15-05-2004, 02:28 PM
பூ ...safe Mode -ல் கணினியை துவக்கி ,மீண்டும் 640x480 ஆக மாற்றி, கணினியை துவக்குங்கள். பின் சரியான செலுத்துவானை (driver) நிறுவுங்கள்.

பாலமுருகன்
17-05-2004, 07:14 AM
பாரதியும் பரணீயும் சொன்ன மாதிரி முயற்சி செய்து பாருங்கள்.

அப்புறம்.. இதையும் முயற்சி செய்து பாருங்கள்...
rightclick on desktop>properties>setting>colors எவ்வளவு இருக்கிறது? true color 24 bit or high color 16 bit இருக்கிறதா? மேலும் வலதுபுறத்தில் screen area எவ்வளவு தூரம் இழுக்க முடிகிறது.?? பின்பு advanced பட்டனை அழுத்தி monitor ல் refresh frequency மாற்றி பார்க்கவும். அப்படியே troubleshooting பட்டனை அழுத்தி hardware acceleration அந்த அம்புகுறியை full to None க்கு மாற்றி பார்க்கவும்.. இதில் ஏதாவது ஒரு நிலையில் நீங்கள் விரும்பிய resolution கிடைக்கலாம்.. முயற்சி செய்து பாருங்கள்..

சரியான டிரைவரை இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

www.driverzone.com

நன்றி
பாலா

poo
17-05-2004, 01:41 PM
நன்றி நண்பர்களே..

நேற்று முழுக்க இயக்கவே இல்லை. இன்று சரி செய்யலாமென மீண்டும் இயக்கினால் தானாகவே சரியாகியிருக்கிறது.(???!!!)

மீண்டும் பிரச்சினை வந்தால் உங்கள் ஆலோசனைகள் உதவும்.

நன்றிகள்.. கேட்டதும் தருவதற்கு...

அருள்
17-05-2004, 05:47 PM
'பூ'வோடு சேர்ந்து இந்த நாரும் சிறிது அறிந்தது. ஆனால் 'பூ'வின் கேள்வியில் உள்ள regedit, regedit4 files பற்றி ஒன்றும் புரியவில்லை. நீங்கள் விளக்கினாலும் இப்போது ஏதும் புரியுமா எனத் தெரியவில்லை.

poo
17-05-2004, 06:08 PM
என்னுடைய கணனியில் இருந்து பிரிண்ட் கட்டளை கொடுத்தால் பிரிண்ட் வர கிட்டத்தட்ட 5-10 நிமிடங்கள் ஆகிறது. இது நெட்வொர்க்கில் உள்ள பிரிண்டர். அதேசமயம் நேரிடையாக பிரிண்டருடன் இணைந்துள்ள கணனியில் இருந்து கொடுத்தாலும் இதேபோல தாமதமாகிறது.

இதுவரை அப்படி இருந்ததில்லை.. சில நாட்களாகத்தான் அப்படி.

HP 640 c deskjet printer.

என்ன செய்வது?!!

uninstall செய்து மீண்டும் நிறுவினேன். ஆனாலும் இதே பிரச்சினை நீடிக்கிறது. மற்ற கணனிகளை துண்டித்துவிட்டு பிரிண்டர் இணைந்துள்ள கணனியிலிருந்து மட்டும் பிரிண்ட் கொடுத்தாலும் நேரமாகிறது!

முரளிராஜா
27-03-2011, 01:50 PM
2004 ல் கேட்கபட்ட கேள்விக்கு 2011 ல் பதிலா

நண்பரே தமிழில் தட்டச்சு செய்யுங்கள்