PDA

View Full Version : சுதந்திரா தேவி......



Nanban
01-05-2004, 06:44 PM
கைதூக்கி நிற்கும்
சுதந்திரா தேவியே..!

ஏந்திய துப்பாக்கிகள் முன்
சரணடைந்தாயா?

எத்தனை கோடி மக்கள்
இழந்துவிட்டனர் தங்கள் சுதந்திரத்தை?
உன்னைக் கும்பிடும்
உன் தேசத்தவரின் துப்பாக்கி முனையால்?

எல்லா தேசங்களிலும் சிலைகள் உண்டு..
பல பறவைகளும் அமர்ந்து எச்சமிட சுதந்திரமுண்டு.
பல பறவைகளும் வேண்டாம் -
ஒரு புறாவாவது பறக்குமா உன்னருகே?

சுதந்திரமே எங்கள் மூச்சென்று முழங்கும்
உங்கள் தேசத்தவருக்குத் தெரியுமா -
எத்தனை குழந்தைகளின் வாழும் சுதந்திரம்
பறிக்கப் பட்டது என்று?

நித்தம் நித்தம் பயத்தில் உறைந்து வாழும்
உன் மக்களுக்கு எந்த சுதந்திரத்தை தந்தாய்?
சிவப்புக் கொடிகளைக் கண்டு அஞ்சினாய்;
பின்னர் செஞ்சீனாவைக் கண்டு அஞ்சினாய்;
வியட்நாமிற்குள் கலகமூட்டினாய்;
கொமேனியைக் கண்டு நடுங்கினாய்;
கொமேனி அழிக்க சத்தாமிற்கு சாதமிட்டாய்;
இன்று சத்தாம் நாட்டையும் சவக்குழியில் இட்டாய்;

எல்லா மக்களையும் அழித்தொழிப்பதில்
உன் சுதந்திரா தாகம் ரத்தம் குடிக்கிறது போதும் -
உன் கைகளை இறக்கி விடு -
அவை சுதந்திரத் தீபத்தை
உயர்த்திப் பிடிக்கும் கைகளல்ல -
பிணமெரிக்கும் நெருப்புச் சுவாலை தான்....

என்ன -
ஏற்றிய உன் கைகளை
இறக்க முடியவில்லையா?
ஆம், துருப்பிடித்த மூட்டுகள் அசையாது -
யாராவது அறுவைச் சிகிச்சை செய்து
அந்த கையை கீழிறக்கி வைத்தால் தான் உண்டு....

அந்த மருத்துவனையும் நீ எப்படி அழைப்பாய்?
தீவிரவாதி என்று தானே?

இக்பால்
01-05-2004, 06:54 PM
அந்த மருத்துவனையும் நீ எப்படி அழைப்பாய்?
தீவிரவாதி என்று தானே?


பின்னே என்னாங்க நண்பரே....
மூட்டுக்களை இயங்க வைக்கச் சொன்னால்,
கையைக் கழற்றிக் கொடுத்தால் என்ன சொல்வதாம்?

அய்யயோ... நிறைய உண்மைகளைச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஒரு கட்டுரையாக கொடுத்தால் நன்றாக இருக்கும். :)

-அன்புடன் இக்பால்.

Nanban
02-05-2004, 06:37 PM
கட்டுரையாக எழுதினால், அதில் வேகம் இருக்காது. கவிதையில் தான் உணர்ச்சிகளைக் கொட்ட முடியும்...

இந்தக் கவிதை எழுதியதே, ஒரு ஈராக்கிச் சிறுவன், கண்களில் நீர் வழிய துப்பாக்கி ஏந்திய வீரன் ஒருவன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பான்.... அந்த முகத்தில் தேங்கி நிற்கும் பாவனைகளைப் பார்த்ததும் எழுதியது. அந்தப் புகைப்படம் வெளியானது - கலீஜ் டைம்ஸின் வெள்ளிக் கிழமை பதிப்பில் - முதல் பக்கத்தில்.....

நன்றி இக்பால்....

தஞ்சை தமிழன்
03-05-2004, 07:03 AM
மற்றவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் தன் நாட்டவர்களின் தீயசெயலை நினைத்து அவர்களை சுட்டெரிக்க தீப்பந்தத்துடன் கிளம்பிவிட்ட தேவி.

kavitha
04-05-2004, 04:13 AM
கட்டுரையாக எழுதினால், அதில் வேகம் இருக்காது. கவிதையில் தான் உணர்ச்சிகளைக் கொட்ட முடியும்...

சரி தான்! ஆனால் இவள் விளக்கை ஏந்தி வேடிக்கை பார்ப்பவள்!

இக்பால்
04-05-2004, 05:29 AM
சரி தான்! ஆனால் இவள் விளக்கை ஏந்தி வேடிக்கை பார்ப்பவள்!


விமர்சனம் கூட கவிதைப் பார்வை!!! :)
தங்கையே புரிந்து கொள்ளவே நிறைய அறிவு வேண்டும் போல.
அறிவு விமர்சனம். பாராட்டுகள்.

அமரன்
29-10-2007, 09:18 PM
அமெரிக்காவின் ஆதிக்க வெறி
சுதந்திர தேவிக்கு இழுக்கானது..

இழுக்கை பழுதுபார்க்கும் கரங்களின்
அழுத்தக் கடுமை உலகுக்கு இழுக்கானது..

கவிதை, கருத்து, கருத்துக்கு கருத்து...
விருந்துக்கு முன்னாதாக அருந்தும் சூப்.

மக்களிடம் எதிர்பார்க்கின்றேன் விருந்து

நேசம்
30-10-2007, 02:59 AM
கட்டுரை வாசிப்பவர்களின் மீது உண்டாக்கும் தாக்கத்தை விட கவிதை உண்டாக்கும்.அமெரிக்காவின் அடாவடிதனத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிலையை எளிமையாக தந்துள்ளார் நண்பன் அவர்கள்- வாழ்த்துக்கள் பாரட்டுக்கள்