PDA

View Full Version : தேர்தல் கவிதை-9



poo
21-02-2004, 11:11 AM
வீட்டு படியாளு வந்திருக்கேங்க..

ம்ம்...தோட்ட வாசப்பக்கமா வா...

மீந்துபோன தோசையை போட்டார் "அம்மணி"..

உங்க படியேறி வந்திருக்கேன்..
உங்க ஓட்டை எனக்கு படியளக்கனும்..
குழைந்தபடி கும்பிட்டார் "அய்யா" !

mania
21-02-2004, 11:17 AM
பூ....எல்லா கவிதைகளுமே பிரமாதம் (எனக்கே புரிகிறது)!!!!
அன்புடன்
மணியா

karikaalan
21-02-2004, 12:04 PM
ஆனைக்கொரு காலம்; பூனைக்கொரு காலம். கவிதை நல்லாவே இருக்குது பூஜி. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

இக்பால்
21-02-2004, 01:54 PM
கண்டிப்பாக ஓட்டைப் போட்டுவிடுங்க... அனைத்துக் கவிதைகளுக்கும்
பாராட்டுக்கள். சில கவிதை விளக்கங்கள் தேவைப் படுகிறது. மணியா
அண்ணாவிடம் கேட்டுக் கொள்கிறேன். தொடருட்டும் தேர்தல் பணி.
-அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
21-02-2004, 07:06 PM
நண்பர் பூ, தேர்தல் நேரத்தில் அருமையான கவிதைகள் கொடுத்திருக்கிறீர்கள், பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள், மற்றவர்களும் தொடருவார்கள்.

poo
22-02-2004, 04:24 AM
தொடர்ந்து எழுதுங்கள், மற்றவர்களும் தொடருவார்கள்.

தொடரவேண்டுமென ஆசைப்படுகிறேன்..

தனி ஆளாய் நின்று ஆட்டோக்களை சமாளிக்க தெம்பில்லை எனக்கு!!

பரஞ்சோதி
22-02-2004, 12:22 PM
தொடர்ந்து எழுதுங்கள், மற்றவர்களும் தொடருவார்கள்.
தொடரவேண்டுமென ஆசைப்படுகிறேன்..
தனி ஆளாய் நின்று ஆட்டோக்களை சமாளிக்க தெம்பில்லை எனக்கு!!
அங்கேயும் ஆட்டோவாஆஆஆஆஅ????

இளசு
22-02-2004, 11:14 PM
சமரசம் உலாவும் தினமே (ஒரு தினமே)

பாராட்டுகள் பூ..

gankrish
17-03-2004, 03:45 AM
பூ.. அருமை.. அருமை.. தேர்தல் கவிதைகள் அருமை...

நண்பர்களே.. போடுங்கைய்யா வோட்டு.. பூவின் கவிதையை படித்து..

இந்த கவிதை போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா...

பூ.. அத்வாணியின் ரத வண்டி.. பாண்டி வந்தா.. ஏறி சும்மா எதிர்கட்சியை தாக்கி ஒரு கவிதையை ஈஸ்த்து வுடு...