PDA

View Full Version : ஹி... ஹி... மெயில்......lavanya
18-02-2004, 09:52 PM
ஹி... ஹி... மெயில்......

அவ்வப்போது கம்ப்யூட்டர் துறையில் உள்ள எதைப்பற்றியாவது திடீரென
கடி ஜோக்குகள் எங்காவது தோன்றி எங்கு பார்த்தாலும் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்
இந்த மாதத்தில் அதிகம் கடிக்கப்பட்டது இ-மெயில் பற்றிதான்...

<span style='color:#1b00ff'>1. ஒரு ரயில்வேஸ்டேஷனில் பயணியிடம் ஸ்டேஷன் மாஸ்டர்

"சொன்னா கேளுங்க....ஈமெயில்'ங்கறது ரயில் இல்லை...அப்பவே சொல்லிட்டேன்..திருப்பி
திருப்பி அது எந்த பிளாட்பாரத்துக்கு வரும்னு கேட்டு என்னை கொலைகாரனாக்காதீங்க"
--------------------

2. அஞ்சலகத்தில் கூட்டமான நேரத்தில்....

"என்னப்பா என்ன பிரச்னை...?"

"சார் அப்பலேர்ந்து இந்த பத்து ரூவாய்க்கு ஸ்டாம்ப் கேட்டு தொல்லை பண்ணி
கிட்டிருக்கான் ஸார்...."

"கொடுக்க வேண்டியதுதானே...."

"மெயிலுக்கு ஸ்டாம்ப் வேணும்னு கேட்டான்.... எந்த மெயிலுக்குன்னு கேட்டா ஹாட்மெயில்
இல்லே யாஹ மெயிலுக்கு கொடுங்ககறான் ஸார்..."
-----------------------

3. "ஏங்க இப்ப ஈமெயில்ல நிறைய வைரஸ் வருதாமே..."

"இருக்காதே பின்னே..? ஈயிலேயே 30 விதமான வைரஸ் பரவுதாமே...."
-------------
4. "கம்ப்யூட்டர் மாநாட்டுக்கு போன நம்ம தலைவர் மானத்தை வாங்கிட்டார்"

"ஏன் என்ன பண்ணார்...?"

"ஈ மெயில் போல விரைவில் எப் மெயில் ,ஜி மெயில், ஹெச் மெயில் எல்லாம்
அமைத்து கொடுக்க வசதி செய்து தரப்படும்னு பேசி இருக்கார்... "

--------------
5. "அவர் புது மாதிரியான ஊழல்ல மாட்டிக்கிட்டாரா எப்படி?"

"ஈமெயில் வைரஸக்கு தடுப்பூசி போட்டதில் 50,000 ரூபாய் செலவுன்னு கணக்கு
காமிச்சாராம்..."
---------------

6. "ஈமெயில் அனுப்பறதில் செலவு பண்ணியே ஹீரோ போண்டியாயிடுறான்...நல்ல
தலைப்பு ஒண்ணு சொல்லுங்க...."

" மெயிலாண்டி'ன்னு வச்சிடுங்க..."

-------------------

7. "மன்னா...மடல் அனுப்புற எல்லா புறாவையும் அண்டை நாட்டு மன்னன் சமைச்சி
சாப்பிட்டு விடுகிறான்.என்ன செய்யலாம்..?"

"இனி தகவலை ஈ மெயிலில் அனுப்பி விடுங்கள்"

"சரி மன்னா..அவ்வளவு பெரிய ஈக்கு எங்கு போவது...?"

-------------------------
8. வீர்சிங் : என் எதிரி அனுப்பிச்ச மெயில்ல பயங்கர வைரஸ் இருக்குன்னு கண்டு
பிடிச்சிட்டேன்....

பாண்டாசிங் : வெரிகுட் அப்புறம் ...?

வீர்சிங் : ஓப்பன் பண்ணி தாங்ஸ்னு எழுதி அவனுக்கே ரிப்ளை பண்ணிட்டேன்...

------------------------------

9. "நீங்க கம்ப்யூட்டர்ல பெரிய புலியா இருக்கலாம்..ஆனா லாண்டரி பில்லை கூட
இமெயில்லே அனுப்ப சொல்றது அவ்வளவு நல்லா இல்லைங்க..."

--------------------------------------------

10."அவர் போலி கம்ப்யூட்டர் இஞ்சினியர்னு எப்படி கண்டுபிடிச்சீங்க...?"

" பத்து இமெயில் அவசரமா அனுப்பனும்னேன்..இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை
போஸ்ட் ஆபீஸ் லீவுங்கறார்..."</span>

suma
18-02-2004, 10:53 PM
லாவ் இன்னாப்பா இப்படி கடிக்க மொத்த குத்தகை ஈமெயில் மூலமா வாங்கிட்டீங்களா......
பலமா கடிச்சிட்டீங்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்.

mania
19-02-2004, 12:25 AM
லாவ்ஸ்........ஹி.....ஹி........ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
அன்புடன்
மணியா

மூர்த்தி
19-02-2004, 04:42 AM
ஈமெயிலுக்குள் இத்தனை விஷயமா?படித்தேன்...சிரித்தேன்...

மன்மதன்
19-02-2004, 10:13 AM
எங்கெங்கெயோ படித்தது.. தொகுப்பாக படிக்கும் போது ஆனந்தம்தான்..........

karikaalan
19-02-2004, 10:31 AM
லாவண்யாஜி, நல்லாத்தான் இருக்குது ஈ ஜோக்குகள்! நன்றிகள்.

===கரிகாலன்

poo
19-02-2004, 11:51 AM
யப்பா.. இந்த ஈ-த்தொல்லை தாங்கல...கொசுக்கடியே தேவலாம்போல...

ரசித்து சிரிக்கவைத்தமைக்கு நன்றிகள் அக்காவிற்கு!

Mathu
19-02-2004, 11:54 AM
நல்ல சிரிப்புகள் லாவ்.....

அறிஞர்
19-02-2004, 12:23 PM
வெகு அருமையான... ஜோக்குகள்.. ரசித்து படித்தேன்..... வாழ்த்துக்கள்

puppy
19-02-2004, 04:32 PM
உண்மையாக இருந்தாலும் ஆச்சரியபடுவதற்க்கில்லை.......நல்ல நகைசுவை லாவ்

பாரதி
19-02-2004, 04:34 PM
தலைப்பையும் கூட ஈ...ஈ... மெயில் என்று மாற்றிவிடலாம் போல இருக்கிறது... ஹஹஹா.... நன்றி லாவ்.

gankrish
20-02-2004, 11:45 AM
ஈஈஈஈஈஈஈ ஹிஹிஹிஹிஹி மெயில்ல்ல்ல்ல்ல்ல்ல்... சூப்பர்

ஜோஸ்
20-02-2004, 02:42 PM
யப்பா.. இந்த ஈ-த்தொல்லை தாங்கல...கொசுக்கடியே தேவலாம்போல...

ரச

யாரைக் குறிப்பிட்டு சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே நண்பரே....(தோழி நிலாவையா?)..

முத்து
20-02-2004, 03:41 PM
லாவண்யா அவர்களே ...
இ-மெயில் நகைச்சுவைகள் மிக அருமை ...

இளசு
22-02-2004, 11:45 PM
ஹிஹி லாவ்...
இதைப்படிக்க வச்சு இப்படி "இ" வாயாக்கிட்டீங்களே

அமைச்சர்: மன்னா , ஓலை போன புறாக்களை எதிரி மன்னன்
பிடித்துவைத்துக்கொண்டான்.
அரசன்: அப்படியானால் இனி இ -ஓலை அனுப்புங்கள்..
அமைச்சர் : அவ்வளவு பெரிய ஈக்களுக்கு நான் எங்கே போவது மன்னா?


மந்திரி : ஆகவே படித்த இளைஞர்களே..இளைஞிகளே
எங்களுக்கு வாக்களித்து ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினால்
இந்த இ -மெயிலை எப் மெயில், ஜி -மெயில் என தரம் உயர்த்தி
வழங்குவோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் இதே நேரத்தில்......

இளந்தமிழ்ச்செல்வன்
23-02-2004, 05:38 AM
லாவண்யா கலக்கீட்டிங்க. நேரத்திற்கு ஏற்ப கடிகள்... பதமா இருந்தது.

அமரன்
21-03-2010, 12:27 AM
கடிமெயில்ல ஏறி இருக்கோம்.
இங்கே மெயிலே கடில ஏறி இருக்கு.

இன்றைய இரவு இனிதாய் அமைந்தது லாவண்யாவின் அன்றைய பகிர்வால்.

govindh
21-03-2010, 12:36 AM
ஹி... ஹி... மெயில்......கடிகள் வெகு அருமை.