PDA

View Full Version : மீண்டும் தம்பிமார் உரையாடல்...இளசு
29-03-2004, 08:30 PM
மீண்டும் தம்பிமார் உரையாடல்...


நீ...ண்ட இடைவெளிக்குப்பிறகு இன்று கொஞ்சம் அவகாசம் கிடைக்கவே
திடீர் மழை நேற்று பெய்து கொஞ்சம் வெக்கை தணிந்த மாலைப்பொழுதில்
தம்பிமார் வீட்டுக்கு விஜயம் செய்தேன்...

பக்கத்து வீடுதான்..பட்டணத்துப் பரபரப்பில் சந்திப்புகள் அத்தனை துர்லபம்..
வியப்பும் மகிழ்ச்சியுமாய் வரவேற்று டிபன் வேளையில் சரியாகச் சென்ற
என்னையும் உடன் சேர்த்து உபசரித்தார்கள்...

சி.த.: சரியான டயத்துக்குத்தான் வந்தீங்க சார்.. அண்ணன்கிட்ட அறிவுபூர்வ (!!!)
கேள்விகளாக் கேட்டு குடாய்ஞ்சிக்கிட்டிருந்தேன்... நீங்களும் கலந்துக்குங்க சார்..

பெ.த: ஹிஹி..அப்படி எல்லாம் இல்ல சார்.. தத்து பித்துன்னு முட்டாத்தனமா
இவன் பினாத்திட்டிருக்கான்.. அவன் கூட சேர்ந்து நானும்....
நாரோட சேர்ந்த பூ மாதிரி நாறிட்டிருக்கேன்..

எனக்கு நேற்று தம்பி முத்து மன்றத்தில் பதித்த கையெழுத்து ஏனோ
சம்பந்தமில்லாமல் நினைவுக்கு வந்தது...இவ்வுலகத்தில் முட்டாள்தனமான கேள்வி என்று எதுவுமே இல்லை...
ஆனாலும் சில சமயங்களில் முட்டாள்தனமான பதில்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு

போனமுறை பசை போல் சாப்பிட்டு வாய் சீல் வைக்கப்பட்டு அவஸ்தைப்பட்ட நான்
இந்த முறை கொஞ்சம் உஷாராகவே ஒரு ஸ்வீட் அயிட்டத்தை கையாளும் மிரட்சி
கண்டு தம்பிகள் மந்தகாசம் பூத்தபடி பேச்சைத் தொடர்ந்தனர்..

சி.த: காதல்ன்னா என்னதான் அண்ணா?

பெ.த: எரிக் சீகல் "லவ் ஸ்டோரி" நாவலில் சொன்ன டெ�பனிஷன் தான் காதல் பத்தி
என் கருத்தும்..

LOVE is where you never got to say "I'm sorry"

என்னை மன்னிச்சிடுன்னு கேட்க அவசியமில்லா ஓர் உறவுதான் காதல்..
அன்பு வச்சவங்கள மனசறிஞ்சி புண்படுத்த முடியாது.
அப்படி தவறி நடந்துட்டா, இன்னொரு மனசு அதைப் பெரிசுபடுத்தி
மன்னிப்பு கேட்கட்டும்னு எதிர்பார்க்காது...

சி.த.: நட்புன்னா?

பெ.த: A FRIEND is One who knows everything about you and still loves you..
உன்னைப்பத்தின எல்லாம் தெரிஞ்சும் உன்னை நேசிக்கிறதுதான் நட்பு..

எனக்கு புரைக்கேறியது.. நண்பன் புதுசு என்னை நினைக்கிறானோ..?


சி.த: நட்பு வேறு, காதல் வேறுதானேண்ணே..?

பெ.த.: நிச்சயமா, ஆனா உண்மையான காதலின் உள்ளடக்கம் நட்பும் பரஸ்பர மரியாதை,
நம்பிக்கையும்..


சி.த: அண்ணே நீங்கதானே சொல்வீங்க..
உங்களப் பொருத்தவரைக்கும் பெண்கள் இரண்டு வகை...
ஒண்ணு : அழகுப் பெண்கள்
ரெண்டு : மிக அழகுப்பெண்கள்..ன்னு:)
அழகுன்றது... பார்வைக்குப் பார்வை மாறுபடுதே... உண்மையான அழகுன்னா என்னண்ணே?

பெ.த: எழுத்தாளர் ஜேகே சொல்வார் : எதை அப்புறமா நினைச்சுப்பார்த்தா சுகமா இருக்கோ
அவை எல்லாமே அழகானவைதான்...


சி.த: இந்த ஆண் - பெண் உறவில் ஈகோ சிக்கல் வராமல் இருக்க என்ன வழி?

பெ.த: நாப்பது வருசமா நல்ல குடித்தனம் பண்ணி, இன்னும் காதலோட இருக்கிற
நம்ம சாலமன் பாப்பையா அய்யா சொல்றதுதான் வழி :


இல்லறம்ற அகராதியில கண்டிப்பா இருக்க வேண்டிய சொற்கள்:

பாசம்
பொறுமை
விட்டுக்கொடுப்பது
உண்மை
நம்பிக்கை
நேர்மை


அதுலருந்து நீக்கவேண்டிய சொற்கள்:

சுயகவுரவம்
துரோகம்
ஆணாதிக்கம்
பெண்ணியம்
வற்புறுத்துதல்
கோபம்
சந்தேகம்

சி.த: மனிதர்கள் எப்பவும் திருப்தி இல்லாம இருக்காங்களே ஏண்ணே..?

பெ.த: அப்படி சொல்ல முடியாது.. திருப்தி என்பது தற்காலிக உணர்ச்சி..
அதான் அடுத்த திருப்தி தேடி அலையுறோம்..
ஒரு விருந்தில் உணவுக்குழாய்க்கு ஒரு இஞ்ச் கம்மியாய் வயிற்றை ரொப்பினால்
"ஒண்ணும் சொகமில்லே.."
உணவுக்குழாயில் ஒரு இன்ச் ஏறும் அளவுக்கு முங்கிட்டான்னா
"அடா அடா .. இதுல்ல விருந்து.. வாயத் தொறந்தா காக்கா கொத்தும் போல"

அதிருப்திக்கும் திருப்திக்கும் இடைவெளி கொஞ்சம்..
ஆனா திருப்தி என்பது நிரந்தரம் இல்லை என்பதே நிரந்தரம்.

நான் ஸ்நாக்ஸ் கொறிப்பதை நிறுத்திவிட்டேன்.. காபியை கையில் எடுத்தேன்..

சி.த: அண்ணே உங்க மிகப்பெரிய ஆசை என்னண்ணே?

பெ.த: நல்லா நடமாடிட்டு இருக்கும்போதே தூக்கத்தில் பொட்டுன்னு போயிடணும்..
இழுத்துப்பறிச்சி யாருக்கும் பாரமா இல்லாம.. :D .
இது தீவிர முனைப்பும் திடமான நம்பிக்கையும் உள்ள ஆசை.
அப்படி நான் நெனச்சது எல்லாமே நடந்திருக்கு.. இதுவும் நடக்கும். :D


சி.த: வாழ்க்கையின் வெற்றி என்னண்ணா?

பெ.த: அடடா, இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம்னு ஆடியன்ஸ் நினைக்கும்போது
ஒரு பேச்சாளர் நிறுத்துறார் பாரு..அதான் வெற்றி ஃபார்முலா..
முடிச்சுத் தொலைடா டேய்ன்ற நிலை தவிர்ப்பதுதான் வெற்றி..
ஆனா முந்தின நாள் கிடைச்ச கைதட்டலில் இன்னிய நிலையை மனுசன்
மறந்துடுறான் பாரு.. அதுதான் அதுல விசேஷம்..
அந்த வகையில் பார்த்தா... பாரதி, பட்டுக்கோட்டை, புதுமைப்பித்தன், எழுதறதை நிறுத்தின
ஜெயகாந்தன் வெற்றி...
ரஜினி இடைவேளை கழிச்சி வரும்வரை தியேட்டர் காலியடிக்கும் படத்தில் நடிச்ச சிவாஜி,
பெரியார், காமராஜர், அண்ணாவில் தொடங்கி, எம்ஜிஆருடன் நின்று, இன்று ஜெயலலிதாவுடன் சரிக்குச்சமமா
நிக்கும் "தலைவர்" கலைஞர்,
பராசக்தி எழுதிய பேனாவால் மீண்டும் பராசக்தி, மதுரை மீனாட்சின்னு குப்பை அள்ளிய எழுத்தாளர் கலைஞர்,
பாண்டியன் பரிசை படமாய் எடுக்க பட்டணம் போய், பட்டு, பட்டுப்போன பாவேந்தர்,
வாராந்தர ராணியில் அரங்கமும் அந்தரங்கமும் எழுதிய கவியரசு,
முக்காப்லா, லாலாக்கு டோல்டப்பி, பென்ஸ் கார்,ஜூராஸிக் பார்க் தரும் வாலி -
இவங்க எத்தனையோ சாதிச்சவங்க.. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சவங்க.
ஆனாலும் என்னைப் பொருத்தவரைக்கும் ஒருவகையில் இவங்க தோல்வி. அடைஞ்சவங்கதான்..

நான் காபி குடிப்பதையும் நிறுத்திவிட்டு புறப்பட்டுவிட்டேன்...
தமிழ்மன்றத்தில் ஒரு பொறுப்பில் இருக்கிறேன்..
அதைப்பற்றி தலைவரிடம் பேச வேண்டும்... :)

பாரதி
30-03-2004, 01:33 AM
பல பெரியவர்களின் கருத்தை அருமையான உரையாடல் மூலம் சொல்லி இருக்கும் அண்ணனுக்கு ஜே...!

mania
30-03-2004, 03:38 AM
சிறிது அவகாசத்திலேயே இவ்வளவு சிந்தனைகளா !!!!பிரமாதம்.
அன்புடன்
மணியா

karikaalan
30-03-2004, 01:39 PM
இளவல்ஜி

உங்களை மிஞ்ச ஆளில்லை. அத்தனையும் அருமையான சிந்தனைகள். வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பரஞ்சோதி
30-03-2004, 03:22 PM
அண்ணா, தம்பிமார்களின் உரையாடல் மிகவும் அருமை, ஆயிரம் அர்த்தங்கள் கொண்டது. தொடருங்கள்

நிலா
30-03-2004, 07:41 PM
தலை கலக்கல்!புதிதுபுதிதாய் கலந்துகட்டி விருந்து படைக்கிறீர்கள்!வாழ்த்துகள்
நன்றிகள்

sara
01-04-2004, 12:55 AM
வாவ்.. அருமையாய் உரையாட விட்டிருக்கிறீர்கள். இப்படி அர்த்தமான அரட்டைகளும் 'சி.த/பெ.த' இடையே நடக்கிறதா... நல்லது.

'உண்மையான நட்பு, காதல் - இப்ப இருக்குதா???' இந்த கேள்வியும் சி.த கேட்டிருக்கலாம்.

மன்மதன்
03-04-2004, 09:26 AM
கலக்கல் அண்ணா - தொடருங்கள் உங்களின் அர்த்தமுள்ள அரட்டையை..

kavitha
05-04-2004, 06:24 AM
இளசு அண்ணா, தூள் தூள் போங்க!

என்னோட சந்தேகமும் தீர்ந்திச்சு!

சரா, கவலை படாதீங்க அண்ணன் அதற்கும் பதில் சொல்வார். பாக்யராஜ் சார் ஸ்டைலில்...

உண்மையான நட்பு கண்டிப்பாக இருக்கிறது!

காதல்?! நாம எஸ்கேப்புங்கோ!

இளசு
27-07-2004, 12:39 AM
கருத்து சொன்ன அண்ணல், மணியா, நிலா, இளவல்கள் பூ, பாரதி, பரஞ்சோதி, மன்மதன், கவிதா, சரா அனைவருக்கும் என் நன்றிகள்..

(ரொம்ம்ம்ம்ம்ப தாமதமாய்...)


வாவ்.. அருமையாய் உரையாட விட்டிருக்கிறீர்கள். இப்படி அர்த்தமான அரட்டைகளும் 'சி.த/பெ.த' இடையே நடக்கிறதா... நல்லது.

'உண்மையான நட்பு, காதல் - இப்ப இருக்குதா???' இந்த கேள்வியும் சி.த கேட்டிருக்கலாம்.

கவீ..
இந்தக் கேள்விக்கு சரா பதில் சொல்வதுதான் சரி..
ஆனா ஆளைக் காணும் கொஞ்ச நாளாய்..
அதனால் நீங்க சொல்லலாமே..!

பரஞ்சோதி
27-07-2004, 01:49 PM
இளசு அண்ணாவின், அடுத்த சின்னத்தம்பி, பெரியத்தம்பி உரையாடலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

விகடன்
19-07-2008, 02:51 PM
உரையாடல் என்ற போர்வையில் பல கருத்துக்களை சொல்லியிருக்கும் இளசு அண்ணாவின் புலமை பாராட்டத்தக்கதே...

இன்னும் தொடருங்கள்...

பூமகள்
19-07-2008, 02:59 PM
அருமையான வாழை இலை கருத்து விருந்து...!!

மகிழ மணக்க உண்டேன்..

அறிந்ததும் அறியாததும் தெளிந்தேன்..

நன்றிகள் பெரியண்ணா...

மேலெழுப்பிய விராடன் அண்ணாவுக்கு விசேட பாராட்டுகள். :)

விகடன்
19-07-2008, 03:26 PM
ஐ- காஷ் ஒன்றும் கிடையாதா??? :D

பூமகள்
19-07-2008, 06:44 PM
விராடன்
Join Date: 03 Feb 2007
Location: உங்கள் எண்ணத்தில்
Posts: 3,461
iCash Credits: 26,936.0
இம்புட்டு ஐகேஷ் வைச்சிட்டுமா என்ர ஐகேஷ் மேல கண்ணு??!! :eek::eek:

நானே தம்மட்டூண்டு தான் வைச்சிருக்கேன்.....:rolleyes::icon_ush::icon_rollout: ஹூம்..!! நற நற நற....:sauer028::sauer028:

பெரியண்ணா.:icon_ush:. பாருங்க விராடன் அண்ணாவ..........:traurig001: பச்ச பூவ அழ வைக்கிறாரு....!! :traurig001: ஊஊஊஊஊஊஊஊஊஊஉ....................:traurig001:

ஹை ஹை....!!:aetsch013: மாட்டிவிட்டுட்டேனே...!! :D:D

இளசு
19-07-2008, 06:53 PM
இளசு அண்ணாவின், அடுத்த சின்னத்தம்பி, பெரியத்தம்பி உரையாடலை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

அன்பு பரம்ஸ்,

அன்று போல் மீண்டும் அனைத்துத் தம்பிகளும் -
நீ, பூ, கரவை பரணி , என நீண்ட பட்டியல்...
மன்றில் உலவும் நாள் வரும் ..
அந்நாள் நானும் அழைத்து வருவேன் -
சின்னதம்பி -பெரியதம்பியை உரையாட!


உரையாடல் என்ற போர்வையில் ...

கடன் வாங்கிய கருத்துகளை
மறுவிற்பனைக்கு அனுப்ப
புதுசாய் உறை சுற்றணுமில்லையா? ஹ்ஹ்ஹ்ஹா!

விரல் வலிக்க ஒருங்குறிக்கு மாற்றிய
சிரத்தைக்கு நன்றி விராடா!அறிந்ததும் அறியாததும் தெளிந்தேன்..நன்றி பாமகளே!
தெளிவதும் தற்காலிகமே!
இன்று தெளிந்தது - நாளை மயங்கலாம்..

மயங்கித் தெளிந்து தேடிக்குழம்பி மீண்டும்
------------------------------------
--------,,,,,,,------------------------

ஆனாலும் தெளிவைத் தேடுவது தொடர்ந்தபடியேதான்..! இல்லையா பூ?

இதைத்தான் கவியரசர் -
இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம்!
நீரில் தோன்றும் நிழல்களைப் போலே நிலையில்லாமல் போகலாம்!
என்றார்..


----------------------------------
விராடன், பூ..
ஐகேஷ் சண்டையா போடுறீங்க?

இருவருக்கும் ஏதாவது கொடுக்கலாமா?
இல்லை அறிஞரிடம் போட்டுக் கொடுக்கலாமா?
யோசிக்கிறேன்.. ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!:lachen001:

பூமகள்
19-07-2008, 07:05 PM
தெளிவதும் தற்காலிகமே!
இன்று தெளிந்தது - நாளை மயங்கலாம்..

மயங்கித் தெளிந்து தேடிக்குழம்பி மீண்டும்
------------------------------------
--------,,,,,,,------------------------
ஆனாலும் தெளிவைத் தேடுவது தொடர்ந்தபடியேதான்..! இல்லையா பூ?
இதைத்தான் கவியரசர் -
இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம்!
நீரில் தோன்றும் நிழல்களைப் போலே நிலையில்லாமல் போகலாம்!
என்றார்..
மிகச் சரியண்ணா... :icon_b::icon_b:
எங்களின் பெரியண்ணாவும் கவியரசரும் சொன்னால் தவறெப்படி ஆகும்?? :icon_ush::rolleyes:

தெளிந்த நீரலை.. கால் பட்டால் கலங்கிடுவது போல.. அவ்வப்போது உள்வெளிக் காரணிகள் குழப்பத்தில் நம்மை ஆழ்த்துவதும் இயல்பே....!!

தெளிவு எப்போதுமே இருந்துவிட்டால் எத்தனை நலமாக இருக்குமென எப்போதும் ஏங்குவதுண்டு பெரியண்ணா...

உங்கள் பதிவுகளில் அவ்வகை தெளிவை அடைந்து மூளையில் அவ்வப்போது ரீசார்ஷ் செய்து கொள்கிறேன் இப்போதெல்லாம்..!!:icon_rollout:

பெரியண்ணா... பெரும் தெளிவாக்கி நிறுவனத்தையே உங்கள் பதிவுகளில் நடத்திவருகிறீர்கள்..!

விராடன், பூ..
ஐகேஷ் சண்டையா போடுறீங்க?
இருவருக்கும் ஏதாவது கொடுக்கலாமா?
இல்லை அறிஞரிடம் போட்டுக் கொடுக்கலாமா?
யோசிக்கிறேன்.. ஹ்ஹ்ஹ்ஹ்ஹா!:lachen001:
செல்ல பெரியண்ணா இல்ல..? :icon_rollout:
மாட்டிவிட்டுடாதீங்க அண்ணலே..!!:icon_ush:

பென்ஸ்
19-07-2008, 07:17 PM
அன்பின் இளசு....

ஒரு முறை உள்வாங்கி வந்தேன்.... கருத்துகளோடு... உங்கள் எண்ணங்களையும்...

நான் எழுதியதோ என்ற எண்ணம் வந்தது தவிர்க்கமுடியாதது.

mukilan
20-07-2008, 02:08 AM
கொடுத்த வைத்த தம்பிகள்தான். எதைக் கேட்டாலும் விடை கிடைக்கும் அண்ணன் இருக்கையில் கவலை எதற்கு! மன்றத்தில் மற்ற தம்பிகளுக்காக தம்பிமார்கள் பேச மாட்டார்களா?

தீபன்
20-07-2008, 02:11 AM
அன்பு பரம்ஸ்,

அன்று போல் மீண்டும் அனைத்துத் தம்பிகளும் -
நீ, பூ, கரவை பரணி , என நீண்ட பட்டியல்...
மன்றில் உலவும் நாள் வரும் ..
அந்நாள் நானும் அழைத்து வருவேன் -
சின்னதம்பி -பெரியதம்பியை உரையாட!
அப்ப இப்ப இருக்கிற நாங்க எல்லாம் தம்பிகளில்லையா...? எங்களுக்காகாக தொடர மாட்டியளா...? நாராயணா....:sprachlos020: