PDA

View Full Version : தமிழ்மன்ற நிதி!!!poo
25-03-2004, 08:26 AM
இது விளம்பரமல்ல...நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்!!!

மன்றமே மூச்சென... தென்றலாய் வலம்வந்து தளத்தில் தனிமுத்திரை
பதித்துவரும் என் அண்ணன்... மன்றத்து தலைமை கண்காணிப்பாளர் இளசு அவர்கள்...

தமிழ்மேல் கொண்ட பற்றால்....
கவிஞர்கள்மேல் கொண்ட அக்கறையினால்..
தமிழ்மன்றம்மேல் கொண்ட காதலால்...

மறைந்த கவிஞர் திரு. மீரா அவர்களின் நினைவக நிதிக்காக
ரூபாய் 5000/- அனுப்ப....

[b]<span style='color:blue'>"கவிஞர் மீரா நினைவக நிதி" </span>என்ற பெயருக்கு அதை வரைவோலையாய் மாற்றி..

நம் மன்றத்தில் உலாவரும் மற்றுமொரு அன்பர் என் தலை மணியாவின் கரங்களால் கவிக்கோ அப்துல் ரகுமானிடம் <span style='color:blue'>[b]"தமிழ்மன்றம் இணையதளத்தின் நிதி"</span>(அண்ணன் இளசு கேட்டுக்கொண்டதற்கிணங்க...) என்ற பெயரில் இசாக்கின் திருமணநாளன்று வழங்கினோம் என்பதனை பெருமையாய் சொல்லிக்கொள்கிறேன்...

******


(இதை வெளியில் சொல்லவேண்டாமென அண்ணன் கேட்டுக்கொண்டதால் இத்தனைநாள் தாமதம்.. அண்ணனின் பேச்சை முதல்முறையாய் மீறுகிறேன்.. - நம் தளத்தின்பால் அவர்கொண்ட அக்கறையினை நம் உறவுகள் மீண்டுமொருமுறை உணர்ந்துகொள்ளவேண்டுமென.....)

mania
25-03-2004, 09:13 AM
என்ன மனிதரைய்யா அவர் !!!!கொடுக்கும்போது எவ்வளவு பெருமையாக இருந்தது தெரியுமா (எனக்கே) நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய விஷயம் . மனதார பாராட்டுகிறேன் இளசு
அன்புடன்
மணியா

மன்மதன்
25-03-2004, 09:22 AM
கண்டிப்பாக நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்தான்.. இருந்தாலும் இவ்வளவுதாமதம் கூடாது பூ..

Mano.G.
25-03-2004, 09:24 AM
சொல்லியிருந்தால் நானும் ஏதோ என்னல் முடிந்ததை தமிழுக்காக
..........................

உங்களை தர்மம் கண்டிப்பாக காக்கும்


மனோ.ஜி

poo
25-03-2004, 09:25 AM
இருந்தாலும் இவ்வளவுதாமதம் கூடாது பூ..


மன்னிக்கனும் மன்மதன்...அண்ணனும்தான்!!

ஜோஸ்
25-03-2004, 01:26 PM
நல்ல செயல் நண்பரே...வாழ்த்துக்கள்...
அடுத்த முறை மன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளலாமே.. விருப்பமுள்ளவர்கள் கொடுக்கட்டும்.

மூர்த்தி
25-03-2004, 01:39 PM
நினைக்கும்போதே மிகவும் பெருமையாக இருக்கிறது.விளம்பரமில்லாமல் கொடுத்தது அவரின் பெருந்தன்மை.

முத்து
25-03-2004, 07:43 PM
ஒரு கை கொடுப்பதை அடுத்த கை அறியாமல்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ...
இப்போது அதைப் பார்க்கிறேன் ... :)

lavanya
25-03-2004, 10:19 PM
பெருமிதமாக இருக்கிறது...இப்படிப்பட்டவர்களின் நட்புகள்
வட்டத்தில் நானும்....

baranee
25-03-2004, 10:33 PM
மிக்க பெருமிதம் அண்ணனே...

ஜோஸ் அவர்கள் கூறியது போல அடுத்தமுறை மன்ற உடன்பிறப்புக்களையும் சேர்த்துக் கொள்ள ஒரு பணிவான வேண்டுகோள்.

poo
26-03-2004, 12:29 PM
சொல்லியிருந்தால் நானும் ஏதோ என்னல் முடிந்ததை தமிழுக்காக


அடுத்த முறை மன்ற உறுப்பினர்களையும் சேர்த்துக் கொள்ளலாமே.. விருப்பமுள்ளவர்கள் கொடுக்கட்டும்.


அடுத்தமுறை மன்ற உடன்பிறப்புக்களையும் சேர்த்துக் கொள்ள ஒரு பணிவான வேண்டுகோள்.


அன்பு உள்ளங்களே இது தொடர்பாக ஏற்கனவே நம் மன்றத்தில் சகோதரர் இசாக் குறிப்பிட்டிருந்தார்..
அந்த இழை..

http://www.tamilmantram.com/board/viewtopi...=asc&highlight= (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=2955&start=0&postdays=0&postorder=asc&highlight=)


இசாக் விடுப்பில் இருப்பதால் மேலும் விவரங்களுக்கு என்னை வேண்டுமானால் தொடர்புகொள்ளுங்கள்....

ஜோஸ்
26-03-2004, 01:41 PM
நண்பரே..
அதைக் கவனிக்காமல் விட்டுவிடேன். தங்களது முகவரியைத் தெரியப்படுத்தினால் என்னால் முடிந்ததை அனுப்புகிறேன்.

நிலா
26-03-2004, 10:23 PM
தலைக்கு தலைவணங்குகிறேன்!

இராசகுமாரன்
29-03-2004, 03:42 PM
இளசுவின் தாராள மனதுக்கு வாழ்த்துக்கள்.
நம் மன்றத்தை தலை நிமித்தச் செய்யும் ஒரு "தலை" அவர்.

பரஞ்சோதி
29-03-2004, 03:45 PM
தலைவரே தலைக்கு வாழ்த்து சொல்லும் போது, சிறியவன் வணங்கி வாழ்த்துகிறேன்.

இக்பால்
29-03-2004, 03:49 PM
இளசு அண்ணா அப்படித்தான். :)

தஞ்சை தமிழன்
30-03-2004, 08:16 AM
இளகிய மனம் கொண்ட இளசுவுக்கு பாராட்டுக்கள்.

செயற்கரிய செய்வார் பெரியர் என்ற திருவள்ளுவர் வாக்கினை மெய்ப்பிக்கும் நிகழ்வு.

kavitha
01-04-2004, 03:35 AM
எங்கள் அண்ணா ! எங்கள் அண்ணா தான்! மிகப்பெருமையாக இருக்கிறது.
சொல்லாத்தது அவரின் பெருந்தன்மை
தெரியாமல் போனால் தர்மம் உயிரோடிருப்பதை எப்படி உணர முடியும்!

சேரன்கயல்
01-04-2004, 11:43 AM
இது இனிய இளசுவின் இன்னொரு முகம்...
அவரின் கொடையை "பூ" வரைவோலையாக்கியிருக்க, அதை என் "தலை" கவிக்கோ அப்துல் ரகுமான் ஐயாவிடம் வழங்க, அண்ணன் அறிவுமதியும் உடனிருக்க...
மன்றத்திற்கு மனிதநேய அடையாளத்தை பதிக்கச் செய்தார் இளசு...
(நானும் உடன் இருந்தேன் என்பது மகிழ்ச்சி)

சேரன்கயல்
05-05-2004, 02:23 AM
இனியவர்களே...
தமிழ் மன்றம் சார்பில் மறைந்த கவிஞர் திரு. மீரா அவர்களின் நினைவக நிதிக்காக இனிய இளசு கொடுத்ததை கவிக்கோவிடம் தலை (மணியா) ஒப்படைக்கும் காட்சி...

சேரன்கயல்
05-05-2004, 02:24 AM
படம் பெரிதாக இருக்கிறது...
சிறியதாக பதிக்க என்ன செய்யவேண்டும்...???
சொல்லுங்களே மக்களே...

இக்பால்
05-05-2004, 05:00 AM
என் மனதைக் கவரும் புகைப்படம். மன்றத்தின் 50 வேட்பாளர்களையும்
ஒரே மனுவில் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்ற என் சந்தேகம்
மணியா அண்ணாவின் புகைப்படம் பார்த்தபிறகு போய் விட்டது.
சேரன் தம்பி, பூ தம்பி, பரஞ்சோதி தம்பி யார் யார் என விழித்துக்
கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு கீழே காயம் ஏதாவது தெரிகிறதா
எனத் தேடிக் கொண்டிருக்கிறேன்.-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
05-05-2004, 07:05 AM
இக்பால் அண்ணா இந்தப் படத்தில் பரம்ஸ் இல்லை...

பாரதி
05-05-2004, 07:31 AM
படம் பெரிதாக இருக்கிறது...
சிறியதாக பதிக்க என்ன செய்யவேண்டும்...???
சொல்லுங்களே மக்களே...


பவர் பாயிண்டில் சென்று படத்தைப் பதித்து எளிதாக சிறிதாக்கி சேமித்து விடலாம்.

படம் உண்மையிலேயே மிகவும் அருமையாக இருக்கிறது. பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரையும் குறிப்பிட்டால் நன்றாக இருக்குமே..

மணியா அண்ணா.. தாத்தா.. சூப்பர்.!!!!

பரஞ்சோதி
05-05-2004, 06:39 PM
சேரன்! நீங்கள் கீழ்கண்ட சுட்டியில் இருந்து irfanview மென்பொருளை இறக்கி, அதன் உதவியுடன் படத்தை சிறிதாக்கலாம். முன்பு ஒரு முறை மன்றத்தில் படித்து, நான் இறக்கிக் கொண்டேன்.

http://irfanview.tuwien.ac.at/main_download_engl.htm

பரஞ்சோதி
05-05-2004, 06:41 PM
என் மனதைக் கவரும் புகைப்படம். மன்றத்தின் 50 வேட்பாளர்களையும்
ஒரே மனுவில் எப்படி ஏற்றுக் கொண்டார்கள் என்ற என் சந்தேகம்
மணியா அண்ணாவின் புகைப்படம் பார்த்தபிறகு போய் விட்டது.
சேரன் தம்பி, பூ தம்பி, பரஞ்சோதி தம்பி யார் யார் என விழித்துக்
கொண்டிருக்கிறேன். கண்ணுக்கு கீழே காயம் ஏதாவது தெரிகிறதா
எனத் தேடிக் கொண்டிருக்கிறேன்.-அன்புடன் அண்ணா.

அண்ணா! நான் பிரியாணி சாப்பிட போய் விட்டேன், அதனால் படத்தில் இல்லை.

இக்பால்
05-05-2004, 06:49 PM
அண்ணா! நான் பிரியாணி சாப்பிட போய் விட்டேன், அதனால் படத்தில் இல்லை.


எவ்வளவு நேரம் சாப்பிட்டீர்கள்? ஒரு படத்தில் கூட இல்லையா?

பந்திக்கு முந்து... சரிதான். :)

suma
05-05-2004, 10:26 PM
ஆஆ......தாத்தா இல்லை சித்தப்பூ... படம் அருமை
ஒருவரையும் பார்க்காமல் இப்போது புகைப்படத்தினை வெளிட்டு அசத்தல்..
அப்படியே இளசு ரவுசு படம் இருந்தால் நேரில் பார்த்தவரகள் தாங்களேன்.

இளசு
05-05-2004, 10:42 PM
மணியா.. கண்ணே கூசுது..அப்படி ஒரு தேஜஸ்..

நண்பர்களைக் காண உள்ளம் துள்ளி.. இன்னும் கேட்குதே மோர்..

( இனிய சேரன் காதில் விழுந்தால் சரி..)

சுமா.. ஆவிகளைப் படமெடுத்தால் பிம்பம் பிலிமில் விழாதாமே..

சேரன்கயல்
06-05-2004, 04:17 AM
நல்லாவே காதில் விழுந்தது இனிய இளசு...
அடுத்து நீங்கள் தாயகம் வரும்போது...உங்களை நாங்கள் வரவேற்க காத்திருப்போம்...அப்போது ஆவியாக இல்லாமல் ஆளாகவே புகைப்படத்தில் இருக்கலாம் நீங்கள்...

இக்பால்
06-05-2004, 04:37 AM
ஆவி தெரியுதோ இல்லையோ அண்ணா தெரிவார்.

ஆகவே கொடுக்கலாமே. :)

Mano.G.
06-05-2004, 09:47 AM
நம்மாளும் சமூக சேவை செய்ய முடியும் என்பதற்கு
இது எடுத்துக்காட்டு அருமை நண்பர்களே,
இதில் யார் தம்பி பூ என அனுமானிக்க முடிகிரது


மனோ.ஜி

மன்மதன்
06-05-2004, 10:02 AM
ஆஹா மன்றத்தில் எல்லோர் படமும் வெளியாகுது.. ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இக்பால் அண்ணா நீங்களும் உங்க படத்தை தாருங்களேன்..

poo
08-05-2004, 08:10 AM
மன்மதன் படமும் வெளியாகும்...!!!

(கதாநாயகனா நடிக்கப்போறதா கேள்விப்பட்டேன்.. அதைப்பற்றி சொல்கிறேன் மன்மதரே!!)

மன்மதன்
08-05-2004, 08:23 AM
மன்மதன் படமும் வெளியாகும்...!!!

(கதாநாயகனா நடிக்கப்போறதா கேள்விப்பட்டேன்.. அதைப்பற்றி சொல்கிறேன் மன்மதரே!!)

எப்ப சொல்லப்போறீங்க..

இ.இசாக்
05-08-2004, 05:31 PM
மன்ற நிதி செய்தி மகிழ்வளிக்கிறது.
அய்யா கவிக்கோவும் நெகிழ்வாக சொன்னார்.
வள்ளல்கள் வாழ்க,
ஆர்வலர்கள் அள்ளி தாருங்கள்.

அசன் பசர்
06-08-2004, 06:33 AM
மன்ற உறவுகளிடம் சிறு மன்னிப்புடன் துவங்குகிறேன்

நான் தாயகம் சென்றிருந்தபோது கவிக்கோ அவர்களை சந்தித்தேன்.
அவர் என்னிடம் மறைந்த [b]கவிஞர் மீரா நினைவக நிதி) குறிப்பிட்ட சிலர்மாத்திரம் சேர்ந்து சிறுதொகையினை அனுப்பலாம் என முடிவு செய்துள்ளோம்.

இத்துடன் துபாயில் வாழும் நண்பர்களையும் சேர்த்துக்கொள்ளலாம் என தமிழ்மன்றத்தில் இந்த அறிவிப்பு கண்டபிறகு தோன்றியது. எனவே துபாயில் வசிக்கும் அன்பர்கள் ஆர்வமிருப்பின் என் கைப்பேசி எண்களுக்கு தொடர்புக்கொள்ளவும்( 050 5823764)

நான் தாங்கள் துபாயில் எங்கிருப்பினும் நேரில் வந்து அன்புடன் பெற்றுக்கொள்கிறேன்.

(புனைப்பெயரில் இருப்பவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாவிடின் ஒரு தொகையினை ஒரு உரையினிலிட்டு

[size=18]அசன் பசர்,
அமீரகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவை,
துபாய்.
கைப்பேசி 5823764

என்றெழுதி தமிழ் உணவகத்தில் கொடுத்து விடவும். கொடுக்கும் அன்று எனக்கு கைப்பேசியில் சொல்லிவிடவும்)
பதியவைத்த பூவுக்கும், அண்ணன் இளசு,அண்ணன் பரஞ்ஜோதி,மணியா மற்றும் மன்ற உறவுகளுக்கும் நன்றிகள்.

என்றும் கவிதைக்கா..
உங்கள்
அசன் பசர்