PDA

View Full Version : தேர்தல் கவிதை-1



poo
21-02-2004, 10:37 AM
அவசர சட்டம்..
ஆத்தங்கரையில் கேள்விப்பட்டு..
அரக்கபரக்க வீடுவந்தான்..

அட.. ஆக்கங்கெட்டவளே...
சித்திரைக்கு வளர்த்தத..
வித்துறலாம்னு கத்தனயே..
பார்த்தியா..
ஆத்தா கண்ண தொறந்துட்டா...
அவ நேர்த்திக்கடன
குறையில்லாம முடிச்சிட்டு
மொட்டை போட்டுக்கலாம்னு நெனைக்கிறேன்..
நீயென்ன சொல்ற?!!...

வளர்ந்த கெடா நொந்துகொண்டது
ஒண்ணு "வாயிருக்கனும்"..
இல்ல "வாக்கிருக்கனும்!!"

karikaalan
21-02-2004, 11:44 AM
பூஜி

நல்லாவே இருக்குது சமயத்துக்கேத்த கவிதை. பாவம்தான் கடா!

===கரிகாலன்

இக்பால்
21-02-2004, 01:39 PM
ஆஹா.... பாராட்டுக்கள் தம்பி.

முத்து
21-02-2004, 10:39 PM
வளர்ந்த கெடா நொந்துகொண்டது
ஒண்ணு "வாயிருக்கனும்"..
இல்ல "வாக்கிருக்கனும்!!"வாயில்லாமல் வாக்கிருக்கும் மக்களும் இருக்கிறார்கள் .... :(

பரஞ்சோதி
22-02-2004, 12:17 PM
வளர்ந்த கெடா நொந்துகொண்டது
ஒண்ணு "வாயிருக்கனும்"..
இல்ல "வாக்கிருக்கனும்!!"
வாயில்லாமல் வாக்கிருக்கும் மக்களும் இருக்கிறார்கள் .... :(
மிக சரியாக சொன்னீர்கள் நண்பர் முத்து. என்றைக்கு தான் இந்த நிலை மாறுமோ.

அருமையான கவிதை கொடுத்த நண்பர் பூவுக்கு பாராட்டுக்கள்.

இளசு
22-02-2004, 11:02 PM
காட்சி மாற்றம்
அதனால் வசனமும்

பாராட்டுகள் பூ..

பூமகள்
20-07-2008, 08:16 AM
வாக்குகள் கொண்டு
வாயில்லா கூட்டங்கள்
தேர்தல் சாவடி நோக்கி
போய்க் கொண்டிருக்கின்றன..
ஆட்டு மந்தைகளாகவே..

தாங்கள் தான்
அன்றைய பிரியாணி
என்றறியாமலேயே..!!

கால வெள்ளத்தின் மாற்றத்துக்கு தகுந்த கவிதை வடித்த பூ அண்ணாவுக்கு பாராட்டுகள்..!!

மேலெழுப்பியதில் எனக்கு பேரானந்தம். :)

kampan
20-07-2008, 02:26 PM
சரியாக சொன்னீர்கள்.

சூரியன்
20-07-2008, 02:42 PM
அழகான கவிதை,
வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி அக்கா.

இளசு
20-07-2008, 02:54 PM
,
வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி

கொண்டு வந்த நேரம் - அடுத்த தேர்தலே சீக்கிரம் வந்துவிடும் என்பதால்
பொருத்தமான நேரம்..

பூ வரவேண்டிய நேரம்!


ஆமாம், மக்கா.. எது செலவு குறைச்சல்?
அடுத்த தேர்தலா?
இந்த மாத குதிரை பேரமா???

எம்.பிக்கள் விலை 25, 30 கோடி என
எம்பிக்கொண்டே போகிறதாமே!!!

பூமகள்
20-07-2008, 05:33 PM
ஆமாம், மக்கா.. எது செலவு குறைச்சல்?
அடுத்த தேர்தலா?
இந்த மாத குதிரை பேரமா???
எம்.பிக்கள் விலை 25, 30 கோடி என
எம்பிக்கொண்டே போகிறதாமே!!!
இப்போது அரை சதத்தை எட்டிவிட்டதாக நேற்று செய்திகளில் சொன்னார்கள் பெரியண்ணா...!!:icon_rollout:

எம்.பிக்கள் கல்லாப்பெட்டி அமோகமாக நிரம்புகிறது....

என்னைக் கூட எம்.பின்னு தோழிகள் சொல்வாங்க... ஏங்க அண்ணா எனக்கும் ஒரு அரைச் சதம் கிடைக்குமா??! :icon_ush::rolleyes: :D:D

உமாமீனா
01-03-2011, 10:01 AM
2011 நேரத்துக்கு தகுந்த உகந்த திரி

sureshteen
11-12-2011, 04:07 AM
எதிர்பார்க்கும் நேரத்தில்
திசைமாறும் முடிவுகள்
விதி.

inban
06-02-2012, 11:17 PM
2011 நேரத்துக்கு தகுந்த உகந்த திரி
எது?ஆடு மாடு வளர்ப்பு திட்டம் என்று பிடித்துக்கொண்டிருக்கிரார்களே அதனாலா சொன்னீர்கள் ?
ஊமைகளின் சொற்ப்பொழிவு கேட்க்கும்
செவிட்டு மந்தைகள்
தேர்தல் களத்து பிரச்சார மேடை

சிவா.ஜி
28-05-2012, 09:44 PM
அடியாள் வளர்ப்பைவிட ஆடு மாடு வளர்ப்பு நல்லதல்லவா...?

ஒரு விஷயத்தில் உடன்பாடுண்டு....சொற்பொழிவு கேட்கும் செவிட்டு மந்தைகள்....எந்த நூற்றாண்டு இந்த மடமை போக்க மலர்கின்றதோ....????