PDA

View Full Version : தேர்தல் கவிதை-8



poo
21-02-2004, 11:03 AM
அவசரத்துக்கு ஒதுங்கினான்..
கையில் சில மினரல் வாட்டர் பாக்கெட்டுகளோடு..

அருகில்தான் நடக்கிறது
ஆளுங்கட்சி மாநாடு!

karikaalan
21-02-2004, 12:02 PM
மாநாடு --- சாக்கடை என்பதாலா?

இக்பால்
21-02-2004, 01:52 PM
ஒதுங்கியதால் கிடைத்ததுதானே தண்ணீர்ப் பைகள்!

பரஞ்சோதி
21-02-2004, 07:32 PM
தேர்தல் காலத்தில் ஒதுங்கியதுக்கும் கிடைக்கும் மினரல் வாட்டர், அதே சாதாரண காலத்தில் தவிக்கிற வாய்க்கு தண்ணிர் கிடைக்குமா?

poo
22-02-2004, 04:23 AM
தேர்தல் காலத்தில் ஒதுங்கியதுக்கும் கிடைக்கும் மினரல் வாட்டர், அதே சாதாரண காலத்தில் தவிக்கிற வாய்க்கு தண்ணிர் கிடைக்குமா?
சரியாக சொன்னீர்கள் பரஞ்சோதி.. நான் அதைத்தான் சொன்னேன்..
மாநாட்டு பந்தலில் வாய்கொப்புளிக்கவும் வாய்க்கால் ஓரம் போகவும் மினரல் வாட்டர்தான்.. அடிமட்ட தொண்டனுக்கும்!

பரஞ்சோதி
22-02-2004, 12:50 PM
ஒரு வாய் சோறு கிடைக்காதவனுக்கு எல்லாம்
கறியும் எலும்பும் சேர்ந்த பிரியாணி
கிடைக்கும் காலமல்லவா
இந்த தேர்தல் பொற்காலம்.

இக்பால்
22-02-2004, 04:53 PM
பரஞ்சோதி சோறு கிடைக்காதவர்கள் நல்ல சாப்பாட்டின் அருமையே
தெரியாமல் வாழ்க்கையை முடிக்க வேண்டுமா என்ன? அவர்கள்
தலைவிதியை மாற்றத்தானே அரசியல்!

இளசு
22-02-2004, 11:12 PM
குங்குமம் மிஞ்சினால்....

ஒருநாள் கூத்து...

பாராட்டுகள் பூ..