PDA

View Full Version : பெரியண்ணா.



இளசு
22-03-2004, 10:06 PM
பெரியண்ணா

வணக்கமுங்கோ பெரியண்ணா
மரபியலில் மாத்தம் செஞ்சு
மான்செட்டோன்னு பருத்தி விதை
உலகமயமாக்கல் திட்டப்படி
குடுத்து விட்டீங்கோ
ஊக்கத்தொகை அனுப்பிவச்சீங்கோ

ஆக்ஸ்போர்டு விவசாயி முதல்
ஆடுதுறை உழவன் வரை
உங்கள விட்டா நாதியில்லன்னு
கதி வரும்னு கணக்கு போட்டீங்கோ

போனவாரம் கோட்டு சூட்டு
போட்டுக்கிட்டு ஒங்க ஆளு
தாட்டு பூட்டு விசாரணைக்கு
தடபுடலா வந்தாருங்கோ...

பாதி நிலம் மான்செட்டோ
பாவம்... முழுக்க பூச்சி பொட்டால்
பாழடைஞ்ச பயிரைக் காட்டி-ஒரு
பாட்டம் அழுது வச்சேன்..

மீதி நிலம் வரப்பு மறைச்சு
வீரியமா வெளஞ்ச வெள்ளாமை
அடக்க மாட்டாம அய்யா கேட்டாரு
"இந்த பாதி மட்டும் எப்படி இப்படி?"

'கடையில சலீசா வேற ரக பருத்திவிதை
கடைக்காரன் தந்தான் அய்யா.."
"அத்தனை செலவு செய்து வர்த்தகம் வளைக்க
அமெரிக்கா தந்த விதையை விட உசத்தியா?"

மாதிரி விதை எடுத்துப்போயி சோதிச்சு
மாரியாத்தா வந்த வெறிபோல ஒடிவந்தார்...
"அச்சு அசல் எங்க மான்செட்டோ இது..
அலுங்காம நகல் எடுத்த கடைக்காரன் யாரு?"

"அய்யா ஏழை குஜராத்தி வியாபாரி நான்..
டீலரா.. அப்படீன்னா..ஓ மொத்த சப்ளையா?
சைக்கிள் கீ ஆத்தி..சைக்கிள் கீ ஜாத்தீ
யாருக்குய்யா தெரியும் அவன் பேரும் ஊரும்?"

அமெரிக்க யானை காதில்
இந்திய எ(கு)றும்பு
குத்துதே குடையுதே
பாஸ்மதி அரிசி, வேப்பிலை, மஞ்சள்
கத்துக்குடுத்த பாடம்
திருப்பி வந்தா கசக்குதே..

உலகமயமாக்கல்....
இந்தியன் அவன் போக்கில் புரிஞ்சிக்கிட்டு
நமக்கே தரும்போது வலிக்குதே...


"வழக்கு போட பேருமில்லை, ஊருமில்லை..
சரி, அறிக்கை அனுப்பணும்..
இந்த "இந்திய சொந்த" பருத்தி விதை பேர் என்ன?"


"ஜெய் ஹிந்த் !!!!"

பாரதி
23-03-2004, 12:27 AM
உலக மயமாக்கலில் ஊறிப்போய் கிடக்கும் அரசியல்வாதிகள், ஊருக்கு ஊர் ஏழை விவசாயிகள் படும்பாட்டை கண்ணை மூடிக்கொண்டு கவனிப்பதை மீண்டும் நினைவில் நிறுத்தியதற்கு நன்றி அண்ணா.

karikaalan
23-03-2004, 11:42 AM
மொன்சான்டோ போன்ற இன்னும் பிற பல்நாட்டுக் கம்பெனிகள் செய்யும் தகிடுதத்தத்தை அழகாக எடுத்துக் கவிதையாக்கிய இளவல்ஜிக்கு வாழ்த்துக்கள்.

இன்னும் கொஞ்சநாள் போனால், வற்றல் குழம்புக்கு பேடண்ட் கொண்டுவந்துவிடுவார்கள்!

===கரிகாலன்

நிலா
23-03-2004, 03:44 PM
தலை கலக்கிப்போட்டீங்க!வாழ்த்துகள்!

poo
25-03-2004, 09:23 AM
திருகுவலி....

அசத்தல் அண்ணா...

பெரியண்ணாவுக்கு அல்வா...

இளசு
25-03-2004, 10:58 PM
பாரதி, அண்ணல், நிலா, பூ --- நன்றிகள்...

sara
02-04-2004, 08:01 PM
காப்புரிமை என்பது இன்றைய விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தவர்கள், தகுந்த விதமாக நினைவில் கொள்ளப்பட வேண்டுமே தவிர, அவர்கள் மட்டுமே அந்த தொழில்நுட்பத்துக்கு சொந்தக்காரர்களாகி விடக்கூடாது. புதியவர்கள் அந்த கண்டுபிடிப்பை தொடர்ந்து வலுவாக்கிட, வேறு புதியது அதனிலிருந்து பிறந்திட இந்தக் கோட்பாடு மிகப்பெரிய தடை. போன தலைமுறை அறிஞர்களெல்லாம் அவர்கள் கண்டுபிடிப்பை காப்புரிமை கண்ணாடிக் கூண்டில் போட்டு பூட்டி, காண மட்டுமே அனுமதி கொடுத்திருந்தால், இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் சாத்தியமாயிருக்குமா? செல்வம், செல்வம், செல்வோம் என்று மனிதகுலம் பேயாய் பறப்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.

அமரன்
31-05-2008, 09:02 AM
பூமகளின் பெரியண்ணா பெரியண்ணா பற்றி எழுதிய கவிதை. நான் அடிக்கடி படிக்கும் படைப்புகளில் அண்ணனின் படைப்புகளும் அடங்கும் என்பதால், இப்போது மேலெழுப்பும் நோக்கம் மட்டும். தருணம் அமையும்போது உள்வாங்குகின்றேன்.

பூமகள்
31-05-2008, 10:28 AM
பெயரைப் பார்த்ததும் ஒரு கணம் வியந்தேன்.. :sprachlos020::sprachlos020:

நான் அண்ணலின் இதயத்தில் இருக்கும் பெயரைத் தான் உள்வாங்கி என்னையுமறியாமல் அழைக்கிறேனா??!!:eek::eek: அகம் மகிழ்கிறேன்..!! :):icon_rollout::icon_rollout:

எனக்கும் இளசு அண்ணாவின் பதிவென்றால் உணவு கூட வேண்டாம்.. :icon_rollout::wuerg019: அறுசுவை விருந்தை எழுத்தில் படைக்கும் என் பெரியண்ணா என்று வந்து உணவிடுவாரோ??!!:traurig001::traurig001:

தமிழ்ப் பசியோடு காத்திருக்கிறேன்..!!:icon_hmm::smilie_flags_kl::icon_03::wub::icon_give_rose:


2004லிலேயே... மாண்சாண்டோ பற்றியும் பாசுமதி அரிசி, வேம்பு..மஞ்சள் பற்றிய இத்தனை விழிப்புணர்வூட்டும் படைப்பு அண்ணலிடமிருந்தா??!!:eek::eek:

வியந்தேன்.. உள்ளேயிருக்கும் அண்ணலின் மனம் போலவே என் மனமும் இருப்பதினை எண்ணி நெகிழ்ந்தேன்..!!!:smilie_flags_kl::wub::icon_give_rose:

விதை வராத பருத்தி... இப்போது விதையில்லா நெல்லும் வந்துட்டதுங்கோவ்... எத்தனை விவசாயிகள் பலிகடா ஆனார்களோ...??!!

காதுக்குள் போன இந்திய எறும்பு... மூளைக்குள் போய் தலைவலியை உண்டாக்கட்டும்..!! :icon_b::icon_b:

அப்போதாவது... இந்திய பொருட்களுக்கு(பாசுமதி அரிசி,வேம்பு,மஞ்சள்)உரிமை கிடைக்கிறதா பார்ப்போம்..!!:icon_rollout:

மற்றுமொரு மாஸ்டர் பீஸ்.. பாராட்டுகள் இளசு அண்ணா..!! :)
குட்டுகள் பெரியண்ணா சொன்ன பெரியண்ணாவுக்கு..!! ;)