PDA

View Full Version : தேர்தல் கவிதை-7



poo
21-02-2004, 10:58 AM
இலைகளையும் பூக்களையும்
சந்தோஷமாய் தின்று தீர்த்தன
என்வீட்டு மாடுகள்..
விரட்ட மனமின்றி ரசித்தேன் -
சுவரில் நிறைய போஸ்டர்கள்!!

karikaalan
21-02-2004, 12:01 PM
போஸ்டரில் இருந்த இலைகளையும் பூக்களையுமா பூஜி!

இக்பால்
21-02-2004, 01:50 PM
ஒரு வழியாக பயமுறுத்திக் கொண்டிருந்த புதர்களை
காலி செய்து விட்டீர்கள். வெற்றி உணர்வுதானே!!!

பரஞ்சோதி
21-02-2004, 07:34 PM
எனக்கென்னமோ அங்கே இலைகள் மட்டுமே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன், காரணம் பூ தான் ஏற்கனவே வாடி விட்டதே.

poo
22-02-2004, 04:22 AM
போஸ்டரில் இருந்த இலைகளையும் பூக்களையுமா பூஜி!
ஆமாம் அண்ணா.. தேர்தல் வந்துவிட்டால் மாடுகளுக்கும் கொண்டாட்டம்தானே...

இக்பால்
22-02-2004, 08:36 AM
Quote:
போஸ்டரில் இருந்த இலைகளையும் பூக்களையுமா பூஜி!

ஆமாம் அண்ணா.. தேர்தல் வந்துவிட்டால் மாடுகளுக்கும் கொண்டாட்டம்தானே...
_________________
சுவரொட்டியில் உள்ள இலைகளையும் மாடு சாப்பிட்டு விடுமா?
இருக்கும்...இருக்கும்....

poo
22-02-2004, 09:13 AM
தண்ணீர் இல்லா தேசங்களில் சுவரொட்டிகள்தானே மாடுகளுக்கு உணவு அண்ணா..

பரஞ்சோதி
22-02-2004, 01:22 PM
இதுவரை கவர்ச்சியை
ருசித்த மாடுகள்
இனிமேல் கண்றாவிகளை
ருசிக்க போகிறதே?

இக்பால்
22-02-2004, 04:51 PM
பரஞ்சோதி தம்பி ... யாரைச் சொல்கிறீர்கள்?

பரஞ்சோதி
22-02-2004, 05:06 PM
பரஞ்சோதி தம்பி ... யாரைச் சொல்கிறீர்கள்?

அரசியல் போஸ்டர்களைத் தான் அண்ணா.

என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமல் அடித்து ஊர் எங்கேயும் ஒட்டி விடுவதை தான் சொன்னேன்.

தென்னாட்டு காந்தியே வருக.
அன்னை தெரசாவே வருக,
இந்தியாவின் விடிவெள்ளியே வருக.
ஆயிரம் மரம் வெட்டிய அய்யா வருக.

இது சின்ன எடுத்துக்காட்டு தான், இன்னமும் நிறையவே இருக்குது, எழுத முடியவில்லை. அந்த அளவுக்கு அரசியல் இருக்கிறது.

இக்பால்
22-02-2004, 05:09 PM
மாடுகளுக்குத்தான் படிக்கத் தெரியாதே... (சும்மா..சொன்னேன். தவறாக
எதுவும் எடுத்துக் கொள்ளாதீர்கள்)

இளசு
22-02-2004, 11:11 PM
கன்றுக்குப் பால் தர
லஞ்சம் கேட்காதவரை
காகித மேய்ச்சலால்
பாதகமில்லை

பாராட்டுகள் பூ..