PDA

View Full Version : ஒரு சந்தேகம்..(powerpoint slide show..)

poo
29-02-2004, 03:12 PM
மெயிலில் அடிக்கடி சில சிலைடு ஷோ-க்கள் வருமே..

அதுமாதிரியான பவர்பாயிண்ட் சிலைடு ஷோக்கள் உருவாக்குவது எப்படி.. அதாவது கிளிக்கியவுடன் சிலைடு ஷோ மட்டும் ஓடுகிறது.. நாம் பவர்பாயிண்ட்டில் உருவாக்கி சேமித்தால் அப்படி வரவில்லையே ..

அந்த icon-ம் வேறுமாதிரியாக உள்ளதே.. அவ்வாறு எப்படி மாற்றியமைப்பது என் பவர்பாயிண்ட் சிலைடு ஷோ ╖பைலை..?!

роЗроХрпНрокро╛ро▓рпН
29-02-2004, 04:32 PM
சேமிக்கும்பொழுது Presentation என்று சேமித்திருப்பீர்கள். அதற்குப் பதிலாக
save as type: என்ற இடத்தில் Power point show எனச் சேமியுங்கள்.
இப்பொழுது கிடைக்கும் iconஐ தட்டினால் slide show ஓடும். நீங்கள்
செய்த programme அடுத்தவருக்குத் தெரியாது. சந்தேகம் நிவர்த்தி ஆகியதா?
இல்லை என்றால் சொல்லுங்கள்.-அன்புடன் அண்ணா.

sara
29-02-2004, 04:40 PM
ஆம். ஒரு கூடுதல் தகவல். Power point show என்று சேமிக்கும் பொழுது வரும் extension, *.pps.

роЗроХрпНрокро╛ро▓рпН
29-02-2004, 04:43 PM
சரா தம்பி... நல்லா இருக்கீங்களா? :)

sara
29-02-2004, 04:44 PM
ரொம்ப நல்லா இருக்கேன் அண்ணா. நீங்க எப்படி இருக்கீங்க?

роЗроХрпНрокро╛ро▓рпН
29-02-2004, 04:50 PM
நாங்களும் நலமே தம்பி. :)

рокро╛ро░родро┐
29-02-2004, 05:52 PM
ஆமாம் பூ.. இக்பால் அண்ணா சொன்னது போல செய்தால் பவர் பாயிண்ட் ஷோ உருவாக்க முடியும். அதே ஷோவிலிருந்து பிரசண்டேசனாகவோ அல்லது பிரசண்டேசனிலிருந்து ஷோ-வாகவோ மாற்ற முடியும். தேவை எனில் ஒவ்வொரு சிலைடையும் தனித்தனி படங்களாகவும் கூட சேமிக்க முடியும்.

роЗро│роЪрпБ
29-02-2004, 09:31 PM
இளவல் இக்பால், நண்பர் சரா - நன்றியும் பாராட்டும்.

பகிர்ந்து வளர்வதில் நம் மன்றம் ஒரு முன்னோடி.

роорпБродрпНродрпБ
29-02-2004, 10:45 PM
ஆமாம் பூ.. இக்பால் அண்ணா சொன்னது போல செய்தால் பவர் பாயிண்ட் ஷோ உருவாக்க முடியும். அதே ஷோவிலிருந்து பிரசண்டேசனாகவோ அல்லது பிரசண்டேசனிலிருந்து ஷோ-வாகவோ மாற்ற முடியும். தேவை எனில் ஒவ்வொரு சிலைடையும் தனித்தனி படங்களாகவும் கூட சேமிக்க முடியும்.

நன்றி பாரதி ...
நீங்கள் சொன்னது ஒரு கூடுதல் பயனுள்ள தகவல் ...
பூ ...
மெயிலில் வந்த பவர் பாயிண்ட் ஷோவை கணியில் சேமித்தபின்னர்
அக்கோப்பை ரைட் கிளிக் செய்து கோப்பின் பெயரை *.pps லிருந்து *.ppt ஆக ரீநேம் செய்துவிட்டால் அது சாதாரண பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் கோப்பாய் மாறிவிடும் ...

роЗроХрпНрокро╛ро▓рпН
01-03-2004, 03:30 AM
பாரதி wrote:
ஆமாம் பூ.. இக்பால் அண்ணா சொன்னது போல செய்தால் பவர் பாயிண்ட் ஷோ உருவாக்க முடியும். அதே ஷோவிலிருந்து பிரசண்டேசனாகவோ அல்லது பிரசண்டேசனிலிருந்து ஷோ-வாகவோ மாற்ற முடியும். தேவை எனில் ஒவ்வொரு சிலைடையும் தனித்தனி படங்களாகவும் கூட சேமிக்க முடியும்.

நன்றி பாரதி ...
நீங்கள் சொன்னது ஒரு கூடுதல் பயனுள்ள தகவல் ...
பூ ...
மெயிலில் வந்த பவர் பாயிண்ட் ஷோவை கணியில் சேமித்தபின்னர்
அக்கோப்பை ரைட் கிளிக் செய்து கோப்பின் பெயரை *.pps லிருந்து *.ppt ஆக ரீநேம் செய்துவிட்டால் அது சாதாரண பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் கோப்பாய் மாறிவிடும் ...

பாரதி தம்பி, முத்து தம்பி... இந்த யுக்தி நான் அறியாதது. நன்றிங்க. :)

Mano.G.
01-03-2004, 09:46 AM
பவர் பாயிண்டு சிலேடுகளை(பிரசண்டேஷனை) உறுவாக்கி விட்டு
அதை எவ்வளவு நேரத்திற்கு பிறகு மாறவேண்டும் அதோடு சத்தங்கள்
(இசை) மற்றும் சிலேடுகள் மாறுபோது தேவையான அனிமேஷன் ஆகியவற்றை
செட் அப் செய்தும் சேமித்து பதிவேற்றம் செய்யலாமே.

மனோ.ஜி

poo
01-03-2004, 12:21 PM
அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..

எல்லாமே எனக்கு புதிய தகவல்கள்.... (என் கணனி அறிவு அவ்ளோ அதிகம்..)

அடிக்கடி இந்தமாதிரி சின்னச்சின்ன சந்தேகங்களை கேட்கலாம் என தைரியம் வந்துவிட்டது..

роорпВро░рпНродрпНродро┐
02-03-2004, 03:29 AM
கூடுதல் தகவல்:எனக்கு வந்த பெரும்பாலான மின்னஞ்சல்களில் pps என்று முடியும் கோப்புகளைக்கொண்ட வைரசும் உண்டு.உதாரணமாக life.pps என்று வந்தது.நான் அதனைத் திறக்காமல் ஸ்கேன் செய்து பார்த்தேன்.வைரஸ் இருந்ததும் அழித்துவிட்டேன்.எனவே தாங்கள் சொந்தமாக pps தயாரித்தால் பிரச்சனை இல்லை.மற்றவரிடமிருந்து வரும் ppsகளை பரிசோதித்து திறப்பது நலம்.

роЗро│роирпНродрооро┐ро┤рпНроЪрпНроЪрпЖро▓рпНро╡ройрпН
26-08-2004, 10:46 AM
பூ... உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் எனக்கும் இருந்தது. பிறகு அந்த கோப்பை நோண்டி நொங்கு எடுத்து, பாரதி சொல்லியதைப்போல் சேமித்து இங்கு "நயாகராவின் நர்த்தனம்" என்ற பகுதியை பதிந்தேன்.

தகவல்களுக்கு நன்றி நண்பர்களே.

sarcharan
16-02-2011, 07:50 AM
роХрпАропрпИ рокро┐ро░ро╕рпН рокрогрпНрогро┐роХрпНроХрпКрогрпНроЯрпБ ро╕рпНро▓рпИроЯрпНро╖рпЛ рокроЯрпНроЯрой роХро┐ро│ро┐роХрпН рокрогрпНрогро┐ рокро╛ро░рпБроЩрпНроХро│рпН роЕройро┐роорпЗро╖ройрпН рокрпНро░рпАро╡ро┐ропрпВ рокро╛ро░рпНроХрпНроХро▓ро╛роорпН