PDA

View Full Version : படித்தவை (கதம்பம் - 4 -4 -2004)இளசு
03-04-2004, 10:40 PM
படித்தவை (கதம்பம் - 4 -4 -2004)

** ரொமானியர்களுக்கு நாடு பிடிக்க நடத்திய மோதல்களுக்கு இணையாக
பிடித்தமான இன்னொரு விஷயம் "காதல்"
Romans விரும்பி செய்ததால் அது Romance ஆனது.

** இன்றைய எகிப்தில் இருக்கும் பண்டைய அலெக்ஸாண்ட்ரியா பல்கலைக் கழகத்தில்
நல்ல நூல் சமர்ப்பித்தால் எடைக்கு எடை தங்கம் கொடுத்து வாங்கிக்கொள்வார்களாம்.

** கிழக்கே போகும் ரயில் புகழ் சுதாகர் போட்டிருந்த பெல் பாட்டம் மீண்டும் வரும்போல் தோன்றுகிறது.
நாகரீகக்கோலமும் காலமும் சக்கரம் போல் சுழல்பவை என்று மனோன்மணீயம் சொல்கிறது -

<span style='color:#0064ff'>"காலம் என்பது கறங்கு போலாடி
மேலது கீழாய் கீழது மேலாய்"</span>

** அன்றைய பாபிலோன் இன்றைய ஈராக்...

**லாக்ரிதம் (Logrithm) கண்டுபித்தவர் நேப்பியர்.. (Napier..)

** அப்பனோடு கல்வி போச்சு
ஆத்தாவோடு அறுசுவை உணவு போச்சு - என்பது பழமொழி.

கபிலரோடு குறிஞ்சிப்பாட்டு போச்சு
ஈசாப்போடு நீதிக்கதைகள் போச்சு
-இது புதுமொழி (?)

** உமர் கய்யாமின் "ரூபாயத்" ஒரு அதிசயக் கவிதைத் தொகுப்பு.
உலகின் எல்லா மொழிகளிலும் வெளிவந்த ஒன்று.

இதன் பாதிப்பை கவியரசுவின் பல படைப்புகளில் பார்க்கலாம்.

இதோ ஒரு சிறு துளி...

<span style='color:#1200ff'>" வெயிற் கேற்ற நிழலுண்டு
வீசும் தென்றல் காற்றுண்டு
கையில் கம்பன் கவியுண்டு
கலசம் நிறைய மதுவுண்டு.."</span>

** அரபி மொழி இடமிருந்து வலமாய் எழுதப்பட்டாலும்
எண்கள் இடமிருந்து வலம்தான்.
இந்திய கணித முறைக்கு அரேபியா தந்த முதல் மரியாதை!


** சில தொகுப்பு சாதனைகள்:

11ம் நூற்றாண்டு : அறிவியல் களஞ்சியம் (என்சைக்ளோபிடியா) - அவிசென்னா அவர்கள்.
18ம் நூற்றாண்டு : ஆங்கில அகராதி - சாமுவேல் ஜான்சன் அவர்கள்
20ம் நூற்றாண்டு : அபிதான சிந்தாமணி - ஆபிரகாம் பண்டிதர் அவர்கள்.

சேரன்கயல்
04-04-2004, 03:17 AM
நல்ல தகவல் திரட்டு இளசு...
பாராட்டுக்கள்..
(மனோன்மனிய பாடல் சான்று அருமை)

பாரதி
04-04-2004, 01:49 PM
பல விசயங்களை நினைவூட்டும் விதமாக இருக்கிறது. நன்றி அண்ணா.

இக்பால்
04-04-2004, 01:54 PM
அண்ணா...கதம்பம் என்றாலும் சாதாரணக் கதம்பம் இல்லை.

எல்லா அயிட்டங்களும் போட்ட மிக்சர் சாப்பிட்ட திருப்தி. :)

தொடருட்டும். நன்றி அண்ணா.

முத்து
04-04-2004, 02:23 PM
** கிழக்கே போகும் ரயில் புகழ் சுதாகர் போட்டிருந்த பெல் பாட்டம் மீண்டும் வரும்போல் தோன்றுகிறது.
நாகரீகக்கோலமும் காலமும் சக்கரம் போல் சுழல்பவை என்று மனோன்மணீயம் சொல்கிறது -

"காலம் என்பது கறங்கு போலாடி
மேலது கீழாய் கீழது மேலாய்"


ஜெர்மனியில் காலேஜில் படிக்கிற பொண்ணுங்க நிறையப் பேர்
இப்ப பெல் பாட்டம் பேண்டுதான் போடுறாங்க...
ஆனா நம்ம சுதாகர் போட்டிருந்ததுக்கும்
இந்த பேண்டுக்கும் என்ன வித்தியாசம்னா ,
மேலே கொஞ்சம்( ரொம்பவே) இறுக்கமாக ஆரம்பிக்கிறது ..
ஆனாலும் பரவாயில்லை .. இது சுதாகர் பேண்ட்டைவிடவும்
பார்க்க நல்லாதான் இருக்கிறது ... ;) :D

thiruarul
04-04-2004, 03:17 PM
பொதுஅறிவை வளர்க்க உதவும் தகவல்கள். அறிந்திராத விடயங்களை அறிந்துகொண்டேன்.தந்த மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்கட்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

நிற்க, ஆடைமட்டுமல்ல ஆண்களது சிகை அலங்காரமும் 1960 களின் பாணிக்குத் திரும்புவதை அண்மையில் கொழும்புத் (இலங்கைத் தலைநகர்) தெருக்களில் கண்டேன்.

அன்புடன் திருவருள்

poo
11-04-2004, 12:08 PM
தகவல் திரட்டுகளுக்கு நன்றி அண்ணா...

படித்தவைகளை இன்னும் தரலாமே!!


இன்றைய ஈராக்கில்தான் தொங்கும் தோட்டம் இருக்கிறதா?!!

(இல்லை ஒரு பாடலில் பாபிலோனின் தொங்கும் தோட்டம்னு நம்ம (யார் யாருப்பா "நம்ம"ங்கற கூட்டணிக்குள்ள வர்றீங்க?!!..) மந்த்ராவை பாடுவாங்களே...!!)