PDA

View Full Version : லாட்டரி!



lenram80
21-05-2019, 08:27 PM
டீ கடை வைத்திருந்தவன்
டீ எஸ்டேட்டை வைத்திருக்கிறான்!

பள்ளிக்கூடம் போகாதவன்
பல்கலைக் கழகமே வைத்திருக்கிறான்!

குனிந்தே இருந்தவன்
கும்பத்தில் இருக்கிறான்!

தமிழையே தப்பாய் படிப்பவன்
தமிழின தலைவனாயிருக்கிறான்!

யார் சொன்னது?
தமிழ்நாட்டில் லாட்டரி
தடை என்று!