PDA

View Full Version : ஒரே சமையல்



pgk53
10-04-2003, 04:45 PM
ஒருங்குறியாக்கம் : ஓவியன்

ஒரு அலுவகத்தில் வீர்சிங் வேலை செய்து கொண்டிருந்தான். அவனும் அவனது இரண்டு நண்பர்களும். தினமும் ஒன்றாக அமர்ந்துதான் மதிய உணவு உண்பார்கள்.நண்பர்களின் ஒருவன் சைவம், அடுத்தவன் அசைவம்.இருந்தாலும் அவர்களது மதிய சாப்பாடு எப்போதும் ஒரே மாதிரிதான் இருக்கும் . உணவில் எந்த மாறுதலும் இருக்காது. அதனால் மனம் சலிப்படைந்த மூவரும், மறுநாளும் இதே போலவே உணவு இருந்தால், மூன்றவது மாடியில் இருந்த அவர்களது அலுவகத்தில் இருந்து, குதித்து தற்கொலை செய்து கொள்வது என்று தீர்மானித்தார்கள்.மறுநாளும் அதேபோல உணவுதான் அவர்களது டிபன் பாக்ஸில் இருந்தது. அதைச் சாப்பிடாமல், மூவரும் , பால்கனிக்குச் சென்று ஒரே சமயத்தில் வெளியே குதித்தார்கள்.ஆனால் அதிர்ஷ்டவசமாக ஒருவரும் சாகவில்லை.இரண்டு பேருக்கு கை முறிந்தது. வீர்சிங்கிற்கு கால் முறிந்தது. அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை நடந்தது. அவர்களைப் பார்க்க வந்திருந்த அவர்களது மனைவியர்கள், தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். மாறுதலான உணவு வேண்டுமானால், எங்களைக் கேட்டிருக்கலாமே, என்று வீர்சிங்கின் நண்பர்களது மனைவிகள் அழுதபடி கூறினார்கள்.வீர்சிங்கின் மனைவியோ, ஒரு பெருமூச்சு விட்டபடி, உங்கள் கணவர்கள் வேண்டுமானால், சாப்பாடுக்காக் குதித்திருக்கலாம். ஆனால், எனது கணவர் அதற்காக நிச்சயமாக செய்திருக்க மாட்டார். ஏனென்றால் வீட்டில் அவர்தானே, சமைத்து எடுத்து வருகிறார்.எனக்கு சமைக்கத் தெரியாது" என்றாள்

gankrish
11-04-2003, 06:29 AM
நண்பா இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த ஜோக்குகள். அதனால் புதிதாக ஏழுதுங்கள். (தப்பாக எண்ணவேண்டாம்)

karikaalan
11-04-2003, 03:45 PM
ஜோக் நல்லாவே இருக்குது!

Dinesh
12-04-2003, 09:55 AM
நண்பா இதெல்லாம் ஏற்கனவே தெரிந்த ஜோக்குகள். அதனால் புதிதாக ஏழுதுங்கள். (தப்பாக எண்ணவேண்டாம்)

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாக இருந்தாலும்
என்னைப்போன்ற பலருக்கும் இவை புதிய நகைச்சுவைகள்தான்...
எனவே
தொடருங்கள் பிஜிகே அவர்களே!

தினேஷ்.

subavaanan
22-04-2003, 08:09 AM
சூப்பர் ஜோக்.....

இளசு
25-04-2003, 01:29 AM
நன்றாக இருந்தது...பாராட்டுகள்..

குமரன்
25-04-2003, 02:16 AM
அருமையான நகைச்சுவை...


-குமரன்.

rambal
25-04-2003, 08:17 AM
சர்தார்ஜிக்களைப் பற்றி தொகுப்பாக வெளியிடலாம். அந்த அளவிற்கு உங்களிடம் கலெக்சன் உள்ளது.
பாராட்டுக்கள் பிஜிகே அவர்களே..

poo
25-04-2003, 04:55 PM
எங்கிருந்துதான் பிடித்தீர்களோ அந்த வீர்சிங்கை... வெளுத்துக்கட்டுகிறார் மனுஷன்!!

அமரன்
25-10-2007, 06:34 PM
ஹஹ்ஹ்ஹா...அசத்தல் ரகம்..எனக்குப் புதுசு.
மன்றத்திலும் பல வீர்சிங்குகள் இருக்கிறார்கள்..
தானாகவந்து சிக்குவார்களா? பொறுத்திருப்போம்...

ஓவியன்
25-10-2007, 07:09 PM
ஹீ,ஹீ!!!

எனக்கு மூன்று சிங்கை தெரியும் அமரன்.... ! :D:D:D

அமரன்
25-10-2007, 07:10 PM
ஹீ,ஹீ!!!
எனக்கு மூன்று சிங்கை தெரியும் அமரன்.... ! :D:D:D
த்ரீ சிங்ஸ் வீர் சிங்கா..
பலே பலே.. மன்ற உளவுப்பிரிவின் திறமையை மெச்சினேன்..

ஓவியன்
26-10-2007, 01:47 PM
த்ரீ சிங்ஸ் வீர் சிங்கா..
பலே பலே.. மன்ற உளவுப்பிரிவின் திறமையை மெச்சினேன்..

இல்லீங்க......:icon_rollout:


யுவராஜ் சிங்
மகேந்திர சிங் டோனி
ஹர்பஜன் சிங்



:D:D:D:D:D:D:D:D