PDA

View Full Version : காதல் இயற்(ல்)பியல்



இளசு
03-04-2004, 10:21 PM
காதல் இயற்(ல்)பியல்


அணுகி விலக
விலகி அணுக
நேர் - எதிர் என
இருவிதம் கொண்ட
மின் - காந்த விசையல்ல
என் அன்பு...

எப்பொழுதும்
எனை நோக்கி
ஒரே நோக்கில்
உனை ஈர்க்கும்
புவியீர்ப்பு விசை..

இக்பால்
04-04-2004, 09:28 AM
ஆமாங்க அண்ணா... ராக்கெட் பொருத்திக் கொண்டு சீறிப் பாய்ந்தாலும்
விட்டு விடாதீங்க. :) ... அருமையாக கவிதை.-அன்புடன் இளவல்.

பாரதி
04-04-2004, 01:27 PM
புவியீர்ப்பு விசையும் ஒரு வகையில் காந்த விசைதானே அண்ணா..? வித்தியாசமான பார்வைதான் உங்களுக்கு.! நல்லா இருக்கு.

முத்து
04-04-2004, 01:55 PM
அண்ணா ..
காதலில் இப்படி ஒரு இயற்பியல் தத்துவம் இருக்குதா .. ?
நல்லா இருக்குது :D

kavitha
05-04-2004, 05:42 AM
அண்ணாவிற்கு இயல்பான பேராசை!
கவிதை நன்று!

Nanban
05-04-2004, 07:58 PM
இயற்பியல் நிறைய வாழ்க்கைத் தத்துவங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. காந்த விசை மட்டுமல்ல, இன்னமும் நிறைய உள்ளது.

வெப்ப ஆற்றல் பற்றிய விதிகள், மனித வாழ்க்கைக்கு 100% பொருந்தும். உயிருள்ளவையோ, அல்லது உயிரற்றவையோ - இயக்கும் சக்தி ஒன்று தான்....

இளசுவிற்கு நன்றிகள்....