PDA

View Full Version : கண்ணதாசன் பதில்கள்



இளசு
29-02-2004, 10:35 PM
கண்ணதாசன் பதில்கள்

(நன்றி - தென்றல்)



**காதல் பெரிதா? கடமை பெரிதா?

எது சுகம் தருகிறதோ அது பெரிது..

---------------------------------------

**வேலை மெனக்கிட்டு வந்தான் - விளக்கம் என்ன?

வேலை மினுக்கிட்டு வந்தான்..
வீரன் வேலுக்கு பாலீஷ் போடுவது எவ்வளவு வெட்டியான செயலோ
அவ்வளவு வெட்டியாய் வந்தவனைச் சொல்வது..
வீரனின் வாள் பகைவரின் மார்புக்காய் காத்திருப்பது..
மினுக்கி அழகுபடுத்த வேண்டிய பொருளல்ல

--------------------------------------------------

**நீங்கள் ஏன் எளிமையாய் எழுதுகிறீர்கள்?

கருத்துக்காகவே மொழி...
அதைச் சொல்லும் முறையில் தெளிவிருக்க வேண்டும்.

-------------------------------------------

**நான் வாழ்க்கையைத் தென்றல் என்கிறேன். என் நண்பரோ சூறாவளி என்கிறார்.
எது உண்மை?

இரண்டுமே தவறு. வாழ்க்கை தென்றலும் அல்ல; சூறாவளியும் அல்ல!
இரண்டும் கலந்த ஒன்று.

------------------------------------------------------

**சாதாரண மனிதன் எப்போது தத்துவஞானியாகிறான்?


தான் கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும்போது, தன்னைக்காட்டிலும்
அதிகமாகக் கஷ்டப்படுபவனுக்கு ஆறுதல் சொல்கையில்..!

____________________________________

<span style='color:#ec0000'>**"பாயிரம்" என்றால் என்ன</span>?

பாயிரம் என்பது நூலில் அடங்கிய பொருளை முன்னே கூறுதல்.
அது பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் என இருவகைப்படும்.
பொதுப்பாயிரம் என்பது - நூலின் வரலாறும், ஆசிரியன் வரலாறும்
ஆசிரியன் பாடம் கூறும் வரலாறும் கூறுவது.
சிறப்புப்பாயிரம் என்பது - நூலாசிரியன் பெயர் மற்றும் நூல் வந்த வழி,
நூல் வழங்கும் எல்லை, நூலின் பெயர் -யாப்பு -பொருள் -நூற்பயன்
முதலியன கூறுவது.

-----------------------------------------------

**வாழத்தகுதியுடையவர்கள் யார்?

சாவதற்கு அஞ்சாதவர்கள்.
___________________________________

<span style='color:#ec0000'>**"சுருங்கில்" என்றால் என்ன பொருள்?</span>

சுருங்கு+ இல் = சுருங்கில்.
சுருங்கிய இல்லம்.. அதாவது சிறிய வீடு.

_________________________________________

<span style='color:#ff0000'>**"வேளிர்" என்பதன் பொருள்?</span>

முடியுரிமை இல்லாத சிற்றரசர்கள்.

-----------------------------------------------


<span style='color:#e30000'>**"இலக்கியம்" என்பது வடசொல்லா?</span>

"இலங்கு + இயம் = இலக்கியம்" ; எனவே தமிழ் என்பார் உண்டு.

இலட்சணம் ( லக்ஷணம்) - இலக்கணம் ஆனதென்றும்
இலட்சியம் (லக்ஷியம்) - இலக்கியம் ஆனதென்றும்
எனவே வடமொழி என்பாரும் உண்டு.

என் எண்ணம் - இலக்கணம் - இலட்சியம் என்ற வடசொல்லில் வந்தது என்பதே.
இதுதான் என முடிவுகட்ட சரியான ஆதாரம் இல்லை.
________________________________


**செல்லரித்துப்போன பழங்கால இலக்கிய ஏட்டைப் புரட்டிக்காட்டுவதால்
நாட்டு மக்கள் நலம் பெற இயலுமா?

இயலும். "இப்படி வாழ்ந்தோம்" என எடுத்துக்காட்டுவது இப்போது வாழ்வதை
ஒப்பபிட்டு எண்ணிபார்க்க வைக்கும்.

----------------------------------------------


**சோழர் மரபில் கரிகாலன் எனப் பெயர் அடைந்தவர்கள் எத்தனை பேர்?

(1) பொருநராற்றுப்படை - பட்டினப்பாலைகட்கு தலைவனாகிய கரிகாலன் ஒருவன்.
இவனுக்கு திருமாவளவன் என்று ஒரு பெயரும் உண்டு.

(2) தஞ்சையில் ராசேஸ்வரம் எடுத்த இராசராச சோழனின் தமையன் இரண்டாம் கரிகாலன்.
அவனுக்கு ஆதித்தன் என்று ஒரு பெயரும் உண்டு.

(3) வீரசோழியமெனும் இலக்கணத்தை செய்தவனாகிய கரிகாலன் மூன்றாமவன்.
இவனுக்கு வீர இராசேந்திரன் என்று ஒரு பெயர் உண்டு.

(4) கலிங்கத்துப்பரணி கொண்டவனும் - பெரிய புராணம் பாடுவித்தவனுமாகிய
முதலாம் குலோத்துங்கன் - நான்காம் கரிகாலன் என்றும் இலக்கியங்களில் காணப்படுகிறது.

நிலா
29-02-2004, 10:44 PM
கண்ணதாசனை அறியத்தந்த தலைக்கு என் நன்றிகள்!
3வது கேள்வியைக்கேட்டது முத்து நீங்கதான?

முத்து
29-02-2004, 10:49 PM
நிலா ..
நான் கண்ணதாசன் எழுதுனப்ப கேள்வி கேக்கற ஆளா இல்லை ..

முத்து
29-02-2004, 10:52 PM
புதிதாய்ச்(எனக்கு) சில இலக்கியச் செய்திகளை அறியக் கொடுத்த
அண்ணன் இளசுவுக்கு நன்றிகள் ...

பாரதி
01-03-2004, 05:18 PM
நல்ல கேள்வி பதில்கள். கண்ணதாசன் இப்போது இல்லையே என்று வருத்தப்படுகிறேன் - கரிகாலன் பெயரில் இன்னும் ஒருவரை சேர்க்கவில்லையே என்பதால். :wink: .

sara
02-03-2004, 02:56 AM
தொகுத்து கொடுத்திருப்பதற்கு மிக்க நன்றிகள். ஒவ்வொரு பதிலும் நறுக்குத் தெரித்தாற்போல் சொல்லியிருக்கிறார்.

நிலா
02-03-2004, 04:06 AM
கண்ணதாசன் இப்போது இல்லையே என்று வருத்தப்படுகிறேன் - கரிகாலன் பெயரில் இன்னும் ஒருவரை சேர்க்கவில்லையே என்பதால். .


இது இது இதுதான் பாரதி கமெண்ட்!
கலக்கல்!கலக்கிபூட்டீங்க போங்க!

poo
06-03-2004, 10:43 AM
இன்னும் கொடுங்கள் அண்ணா...


படிக்க காத்துக்கொண்டிருக்கும் உங்கள் தம்பி!

மன்மதன்
06-03-2004, 10:48 AM
சாதாரண மனிதன் எப்போது தத்துவஞானியாகிறான்?
[/color]
தான் கஷ்டத்தில் உழன்று கொண்டிருக்கும்போது, தன்னைக்காட்டிலும்
அதிகமாகக் கஷ்டப்படுபவனுக்கு ஆறுதல் சொல்கையில்..!


இங்கே துபாயில் யாராவது விசிட் விசா ஆசாமி கையில் சிக்கினால் எல்லோருமே தத்துவ ஞானிதான்..

ஒரு நல்ல பதிப்பு.. நன்றி இளசு அண்ணா...

karikaalan
23-03-2004, 05:29 PM
இளவல்ஜி

இன்றுதான் இப்பக்கம் எட்டிப்பார்த்தேன். சுவையாக இருக்கிறது கவியரசரின் விடைகள்.

கல்லணை கட்டிய கரிகாலன் யார்?

===கரிகாலன்

kavitha
20-04-2004, 06:36 AM
**வாழத்தகுதியுடையவர்கள் யார்?

சாவதற்கு அஞ்சாதவர்கள்.

அட ராமா! தகுதியே இல்லை என்று தானே சாவை வரவேற்கிறோம்! கார்கிலில் போர்புரியவா?
கண்ணதாசனின் மு(ச)த்தான பதில்களை இங்கே தந்தமைக்கு இளசு அண்ணாவிற்கு நன்றி!
கேள்வியைக்கேட்டவர் யாரோ?
உங்கள் பெயரின் பூர்வீகத்தையும் கொஞ்சம் தெரிந்துகொண்டோம்! நன்றி அண்ணா!

இளசு
20-04-2004, 10:36 PM
இரசித்துப்படித்து கருத்து பதித்த அனைவருக்கும் நன்றிகள்..

அண்ணலே,
கல்லணை கண்டவன் - "முதல்வன்"

சுருங்கில் (சின்ன வீடு) போல் இன்னொரு சொல் இணையத்தில் கண்டேன்..

வீட்டின் முகப்பு - "முன்றில்"....