PDA

View Full Version : மகுடி ஊதும் பாம்புகள் - 2

Nanban
30-04-2004, 04:49 PM
மகுடி ஊதும் பாம்புகள் - 2

நாங்கள்
மகுடி ஊதும்
பாம்புகளல்ல -
வாசிப்பவளின்
அவயவங்களெழுப்பும்
அதிர்வுகளில்
ஆடிப்போய் நிற்கும்
அப்பாவிகள்....

அவ்வப்பொழுது
சீறினாலும்
அறிந்தவள் கையில்
வெறும் நார்க்கயிறாய்
துவண்டுதான் போகிறோம்
பெட்டிப்பாம்பாய்
அடங்கித் தான் போகிறோம்...

பெட்டிக்குள் கட்டுண்டு
கிடக்கும் பாம்புகளுக்கு
விழித்திருப்பவளும்
துயில்பவளும்
ஒன்று தான்...

பெட்டியின் சிறுதுளை வழியே
என்றுமே
எங்களால் காண இயலாது
மகுடி வாசிப்பவளை.

மகுடி ஊதுபவள்
யாராக இருந்தாலும்
ஆட வேண்டியது மட்டுமே
எங்கள் விதி...

மகுடிகளை மாற்றுவது
பாம்புகளல்ல -
வாசிப்பவள் தான்.....

பரஞ்சோதி
30-04-2004, 07:35 PM
ஆகா! நண்பன் அண்ணா, ஏற்கனவே மகுடி ஊதும் பாம்புகள் படித்த போது, எங்கே ஊதுவது ஏற்கனவே பல்லை பிடுங்கி விட்டார்கள், எங்களால் எங்கே ஊதுவது என்று சொல்ல நினைத்தேன்.

அருமையாகவே பதில் சொல்லியிருக்கிறீர்கள் பாராட்டுக்கள், ஆண்கள் மன்றம் உங்களைப் போற்றும். எங்கே மகளிர் மன்றம், எங்கே உங்கள் பதில். (கவிதா சகோதரி கடுகடுப்போடு கதை நேரத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.)

Nanban
01-05-2004, 08:04 AM

ஐய்யோ!! நண்பரே, நான் சாதாரணமாகத்தான் பதில் சொன்னேன்... நீங்கள் எக்கசக்க பிரச்னையில் இழுத்து மாட்டி விடாதீர்கள்...(என்றாலும் - மகுடி ஊதும் அளவு அதிகமாகத் தான் போய்விட்டது...இல்லையா நண்பரே...

மூர்த்தி
01-05-2004, 10:27 AM
அன்பு நண்பன் அவர்களே....

நல்ல ஒரு சிந்தனை!அறிந்தவள் கையில் கிடைத்ததும் அடங்கித்தானே போகிறோம்?வாழ்த்துக்கள் கவிச்சிங்கமே.

தஞ்சை தமிழன்
01-05-2004, 12:35 PM
இந்த மாதிரி யாராவது ஒருவர் எழுதினால் தேவலை என நினைத்திருந்தேன்.

நண்பணுக்கு நன்றிகள்.

பரம்ஸ் சொல்வது போல பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் என்ன செய்துவிட முடியும்?
சில சமயங்களில் பாம்புகள் படமெடுத்து ஆடுவது போல தோன்றினாலும் அதுவும் பாம்பாட்டிக்கு பயந்துதானே ஆடுகிறது.

Nanban
01-05-2004, 05:14 PM
பாம்பாட்டிக்கு
பயந்து ஆடும் பாம்பு.....

அதைப் பார்த்து
பயப்படும் பாம்பாட்டி....

ஒருவர் மீது
மற்றவருக்குப் பயம்....
அடக்கப் பார்த்தல்
அடங்கிப் போதல்....
விளைவுகளில்
அடிவாங்கும் மனதின்
காயங்கள் தரும் வலி.....

பயம் நீங்கி
ஒருவர் மீது
மற்றவர்
மரியாதையுடன்
காதலும் கொண்டால்
இந்த மகுடி எல்லாம் தூங்குமே
ஏதோ ஒரு மூலையில்....

Nanban
01-05-2004, 05:21 PM
நன்றி நண்பர்கள் மூர்த்தி, மற்றும் தஞ்சைத் தமிழன் அவர்களுக்கு.....

இக்பால்
01-05-2004, 05:29 PM
முதலில் பாராட்டுகள் நண்பரே.

பயப்பட வேண்டாம். கவிதா தங்கை அன்பானவர்.
அவர் அண்ணனைப் போல். புரிந்துப் பொறுத்துப் போவார்.
ஆனால் பதில் கவிதை வந்தாலும் வரும்.

-அன்புடன் இக்பால்.

Nanban
01-05-2004, 05:47 PM
பதில் கவிதை வந்தாலும் வரும் என்ன? வர வேண்டும்... ஆவலுடன் காத்திருக்கிறேன் - எவ்வாறு பதில் எழுதப் போகிறார் என்று.....

(நீண்ட நாட்களுக்குப் பின் மன்றம் கலகலப்பாக இருப்பதைப் போன்று உணர்கிறேன்.... நீங்களும் கவிதைப் பக்கத்தில் முழு வீச்சில் இறங்கினால், இன்னமும் பிரமாதப்படும்....)

நன்றி, இக்பால் அவர்களே.....

இக்பால்
01-05-2004, 05:52 PM
நண்பன் உண்மையிலேயே நான் களைப்பாக இருக்கிறேன்.

நேற்று கத்தார் தமிழர் சங்கம் நடத்திய கலைவிழாவில் குடும்பத்துடன் பங்கு கொண்டேன். மூடிய கலை அரங்கு என்பதால் இசைக்கருவிகளின் ஒலி அளவு அதிகம் எதிரொலிக்க...அங்கே உற்சாகத்தில் தெரியவில்லை. இன்றுதால் தெரிகிறது. ஒரு தலைவலி. தலையைத் தூக்கமுடியவில்லை.

உங்கள் வார விடுமுறை எப்படி போய்க் கொண்டிருக்கிறது? வேலை எப்படி இருக்கிறது? தோஹா ஒரு முறை வாருங்கள்.

-அன்புடன் இக்பால்.

Nanban
01-05-2004, 05:58 PM
கண்டிப்பாக வருவேன் - அங்கே உள்ள உறவினர்களிடமிருந்தும் அழைப்பு உள்ளது.. வரும் முன் உங்களுக்குக் கண்டிப்பாகத் தகவல் தருவேன்...

இக்பால்
01-05-2004, 06:33 PM
நிச்சயமாக.

சந்திப்பு உண்டு. சந்தித்தால் மன்ற உறுப்பினர்களில் நீங்கள்தான் முதல் சந்திப்பாக இருக்கும்.

தஞ்சை தமிழன்
02-05-2004, 08:27 AM
பயம் நீங்கி
ஒருவர் மீது
மற்றவர்
மரியாதையுடன்
காதலும் கொண்டால்
இந்த மகுடி எல்லாம் தூங்குமே
ஏதோ ஒரு மூலையில்....

என்னை கவர்ந்த கருத்துக்கள். பாராட்டுக்கள்.

நண்பண் சொன்ன காதலுக்குத்தானெ நாமெல்லாம் காத்திருக்கிறோம்.

Nanban
02-05-2004, 06:50 PM

இன்னமுமா காத்திருக்கிறீர்கள்....? காலம் கடந்த காதல், உதவாது.... காத்திருந்த பின் கிடைக்கவில்லை என்றால், காத்திருந்த காலங்கள் வீண்.... அதைவிட, கிடைத்ததின் மீது காதல் கொள்வது உசிதம்...

நன்றி, தஞ்சை தமிழன்....

தஞ்சை தமிழன்
03-05-2004, 05:58 AM
இன்னமுமா காத்திருக்கிறீர்கள்....? காலம் கடந்த காதல், உதவாது.... காத்திருந்த பின் கிடைக்கவில்லை என்றால், காத்திருந்த காலங்கள் வீண்.... அதைவிட, கிடைத்ததின் மீது காதல் கொள்வது உசிதம்...

நண்பனே எனக்கு அந்த கனிவு நிறைந்த காதல் கிடைத்துவிட்டதாகத்தான் நினைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

அது உண்மையா,
அல்லது
மாயையா

அந்த பாம்பாட்டிக்குத்தான் தெரியுமையா,,,,

Nanban
03-05-2004, 05:03 PM
மகுடிகளை மாற்றாத அன்பு நிறைந்தவராக இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்... வாழ்த்துகள்

அன்புடன்

kavitha
04-05-2004, 03:49 AM
(கவிதா சகோதரி கடுகடுப்போடு கதை நேரத்தில் இருப்பார் என்று நினைக்கிறேன்.)

இல்லை பரம்ஸ் அண்ணா!

மகுடி ஊதுபவள்
யாராக இருந்தாலும்
ஆட வேண்டியது மட்டுமே
எங்கள் விதி...
நண்பரே இப்படி ஒரு கவிதை நீங்கள் எழுதியதில் மகிழ்ச்சி தான்! எதிர்பார்த்திருந்தேன்... தாமதமாக தந்திருக்கிறீர்கள்!
அது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்?????

Nanban
05-05-2004, 08:22 PM
அது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்?????

சிலரின் வாழ்க்கையில், நிறையப் பெண்கள்... மனைவி, காதலி, ஏன் சமய்ங்களில் பிற உறவுகளும் கூட.... தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் தவிக்கும் அன்பர்களும் உண்டு... மகுடிகள் ஒரே ஸ்ருதியில் ஊதப்படுவதில்லையே....

எல்லோருக்கும் தலையை ஆட்டிக் கொண்டு....

எப்படியோ காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கும் பலர்....

பெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்... ஆனால், பேர் என்னவோ, ஆன்கள் மட்டும் தான் அடக்குமுறையாள்ர்கள் என்பது போல....

ஆக, உறவுகளில் சமநிலை எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுது தான் இந்த சந்தேகமும், அவநம்பிக்கையும் மாறிப் போகும்.... ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது என் எண்ணம்....

kavitha
08-05-2004, 06:26 AM
பெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்
ஓ! அப்படியா?

உறவுகளில் சமநிலை
கண்டிப்பாக வேண்டும்!

Nanban
08-05-2004, 03:06 PM
ஓ! அப்படியா?

:?: :?: :?:

kavitha
17-05-2004, 09:16 AM
ஒருவரது தைரியத்தை தனியே இருக்கும்போது அறிந்து கொள்ளமுடியும் நண்பரே!
கூட்டத்தில் 'கோவிந்தா' போடுபவர்களும் உண்டு!
தனிமையில் ' நான் இல்லை' என்பவர்களும் உண்டு!
உங்கள் தைரியத்திற்கு பாராட்டுகள்.(போட்டு வாங்கலாம்னுதானே பார்த்தீங்க! சமாளிச்சிட்டேன்ல)

இக்பால்
17-05-2004, 11:38 AM
ஒருவரது தைரியத்தை தனியே இருக்கும்போது அறிந்து கொள்ளமுடியும் நண்பரே!
கூட்டத்தில் 'கோவிந்தா' போடுபவர்களும் உண்டு!
தனிமையில் ' நான் இல்லை' என்பவர்களும் உண்டு!

உண்மைதான் தங்கையே.

தைரியங்களில் ஒரு தைரியம். எனக்குப் பிடித்த தைரியம்.
தவறு செய்யக் கூடாது. தவறு செய்து விட்டது தெரிந்தால்...
அதை மறைக்காமல் அது என் தவறுதான் என ஒத்துக் கொள்வது.

-அன்புடன் அண்ணா.

mythili
17-05-2004, 12:13 PM
அது சரி யாராயிருந்தாலும் ஏன் ஆட வேண்டும்?????

சிலரின் வாழ்க்கையில், நிறையப் பெண்கள்... மனைவி, காதலி, ஏன் சமய்ங்களில் பிற உறவுகளும் கூட.... தாய்க்கும் தாரத்திற்கும் இடையில் தவிக்கும் அன்பர்களும் உண்டு... மகுடிகள் ஒரே ஸ்ருதியில் ஊதப்படுவதில்லையே....

எல்லோருக்கும் தலையை ஆட்டிக் கொண்டு....

எப்படியோ காலத்தை ஓட்டி விடலாம் என்று நினைக்கும் பலர்....

பெண்களுக்கு, ஆண்களைக் கண்டால் எப்படியோ - அப்படியே தான் இந்தப் பக்கமும்... ஆனால், பேர் என்னவோ, ஆன்கள் மட்டும் தான் அடக்குமுறையாள்ர்கள் என்பது போல....

ஆக, உறவுகளில் சமநிலை எப்பொழுது ஏற்படுகிறதோ, அப்பொழுது தான் இந்த சந்தேகமும், அவநம்பிக்கையும் மாறிப் போகும்.... ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருப்பதில் எந்த உபயோகமும் இல்லை என்பது என் எண்ணம்....

நன்பன் அவர்களே,
உங்களது கவிதை முதலில் பெண்களை மகுடி (ஊதுபவள்) என்றது.
அதாவது பெண்கள் தான் அடக்கி ஆள்பவர்கள் என்றது,

படிப்படியாக, பெண்களில் சிலர் மகுடி ஊதுபவர்கள் என்றீர்கள், இப்பொழுது இறுதியாக, "ஆண்கள் பெண்கள் சம நிலை" என்று கூறியுள்ளீர்கள்.

இந்த மாற்றத்திற்க்கு காரணம் பெண்களைப் புரிந்து கொண்டதாலா இல்லை பெண்களை சீண்ட நினைத்ததாலா

பெண்களை ஆண்கள் கண்டிப்பாக அடக்கு ஆள நினைப்பதில்லை என்பதையும் கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன்.
அன்புடன்,
மைதிலி

Nanban
17-05-2004, 04:26 PM
நன்றி மைதிலி.....

இதில் மாற்றங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. பிறக்கும் பொழுது தாய், அக்கா, தங்கை என்ற பெண் உறவுகள் ஏராளம். எல்லோருக்கும் ஆண்களிடத்தில் எதிர்பார்ப்புகள் உண்டு. பின்னர் இந்த உறவுகளோடு வந்து இணைந்து கொள்பவள் தான் மனைவி. பிறகு கொஞ்சம், கொஞ்சமாக உறவுகள் சிறு வட்டமாக, ஒரு கட்டத்தில் மனைவி மட்டுமே என்ற நிலை வரும் அல்லவா? அப்பொழுதும் கூட சமநிலை எய்த முடியவில்லை என்றால், பிறகு கஷ்டம் தான்.

கவிதை எழுதப்பட்ட நோக்கம் வேறு. நீங்கள் குறிப்பிடுபவை எல்லாம் விவாதத்தில் எழுந்தது தான். இந்தக் கவிதையே, கவிதாவின் கவிதைக்கு பதிலாக எழுதப்பட்டது தானே... பெண்களுக்குள்ள கஷ்டங்கள் ஆண்களுக்கும் உண்டு என்பது தான் என்னுடைய கவிதையின் சாராம்சமே... விதி விலக்குகள் இருக்கலாம்...

(என்றாலும், மிக்க நன்றி. கவிதையை மட்டும் படிக்காமல், பின்னர் தொடர்ந்து வரும் விவாதங்களையும் கூடப் படித்து, கேள்வி எழுப்பியமை அருமை... பாராட்டுகள்....)

kavitha
18-05-2004, 04:10 AM
விரிவான விளக்கம் அளிக்கச்செய்த மைதிலி அவர்களுக்கும், அழகான விளக்கம் தந்த நண்பன் அவர்களுக்கும் நன்றிகள்!