PDA

View Full Version : கானல் நீர்!



நிலா
08-03-2004, 09:44 PM
உன்மனதில் நானிருப்பதை
நிரூபிக்க ஆயிரமாயிரம்
ஆதாரங்கள் உண்டு என்னில்
அர்த்தமற்ற காரணங்களால்
அமைதியாய் தலையாட்டி மறுக்கிறாய்

வாழப்போவது நீயும் நானும்
சருகளின் சலசலப்பிற்கு அஞ்சி
எந்தன் காதல்மறைத்து,
உள்ளம் ஒளித்து
உணர்வு கொன்று
உயிரழித்துப் போகிறாய்

உந்தன் ஓரவிழிக்கண்ணீர்
மீண்டும் உணர்த்தியதுன் உள்ளம்
அதுகானல் நீரென...
உளற உன்முன் நானில்லை...!
தூரத்தில் நீ
அவன் மனைவியாக....!

sriram
09-03-2004, 02:39 AM
ஆணின் சார்பில் ஒரு கவிதை. நன்றாக உள்ளது. பாராட்டுகள்
தொடருங்கள் நிலா.

sara
09-03-2004, 03:46 AM
வித்தியாச பார்வையாக முயன்றிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

இளசு
09-03-2004, 08:15 PM
பால் மாறி நிலா படைத்த
தேன் கவிதை..


பாராட்டுகள் நிலா.. அருமை அந்த நச் முடிவு..

நிலா
09-03-2004, 09:55 PM
நன்றி நண்பர்கள் ஸ்ரீராம்,சரா,தலை!

Mano.G.
09-03-2004, 11:03 PM
மிக சோகமாக உள்ளது
அருமை அருமை மேலும் தொடருங்கள்
நிலா
மனோ.ஜி

பாரதி
19-03-2004, 04:41 PM
எண்ணியவை எல்லாம் வாழ்க்கையில் நடந்து விடுகிறதா என்ன?
கவிதைக்கு பதில் எழுத வேண்டும் என்று எண்ணி கணினிக்குள் இறக்கி யோசித்து பாதி எழுதுவதற்குள் நச்சுநிரலின் தொல்லை. விமர்சனம் எழுதுவதும் கூட இப்போதெல்லாம் கானல்நீர் போலதான் ஆகி விடுகிறது. தொடர்ந்து கவிதைகள் படைத்து மன்றத்தில் நிலா கவிதை உலா வர வேண்டும். பாராட்டுக்கள்.

thamarai
19-03-2004, 09:17 PM
கானல் நீர் கவிதை அருமை. வாழ்த்துக்கள்...

நிலா
19-03-2004, 11:17 PM
நன்றி நண்பர்கள் மனோ.ஜி,பாரதி,தோழி தாமரை!

மூர்த்தி
20-03-2004, 12:21 AM
இந்த கவிதை எனக்குப் பிடித்ததால்தான் நான் இதனை நவீனக் கிறுக்கலில் பதித்தேன் தோழியே.மிகவும் நல்ல கவிதை.ஒன்றும் கோபமில்லையே?

நிலா
20-03-2004, 12:43 AM
நல்லா இருக்குன்னு சொன்னதற்கு நன்றி!
கோபமா இல்லவே இல்லை!மூர்த்தி அவர்களே!

kavitha
20-03-2004, 05:53 AM
கவிதை நன்றாக உள்ளது!
தொலைத்த காதலை
தூரத்தில் தேடும்
விழிகளின் வியர்வையோ?

விகடன்
03-05-2008, 01:33 PM
படிக்கும்போதே நெஞ்சை வருத்து கவிதை. அத்தனையும் கனக்க வைக்கும் வரிகள்.

பாராட்டுக்கள் நிலா (என் பாராட்டு உங்களை வந்து சேரூமா? ).