PDA

View Full Version : என் பிணமும் கனவுகளும்...(விளக்கம் உள்ளே)



rambal
01-04-2003, 08:34 AM
என் பிணமும் கனவுகளும்...

இடுகாட்டில் என் பிணம்
எரிந்து கொண்டிருக்கிறது...
வெந்த சதைகளை
பக்குவம் பார்த்து
நான்
ருசி பார்த்துக் கொண்டிருக்கிறேன்...
வலையில் ஊஞ்சலாடிக் கொண்டே
நான் இந்தக் காட்சியை காண்கிறேன்....
கணிணியின் இயக்கங்களை
செயல் புரிய வைக்கும்
மந்திரங்களை தொலைத்த
ஒரு சவப் பொழுதின் இரவில்
நான் கனவு காண்கிறேன்....
இப்படியாக
அந்தக் கனவு
நீட்டித்து
என் மாம்சங்களை
கூறு போட ஆரம்பித்த நேரத்தில்....
(மீண்டும் ஆரம்பத்தில் இருந்து படிக்க)

poo
09-04-2003, 05:46 PM
பாராட்டுக்கள் ராம்.. சுழற்சியாய் படித்துக் கொண்டேயிருந்தால் எப்போது நிறுத்துவது?!!!

குமரன்
10-04-2003, 01:29 AM
மன்னிக்கவும்...புரியவில்லையே ராம்.

-குமரன்

Narathar
10-04-2003, 06:41 AM
ஏதோ இணையம்
இன்டர்நெட்
பாஸ்வோர்ட் பற்றி சொல்கிறாப்பல....

எனக்குபுரிந்தது அப்படித்தான்..................
புரிந்தவர்கள் விளக்கலாமே?....நாராயனா!!!

chezhian
10-04-2003, 12:22 PM
திறம்பட எழுதப்பட்ட கவிதை.
ராம்பால்ஜி ஒரு பெரிய கவிஞர்... வாழ்த்துக்கள்..

Nanban
11-04-2003, 05:37 AM
சுய விமர்சன முயற்சியை எப்பொழுதும் நிறுத்தாதீர்கள். வலுவுள்ள எண்ணங்கள் பிறப்பதற்கு ஆதாரமே சுய விமர்சனம் தான்...........

Narathar
11-04-2003, 05:49 AM
குமரனுக்கு புரியவில்லை
எனக்கு புரிந்ததை எழுதினேன்........
உங்கள் பதில் என்னவோ ராம்????

rambal
11-04-2003, 07:19 AM
இடுகாட்டில் என் பிணம் எரிந்து கொண்டிருக்கிறது --- நான் போஸ்ட் செய்த கவிதைகள்
வெந்த சதைகளை பக்குவம் பார்த்து நான் ருசி பார்த்துக் கொண்டிருக்கிறேன் ------- எழுதியவற்றில் என்ன தவறு? இப்படி எழுதியிருக்கலமோ? என்ற அலசல்... (இதுவரை உருப்படியாக ஒன்று கூட கொடுத்ததாக நியபகம் இல்லை)

வலையில் ஆடிக்கொண்டே இந்தக்காட்சியை காண்கின்றேன்... ----- இண்டெர்னெட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்...(இது முடிவு)

(இங்குதான் ஆரம்பம்)
கணிணியின் இயக்கங்களை செயல் புரிய வைக்கும் மந்திரங்களை தொலைத்த இரவில் நான் கனவு காண்கிறேன்... ---- கணிணியின் செயல்களை அணைத்துவிட்டு அந்த பாஸ்வேர்ட்களை மறந்து ஆழ்ந்து தூங்கினாலும் கொடுத்த கவிதைகளைப் பற்றிய நினைப்பு.. சரியாகக் கொடுக்கவில்லையே என்ற கவலை என்னை அறுத்துக் கொண்டிருக்கும்...
இப்படியாக அந்தக் கனவு நீட்டித்து என் மாம்சங்களை கூறு போட ஆரம்பித்த நேரத்தில்... ---- இப்படி மன நிறைவைத் தராத் கவிதைகளைக் கொடுத்தது பற்றிய கவலையில் இருந்து கொண்டெ அதே மாதிரியான அடுத்த கவிதையும் கொடுத்துவிடுகிறேன்....
(இப்பொழுது இந்த பத்தியில் ஆரம்பித்து மேலே இருக்கும் பத்தியை கடைசியாகப் படியுங்கள்)

Narathar
11-04-2003, 11:48 AM
அப்போ நான் பாதிதான் புரிஞ்சுக்கிட்டேனா???

குமரன்
12-04-2003, 02:09 AM
வேண்டுகோளுக்கிணங்கி விளக்கம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி....ராம்.
புரிந்து படித்தால் கவிதை இன்னும் அழகாக உள்ளது.

பாராட்டுக்கள்.

-குமரன்.

Nanban
10-01-2004, 10:50 AM
விளக்கம் இல்லாமலும் புரிந்து கொள்ள முடிந்தாலும், விளக்கத்தோடு இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள முடிகிறதே....... நன்றி

kavitha
11-01-2004, 04:42 AM
அதற்காக இப்படியா குழப்புவது? 3 முறை படித்து விட்டேன்.
எப்படியோ அரங்கேறிவிட்டது.மகிழ்ச்சி தானே!
விளக்கத்திற்கு நன்றி!

sriram
20-01-2004, 10:17 AM
எங்கே இருக்கிறீர்கள் ராம்பால்? பாராட்டி உம்மை தழுவிக்கொள்ள வேண்டும்.

இணையம், கவிதை இவைகளை விட இன்னொரு பேருண்மையை எவ்வளவு அழகாக விளக்கி உள்ளீர்கள் (ஆத்ம திருப்தி). படித்த உடனே எனக்கு சிலிர்ப்பு ஏற்படுத்திய கவிதை.
கணினி என்ற உடலில் இருந்து நீங்கிய ஆன்மா அது இது நாள் வரை இருந்த உடல் அழிவதை பார்த்துக்கொண்டு இருக்கிறது. மேலும் அது தனக்குரிய ஊடகம் தேடிக்கொண்டே இருக்கிறது... இது என்றும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஐயா ராம்பால்! கை கொடுங்கள்.. இதே கருத்தை உள்ளடக்கி ஏற்கனவே நான் எழுதிய 'கழற்றிய சட்டை' என்ற கவிதை எழுதியுள்ளேன்.

பாராட்டுக்கள்!!