PDA

View Full Version : கைகள்....இளசு
10-03-2004, 06:18 PM
மடங்கி விட்ட கைகள்..

அத்தனை பேரையும்
அணைத்து வளர்த்த கைகள்
ஆறுதல் தந்து, ஆதுரம் தந்து
அமைதி அளித்திட்ட கைகள்
இல்லாதவன் வீடுதான்..
இருந்தாலும்
எப்படியோ உண்ண, உடுத்த , வளர்க்க
ஏற்பாடு செய்திட்ட
மந்திரமான கைகள்..


ஓய்ந்துவிட்ட கைகள்...

பஞ்ச காலங்களில்
பைசாவுக்கு நாலு முந்திரி உடைத்து
கருத்துப் போன கைகள்
ஆற்றோர எருமுட்டை
காட்டில் காய்ஞ்ச சுள்ளி
பொறுக்கி காய்த்த கைகள்
கரும்புச்சோலை அடுப்பின்
சுவாலை தீய்த்த கைகள்

சாய்ந்துவிட்ட கைகள்...

கதிர் அறுவா பட்டு
காயம்பட்ட கைகள்
களை பறிப்பு, நாற்று நடவில்
சேற்றுப்புண் பட்ட கைகள்
அறுவடை போது
கூர் சுனை குத்திய கைகள்
தை பிறப்பு நாளில்
பொங்கல் ஊட்டிய கைகள்

காய்ந்துவிட்ட கைகள்...

மத்தியான பசி ஆட்களுக்கு
மொத்தை சோறு இட்ட கைகள்
கூடத்து கோழிக்கு
குருணை அள்ளி விசிறிய கைகள்
ஆயி கழுவிவிட்ட கைகள்
ஆனை கட்டி ஆட்டிய கைகள்

இன்று

மடங்கி விட்ட கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
சாய்ந்துவிட்ட கைகள்...
ஓய்ந்துவிட்ட கைகள்...
சலனமற்ற கைகள்.....

என் வெப்பக்கண்ணீரை வாங்கி
தலை புதைத்த என் மீது
ஆசிப் பன்னீராய்
வார்க்கும் கைகள்...

Mano.G.
10-03-2004, 11:03 PM
நன்றி நண்பரே
பெற்றோரை வளர்த்தோரை நினைத்து பார்த்து
நம்மை வளர்க்க அவர்கள் பட்ட
கஷ்டங்களை மனக்கண் முன் வைத்த
கவிதை


வாழ்த்துக்கள்

மனோ.ஜி

samuthira
11-03-2004, 03:13 AM
பிறக்கும் போது நம்மை
இறுக அணைத்த கைகள்
தொப்புள் கொடி அறுத்ததும்
மறந்திடுவார் பலர்
ஓய்ந்த போதும் மறக்காது
அன்னையின் கைகள்

மனதை நெகிழ செய்யும் - அன்னைக்கு அஞ்சலி
உள்ளம் நிறைந்தது ஆயினும் கனத்தது நண்பர் இளசு அவர்களே

kavitha
11-03-2004, 03:17 AM
அவைகள் கைகள் அல்ல
அட்சய பாத்திரம்.
நெகிழ்ந்தது நெஞ்சம்..
நன்றி ஐயா!

இளசு
13-03-2004, 08:33 PM
சிரத்தையுடன் கைகளால் கருத்தெழுதிய நண்பர்களுக்கு
என் நெஞ்சம் சொல்லும் நன்றி...

karikaalan
14-03-2004, 12:51 PM
அன்னையைப் போற்றுவதில் வஞ்சனை வைக்கவில்லை
முடியவும் முடியாது.

வாழ்த்துக்கள் இளவல்ஜி.

===கரிகாலன்

பாரதி
14-03-2004, 05:51 PM
கைகள் முளைத்ததில் இருந்து கைகால் முடியாமல் போகும் வரை அன்னையின் அன்பு அளவிட முடியாததுதான். நன்றி அண்ணா.

இளசு
14-03-2004, 08:25 PM
நன்றிகள் அண்ணலுக்கும்.. தம்பி பாரதிக்கும்..

மூர்த்தி
15-03-2004, 12:29 AM
கைகளில்தான் எத்தனை விதம்?இன்பம்,துன்பம்,உவகை,ஆறுதல்,சலனம் என நிறையவாறாகப் படைத்தீர்கள்.மிகவும் நன்றி.
அதுசரி பாஜகவினர் சண்டைக்கு வரமாட்டார்களே?

இளசு
15-03-2004, 10:01 PM
நன்றி நண்பரே..

ஆமாம்.. உங்க பேர் வெறும் மூர்த்தியா..கிருஷ்ணமூர்த்தியா?

நல்ல நாள் உங்களுக்கும் ஞாயிற்றுக்கிழமையா???? :D

மூர்த்தி
16-03-2004, 12:28 AM
ஏன் என்ன ஆயிற்று இளசு அண்ணா?

நான் வெறும் மூர்த்திதான்.தேர்தல் கமிசனர் ஏதும் பிரச்சனை செய்தாரா?எனக்கு எல்லா நாளும் நல்ல நாளே...தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகள் பிடிக்கும்.

இளசு
25-04-2004, 10:41 AM
அண்மையில் பாராளுமன்ற வேட்பாளர் (வக்கீல்) ஒருவரின் அன்னை
நாச்சம்மா அவர்களின் பேட்டி குமுதம் இதழில்...

அவரும், கணவரும் படிப்பறிவில்லாத ஏழைகள்.. கூலிகள்..
உள்ளூரிலும், பிழைக்கப்போன அண்ணன் ஊரிலும்
பிள்ளைகளை ஆடுமேய்க்க கட்டாயப்படுத்தும் "ஆண்டைகள்"

ஆண்டை வீட்டம்மா : என்ன வக்கீல், இஞ்சின்னியராவா ஆக்கப்போறே இவனுங்களை?

நாச்சம்மா : ஆக்கிக்காட்டறேம்மா

காலை நாலு முதல் எட்டுவரை பலர் வீட்டு வேலை..
பின் வயலில் மாலை வரைக் கூலிவேலை..
வீடுகளில் கிடைக்கும் மீந்த உணவு பிள்ளைகள் வயிற்றுக்கு
... சமையல் செலவை மிச்சப்படுத்தி.. சிலேட்டு -புத்தகம்..

தமக்கென்று நல்ல துணி, வாய்ருசி, மூச்....
வெளியூரில் கூலி அதிகமா..கணவனை அங்கே விரட்டி....

இதோ இன்று ஒரு மகன் வக்கீல், அடுத்த மகன் இஞ்சினீயர்...


அந்தத் தாயின் வைரம் பாய்ந்த நெஞ்சுக்கும் , காய்ப்பு காய்த்த கைகளுக்கும்
இந்தக் கவிதை அர்ப்பணம்...

நாச்சம்மாக்கள் இருக்கும்வரை
மண்ணில் மனிதம் இருக்கும்...
மனிதம் இருக்கும் இடத்தை
தெய்வம் காக்கும்..

Nanban
25-04-2004, 07:36 PM
அருமையான கவிதை....

ஏதோ ஒரு தாய்க்கு அர்ப்பணம் என்றாலும், எல்லோருடைய தாய்க்கும் பொருந்துவதாக கவிதை இருந்தது அருமை...

பாராட்டுகள்...

சேரன்கயல்
26-04-2004, 04:37 AM
அன்னையின் அளவில்லா அன்பையும், தன்னலமற்ற உள்ளத்தையும் அற்புதமாய் இங்கே செதுக்கிய இனிய இளசுவுக்கு பாராட்டுக்களை காட்டிலும் நன்றியே பொருத்தமானது...
தாயே கண்கள் காணும் தெய்வம்...

இக்பால்
26-04-2004, 05:50 AM
இன்றுதான் என் கண்களுக்குப் பட்டது. நான் மன்றத்துக்கு வராத நாளில்
வந்து விட்ட பதிவா? அருமையான முறையில், நெஞ்சையள்ளும் விதத்தில்
இருக்கிறது. பாராட்டுகள். :)

kavitha
28-04-2004, 11:49 AM
நாச்சம்மாவை நாங்களும் தெரிந்து கொண்டோம்!
அந்த தியாகிக்கு கண்ணியமான ஒரு சல்யூட்!
நன்றி அண்ணா!

சாகரன்
28-04-2004, 02:00 PM
நாச்சம்மாக்கள்.. உடல் சிலிர்க்கிறது படிக்கும் போது...

- சாகரன்.

gans5001
11-05-2004, 03:33 PM
இல்லாதவன் வீடுதான்..
இருந்தாலும்
எப்படியோ உண்ண, உடுத்த , வளர்க்க
ஏற்பாடு செய்திட்ட
மந்திரமான கைகள்..

கால ஓட்டத்தின் மறந்து போன கடந்த காலத்தை நினைவிற்குக் கொண்டு வந்துவிட்டீர்கள்..

நன்றாய் நினைவிருக்கிறது.. ரைஸ்மில்லில் போய் மஞ்சள் பையில் பிடித்து வந்த நொய்யரிசியில் அந்த கைகள் வைத்துத் தந்த கஞ்சியும், தொட்டுக்கொள்ள புளியங்காயையும் உப்பையும் சேர்த்து அரைத்திருந்த துவையலும்...

thamarai
11-05-2004, 06:32 PM
என் வெப்பக்கண்ணீரை வாங்கி
தலை புதைத்த என் மீது
ஆசிப் பன்னீராய்
வார்க்கும் கைகள்...

கவிதை அருமை. வாழ்த்துக்கள்.....

தஞ்சை தமிழன்
12-05-2004, 07:06 AM
மனதில் பதிந்த கவிதை

என் மனதை சிலிர்க்க வைத்த கவிதை.

அன்னையின் அன்பிற்குண்டோ எல்லை

இளசிவின் கவிதைக்கு,

என்னிடம் வார்த்தைகள் இல்லை.

mythili
12-05-2004, 07:29 AM
உங்கள் கவிதையை படித்தவுடன்,
"இதயத்தில் இடி, கண்களில் மழை".

கவிதை அருமை.
அன்புடன்,
மைதிலி

விகடன்
04-08-2008, 10:55 AM
கைகள் என்ற தலைப்பில் கலக்கிவிட்ட (கண்களையுந்தான்) கவிதைகள் அண்ணா..

சிவா.ஜி
04-08-2008, 11:42 AM
கைகளின் செய்'கை'கள் ஒவ்வொன்றையும், பட்டியலிட்டுப் பாடிய பண்...படித்ததும் பிறந்தது உவ'கை'. பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பெறுகிறது இளசுவின் கை.

shibly591
06-08-2008, 06:33 AM
மடங்கி விட்ட கைகள்..


பஞ்ச காலங்களில்
பைசாவுக்கு நாலு முந்திரி உடைத்து
கருத்துப் போன கைகள்
ஆற்றோர எருமுட்டை
காட்டில் காய்ஞ்ச சுள்ளி
பொறுக்கி காய்த்த கைகள்
கரும்புச்சோலை அடுப்பின்
சுவாலை தீய்த்த கைகள்

சாய்ந்துவிட்ட கைகள்...

கதிர் அறுவா பட்டு
காயம்பட்ட கைகள்
களை பறிப்பு, நாற்று நடவில்
சேற்றுப்புண் பட்ட கைகள்
அறுவடை போது
கூர் சுனை குத்திய கைகள்
தை பிறப்பு நாளில்
பொங்கல் ஊட்டிய கைகள்

காய்ந்துவிட்ட கைகள்...

மத்தியான பசி ஆட்களுக்கு
மொத்தை சோறு இட்ட கைகள்
கூடத்து கோழிக்கு
குருணை அள்ளி விசிறிய கைகள்
ஆயி கழுவிவிட்ட கைகள்
ஆனை கட்டி ஆட்டிய கைகள்

இன்று

மடங்கி விட்ட கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
சாய்ந்துவிட்ட கைகள்...
ஓய்ந்துவிட்ட கைகள்...
சலனமற்ற கைகள்.....

என் வெப்பக்கண்ணீரை வாங்கி
தலை புதைத்த என் மீது
ஆசிப் பன்னீராய்
வார்க்கும் கைகள்...


இந்தக்கவிதை சிந்திக்கவைக்கிறது...

அழ வைக்கிறது...

இன்னொரு கவிதை எழுத வைக்கிறது...

உங்களை பாராட்ட வைக்கிறது...

வாழ்த்துக்கள்...

மன்மதன்
06-08-2008, 02:41 PM
அனைத்து கைகளிலும்
அமைதியாக தெரிந்தது
நம்பிக்கை..

நமக்கும்..!!

பூமகள்
06-08-2008, 05:01 PM
அண்ணலின் கைகளில்
வடிக்கப்பட்ட
கைகளுக்கான வைர வளையல்
இப்பதிவு..!!

பெரியண்ணாவின் கைகளுக்கு எத்தனை கொடுப்பினை...அவர் விரல் வழியே... கைகள் என்னே அழகாய் காவியம் படைத்திருக்கின்றன...

போற்றுகிறேன் அவரின் விரல்கள் தாங்கும் கைகளை..!! :icon_rollout::icon_b:


மடங்கி விட்ட கைகள்..
ஓய்ந்துவிட்ட கைகள்...
சாய்ந்துவிட்ட கைகள்...
காய்ந்துவிட்ட கைகள்...

இன்று
சலனமற்ற கைகள்.....

கை பிடித்து நடை பழக்கிய காலம் முதல்
கையமர்த்தி சோறு இட்ட காலம் வரை..

நம்மின் மீது உயிரான அந்த
கைகளோடான பிணைப்பைச் சொல்லும்
அற்புதக் கவிதை..

கண்களை ஈரமாக்கி..
நெஞ்சில் பாரமேற்றிய கவிதை..

பாராட்டுகள் பெரியண்ணா..!! :)

shibly591
06-08-2008, 05:48 PM
பூ மகளின் பின்னூட்டம் படு நேர்த்தி

வாழ்த்துக்கள் பூ