PDA

View Full Version : நிலவு....(ருத்ரா)



rambal
11-04-2003, 07:21 AM
நிலவு....(ருத்ரா)

சூரியன்
அரிதாரம் பூசி
அவதாரம்
செய்தவள் நீ.
இந்த
சினிமாக்கவிஞர்களின்
பாட்டுகளா
உனக்கு 'பட்டா' போடுவது?

****************************

நிலவைக் கிழித்து
காதலிக்கு
ரவிக்கை தைத்தான்.
அவன் மட்டும்
கந்தலாகிக் கிடந்தான்.

****************************

அந்தச் சன்னலில்
அவள்
முகம் அழுத்தி
நின்று விட்டுப்போனதும்
அதை
நீ ஒற்றியெடுத்துக் கொண்டு
காட்சி தருகிறாய்.

*****************************

உன் அசுரப்பசிக்கு
அளவே இல்லையா?
எத்தனை 'அம்பிகாபதிகளை'
தின்றிருப்பாய் நீ?

*****************************

மூளியாய்
ஒரு வட்டம் வரைந்து
பெண்ணென்று
வானத்தில் எறிந்தான்
பிக்காஸோ.
அன்றிலிருந்து இன்று வரை
ஒவ்வொரு தேவதாசுக்கும்
இதுதான் பார்வதி...

******************************

கவிதையைக்
குடித்து விட்டு எறிந்த
உமர்க்கயாமின் காலிக்கிண்ணம் நீ.
அவன்
உதட்டுத் தடங்களில்
ஊறும்
நூறு நிலவுகள்.

*******************************

பூமி சுற்றுவது
ஏன் என்று
இப்போது புரிகிறது.
மதுக் கிண்ணமாய்
நீ அருகில் இருப்பதுதான்.

*******************************

இவர்கள் உன்னை
அமாவாசை
என்று அழைத்தாலும்
நீ எனக்கு
'பர்தா' அணிந்த
பௌர்ணமி.

*********************************

அவள் முகத்தில்
நீ
முகம் பார்த்துக் கொள்கிறாய்.
அவள் முகம்
கிடைக்காத் போது
உன் பெயர்
அமாவாசை...

Nanban
11-04-2003, 10:46 AM
நிலவு....(ருத்ரா)


பூமி சுற்றுவது
ஏன் என்று
இப்போது புரிகிறது.
மதுக் கிண்ணமாய்
நீ அருகில் இருப்பதுதான்.

...

எத்தனை இனிமையான கற்பனை....

வாழ்த்துகள், ராம்

Narathar
11-04-2003, 11:40 AM
ஓ நிலவை இப்படிக்கூட வர்ணிக்கலாமா?
பார்த்து சினிக்கவிகள் "கொப்பி"யடிக்க போறாங்க...................

இளசு
11-04-2003, 06:08 PM
அழகு சொட்டும் தெரிவுகள்
நன்றி ராம்....

kavitha
28-01-2004, 08:43 AM
ஒவ்வொன்றும் அருமை! வித்தியாச கோணங்கள்

இக்பால்
28-01-2004, 08:48 AM
ஒரு தலைப்பு...பல கவிதை...அப்பொழுதே ஆரம்பித்து இருக்கிறதே.

பாராட்டுக்கள் ராம்பால். அது சரி... நீங்கள் மன்றம் வருகிறீர்களா?

நன்றி கவிதா தங்கை.