PDA

View Full Version : அழகி......



Nanban
11-04-2003, 01:42 PM
அழகி.....


நானும் நீயும்
இணைந்து நடந்தோம் -
பல அடி இடைவெளி விட்டு,
காற்றில் பறக்கும்
உன் முந்தானைக்குத் தடையில்லை....

உன் உணவை
நீ பிசைந்து தந்தாய் -
உன் கைகள் வானத்தில் இருந்தது,
ஏந்திய என் கைகள்
பூமியில் இருந்தது.....

புத்தகங்களைப் பகிர்ந்து
கொண்டோம் -
உள்ளே கடிதங்கள்
இல்லாமலே....

உன் நினைவு இனிமையைத்
தந்தது எனக்கு -
என் தனிமையை
நான் என்றும் தொலைத்ததில்லை,
உன் நினைவில்....

உனக்குத் திருமணம்
என்ற பொழுது,
வாழை மரம் கட்டினேன் -
உன் வீட்டு வாசலில்.

நீ
உன் மணாளன் வீட்டிற்குப் போக...
ஓடினேன்,
வாகனம் பிடித்து வர.....

நான், இன்று உன்னை
மறந்து போனேன்.
மண்டப வாசலில்
உன் தாய்,
இனி என் மகளைத் தேடாதே
என்று மடியேந்திய பொழுது.

kanni
11-04-2003, 02:19 PM


நினைவை மீட்டுப் பார்க்க வைத்தது.
அழகியவார்த்தைகளால்.




<கன்னி>

karikaalan
11-04-2003, 02:52 PM
காதலென்று சொல்லவில்லையோ முதலிலேயே?

Nanban
11-04-2003, 03:02 PM
காதலென்று சொல்லவில்லையோ முதலிலேயே?

ஆமாம்.

இந்த நல்ல அழகியை விட்டுவிட்டு வர மனமில்லை.

புதியவர்களும் சற்று படிக்கட்டுமே?

இளசு
11-04-2003, 03:46 PM
கடைசி வரியில் ஒரு காவியமே இருக்கு
வாழ்த்துகள் நண்பா.......

poo
11-04-2003, 04:05 PM
நல்ல காதலன் இப்படித்தான் இருப்பானோ?!!...

பாராட்டுக்கள் நண்பரே!!!

Hayath
14-04-2003, 01:55 PM
அருமையான கவிதை நண்பரே ....பாராட்டுக்கள் பல பல....காதலர்கள் அனைவருமே தியாகிகள்தானா ?

rambal
14-04-2003, 05:15 PM
கல்யாண மேளதாளத்தில்
அடங்கிப் போகின்றன
சில விசும்பல்களும்
சில முகாரிகளும்..
--யாரோ....

இப்படியாகத்தான்
பல காதல்கள் முடிந்திருக்கின்றன..
இப்படி நடக்கவில்லையென்றால்..
கவிதைகளுக்குப் பஞ்சம்தான்..

பாராட்டுக்கள் நண்பன் அவர்களே..

subavaanan
16-04-2003, 04:27 AM
அருமை காதலின் தோல்விகளில்
இது ஒருவிதம்....ஆனாலும்
இது புதுவிதம்...மெச்சுகின்றேன்...
நலம் நண்பரே....

Mano.G.
16-04-2003, 05:04 AM
அருமை நண்பரே
அருமை மேலும் தொடர வாழ்த்துக்கள்

மனோ.ஜி

gankrish
16-04-2003, 05:26 AM
நண்பா உன் ஏக்கம் புரிகிறது. அழகி(ய) கவிதை