PDA

View Full Version : அமைதி வில்லன் : ஹெப்படைட்டிஸ் -C



இளசு
12-03-2004, 08:32 PM
அமைதி வில்லன் : ஹெப்படைட்டிஸ் C

சேகர் : வணக்கம் டாக்டர்!

டாக்டர் அருள் : வணக்கம், உட்காருங்க!

சே: என் பேர் சேகர் டாக்டர்; வயசு 28.

டா: சொல்லுங்க, என்ன பிரச்னை உங்களுக்கு?

சே: நான் ஒரு சா·ப்ட்வேர் என்ஜினியர் டாக்டர். துபாய் போக பாஸ்போர்ட், விசா எல்லாம்
ரெடி ஆகி, இந்த மாசம் மெடிக்கல் செக்கப்புக்கு பாம்பே போனேன். அங்க ப்ளட் டெஸ்ட்
பண்ணதுல, இந்த ஹெப்பட்டைடிஸ் C பாஸீட்டீவ்னு ரிப்போர்ட் வந்து அன்·பிட் பண்ணிட்டாங்க.
ஆக்சுவலா நான் ரொம்ப ஹெல்த்தியா இருக்கன் டாக்டர். எனக்கு மஞ்சள் காமாலையே வந்தது
இல்லை. சின்ன வயசில் கூட. அப்புறம் எப்படி டாக்டர்...

என் ·பியூச்சரே இதுனால ஒரு கேள்விக்குறியா இருக்கு டாக்டர். அம்மா -அப்பால்லாம் ரொம்ப
·பீல் பண்றாங்க. உங்களைப் பத்தி ·பேமிலி ·பிரண்ட் சொல்லி , நம்பிக்கையோட வந்திருக்கன்
டாக்டர்.. சரியாகிடுமில்ல..? நான் திரும்ப விசா கிடச்சி , துபாய் போயே ஆகணும் டாக்டர்...

டா: ம்ம் சேகர், முதல்ல அந்த ரிப்போர்ட்டை காண்பிங்க..
ம்ம்ம்.. இந்த வைரஸ¤க்கான எதிர்புரதம் ( antibody assay) அளக்கும் சோதனைகள்
பிழையா வர வாய்ப்பிருக்கு.
... அதனால முதல் தலைமுறை, அடுத்து இரண்டாம் தலைமுறைன்னு பிழை
கம்மியான தரமான இரத்தச்சோதனைகள்தான் பண்ணி இருக்காங்களான்னு
பாக்கிறதுதான் முதல் ஸ்டெப்.

உங்களுக்கு இரண்டும் பண்ணி இருக்காங்க.
எலிசா (ELISA) முதல் தலைமுறை. கொஞ்சம் இது இல்லாதவங்களுக்கும்
இருக்காப்ல ரிஸல்ட் தரும் . அதால் இது பாஸீட்டீவ்னா அடுத்து ...
ரிபா (RIBA) இரண்டாம் தலைமுறை.

உங்கள் இரத்தத்தில் இரண்டு டெஸ்ட்டுமே பாஸீட்டீவ்வா இருந்திருக்கு.
நல்ல தரமான லாபில் செய்யப்பட்டதால் நம்பலாம்.
இது உங்கள் உடல் சி வைரசை சந்தித்திருக்கு என்பதற்கான அடையாளம். அவ்ளோதான்.
உடம்பில் இன்னும் வைரஸ் இருக்குன்னு நிரூபிக்க சி வைரஸின் ஆர். என் ஏ. (RNA) -வை
நேரடியாய் அளந்து பாக்கணும். இதோ அதுவும் செய்திருக்காங்க. ம்.. அதுவும்
பாஸீட்டீவாய்த்தான் இருக்கு.
ஸோ, உங்களுக்கு ஹெப்பட்டைடிஸ் சி இருப்பது உண்மைதான்.

சே: இதுக்கு என்ன ட் ரீட்மெண்ட் டாக்டர்... எவ்வளவு செலவானாலும் பரவால்ல..
இதைக் க்ளியர் பண்ணி என்னை க்யூர் ஆக்கிடுங்க..ப்ளீஸ்..

டா: முதல்ல, இந்த வைரஸ், அதன் தன்மை, பாதிப்பு பத்தி பேசலாம்.
அப்புறம் உங்கள் உடல் நிலை எந்த அளவில் இந்த வைரஸால் பாதிச்சிருக்கு,
எந்த வகை சிகிச்சை அதிக பலன், குறைந்த பாதகம் தரும்னு ஆலோசிக்கலாம்.
அதன் செலவு எவ்வளவுன்னும் யோசிக்கலாம். சரீங்களா?

சே: சரீங்க டாக்டர்.. சொல்லுங்க.

டா: பிரத்தியேகமா கல்லீரலை குறிவச்சு தாக்குற வைரஸ்களை ஹெப்பட்டைடிஸ்
வைரஸ்கள்னு சொல்றோம். இதில் நான்கு பேர் முக்கியமானவங்க.

ஏ -வும், இ -யும் அசுத்த நீர், உணவு வழியா வர்றவங்க. குடலில் நுழைந்து ஈரலை
அவசரமா அதீதமா பாதிச்சு மஞ்சள் காமாலை, பசி இல்லாமை, சாப்பாடு தாளிக்கும்
வாசம் வந்தால் கூட குமட்டல், இப்படி தம்மை தைரியமா வெளிப்படுத்திக்கக் கூடியவங்க.

நோய்க்குறீடுகள் ஒரு கிருமியால் அதிகம் வெளிப்பட்டாலே, நம் உடலின் எதிர்ப்புச் சக்தி
(இம்மியூனிட்டி - Immunity), அந்தக் கிருமியோடு ஜரூரா சண்டை போட ஆரம்பிச்சான்னு
அர்த்தம். சண்டைன்னு வந்தாலே வெற்றி -தோல்வியில்தான் முடியும் இல்லீங்களா?

இந்த வைரஸ் ஏவும் இயும் பொதுவா சில வாரங்களில் முழுதுமாய் நம் போர்வீரர்களால்
வெல்லப்படும்.கொல்லப்படும். 99.9 சதம் ஜெயம் நம்ம பக்கந்தான்.

லேசான காய்ச்சல், வாந்திபேதி, உடல்வலிக்குப்பிறகு நம்மை தாக்கும் மஞ்சள் காமாலைகளில்
அருதிப்பெரும்பான்மையும் இந்த வகைதான்.

தானாகவே நாம் இதை சரிப்படுத்தி விடுவோம். இந்த வகை காமாலைகள்தான்
என்னோட "நாட்டு மருந்தால்" குணமாச்சுன்னு பல பேர் பொழைக்க வைக்கும் வள்ளல்.

ஏ -வும், இ -யும் அபூர்வமா சாவில் கொண்டு விடலாம். கர்ப்பிணிகள், வேறு காரணங்களால்
நம் நோய் எதிர்ப்பு குறைந்திருப்பது ( Immune Deficiency) இப்படி...
சாதாரணமா நல்ல உடல் நிலையில் உள்ளவருக்கு - பொதுவாய் ஸ்கூல் பிள்ளைகளுக்குத்தான் -
ஐஸ்கிரீம், கழுவாத நாவல் பழம்...போல இன்ட்ட்ரவல் சந்தோசங்களால் - இது அதிகம் வரும்.

இந்த வைரஸ்கள் முற்றிலுமாக விரட்டப்படும் நம்மால், மீண்டும் தாக்காது.
ஈரலுக்கு நீண்ட நாள் பாதிப்பு எதுவும் இருக்காது....

அடுத்த குரூப் B மற்றும் C...

இவை ரத்தம், விந்து , கர்ப்பம் மூலம் சிசுவுக்கு பரவுவதால்...
குருதிப்புனல் வழி - Serum (பரவும்) ஹெப்பட்டைடிஸ் என்று கூட்டாக
அழைக்கப்பட்டன முன்பு..

இப்போது இரண்டு நீண்ட நாள் ( CHRONIC) வில்லங்களையும்
தனித்தனியே நாம் அடையாளம் கண்டு கொண்டதால்
உரிய மரியாதை கொடுத்து சி. என்றும் பி என்றும் அழைக்கிறோம்.

இதில் வந்தவுடன் ஆர்ப்பாட்ட காமாலை தந்து 95 சதம் தோல்வியுற்று
வெளியேறிவிடும் பி வைரஸ் பற்றி தமிழ்மன்றம் . காமில்
லாவண்யா அவர்கள் எழுதியுள்ள அழகான கட்டுரை தமிழில் இருக்கு..

இதான் URL..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3371
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3370

வீட்டுக்குப்போய் படிச்சுக்குங்க.. சரியா..

இப்ப உங்களை பாதிச்ச சி வைரஸ் பத்தி விளக்கமா சொல்றேன்..
கவனமா கேளுங்க.. இடையிடையில் எந்த சந்தேகம் வந்தாலும்
தயங்காம கேளுங்க..

சின்ன தம்பி... ரெண்டு லெமன் ஜூஸ் கொண்டுவரீங்களா.. ப்ளீஸ்..
(கிளினிக் பாய் சி.த. ஜூஸ் கொண்டு வருகிறார், ..)

சி.த: வேற பேசண்ட் யாரும் வெய்ட்டிங்கில் இல்ல சார்.. பொறுமையா
பாருங்க இவரை...

டா: சின்ன தம்பி.. நீங்க உடனே முனைக்கடைக்கிப்போயி..

சி.த: கோல்ட்பிளேக் கிங்ஸ் ஒரு பாக்கிட்டும், பெரியவர் சிறியவர் அனைவரும்
விரும்பும் நிஜாம் பாக்கும் வாங்கியாரவா சார்?

டா: ஹாஹ்ஹா.. நல்ல காமெடியான ஆளு நம்ம சின்னதம்பி...
முனைக்கடைக்குப்போயி இன்னிக்கு ஜூ.வி. வந்திருக்கும் வாங்கியாங்க..

சி.த: ஆமாம் சார், இந்த ஒரு பேசண்ட்டும் போயிட்டா அப்புறம்
டைம் பாஸ் பண்ணனுமில்ல...

(சி த. ஒருவழியாய் கடைக்குப் போக, ஆலோசனை உரையாடல்
தொடர்கிறது...)

lavanya
12-03-2004, 11:49 PM
அருமை இளசு அவர்களே....தரமான முக்கியமான பதிவு ..அதை
சுவையாக தொடங்கி இருக்கும் பாங்குக்கும் வந்தனங்கள்.....

மேலும் தொடருங்கள்...தனித்தன்மை பதிவில் உங்களுக்கு நிகர்
நீங்கள்தான்....

சி.த (கவலையாக): "என்ன அண்ணன்..இந்த மாசம் ஒரே பதிவா
போட்டு தாக்க ஆரம்பிச்சிட்டாரே...போட்டிக்கு இறங்கிட்டாரா...
என்ன..?

பாரதி
13-03-2004, 12:31 AM
ரொம்ப ...ரொம்ப... அவசியமான உரையாடல் அண்ணா... நல்லா இருக்கு.

karikaalan
14-03-2004, 12:45 PM
இளவல்ஜி

நல்லாவே வகுப்பு எடுக்கிறீங்க. தொடருங்கள்.

===கரிகாலன்

பி.கு.: சிகரெட்டும், அநாவசியமான பாக்கும் வேண்டாமே, தயவுசெய்து.

thiruarul
06-04-2004, 03:20 PM
மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்கட்கு,

தங்கள் கிரீடத்தில் இன்னொரு வைரம் இது. இங்கே எமது தமிழ் மாணவர்களுக்கு தங்களது மருத்துவம் சார்ந்த பதிவுகளை அடியேன் அச்சுநகல் (Print) எடுத்துப் படிப்பதற்குக் கொடுத்துவரும் இரகசியத்தை இன்று தங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

உரையாடலைத் தொடருங்கள்.

குறிப்பு : எனது கருத்தினை இந்த உரையாடலைத் தாங்கள் முடித்தபின் பதிவோம் என்றிருந்தேன். ஆனால் தாங்கள் தற்போது வேலைப்பளுவால் அவதியுறுவதால் இதனைப் பதிந்தேன்.

அன்புடன் திருவருள்.

இளசு
07-04-2004, 12:05 AM
தமிழகம், அமீரகம், தில்லி, ரஷ்யா என உலகெங்கிலும் பாராட்டுப்பெற்ற...

சித: அடுத்த தொடர்ச்சியைக் காணும்...ஆனா கோபால் பல்பொடி விளம்பரம் போல கெளம்பறதைப் பாரேன்....

poo
12-04-2004, 08:05 AM
நல்ல நடை...

வெற்றிநடைபோட வாழ்த்துக்கள்!!

உங்க பாணியே தனிங்கண்ணா.... (டி.ஆர். ஞாபகம் வருது!!!)

மன்மதன்
12-04-2004, 09:47 AM
என்ன அண்ணா . சீக்கிரம் தொடருங்க..

இளசு
26-04-2004, 08:59 PM
பலமான வரவேற்பே பயத்தை வரவைத்துவிட்டது...

கடைசி செய்தி:
சிகரெட், பாக்கு வாங்கச் சென்ற சிதவுக்கு "செவுட்டுல அறை"
அளித்தவர் அண்ணல்...

திருந்திய சித திரும்பியவுடன் தொடரும் இந்த உரையாடல்...

இளசு
28-05-2004, 10:21 PM
சின்னத்தம்பியின் இடையூறு இல்லாமல்...
டாக்டர் அருள் தொடர்கிறார்...

சேகர் சார்பாய் நீங்கள் கேள்விகளைக்கேளுங்கள்..
சரீங்களா நண்பர்களே..


மூலக்கூறு குளோனிங் முறையில் இந்த ஹைப்படைட்டிஸ் -சி வைரஸ் கண்டறியப்பட்டது
1989 -ல்தான். (டாக்டர் Choo அவர்கள்.)

இன்னைக்கு உலகத்தில் உங்களைப்போல இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவங்க
கிடைச்ச ஆராய்ச்சிகளின்படி கிட்டத்தட்ட 20 கோடி பேர்.
(உலக மக்கள் தொகையில் 3 சதம்).
(நிஜத்தில் இதைவிட அதிகம் இருக்கும்..)

குற்றவாளிகளை அடையாளம் காட்ட கணினி மூலமா உத்தேசப் படம் வரைந்து அதை வச்சு
தேடற அதே நிலைதான் இந்த வைரஸூக்கான தேடலும்..

இந்த வைரஸ் சுரக்கும் புரதங்களை வச்சு, இதன் RNA இவையாத்தான் இருக்கும்னு தீர்மானிச்சு
இந்த வடிவில் இருக்கலாம்னு அனுமானுச்சு வச்சிருக்கோம்.

ஆனா இந்த வில்லனை இன்னும் முழுசா பார்க்குற அளவுக்கு இன்னும் அதன் வடிவம் பிடிகுடுக்கல..

தெரிஞ்சவரிக்கும் இதன் RNA கட்டமைப்பு 3000 அமினோஅமிலங்கள் உள்ளதா இருக்கு.
இதை ஒரு நீண்ட வார்த்தைக்கு ஒப்பிடலாம்.

இந்த வைரஸை (வார்த்தையை) பிரதி எடுக்கும்போது நூற்றுக்கு 99.9 சதம் சரியான பிரதி வரும்.

உதாரணமா = ராஜகோபாலாச்சாரியார் = ராஜகோபாலாச்சாரியார்.
0.1 சதம் ஏதோ பிழையுடன் பிரதி ஆக்கப்படும். = ரோஜகோபாலாச்சாரியார்.
ரோஜகோபாலாச்சாரியார் அதே போல் பிழையாகவே பற்பல பிரதிகள் ஆக, எதோ ஒரு பிரதி
ரோஜகேபாலாச்சாரியார் என இன்னொரு பிழை கூடிய பிரதியாக....


பல காலம் சென்று இப்பிரதிகளைக் கண்டால்..
ராஜகோபாலாச்சாரியார் - 91 சதம்
ரோஜகோபாலாச்சாரியார் - 5 சதம்
ரோஜகேபாலாச்சாரியார் - 2 சதம்
ரோஜகேபலாச்ச்சாரியார் - 1.3 சதம்
ரோஜகேபலாச்சாரியர் - 0.3 சதம்
..... இப்படி ஒரு கலவையாய் இருக்கும்...( Quasispecies..)


ஒரு மருந்து "ராஜகோபாலாச்சாரியார்" என்ற பிரதிகளை மட்டும் அழிக்கும் சக்தி உள்ளது என்றால்...
மற்ற பிழைப்பிரதிகள் தப்பிப் பிழைப்பது மட்டுமல்லாமல், மருந்துக்குக் கட்டுப்படாத இப்பிழை வைரஸ்கள்
மட்டுமே கட்டுப்பாடு இல்லாமல் பல்கிப்பெருகும்...

கொடுத்த மருந்து முதலில் வெல்வது போல் தோன்றினாலும்...
விரைவில் இந்த Mutant வைரஸ்களே வென்று ஓங்கி நிற்கும்...

ஹெப்படைட்டிஸ் - சியின் சிகிச்சைக்கு சவாலே - இந்த மாறி மாறி அவதாரம் எடுக்கும்
வைரசின் அதீத சர்வைவல் குணம்தான்...

இந்த மாறும் குணத்தாலேயே தக்கனூண்டு இருக்கிற இந்த வைரஸ¥க்குள்
(மொத்த விட்டமே அதிகபட்சம் 60 நானோமீட்டர்தான்.. அகத்திய வைரஸ்..)
6 கோத்திரப் பிரிவுகள் (Genotypes) இருக்கு.

1 முதல் 6 வரை..அமெரிக்கா, ஐரோப்பாவில் 1 பிரதானம்.. ஆப்பிரிக்காவில் 4 பிரதானம்.

இந்தியாவில் 3 ... கொஞ்சமாய் 1ம் 2 ம்..
கோத்திரத்தை வச்சு வைரஸின் ரிஷிமூலம் அறியலாம்.
1960 களில் ஹீர¡யின் ஊசிகள் வழியா ஆசியாவில் இருந்துபோன
3ம் கோத்திர வைரஸ்கள் இன்னும்
மேல்நாடுகளில் இரண்டாம் இடத்தைப் பிடிச்சு சுத்திகிட்டிருக்கு...

Schistosomiasis என்னும் ஒருவகை ஒட்டுண்ணிப் புழுக்களைக் கொல்ல பலமுறை
ஊசி போடும் பழக்கம் இருந்த எகிப்தில் நூத்துக்கு 18 பேருக்கு இந்த வைரஸ் இருக்கு.
டிஸ்போஸபிள் ஊசி இல்லாக் காலங்களில் ஸ்டீல் பாத்திரத்தில் கொதிக்கவச்சா
(ஸ்டெரிலைசர்) போதும் என்ற அந்தக்கால ஞான அளவில்
"தான் செய்வது இன்னதென்று அறியாமல்" மருத்துவர்கள் செய்த
"அப்"பாவச் செயலின் பலன் இது..

எந்த வைரஸ¥ம் அதிகம் புழங்கும் பாவப்பட்ட ஆப்பிரிக்காவுக்கு அடுத்த இடம்..
நூத்துக்கு 12 பேர்.

பொதுவாய் நம் இந்தியதேசத்தில் இருந்து உறுதியான அறிவியல் முறையில்
இந்த நோய் இந்த அளவு (Epidemiology) என்று சொல்வது மிகவும் கம்மி.
பொருள் வேண்டும் - இவ்வாராய்ச்சிகள் செய்ய...
அவசர சிகிச்சை அளிக்கவே அடிதடி பட்ஜெட்..
அளந்து, வருமுன் காக்க முனைந்து செலவு செய்ய.. இன்னும் வளர்ந்த நாடாகவேண்டும்..
கலாம் கனவுகள் "மனோ"ரதம் ஏறுமா? -சிதம்பர ரகசியம்?

kavitha
29-05-2004, 08:47 AM
மஞ்சள் காமாலை பற்றிய விரிவான தகவலுக்கு நன்றி!

சேகர் மாதிரியே லாவின் கட்டுரைகளையும் படிக்க ஆரம்பிச்சாச்சு!

முன்பு வலியினால் ஊசி போட்டுக்கொள்ள மறுத்ததுண்டு!
இப்போது பல காரணங்கள்...
எத்தனை டாக்டர்கள் வந்தாலும் சுகாதாரமான சுற்றுப்புறம் இல்லாதவரை நோய் ஒழிப்பு குதிரைக்கொம்பு தான்.

சி.த: நான் கூட சேகருக்கு கூல்டிரிங்க்ஸ் வாங்கியாரத்தான் கூப்பிடீங்களாக்கும்னு நினைச்சேன்! நீங்க பேசினதுல,சேகருக்கு தொண்டை வற்றிப்போச்சாம்..

பெ.த: அதுக்குதான் சேர்த்து பீஸ் வாங்கிடுவோம்ல!

gans5001
02-06-2004, 02:03 AM
இதை விட எளிமையாய் தமிழில் கூற முடியாது என்பது உண்மை. முன்பு சுஜாதாவின் எளிய அறிவியற்கட்டுரைகளை கண்டு பிரமித்து போயிருக்கிறேன். அந்த தாக்கத்தை நீங்களும் ஏற்படுத்த தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

இளசு
03-06-2004, 11:08 PM
சேகர்:
சரீங்க டாக்டர், அப்படி யாரோ ஒரு டாக்டர் டிஸ்போஸபிள் காலத்துக்கு முந்திய
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஊசி போட்டதாலாயே எனக்கு ஹெப்படைட்டிஸ் சி வந்ததாய் இருக்கட்டும்.
ஆனால் காய்ச்சல் -காமாலைன்னு எனக்கு அது வந்ததுக்கான அறிகுறியே வரலியே.. ஏன்?

மரு. அருள்:
அது.... இந்த வைரஸ் உடம்பில் புகுந்து சுமார் ஏழு வாரத்துக்குப் பிறகு காய்ச்சல், பசியின்மை,
மஞ்சள்காமாலை வருவது உண்டுதான், ஆனால் நூறு பேருக்கு வைரஸ் வந்தால்
10 அல்லது 15 பேருக்குத்தான் இந்த உடனடி வெளிப்பாடுகள் ( Acute Manifestations)
தெரியும். அதுவும் எந்த சிகிச்சையும் இல்லாம ரெண்டு வாரத்தில் தன்னால குணமாயிடும்.
அதுக்குன்னு ஸ்பெஷலா ரத்தப் பரிசோதனை பண்ணிப் பாத்தாலே ஒழிய, ஏ, இ - வைரஸ் போலவே
வந்துட்டு காமாலை ( Jaundice) "மறைஞ்சிடும்".
ஏவும் இயும் போயிடும். ஆனா இது நம்மோடவே ரகசிய உறவினனா தங்கிடும்.

சேகர் : சுத்தமில்லாத மருத்துவ உபகரணங்கள் -ஊசி இதைத்தவிர வேற எப்படி
இது வரக்கூடும் டாக்டர்?

அருள் : அப்படிக்கேளுங்க...
பல வழிகள் இருக்கு... பாவம் செய்யும் வைரஸ் வர பலவழி..
முதல் காரணம் - பலர் சேர்ந்து ஒரே ஊசியால் போதை மருந்து ஏத்திக்கிறது.

(போதை ஏறிப்போச்சுன்னு பாட்டு எழுதறதுக்குப் பதிலா வைரஸ் ஏறிப்போச்சேன்னு
வைரமுத்துவை விட்டு எழுத வைக்கணும்..)

மற்றவை -

1) பரிசோதிக்கப்படாத ரத்தம் ஏற்றிக்கொள்ளுதல்
2) குருதி உறைய (Clotting factors), நோய் எதிர்ப்பு கூட்ட புரதங்கள்(Immunoglobulis)
மருந்தாய் ஏற்றிக்கொள்ளுதல்
3) மதச்சடங்குகளில் சுத்தமில்லாத உபகரணங்கள் (காது குத்தல், சுன்னத்)
4) தாய் வழிச் சேய்க்கு
5) உடல் உறவு ( ஹெப்பட்டைட்டிஸ் பி -யை விட இது கம்மி)
6) பச்சைக் குத்துதல்
7) பல் விளக்கும் பிரஷ், சவர பிளேடுகள் பகிர்வது...
(ஷேவ் -- டோன்ட் ஷேர்)

சேகர் : வைரஸ் வந்த எல்லாருக்கும் நிச்சயம் பாதிப்புதானா?

அருள்:
ஆறு மாதங்களுக்கு மேல் நீண்டநாள் தங்கும் ஹெப்பட்டைடிஸ் -சி
மூன்றில் ஒருவரை ஒன்றும் செய்யாமல் தேமேன்னு சும்மா இருக்கும்.
80 -90 வயசில் ஹார்ட் அட்டாக்கில் மரணம் வருமே ஒழிய
இந்த வைரஸால் எந்த பாதிப்பும் இருக்காது.
இந்த வைரஸ் இருப்பதற்கான அந்த சோதனை தவிர வேறு எந்த உடல், இரத்த
சோதனையும் நார்மலாவே இருக்கும்.
இரண்டாமவருக்கு இது லேசாய் ஈரல் அழற்சி இரத்த சோதனையில் தெரியும்..
(Liver Functin Tests), ஈரலை தசைச்சோதனை செய்து பார்த்தாலும் தெரியும்.
(Liver Biopsy). ஆனாலும் இவர்களுக்கு நோய் முற்றி பாதிப்பு ஏற்படுத்த
அதிகமதிகம் ஆண்டுகள் ஆகும் .. 40 -50 ஆண்டுகள் ஆகலாம்.
எனவே மொத்த வாழ்நாள் கணக்கில் வைரஸ் கைவைப்பதில்லை.

மூன்றாமவருக்கு - 20 -30 வருஷம் எடுத்து மெல்ல ஈரலை பாதித்து, கெடுத்து
(சிர்ரோஸிஸ்) , உடல் நலம் கெடுக்கும். மிகுந்த பாதிப்பு கொடுக்கும். சிலருக்கு
இது ஈரல் புற்றாக மாறி இன்னும் ஆபத்து தரும்.

சேகர் ; வருவது ஒரு வகை வைரஸ்.. ஏன் இந்த 3 வகை ரிசல்ட் டாக்டர்?

அருள் : ஏற்கனவே சொன்னது போல் வீரிய கோத்திர வைரஸா,
எவ்வளவு வைரஸ் உள்ளே வந்தது,
ஆணாயிருந்தால் அதிக பாதிப்பு,
கூடவே தண்ணி பழக்கம் இருந்தாலும் தப்பு,
பிழையான வைரஸ் அதிகம் உருவாகி இருக்கா,
பொதுவாய் நபரின் ஜெனரல் ஹெல்த்...
இப்படி பல காரணங்கள் இதைத் தீர்மானிக்குது சேகர்.

சேகர் : நான் எந்த குரூப்பில் வருவேன் டாக்டர்..?

அருள் : உங்களுக்கு ஊசிகள் போடப்பட்ட காலம் 10 வருஷம் முன்னாடின்னு
வச்சிக்குவோம். இப்போ Liver Function test, Liver Ultrasound scan, தேவைப்பட்டா
லிவர் பயாப்ஸி எல்லாம் செய்து பார்த்து, நார்மல் அல்லது மிக லேசா பாதிப்புன்னா
முதல் அல்லது இரண்டாம் குரூப்பில் வருவீங்க... என் அனுமானம் அதான்.
உங்க வாழ்நாள் கணக்குக்கு இதால் எந்த பாதிப்பும் வர வாய்ப்பு கம்மி சேகர்.

சேகர்: ஆனா வாழ்க்கையை பாதிச்சிடுத்தே டாக்டர்..
வேலை வாய்ப்பு, வெளிநாடு போறது, கல்யாணம் -குழந்தை..
நண்பர்கள் கிட்ட கூட சொல்லாம மறைக்கும் Guilt..
தப்பித்தவறி ரூமில் தங்கும் நண்பன் பிளேடு பயன்படுத்தக்கூடாதுன்னு பதைப்பு...

அருள் :
நீங்க சொல்றது நிஜம்..நானும் உணர்றேன் உங்க வேதனையை..
Mild disease - does not affect quantity, but spoils QUALITY of life..
இப்பக்கி வெக்சீன் இல்லை, அது வந்தா துணைவிக்கு செலுத்தி
நோய் எதிர்ப்பை உறுதிப்படுத்தி பின் குழந்தை பெத்துக்கும் காலம் வரும்.

அதுவரைக்கும் இப்ப இருக்கும் வாய்ப்பு - கூட்டு சிகிச்சை மூலம்
இந்த வைரஸை விரட்டி அடிக்க முயல்வதுதான்..
இப்பக்கி வெற்றி வாய்ப்பு 30 -50 சதம்தான்.
ஆராய்ச்சிகள் அதிவேகத்தில்... இன்னும் நல்ல ரிசல்ட் தரும் மருந்துகள்
விரைவில் வரும்.. விலைகள் குறைந்தால் இன்னும் நல்லது.

இப்போ Liver Function test, Liver Ultrasound scan, தேவைப்பட்டா
லிவர் பயாப்ஸி எல்லாம் செய்து பார்த்து,
சிகிச்சை தொடங்கலாம்..
நம்பிக்கையோட இருங்க...

--------------------------------------------------------------


இதை விட எளிமையாய் தமிழில் கூற முடியாது என்பது உண்மை. முன்பு சுஜாதாவின் எளிய அறிவியற்கட்டுரைகளை கண்டு பிரமித்து போயிருக்கிறேன். அந்த தாக்கத்தை நீங்களும் ஏற்படுத்த தொடங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்

அன்பு நண்பா, கவீ..

நன்றிகள்...

கொத்திக் கொத்திப் புழுவையும் குளவியாக்கும் வித்தையுள்ள
நண்பர்கள் பலருண்டு இங்கெனக்கு,,,

அத்தனை உளிகளுக்கும் இந்தப் பாறை நன்றி சொல்லி
இக்கட்டுரையை முடிக்கிறது...

விளக்கங்கள் வேண்டுமெனில் கேளுங்கள் தோழர்களே..
விளங்கியவரை விளக்குவேன்..

பாரதி
04-06-2004, 05:35 PM
அண்ணா... நல்ல பதிவுக்கு நன்றிகள்.

ஆனாலும் ஒரு சந்தேகம். பதிவுகள் எல்லாவற்றையும் உடனே முடிக்க வேண்டும் என்பது போல ஒரு வேகம் உங்கள் பதிவுகளில் தெரிகிறதே... ஏன்?

இளசு
05-06-2004, 10:44 PM
நன்றி பாரதி..

உண்மைதான்..

நிறைய இழுத்து அறுப்பதாய்.. "நிறுத்து" என எனக்குள்ளே ஒரு குரல்..

அறிஞர்
08-06-2004, 09:45 AM
உபயோகமான தகவல்கள்... நன்றி.. நண்பரே...

thiruarul
26-06-2004, 05:18 PM
மதிப்பிற்குரிய இளங்கரிகாலன் அவர்கட்கு,

மருத்துவராக இருப்பதோ அல்லது நோயைக் கண்டறிவதோ முக்கியமல்ல.

ஒரு சிறந்த மருத்துவன் நோயாளியின் துணையாக நம்பிக்கையூட்டி நோயுடன் போராட மனவலுச் சேர்ப்பான்.

ஆதரவான நம்பிக்கைதரும் வாசகங்களுடன் கலந்துரையாடலை முடித்திருப்பது தாங்கள் அவ்வாறான ஒரு வைத்திய திலகம் என்பதை எடுத்தியம்புகிறது.

என்றும் அன்புடன்
திருவருள்

இளசு
27-06-2004, 01:33 PM
அன்பு நண்பர் அறிஞருக்கு நன்றி..

அன்பின் திருவருள் அவர்களின் பாராட்டு எனக்கு மகிழ்ச்சியையும் கூச்சத்தையும் சரிபாதியாய் அளிக்கிறது... நன்றி..

karikaalan
27-06-2004, 01:55 PM
இப்போதான் தெரியுது, வருஷாவருஷம் Liver Function Test ஏன் பண்றாங்கன்னு -- Annual Medical Check up --.

நன்றிகள் இளவல்ஜி.

===கரிகாலன்

அன்புரசிகன்
02-05-2008, 01:22 PM
இளசு அண்ணாவின் எளிய உரை நடை பிரயோகத்தினால் மருத்துவ விளக்கங்கள் பாரதி அண்ணாவின் உதவியால் மீண்டும் பவனி வருகிறது.... நன்றிகள்.

அனுராகவன்
02-05-2008, 01:25 PM
ம்ம் அருமையான பகுதி..
தொடர்ந்து எழுதுங்கள்!!
நாங்கள் தொடர்ந்து வருகிறோம்!!

சாம்பவி
03-05-2008, 06:58 AM
இதான் URL..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3371
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=3370

வீட்டுக்குப்போய் படிச்சுக்குங்க.. சரியா..


படிக்க*
பர்மிஷன்
கிடைக்குமோ..... :(

அமரன்
03-05-2008, 09:58 AM
படிக்க*
பர்மிஷன்
கிடைக்குமோ..... :(

சுட்டிகள் திருத்தப்பட்டுள்ளது. (உங்கள் பதிவிலும்..)
படித்துப் பயன் பெற வசதி செயப்பட்டுள்ளது.
அனைத்தும் பாரதி அண்ணாவின் உழைப்பு.
நன்றி அண்ணா.

poornima
03-05-2008, 10:08 AM
பயனுள்ள பதிவு... போரடிக்காமல் சுவாரஸ்யமாக கொண்டு சென்ற விதம்
நீங்கள் ஒரு இலக்கிய பரிச்சயமுள்ள மருத்துவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.பாராட்டுக்கள்.

இளசு
23-07-2008, 11:45 PM
அண்ணலுக்கும், தம்பி ஓவியன்,அனு,பூர்ணிமாவுக்கும் நன்றி..

இக்கட்டுரை எழுதத் துண்டியது - லாவண்யாவின் ஹெபட்டைட்டிஸ் -B கட்டுரையே!

ஒருங்குறியாக்கிய தம்பி பாரதிக்கும், சுட்டிகள் இணைத்த தம்பி அமரனுக்கும் என் நன்றிகள்..

சாம்பவி, சுட்டியைச் சுட்டி வாசித்தீர்களா?

lenram80
02-08-2008, 01:34 PM
வாவ்..... என்ன அருமையான கட்டுரை. நோய் தீர கோயில் குளம் என்று, கோவிலுக்கு போகும் வழியில் கிடைத்ததை எல்லாம் சாப்பிடும், மொட்டை போடும், காது குத்தும் நம்மவர்களுக்கு விழிப்புணர்வு வேண்டும். அதை கொண்டு வரும் 'நிரந்தர இளசு'க்கு நன்றி.