PDA

View Full Version : தேர்தல் கவிதை-2



poo
21-02-2004, 10:38 AM
ச்சே...
பாழாப்போன பவர்கட்..
பாதியில் "கட்"டான விளம்பரம்-
"இந்தியா ஒளிர்கிறது"

karikaalan
21-02-2004, 11:45 AM
நல்லாவே தாக்கியிருக்கீங்க, எதிர்க்கட்சிகளுக்கு உதவியா நீங்களே ஸ்லோகன்ஸ் எழுதலாம் போலிருக்கே!

இக்பால்
21-02-2004, 01:40 PM
முரண்பா கவிதையில் சேர வேண்டியது. பாராட்டுக்கள்.

poo
22-02-2004, 04:26 AM
எதிர்க்கட்சிகளுக்கு உதவியா நீங்களே ஸ்லோகன்ஸ் எழுதலாம் போலிருக்கே!
ஆளுங்கட்சி ஆசிட்வீச்சுக்கும் அழுகிய முட்டைக்கும் யாருங்கணா பதில் சொல்றது?!!

இக்பால்
22-02-2004, 07:52 AM
அதான் கூடவே அடிதடிக்கு ஒரு படை இருக்குதுதானே!!!

நாங்கதான் பயப்படணும்... நீங்க எதுக்கு? :)

இளசு
22-02-2004, 11:03 PM
ஆம் முரண்பாவேதான்

பாராட்டுகள் பூ..

poo
23-02-2004, 05:52 AM
நன்றி அண்ணா.. அனைத்திற்கும் ஒரு நச் வரியை தந்துள்ளீர்கள்..

rajeshkrv
23-02-2004, 07:38 AM
எங்க கிராமம் பெரிதும் முன்னேறியுள்ளது

தண்ணீர் எடுக்க பெண்கள் 12 மைல் செல்கையில்
வழியில் உள்ள கடையில் ஒலித்தது இந்தியா ஒளிர்கிறது

இந்தியா ஒளிரத்தானே செய்கிறது!!

Mano.G.
23-02-2004, 08:47 AM
நான் சென்னை வந்த போது
தொலைக்காட்சியில் பார்த்தது
மறுநாள் அதே தொலைக்காட்சியில் விவாதம்
ஆளுங்கட்சி மக்களின் வரிப்பணத்தை
தங்கள் தேர்தல் லாபத்திற்காக பயன் படுத்துகிறது
காங்கிரஸ் பிரதிநிதியும் ப.ஜா.கா மாநில செயலாளரும்
விஜய் டீவியில். அடித்து கொள்ளாத நிலைதான்

மனோ.ஜி

kavitha
08-03-2004, 08:59 AM
ச்சே...
பாழாப்போன பவர்கட்..
பாதியில் "கட்"டான விளம்பரம்-
"இந்தியா ஒளிர்கிறது"
'நச்' - நெத்தியடி!
பாராட்டுக்கள் பூ!

எங்கள் வீட்டிலும் இதே கதி!

பூமகள்
18-07-2008, 05:04 AM
இப்போதைய சூழலும் அதே தான்..!!

மின்வெட்டு ஒரு நாளைக்கு பல முறை நடக்கிறது.. இப்போதெல்லாம்.. மன்றத்தில் அதிக நேரம் இருக்க முடியவில்லையே என்ற கவலை மின்விசிறி ஓடாத வெப்பத்தை விட அதிக வெம்மையை ஏற்படுத்திவிடுகிறது..

எப்போது இந்நிலை மாறுமோ..??!:traurig001::mad:

பாராட்டுகள் பூ அண்ணா. :)

உமாமீனா
01-03-2011, 09:59 AM
இப்போதைக்கு தேவை - தூசு தட்டி....உசுப்பெத்துவதுன்னா சும்மாவா