PDA

View Full Version : தேர்தல் கவிதை-6



poo
21-02-2004, 10:45 AM
தண்ணீரை தலையில்
தெளித்து உத்தரவு வாங்கினார் பூசாரி..

விருப்பமில்லாமல் விருந்துக்கு
தலையாட்டுவதாய் புலம்பியது வெள்ளாடு-
நெஞ்சத்தில் ஞாபகம்...
கன்னத்தில் விழுந்த கண்ணீர்த்துளிகள்...

karikaalan
21-02-2004, 11:59 AM
என்ன விஷயம், பூஜி, இன்னைக்கு பலி சமாசாரமா இருக்குதே!

இக்பால்
21-02-2004, 01:47 PM
தேர்தல் நேர்த்திக் கடனா? :)

பரஞ்சோதி
21-02-2004, 07:40 PM
அன்று:

பலியிட தடை,
சில காலமாவது உயிரோடு இருப்போமேன,
சந்தோசத்தில் வெள்ளாடு,

இன்று,

ஆகா சீக்கிரமே வருகிறது
திருவிழா
வீட்டில் கறி சாப்பாடு
கொண்டியது குடும்பம்.

poo
22-02-2004, 04:21 AM
ஆகா.. அவரவர் பார்வையில் ஆயிரம் அர்த்தங்கள்..

ஆனாலும் அழகாக இருக்கிறது..

நான் பிரியங்காவை மனதில் வைத்து இதை எழுதினேன்..

ஆதரவுக்கு நன்றி... அனைத்து அன்புள்ளங்களுக்கும்!

poo
22-02-2004, 04:29 AM
பரம்ஸ்.. அசத்தல்..

தொடருங்கள்..

karikaalan
22-02-2004, 12:20 PM
ப்ரியங்காவை பலியிடத் தயாரில்லை என்று செய்திவந்துவிட்டதே!

இளசு
22-02-2004, 11:09 PM
பலியாடு சிலேடையிலா...

ப்ரியங்காவைப் பொருத்தவரை
விருப்பமும் பயமான வெறுப்பும்
இரு வழிச் சந்திப்பு

காலம் முன்னதில் அவரை செலுத்தும் என்பது என் கணிப்பு

பாராட்டுகள் பூ..