PDA

View Full Version : சில நட்புகள்.....



Nanban
06-03-2004, 05:54 PM
பாலைவனம் என்று
வந்த இடத்தில்
சில மலர்கள்
புன்னகையுடன்....

நேசத்துடன்
இது தான் நட்பு என்று
இலக்கணம் கூறாமல்
இயல்பாய் சில
இலக்கிய நண்பர்கள்....

(ஒவ்வொருவராய்.... இனி....)

Nanban
06-03-2004, 06:01 PM
மிகக் கடினமாக இருக்குமோ வழ்க்கை என்று நினைத்த பொழுதில், சில இனிய நண்பர்கள், தமிழ் மன்றத்தின் மூலம் கிடைத்தனர். தங்களை இனம் காட்டிக் கொள்ளத் தயங்காத தன்மையினால் இன்று சிலரை நேரிலும், சிலரை தொலைபேசி மூலமும் தொடர்பு கொள்ள முடிந்தது.

தொடர்பு கொள்ள விரும்புபவர்களுக்கு, தயங்காமல் நான் என்னுடைய கைத்தொலைபேசி எண்ணைத் தருகிறேன் - தனி மடல் மூலம் தொடர்பு கொள்ளலாம்.... (கைத்தொலை பேசி = மொபைல்... அன்பு நண்பர் இசாக், அசன்பசர் ஆகியவர்களது நட்பால், இந்த வார்த்தைகள் அறிமுகம். வெகு சரளமாக, அவர்கள் தமிழில் உரையாடும் பொழுது, ஆங்கிலம் கலந்த தமிழில் சற்று ச்ங்கோஜத்துடனே உரையாடுகிறேன்.... சீக்கிரம் முழுமையாக தமிழில் பேச ஆரம்பிட்து விடுவேன் - சீக்கிரமாக.... சரளமான இனிய தமிழில் உரையாடும் மற்றோரு நண்பர் பாரதி.... இது போன்று மற்றவர்களும் முயற்சிக்கலாம்....)

அன்புடன்,

இளசு
07-03-2004, 10:31 PM
வருக நண்பர் நண்பன். நலமா?

நல்லதொரு பதிவுத்திட்டம் இது.

தொடருங்கள்... ஆவலுடன் இருக்கிறேன்.

kavitha
08-03-2004, 08:12 AM
உங்கள் மூலம் நாங்களும் தெரிந்து கொள்வோம். தொடருங்கள்!

இக்பால்
08-03-2004, 09:09 AM
உங்களுக்கும் இதே பிரச்னைதானா நண்பர் நண்பனே.

samuthira
09-03-2004, 08:17 AM
திசைகளில் எட்டி இருந்தாலும் ,
இணையத்தில் ஒட்டி தான் இருக்கிறோம்.,
தொடருங்கள் நண்பரே ,
நட்பை பற்றி தெரிந்து கொள்வோம்

Nanban
06-04-2004, 05:56 PM
பொங்கி வழியும்
பாசம் -
முகம் அறியாத
பொழுதில் கூட...

முகம் அறிந்த
அடுத்த விநாடியில்
சகோதரன்...

எளிய தமிழில்
இனிய உரையாடல்
சரளமாக வந்திறங்கையில்
மௌனமாகப் போகிறேன் -
ஆங்கிலம் கலக்காது
பேச இயலாத
பழக்கத்தால்....

தயங்கித் தயங்கி
மாற்றம் பெற
முனைகையிலே
என்னை நானே உணர்கிறேன் -
புது மொழி கற்பவனாய்.....

இன்று என்ன வாசித்தீர்கள்....?
அனுசரணையான விசாரிப்பு -
உணவு உண்டீர்களா
என்ற விசாரிப்பு மாதிரி...

இதைப் படியுங்கள்
என்று எடுத்துக் கொடுத்த
புத்தகங்கள்
இன்றும்
ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது....
மேசையை மட்டுமல்ல -
மனதையும் தான்...

சிந்தனை முழுவதும்
அடுத்து என்ன செய்யலாம்
என்பது தான் -
தனக்கல்ல,
தமிழுக்கு.....

அருமை நண்பர் தான்....

இக்பால்
07-04-2004, 06:38 AM
சரளமாக வார்த்தைகள் வந்து விழும் உங்களுக்கே இந்த நிலை
என்றால் எங்களுக்கெல்லாம் எப்படி?

அருமையான கவிதை. தொடருங்கள் நண்பரே.

kavitha
07-04-2004, 08:59 AM
ஒரு நட்புக்கு ஒரு புத்தகம் என்றால் கூட மனம் முழுதும் நிறைந்து இருக்குமே!
கொடுத்து வைத்தவரைய்யா தாங்கள்!
வாழ்த்துக்களுடன்... மேலும் தொடர வேண்டுகிறேன்.

Nanban
07-04-2004, 06:26 PM
நன்றி இக்பால், கவிதா அவர்களுக்கு....

யார் என்று கேட்கவில்லையே....

kavitha
08-04-2004, 03:27 AM
சொன்னால் தானே தெரியும் நண்பரே! கேட்டு அநாகரிகம் ஆகி விட்டால்?
நீங்களே சொல்வீர்கள் என்றிருந்தோம்

இக்பால்
08-04-2004, 07:40 AM
நான் அசன்பசர் தம்பி, இசாக் தம்பியை நினைத்துக் கொண்டேன்.

அதனால்தான் கேட்கவில்லை நண்பரே.

kavitha
08-04-2004, 09:17 AM
தந்தவர் பெயர் மட்டுமல்ல புத்தகத்தின் மகிமையையும் சொல்லுங்கள்;
விரிந்த மலர்களின் வாசத்தை நாங்களும் முகர்கிறோம்!

Nanban
10-04-2004, 04:32 PM
தந்த புத்தகங்களைப் பற்றி ஏற்கனவே, இலக்கியங்கள், புத்தகங்கள் பகுதியில் எழுதப்பட்டுள்ளது......