PDA

View Full Version : என்னைத் தெரியுமா?

இளசு
16-02-2004, 09:53 PM
என்னைத் தெரியுமா?

1) நான் ஒரு கடற்கரை நகரம்.
என் பெயரின் அர்த்தம் : ஜனவரியின் நதி!
நான் யார்?

2) நான் மருத்துவத்தில் ஒரு சிறப்புப்பிரிவு..
"ஜீரியாட்ரிக்ஸ்" - Geriatrics என் பெயர்!
என் பயனாளிகள் யார்?

3) என் பெயர் பேலியோகிராபி (Paleography).
எதைப் படிக்க உதவுவேன் நான்?

4) நான் ஒரு தேசம். என் கொடியில் மேப்பிள் இலை இருக்கும்.
நான் யார்?

5) என் பெயர் மொரீஷியஸ் தீவுத்தொகுப்பு.
என்னைச் சுற்றியுள்ள சமுத்திர ராஜன் யார்?

6) என் பெயர் டாக்டர் கிறிஸ்டியன் பர்னார்ட்!
நான் 1967ல் ஒரு மாற்றம் செய்தேன்.. என்ன மாற்றம்?

7) ஜெகசிற்பியர் (அதாங்க ஷேக்ஸ்பியர்) எழுதிய நாடகம் நான்.
"இருப்பதா போவதா -To Be or Not To Be
என பிரபல தனிவசனம் என்னிடம் உண்டு.
என்ன என் பேர்?

8) என் பெயர் ஜெனிசிஸ்..(Genesis)
நான் எந்த நூலின் தொடக்கம்?

9) வேதிப்பட்டியலில் என் சுருக்கப்பெயர் Ag
என் முழுப்பெயர் என்ன?

10) நான் ஒரு கிரகம்.
88 நாள்தான் எனக்கு ஒரு வருஷம்!
நான் யார்?

baranee
16-02-2004, 11:39 PM
3.பழங்கால எழுத்துக்களை பற்றி படிப்பது.

4.கனடா

5.இந்தியப் பெருங்கடல்

6.இருதய மாற்றம் / நாயின் இருதயத்தை வெற்றிகரமாக மாற்றினார்.

8.Book of genesis.

9.Ag = SILVER

baranee
16-02-2004, 11:47 PM
10.மெர்க்குரி

The Book of Genesis படிக்க

சுட்டியை தட்டுங்கள்

http://www.talkorigins.org/faqs/genesis.html

thiruarul
17-02-2004, 12:20 AM
என்னைத் தெரியுமா?

2) நான் மருத்துவத்தில் ஒரு சிறப்புப்பிரிவு..
"ஜீரியாட்ரிக்ஸ்" - Geriatrics என் பெயர்!
என் பயனாளிகள் யார்?

இந்தப் பிரிவின் பயனாளிகள் முதியோர்கள் ஆவர். அதாவது இந்தப் பிரிவானது முதிய பராயத்தையும் அதனோடு தொடர்பான நோய்களையும் ( Old age and its diseases ) பற்றிய மருத்துவ அறிவை வழங்கும் . அத்துடன் முதிய நோயாளர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் பராமரிப்பு (Medical care and nursing ) என்பவற்றையும் இத்துறையே கையாளும்.

அன்புடன் திருவருள்
_______________________________________________
தமிழருடன் தமிழர் தமிழ் மூலம் தொடர்பாடுவோம்

sara
17-02-2004, 01:26 AM
1. ரியோடி ஜெனிரோ
7. ஹேம்லெட்

(இளசு, இப்போ நீங்களும் கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டீங்களா.. நல்லது.. நிறைய விசயம் வெளிய வரப்போகுதுன்னு சொல்லுங்க :))

முத்து
17-02-2004, 02:02 AM
நல்லதாய் ஒரு பத்து விஷயம் அறிந்துகொண்டேன்..
நன்றி இளசு அண்ணா ...

இளசு
24-02-2004, 10:42 PM
எல்லா விடைகளும் சரி
பரணீ, சரா, திருவருள் -பாராட்டுகள்

முத்து - நன்றி

7. ஹாம்லெட்
8. பைபிள்

இளசு
24-02-2004, 10:43 PM
11.சாலைகளில் வரையப்படும் செவ்ரான் (chevron) என்ன வடிவம்?

12. ஆன்காலஜி (Oncology) எந்த மருத்துவப்பிரிவைக் குறிக்கிறது?

13.செய்ஸ்மோகிராப் (seismograph) எதை அளக்கிறது?

14. பார்முலா மொழிமாற்றம் ( Formula Translation) செய்யும்
கணினி நிரல்முறை மொழியின் பெயர் என்ன?

15.வயலினில் எத்தனை தந்திகள்?

16. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?

17. பிளாரன்ஸ் (Florence) நகரம் எந்த நாட்டில் உள்ளது?

18. கருகிய ஒயினுக்கு (burnt wine) என்ன பெயர்?

19. 1986ல் ரஷ்யாவில் இங்கு ஒரு விபத்து...

20. கணினியில் bit (பிட்) என்பது எதனுடைய சுருக்கம்?

baranee
24-02-2004, 11:38 PM
13. நிலநடுக்கம்

16. சிரிமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே - 1960-ம் ஆண்டு இலங்கையின் பிரதமர் ஆனார்.

17. இத்தாலி நாட்டில் உள்ளது , நான் சென்று ரசித்து மகிழ்ந்த நகரங்களில் மிகவும் அழகு மிக்கது.

18. பிராந்தி

19. செர்னோபிலில் 1986-ம் வருடம் ஏப்ரல் 26-ம் தேதி அணு உலை வெடித்தது

karikaalan
25-02-2004, 05:37 AM
11. கை குலுக்குதல்?

12. புற்று நோய்.

13. நிலத்தடியில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிவது.

15. சௌடய்யாவின் வயலினில் எட்டு என்று கேள்வி!

===கரிகாலன்

novalia
25-02-2004, 05:49 AM
20. பைனரி டிஜிட் (0, 1)

novalia
25-02-2004, 05:51 AM
14. FORTRAN

madhuraikumaran
25-02-2004, 09:53 PM
11. V வடிவம் அல்லது தலைகீழ் V வடிவம்

12. கட்டிகள் மற்றும் புற்று சம்பந்தப்பட்ட துறை

13. நில அசைவுகளை அளக்கும் கருவி - (நிலநடுக்கத்தையும்)

14. FORTRAN - கணிதப் பயன்பாடுகளுக்காக உருவாக்கப் பட்ட கணினி மொழி

15. நான்கு தந்திகள்

16. சிரிமாவோ பண்டாரநாயகே - 12-ஜூலை-1960

17. இத்தாலி
(அமெரிக்காவில் தெற்கு கரோலினா மாகாணத்திலும் இதே பெயர் கொண்ட ஒரு நகரம் உள்ளது - அப்படிப் பார்த்தால் ஐரோப்பாவில் உள்ள நகர் பெயர்கள் அனைத்தும் அமெரிக்காவிலும் இருக்கும் !)

18. சாக் (sack) ஸ்பானிஷ் மொழிப்படி
கோக்னாக் பிராண்டி (Cognac) (பிரான்ஸின் ஒரு நகரப் பெயர்)

19. செர்னோபில்

20. Binary + digIT

(நன்றி : கூகிள் / என்சைக்ளொப்பீடியாக்கள்)

பாரதி
26-02-2004, 12:36 AM
அசத்திக் கொண்டிருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

karikaalan
26-02-2004, 07:35 AM
18.கோக்னாக் பிராண்டி (Cognac) (பிரான்ஸின் ஒரு நகரப் பெயர்)

மதுரைக்குமரன்ஜி, Cognac-ன் சரியான உச்சரிப்பு -- கோன்யாக். ப்ரான்ஸில், கோன்யாக் என்கிற சிறிய பிரதேசத்தில் விளைகிற திராட்சைகளிலிருந்து தயாரிக்கப்படும் ப்ராந்திக்கு கோன்யாக் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது.

===கரிகாலன்

suma
26-02-2004, 01:11 PM
நான் நினைத்தேன் இளசு யார் தெரியுமா என அவரை பற்றி சொல்ல போறார் என ஆர்வமாய் வந்தேன். 10 விசயம் தெரிய தந்ததற்கு நன்றி தலை...

poo
26-02-2004, 06:52 PM
உள்ளுக்குள்ள தூங்கிக்கிட்டு இருந்த இந்த யோசனையும் வெளிய கிளம்பிடுச்சு....

நன்றிகள் அண்ணா...

(ஆனா.. நம்ம அறிவுக்கு எட்டறாப்போல ஒரு கேள்வியும் இல்லயே..)

இளசு
28-02-2004, 10:09 PM
தொடரும் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே

சுமா என்னைப்பத்தி ஒண்ணுமில்லை சுவாரசியமா..
:lol:

கூகிள் அம்மன் துணையுடன் வந்த மதுரைக்குமரனுக்கும்
கோன்யாக், சௌடய்யா எனக் கூடுதல் தகவல் தந்த அண்ணலுக்கும்
பதில்களில் முந்திக்கொண்ட பரணீ, நோவாலியாவுக்கும் பாராட்டுகள்..11.சாலைகளில் வரையப்படும் செவ்ரான் (chevron) என்ன வடிவம்?
V வடிவம் (நேராய் அல்லது தலைகீழாய் ) - மதுரைக்குமரன்

இனி பதில்கள் (முதலில் பதில் தந்தவர் பெயருடன்)

12. ஆன்காலஜி (Oncology) எந்த மருத்துவப்பிரிவைக் குறிக்கிறது?
புற்று நோய். (அண்ணல்)

13.செய்ஸ்மோகிராப் (seismograph) எதை அளக்கிறது?
நிலநடுக்கம்
(பரணீ)

14. பார்முலா மொழிமாற்றம் ( Formula Translation) செய்யும்
கணினி நிரல்முறை மொழியின் பெயர் என்ன?
ForTran (நோவாலியா)

15.வயலினில் எத்தனை தந்திகள்?

நான்கு ( மதுரைக்குமரன்)

16. உலகின் முதல் பெண் பிரதமர் யார்?
சிரிமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே - 1960-ம் ஆண்டு இலங்கையின் பிரதமர் ஆனார்.
(பரணீ)

17. பிளாரன்ஸ் (Florence) நகரம் எந்த நாட்டில் உள்ளது?
இத்தாலி (பரணீ)

கூடுதல் தகவல் - ம.கு.!

18. கருகிய ஒயினுக்கு (burnt wine) என்ன பெயர்?
பிராந்தி (பரணீ)
மனப்பிராந்தி அல்ல.. Brandy!
இதுவே சரியான விடை..

ஊருக்கு ஊர் பேரூ வச்ச சிறப்பு உ.பாக்கள் நிறய்ய உண்டு
பிரான்சின் cognac, ஸ்பானீஷ் தீவின் மடிரா போல்...
மதுவகைக்கு எல்லை உண்டா என்ன?

19. 1986ல் ரஷ்யாவில் இங்கு ஒரு விபத்து...
செர்னோபிலில் 1986-ம் வருடம் ஏப்ரல் 26-ம் தேதி அணு உலை வெடித்தது
(பரணீ)

20. கணினியில் bit (பிட்) என்பது எதனுடைய சுருக்கம்?
பைனரி டிஜிட் (0, 1) (நோவாலியா)

இளசு
28-02-2004, 10:18 PM
21. அட்லாண்டிக் பெருங்கடலை முதன்முதலில் கடந்த நீராவிக்கப்பல் எது?

22. நீர்த்த அசிடிக் அமிலத்துக்கு புழக்கத்தில் என்ன பெயர்?

23. உலகின் மிகப்பெரிய ஏரி?

24. இந்த தனிமத்தின் பெயருக்கு கிரேக்க மொழியில் " சும்மா, சோம்பேறி" (idle)என்று அர்த்தம்.

25. இந்திரா காந்தி முதலில் பிரதமர் ஆனது எந்த ஆண்டு?

26.டாக்ஸானமி (Taxonomy) என்றால்..?

27.பப்பாளிப் பழத்தில் எந்த வைட்டமின் மிகுந்து உள்ளது?

28. முட்டை போட்டு குஞ்சு பொரித்து .ஆனால் பாலூட்டும் உயிரினம்....?

29. பொதுவாய் கருப்பு துக்கத்தின் சின்னம்.. இஸ்லாத்தில் துக்கம் குறிப்பது எந்த வண்ணம்.....?

30. "அழகின் சிரிப்பு" - இயற்கையின் எழிலை ஆராதிக்கும் இனிய கவிதைகளை எழுதியவர்?

mania
29-02-2004, 01:24 AM
22) வினீகர்
27) விடமின் ஏ
28)வொவ்வால்
26)இறந்த அல்லது இருக்கின்ற உயிர் வாழ் இனங்களின் பிரிவு ?
மீண்டும் வருகிறேன்
அன்புடன்
மணியா

novalia
29-02-2004, 03:27 AM
29. பொதுவாய் கருப்பு துக்கத்தின் சின்னம்.. இஸ்லாத்தில் துக்கம் குறிப்பது எந்த வண்ணம்.....?

நண்பர் இளசு அவர்களுக்கு,

எனக்குத்தெரிந்தவரை இஸ்லாத்தில் துக்கத்துக்கென்று தனி கலர் எதுவும் இல்லை. இஸ்லாத்தின் அடையாளம் பச்சை நிறம் என்பதற்கும்
எந்த ஆதாரமும் இருப்பதாக தெரியவில்லை.. அண்ணண் இக்பால்
அவர்கள் விளக்கினால் நல்லது என நினைக்கின்றேன்...

அன்புடன்
நோவாலியா.

mania
29-02-2004, 05:23 AM
25)1966
23)கேஸ்பியன் சீ
30)பாரதிதாசன்
அன்புடன்
மணியா

mania
29-02-2004, 08:28 AM
28)மன்னிக்கவும் இது வவ்வால் இல்லை. இது ப்ளாட்டிபஸ்.
24) ஆர்காஸ்
அன்புடன்
மணியா

baranee
29-02-2004, 03:03 PM
21.அட்லாண்டிக் பெருங்கடலை முதலில் கடந்த நீராவிக்கப்பலின் பெயர் "குராசோ" (curacao) - ஆண்டு 1826. இது ஒரு டச்சு நாட்டு கப்பல் , ஹாலந்திலிருந்து புறப்பட்டு அட்லாண்டிக் கடலை கடந்து கரிபியன் கடலில் உள்ள "குராசோ" தீவினை அடைந்தது.

karikaalan
01-03-2004, 07:30 AM
25. இந்திரா காந்தி முதலில் பிரதமர் ஆனது எந்த ஆண்டு?

1966

26.டாக்ஸானமி (Taxonomy) என்றால்..? இறந்த மிருகங்களை/பறவைகளைப் பஞ்சடைத்து உண்மையில் இருப்பதுபோல் அலங்காரம் செய்யும் கலை.

27.பப்பாளிப் பழத்தில் எந்த வைட்டமின் மிகுந்து உள்ளது? பெக்டின் (Pectin)

===கரிகாலன்

இளசு
08-03-2004, 07:10 PM
21. அட்லாண்டிக் பெருங்கடலை முதன்முதலில் கடந்த நீராவிக்கப்பல் எது?
சவான்னா -Savannah (சரியா பரணி?)

22. நீர்த்த அசிடிக் அமிலத்துக்கு புழக்கத்தில் என்ன பெயர்?
வினீகர் -vinegar (மணியா)

23. உலகின் மிகப்பெரிய ஏரி?
காஸ்பியன் கடல் ( Caspian sea) - (மணியா)

24. இந்த தனிமத்தின் பெயருக்கு கிரேக்க மொழியில் " சும்மா, சோம்பேறி" (idle)என்று அர்த்தம்.
ஆர்கான் (Argon) - (பிற்பாடு லேசரினால் புகழ்பெற்றது வேறு விஷயம்..) (மணியா)

25. இந்திரா காந்தி முதலில் பிரதமர் ஆனது எந்த ஆண்டு?
1966 (மணியா; அண்ணல்)
(66 முதல் 77 வரை: 80 முதல் 84 வரை)

26.டாக்ஸானமி (Taxonomy) என்றால்..?
தாவரங்களின் பகுப்புப் பட்டியல்

27.பப்பாளிப் பழத்தில் எந்த வைட்டமின் மிகுந்து உள்ளது?
வைட்டமின் ஏ. (மணியா
மஞ்சளான காரட், மாம்பழம் இவற்றிலும் உண்டு.
கண்பார்வைக்கு தேவையான நிறமிகளின் தாய்.

28. முட்டை போட்டு குஞ்சு பொரித்து .ஆனால் பாலூட்டும் உயிரினம்....?
ப்ளாட்டிபஸ்.. (ஆமாம்.. இதுக்கு தமிழில் பெயர் இருக்கா என்ன?)

29. பொதுவாய் கருப்பு துக்கத்தின் சின்னம்.. இஸ்லாத்தில் துக்கம் குறிப்பது எந்த வண்ணம்.....?
வெண்மை.. ( நான் படித்தவரை, தவறெனில் திருத்துங்கள் நண்பர்களே..)

30. "அழகின் சிரிப்பு" - இயற்கையின் எழிலை ஆராதிக்கும் இனிய கவிதைகளை எழுதியவர்?

பூ வாழும் புதுவை தந்த புரட்சிக்கவி பாரதிதாசன்... (மணியா)

இவரின் கவிதைகள் சில -----
இங்கே (http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=3410#3410)
மற்றும் இங்கே (http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1343)

இளசு
08-03-2004, 07:12 PM
31) என்னை "ரசிகமணி" என்று அழைப்பார்கள். கம்பர் தரும் ராமாயணம், முத்தொள்ளாயிரம்,
இதய ஒலி, கம்பர் யார்?, அற்புத ரசம், எனது (....-யின்) கடிதங்கள் - இவை நான் எழுதிய
நூல்கள். நான் யார்?

32) தஞ்சை பூர்வீகம். ஆனால் திருவல்லிக்கேணி வளர்த்த வாண்டு நான். "வந்தார்கள்..
வென்றார்கள்" என் படைப்புதான். நான் யார்?

33) என் பெயர் கெய்ரோ மாநகரம். எந்த நதிக்கரையில் நான் இருக்கிறேன்?

34) ஆங்கிலத்தில் என் பெயர் கேப்ஸிக்கம்..Capsicum. தமிழில் என்னை எப்படி அழைப்பீங்களாம்?

35) ப்ளோரா -flora என்றால் ஓர் இடத்தின் தாவர விவரம். பானா - fauna என்றால் ?

36) 11 ஆண்டுகளில் மகாமகம் வருமா?

37) சிக்மகளூர் தொகுதி எந்த மாநிலத்தில் வருகிறது?

38) மழை உலகிலேயே மிக அதிகம்.. ஆனாலும் குடிநீர்ப்பஞ்சம்.சிரபுஞ்சிக்கு ஏன் இந்த அவலம்?

39) தாலி கட்டி முடித்தவுடன் நாகஸ்வர வித்வான் வாசிக்கும் மங்கல இசை எந்த ராகம்?

40) அண்மையில் மறைந்த நாகிரெட்டி அவர்களின் படநிறுவனத்தின் பெயர் என்ன?

sara
08-03-2004, 07:17 PM
32. மதன் (ஆனந்த விகடன்).
33. நைல் ?
34. குடைமிளகாய்
36. வரும்.

இளசு
08-03-2004, 07:20 PM
பதித்த சூடு ஆறவில்லை சரா...
அசத்தல்....

baranee
08-03-2004, 08:00 PM
40. விஜயா- வாகினி

baranee
08-03-2004, 08:28 PM
21. அட்லாண்டிக் பெருங்கடலை முதன்முதலில் கடந்த நீராவிக்கப்பல் எது?
சவான்னா -Savannah (சரியா பரணி?)

இளசு அண்ணா நீங்கள் கூறுவது ஒரு விதத்தில் சரி ..
ஆனால் சவான்னா - நீராவி எந்திரத்தை கொண்டு இயங்கி இருந்தாலும் தனது பயணத்தின் பெரும்பகுதியை பாய்மரத்தினைக் கொண்டு காற்றின் உதவியால் கடந்தது.

முழுமையாக நீராவி எந்திரத்தின் சக்தியால் அட்லாண்டிக் கப்பலை கடந்த கப்பல் "குராசோ" தான்.

http://www.vrcurassow.com/2dvrc/sscuracao/.../sscuracao.html (http://www.vrcurassow.com/2dvrc/sscuracao/sscuracao.html)

http://baegis.ag.uidaho.edu/~myron/html/rad.htm

http://www.theshipslist.com/ships/Arrivals...ls/RoyWil33.htm (http://www.theshipslist.com/ships/Arrivals/RoyWil33.htm)

தவறான தகவல் எனில் மன்னிக்கவும்.

இளசு
08-03-2004, 08:41 PM
பரணீக்கு

இந்த விஷயத்தில் உங்கள் விஷய ஞானம் என் ஏட்டறிவை விட பெரியது.

உங்கள் பதிலே மிகச் சரியாய் படுகிறது. நன்றி தம்பிக்கு...

baranee
08-03-2004, 09:03 PM
இளசு அண்ணா..

தேடியதில் கிடைத்ததை உறுதி செய்து கொண்டு பதித்தேன்..
மற்றபடி ஞானம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை.....
நன்றி

karikaalan
10-03-2004, 01:18 PM
31) என்னை "ரசிகமணி" என்று அழைப்பார்கள். கம்பர் தரும் ராமாயணம், முத்தொள்ளாயிரம்,
இதய ஒலி, கம்பர் யார்?, அற்புத ரசம், எனது (....-யின்) கடிதங்கள் - இவை நான் எழுதிய
நூல்கள். நான் யார்? திரு டி கே சி (சிவஞானம்).

33) என் பெயர் கெய்ரோ மாநகரம். எந்த நதிக்கரையில் நான் இருக்கிறேன்? நீல நதி.

34) ஆங்கிலத்தில் என் பெயர் கேப்ஸிக்கம்..Capsicum. தமிழில் என்னை எப்படி அழைப்பீங்களாம்? மிளகாய்.

35) ப்ளோரா -flora என்றால் ஓர் இடத்தின் தாவர விவரம். பானா - fauna என்றால் ? மிருகங்கள்/பறவைகள் பற்றிய விவரம்.

37) சிக்மகளூர் தொகுதி எந்த மாநிலத்தில் வருகிறது? கர்நாடகா.

38) மழை உலகிலேயே மிக அதிகம்.. ஆனாலும் குடிநீர்ப்பஞ்சம்.சிரபுஞ்சிக்கு ஏன் இந்த அவலம்? நீர் தேங்குவதில்லை; உடனே வடிந்துவிடுகிறது.

====கரிகாலன்

poo
10-03-2004, 04:41 PM
தெரிஞ்ச ஒரே பதில் விஜயா-வாஹினி..

தொலைக்காட்சி கோடீஸ்வரன் பாணியில் இருக்கு...

(அண்ணா... அமிதாப் கெட்டப்பா.. சரத் கெட்டப்பா?!!)

இளசு
10-03-2004, 06:52 PM
பரணீ.. இந்த அடக்கம் உங்களை மேலும் உயர்த்துகிறது - அண்ணனின் மனத்தராசில்..

அண்ணலுக்கு, தம்பி பூவுக்கு நன்றி

நாளை பதில்கள் தந்துவிடலாமா?

இளசு
13-03-2004, 07:58 PM
31) <span style='color:#0000ff'>என்னை "ரசிகமணி" என்று அழைப்பார்கள். கம்பர் தரும் ராமாயணம், முத்தொள்ளாயிரம்,
இதய ஒலி, கம்பர் யார்?, அற்புத ரசம், எனது (....-யின்) கடிதங்கள் - இவை நான் எழுதிய
நூல்கள். நான் யார்? </span>

திரு டி. கே. சி. அவர்கள்..
(அண்ணலே.. சிதம்பரம் என்பது அவர் பெயர் என என் நினைவு...
சிகாமணி என்று உறுதியாய் நீங்கள் சொன்னால் என் டேட்டா பேஸில் திருத்திக்கொள்கிறேன்..)

மற்ற இரு மணிகள்...

பண்டிதமணி - கதிரேசன் செட்டியார்
கவிமணி - தேசிய விநாயகம் பிள்ளை

32) <span style='color:#3600ff'>தஞ்சை பூர்வீகம். ஆனால் திருவல்லிக்கேணி வளர்த்த வாண்டு நான். "வந்தார்கள்..
வென்றார்கள்" என் படைப்புதான். நான் யார்? </span>

ஈரோட்டு மக்கள் மலர்க்கிரீடம், வீர வாள் தந்து, காலிலும் விழுந்து
சங்கட அதிர்ச்சிக்கு ஆளாக்கிய " மதன்" ( ஆனந்தவிகடன்..)
சில காலம் ஜீ.வி.யின் இணை ஆசிரியர். எப்போதும் கார்ட்டூன் கிங்!
இப்போது ஆவியில் கேள்வி பகுதியால் எனக்கு ஹீரோ ஆனவர்.
சின்னத்திரையில் வெள்ளித்திரை விமர்சகர் ( மதன் பார்வை)
பரந்த படிப்பறிவு, மெல்லிய நகைச்சுவை இழையோடும் வகையில்
இவர் பாதி ஜுனியர் சுஜாதா.. ( சீனியர் போல் கதை எல்லாம் எழுதலல்ல.. அதான் பாதி ஜூனியர்)

33) என் பெயர் கெய்ரோ மாநகரம். எந்த நதிக்கரையில் நான் இருக்கிறேன்?

நைல் நதி... - எகிப்தின் துயரம்.(சரா, அண்ணல்)

கண்ணதாசன் பாட்டு பாடும் ஹீரோயின்
அந்த நீலநதிக்கரை ஓரம் - நான்
நின்றிருந்தேன் அந்தி நேரம்னா....

வண்டியை கெய்ரோவுக்கு விடுப்பான்னு ஹீரோ சொல்லணும்..

34) ஆங்கிலத்தில் என் பெயர் கேப்ஸிக்கம்..Capsicum. தமிழில் என்னை எப்படி அழைப்பீங்களாம்?

மிளகாய் ( சரா, அண்ணல்)

35) ப்ளோரா -flora என்றால் ஓர் இடத்தின் தாவர விவரம். பானா - fauna என்றால் ?

மிருகங்கள்/பறவைகள் பற்றிய விவரம். (அண்ணல்)

36) 11 ஆண்டுகளில் மகாமகம் வருமா?
வரும் ( சரா)

குருவாகிய வியாழன் சிம்மராசியில் இருக்க...
மாசி மாதத்தில் பௌர்ணமியும் மக நட்சத்திரமும் சேரும் நாள்தான் - மகாமகம்.

வியாழன் சூரியனை ஒரு முறை சுற்ற 4332 நாட்கள் ஆகிறது.
இது சரியாக 12 வருடங்கள் இல்லை. 11. 868 ஆண்டுகள்தான்!
(நான் கணக்கில் புளி.. நன்றி ஆ.விகடனுக்கு)
எனவே கணக்கு அட்ஜஸ்ட் பண்ண அப்பப்போ 11 ஆண்டுகளிலேயே
மாமாங்கம் வந்துடும் . அதுக்கு ஸ்பெஷல் பேரு - இள(சு)மாமாங்கம்!

37) சிக்மகளூர் தொகுதி எந்த மாநிலத்தில் வருகிறது?
கர்நாடகா ( அண்ணல்)

இந்திராகாந்தி நின்ன தொகுதி இல்லியா அண்ணலே?

3 மழை உலகிலேயே மிக அதிகம்.. ஆனாலும் குடிநீர்ப்பஞ்சம்.சிரபுஞ்சிக்கு ஏன் இந்த அவலம்?

நீர் தேங்குவதில்லை; உடனே வடிந்துவிடுகிறது. (அண்ணல்)

வருவது முக்கியமில்லை.. நிக்குதா.. ஒட்டுதா.. அதான் முக்கியம்..

39) தாலி கட்டி முடித்தவுடன் நாகஸ்வர வித்வான் வாசிக்கும் மங்கல இசை எந்த ராகம்?

முகாரி....

சோகராகமான இதை மங்கல நிகழ்ச்சியில் வித்வான்கள் காலங்காலமாய் வாசிப்பதன்
தாத்பர்யம் புரியவில்லை. தெரிந்தவர்கள் விளக்குங்களேன்...

தாலி கட்டும் காட்சி கண்டு நான் கண்கலங்காத திருமணம் இல்லை.
நெகிழ்ச்சியான காட்சி அது..

முகாரி ராகத்தில் தமிழில் இரு டூயட் பாட்டுகள் உண்டு
ஒன்று : அம்பிகாபதி ( சிவாஜி - பானுமதி - இசை : ஜி. ராமனாதன்)
இரண்டு : சிவகங்கைச் சீமை ( கண்ணதாசன் சொந்தப்படம்)

40) அண்மையில் மறைந்த நாகிரெட்டி அவர்களின் படநிறுவனத்தின் பெயர் என்ன?

விஜயா- வாகினி (பரணீ, பூ)

நாலு முழ கதர் வேட்டி, கதர்ச் சட்டை என படுசிம்ப்பிளாய் இவரை விஜயா மருத்துவமனை
வளாகத்தில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். அடிமட்ட தொழிலாளியுடன் நெருக்கமாய்ப் பேசியபடி
வளையவந்த இவரைப் பார்த்தால் எங்க வீட்டுப்பிள்ளை, உழைப்பாளி படங்கள் எடுத்த முதலாளி
பொம்மை, அம்புலிமாமா இதழ்களின் உரிமையாளர், தென் சென்னையின் இரு பெரும்
மருத்துவமனைகளின் அதிபர் என்று நம்புவது கடினம்.. அத்தனை எளிமை..

karikaalan
14-03-2004, 11:13 AM
இளவல்ஜி

தங்கள் செய்தியே சரி. டிகேசி அவர்கள் திரு சிதம்பரம்தான்.

தாங்கள் கொடுத்துள்ள பண்டிதமணி கதிரேசன் செட்டியார் பற்றிய செய்தியை பிறகு பதிகிறேன்.

===கரிகாலன்

இளசு
14-03-2004, 08:47 PM
நன்றி அண்ணலே அண்ணலே

அண்ணல் உடையான் இன்னல் அடையான்..

இளசு
15-03-2004, 08:23 PM
41) அண்மையில் என் பேர் வெகு பரபரப்பில். என் பூர்வாசிரமப் பேர் - குடமூக்கு.
நான் யார்?

42) சட்டென சாலை வளைவில் உங்கள் வண்டியைத் திருப்பியவுடன்
போக்குவரத்து சிக்னல்..மிக எதிரிலேயே...
சிகப்பும், பொன்மஞ்சளும் (ஆம்பர் - amber) சேர்ந்து ஒளிர்கின்றன.
அடுத்து ஒளிரப்போவது யார் - சிவப்பா? பச்சையா?

43) கவிஞர் இசாக் என் படைப்புகள் பற்றி நம் மன்றத்தில் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார். என் ஊர் விருத்தாசலம். நான் யார்?

44) என் பெயர் ஈவா ப்ரான். என்னுடைய ரகசிய சிநேகிதர் யார்?

45) எனக்கு க்ரோமோபோபியா (Chromophobia) - நான் எதைப் பார்த்து பயப்படுவேன்?

46) முட்டாள்களின் தங்கம் ( Fool's Gold) ஆகிய நான் யார்?

47) ஷேக்ஸ்பியர் வடித்த காவிய (?) நாயகன் நான்...
"அரேபியாவின் அத்தனை வாசனை திரவியங்களாலும்
பாவக்கறை படிந்த என் கைகளைக் கழுவி விட முடியுமா"
எனப் புலம்பியவன் நான்..

"ஏறக்குறைய சொர்க்கம்" என்ற சுஜாதா நாவலில் வந்த நாயகன் போல்
அழகிய மனைவியின் மேல் சந்தேகம் வந்து ஆனால் நிரூபிக்கவும் முடியாமல்
ஊசலாடும் மனநிலைக்கு என் பேரில் ஒரு சிண்ட்ரோமே ( Syndrome) உண்டு..

நான் யார்?

48) ரைட் சகோதரர்கள் பறந்த விமானம் நான்.. என் பெயர் என்ன?

49) கண்ணதாசனுக்கு அண்ணி நான். காலத்தால் அழியாப் பாடல்கள் சில
பாடிய நடிகை நான்.. நான் யார்?

50) சிவகாமியின் சபதம்-- வில்லன் நான்... விஷம் ஏறிய மனிதன் நான்.. நான் யார்?

முத்து
15-03-2004, 09:44 PM
50. நாகநந்தி

baranee
15-03-2004, 11:08 PM
45.வண்ணங்களை பார்த்து பயப்படுவது

karikaalan
16-03-2004, 05:58 AM
[quote]41) அண்மையில் என் பேர் வெகு பரபரப்பில். என் பூர்வாசிரமப் பேர் - குடமூக்கு.
நான் யார்? கும்பகோணம்.

42) சட்டென சாலை வளைவில் உங்கள் வண்டியைத் திருப்பியவுடன்
போக்குவரத்து சிக்னல்..மிக எதிரிலேயே...
சிகப்பும், பொன்மஞ்சளும் (ஆம்பர் - amber) சேர்ந்து ஒளிர்கின்றன.
அடுத்து ஒளிரப்போவது யார் - சிவப்பா? பச்சையா? பச்சை.

43) கவிஞர் இசாக் என் படைப்புகள் பற்றி நம் மன்றத்தில் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார். என் ஊர் விருத்தாசலம். நான் யார்? அப்துல் ஜப்பார்?

44) என் பெயர் ஈவா ப்ரான். என்னுடைய ரகசிய சிநேகிதர் யார்? அர்ஜெண்டினா அதிபராக இருந்தவர்?

47) ஷேக்ஸ்பியர் வடித்த காவிய (?) நாயகன் நான்...
"அரேபியாவின் அத்தனை வாசனை திரவியங்களாலும்
பாவக்கறை படிந்த என் கைகளைக் கழுவி விட முடியுமா"
எனப் புலம்பியவன் நான்.. ஒதெல்லோ?

50) சிவகாமியின் சபதம்-- வில்லன் நான்... விஷம் ஏறிய மனிதன் நான்.. நான் யார்? நாகநந்தி

====கரிகாலன்

kavitha
16-03-2004, 11:24 AM
அடிக்கடி இந்தப்பக்கம் வந்தா நம்ம டேட்டா பேஸ் ல ஏத்திக்கலாம் போல..
ரேப்பிட் ரவுண்டு மாதிரி கேள்வியும் பதிலும் தூள் தூள்!

thiruarul
17-03-2004, 08:40 AM
42 பச்சை
45 நிறங்களைப் பார்த்து (Fear of Color) . சாயமூட்டிகளால் தரமாகச் சாயமூட்டப்படாத (quality of staining poorly wih dyes) என்றொரு பொருளும் இதற்கு உள்ளதாக ஞாபகம்.

44. அடோல்வ் ஹிட்லர். செஞ்சேனையிடம் அகப்படாதிருக்க இருவரும் ஒன்றாகவே தற்கொலை செய்துகொண்டனர் என்றும் அதற்குச் சற்றுமுன் அவசரமாகத் திருமணப்பதிவை மேற்கொண்டனர் எனவும் சொல்லப்படுகிறது.

48. பறப்பான் (Flyer) ?!

அன்புடன் திருவருள்
__________________________________________
தமிழருடன் தமிழர் தமிழ் மூலம் தொடர்பாடுவோம்

poo
17-03-2004, 11:03 AM
43.அண்ணன் அறிவுமதி

karikaalan
22-03-2004, 11:45 AM
இளவலைக் காணோம்!!

===கரிகாலன்

இளசு
22-03-2004, 10:16 PM
வந்துவிட்டேன் அண்ணலே..

விடைகள்---

41) அண்மையில் என் பேர் வெகு பரபரப்பில். என் பூர்வாசிரமப் பேர் - குடமூக்கு.
நான் யார்?
கும்பகோணம். (அண்ணல்)
கும்பம் என்றால் குடம். மூக்கு என்றால் அதன் கோணம்.
உலகம் அழிய இறைவன் அமுத குடத்தைக் கவிழ்த்ததில்
அதன் மூக்கு வழியாய் அமுதம் வழிந்த தலம்.
(பின் வடமொழியாய் மாறிப்போனது)

42) சட்டென சாலை வளைவில் உங்கள் வண்டியைத் திருப்பியவுடன்
போக்குவரத்து சிக்னல்..மிக எதிரிலேயே...
சிகப்பும், பொன்மஞ்சளும் (ஆம்பர் - amber) சேர்ந்து ஒளிர்கின்றன.
அடுத்து ஒளிரப்போவது யார் - சிவப்பா? பச்சையா?

பச்சை.. (அண்ணல்)

ஆம்பர் மட்டும் எரிந்தால் அடுத்து வருவது சிவப்பு...

43) கவிஞர் இசாக் என் படைப்புகள் பற்றி நம் மன்றத்தில் ஒரு கட்டுரை
எழுதி இருக்கிறார். என் ஊர் விருத்தாசலம். நான் யார்?

கவிஞர் கடற்கரய்...

44) என் பெயர் ஈவா ப்ரான். என்னுடைய ரகசிய சிநேகிதர் யார்?

ஹிட்லர் (திருவருள்..கூடுதல் தகவல்களுடன்..)

45) எனக்கு க்ரோமோபோபியா (Chromophobia) - நான் எதைப் பார்த்து பயப்படுவேன்?
வண்ணங்களை பார்த்து பயப்படுவது
பரணீ மற்றும் திருவருள் - விளக்கத்துடன்..

46) முட்டாள்களின் தங்கம் ( Fool's Gold) ஆகிய நான் யார்?

இரும்பு ... (அயர்ன் ஆக்ஸைடு வெளுப்பாய் மின்னி சுரங்கம் தோண்டவைத்து
பலர் சொத்தை எழுதிவாங்கி பலி வாங்கியிருக்கிறது)

47) ஷேக்ஸ்பியர் வடித்த காவிய (?) நாயகன் நான்...
"அரேபியாவின் அத்தனை வாசனை திரவியங்களாலும்
பாவக்கறை படிந்த என் கைகளைக் கழுவி விட முடியுமா"
எனப் புலம்பியவன் நான்..

"ஏறக்குறைய சொர்க்கம்" என்ற சுஜாதா நாவலில் வந்த நாயகன் போல்
அழகிய மனைவியின் மேல் சந்தேகம் வந்து ஆனால் நிரூபிக்கவும் முடியாமல்
ஊசலாடும் மனநிலைக்கு என் பேரில் ஒரு சிண்ட்ரோமே ( Syndrome) உண்டு..

நான் யார்?

ஒத்தல்லோ (Othello) (அண்ணல்)

4 ரைட் சகோதரர்கள் பறந்த விமானம் நான்.. என் பெயர் என்ன?
ப்ளையர் (Flyer) - திருவருள்..

49) கண்ணதாசனுக்கு அண்ணி நான். காலத்தால் அழியாப் பாடல்கள் சில
பாடிய நடிகை நான்.. நான் யார்?

எஸ். வரலட்சுமி (ஏ.எல்.சீனிவாசனின் மனைவி)

வெள்ளிமலை மன்னவா(கந்தன் கருணை)
இந்தப்பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவில் ( நீதிக்குத்தலைவணங்கு)
ஏடுதந்தானடி தில்லையிலே ( ராஜராஜசோழன்)
கண்ணான கண்ணே உன் சிங்கார வாயால் ( வீரபாண்டியக் கட்டபொம்மன்)

50) சிவகாமியின் சபதம்-- வில்லன் நான்... விஷம் ஏறிய மனிதன் நான்.. நான் யார்?
நாகநந்தி (முத்து, அண்ணல்)

அப்பல்லாம் நம்பியாரை இந்த ரோலில் போட்டு நீல வெளிச்சம் அடிச்சா பொருந்தும்னு நினைப்பேன்..
இப்ப யாரை இந்த ரோலில் நடிக்க வைக்க?

இளசு
25-03-2004, 10:28 PM
1. சாலையோர டிராபிக் சின்னங்களில்
வட்டத்துக்குள் இருக்கும் குறியீடுகளுக்கும்
முக்கோணத்துக்குள் இருக்கும் குறியீடுகளுக்கும்
என்ன வித்தியாசம்?

52. நான் கள்ளிச்சப்பாத்தி செடி. பாலையிலும் நான்
வளர்கிறேனே..எப்படி?

53. நான் தான் உங்கள் மூளை. என்னில் எத்தனை நரம்பு செல்கள்
(Neurons) சுமாராய் உள்ளன?

54. வறுமையான உலக நாடுகளில் ஹெப்படைட்டிஸ் - B தடுப்பு ஊசி
போட பல மில்லியன் டாலர்கள் கொடை கொடுத்த நான் யார்?

55. நான் ஒரு டால்பின். பரிணாமப்படி திமிங்கிலம் என் சொந்தமா?

56. நான் குற்றாலக்குறவஞ்சி இயற்றியவன். அடியேன் பெயர் நினைவிருக்கா?

57. முன்னர் ஒலிம்பிக் போட்டி நடந்த நகரம் நான். ஒரு மில்லியன் மக்கள் கூடும்
சர்ச் என் பெருமிதம். நான் யார்?

58. அங்கோராவில் நான் பிறந்தால், உங்களுக்கு ஸ்வெட்டர் தருவேன். நான் யார்?

59. 1983 கிரிக்கெட் உலக கோப்பை வாங்கித் தந்த என்னை நினைவிருக்கா மக்கா?

60. நூலகத்தில் தவறி விழுந்து அடிபட்ட மகன் உயிரைக் காப்பாற்ற என் உயிரை எடுத்துக்கொள்ள
இறையை வேண்டிய மன்னன் நான்... நான் யார்?

baranee
25-03-2004, 10:41 PM
54. பில் கேட்ஸ் ???

59. கபில் தேவ்

baranee
25-03-2004, 10:48 PM
56. திரிகூட ராசப்ப கவிராயர்

இளசு
25-03-2004, 10:49 PM
தம்பி பரணி.. ஹேட்ட்ரிக்ஸ்.. வாழ்த்துகள்..தொடருங்கள்..

karikaalan
26-03-2004, 05:01 AM
52. நான் கள்ளிச்சப்பாத்தி செடி. பாலையிலும் நான்
வளர்கிறேனே..எப்படி? ஈரப்பதம் எங்கிருந்தாலும் அதனை உள்வாங்கி தேக்கிவைத்துக்கொள்ளும் சுபாவம் எனக்கு.

53. நான் தான் உங்கள் மூளை. என்னில் எத்தனை நரம்பு செல்கள்
(Neurons) சுமாராய் உள்ளன? மூளையா? தேடவேண்டியதுதான்னு என்னோட டாக்டர் சொன்னாரே!

55. நான் ஒரு டால்பின். பரிணாமப்படி திமிங்கிலம் என் சொந்தமா? குட்டி போட்டு பால்கொடுக்கும் பிராணி இரண்டுமே. சொந்தம் பந்தம் தெரியாது.

57. முன்னர் ஒலிம்பிக் போட்டி நடந்த நகரம் நான். ஒரு மில்லியன் மக்கள் கூடும்
சர்ச் என் பெருமிதம். நான் யார்? ரோமாபுரி

58. அங்கோராவில் நான் பிறந்தால், உங்களுக்கு ஸ்வெட்டர் தருவேன். நான் யார்? முயல்

===கரிகாலன்

இளசு
28-03-2004, 09:43 PM
இளவல் பரணீக்கும் அண்ணலுக்கும் நன்றிகள்..

நாளை முழு விடைகள்...

இக்பால்
29-03-2004, 03:03 PM
1.சாலைப் போக்குவரத்துக் குறியீடுகள் வட்டத்திற்குள் இருந்தால் அது
கட்டளை-Order ஆகும். அதை நீங்கள் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.

முக்கோண ஆகும்.
பாதுகாப்பாகஇருந்து கொள்வது உங்கள் பொறுப்பு.

இன்னும் ஒன்று செவ்வகம். அது சாலை விதிகள் சம்பந்தமான
செய்தி-Information ஆகும்.

இக்பால்
29-03-2004, 03:13 PM
53. 100 பில்லியன்கள்.( ஒரு பில்லியன்=100 கோடிகள்...சரிங்களா?).

மன்மதன்
29-03-2004, 03:19 PM
ஒரு பில்லியன் 10 கோடிகளா இல்லை ஒரு கோடியா? நிச்சயமாக 100 கோடிகள் இல்லையென்று நினைக்கிறேன்..

இக்பால்
29-03-2004, 04:09 PM
இருங்க தம்பி போட்டு பார்த்து விடுகிறேன்.

1மில்லியன்=10இலட்சம்.
10மில்லியன்கள்=1கோடி.
100மில்லியன்கள்=10கோடிகள்.
1000மில்லியன்கள்=100கோடிகள்=1பில்லியன்.

இன்னைக்கு சரியான அலைச்சல். இன்னும் குழப்பம் தீர்ந்தபாடில்லை.
இளசு அண்ணாவே சொல்லட்டும். மற்றவர்களும் சொல்லலாம். :)

mania
30-03-2004, 07:36 AM
1,000,000,000 = ஒரு பில்லியன் ஆகும்
அன்புடன்
மணியா

இக்பால்
30-03-2004, 08:58 AM
1,000,000,000 = ஒரு பில்லியன் ஆகும்
அன்புடன்
மணியா

அண்ணா, எத்தனை கோடி எனச் சொல்லுங்கள்? :)

mania
30-03-2004, 09:16 AM
100 கோடிகள் ,. நீங்கள் சொன்னது சரியே .
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
30-03-2004, 04:44 PM
60. பாபர்.

இளசு
30-03-2004, 10:40 PM
1. சாலையோர டிராபிக் சின்னங்களில்
வட்டத்துக்குள் இருக்கும் குறியீடுகளுக்கும்
முக்கோணத்துக்குள் இருக்கும் குறியீடுகளுக்கும்
என்ன வித்தியாசம்?

இளவல் இக்பால் (கூடுதல் செவ்வகத் தகவலுடன்..சபாஷ் இக்பால்):
முக்கோணத்திற்குள் இருந்தால் அது எச்சரிக்கை-Warning ஆகும்.
பாதுகாப்பாகஇருந்து கொள்வது உங்கள் பொறுப்பு.
இன்னும் ஒன்று செவ்வகம். அது சாலை விதிகள் சம்பந்தமான
செய்தி-Information ஆகும்.

52. நான் கள்ளிச்சப்பாத்தி செடி. பாலையிலும் நான்
வளர்கிறேனே..எப்படி?
வேர் ஆழத்தால்
செழித்த தண்டின் சேமிப்பால்
தடித்த இலை வேர்க்காததால் (அண்ணல்)

(கொடுக்காதீர் கள்ளிப்பால்)

53. நான் தான் உங்கள் மூளை. என்னில் எத்தனை நரம்பு செல்கள்
(Neurons) சுமாராய் உள்ளன?
100 பில்லியன் (சபாஷ் இக்பால்)

அண்ணலுக்கு 1000 பில்லியனோ???

54. வறுமையான உலக நாடுகளில் ஹெப்படைட்டிஸ் - B தடுப்பு ஊசி
போட பல மில்லியன் டாலர்கள் கொடை கொடுத்த நான் யார்?
பில் கேட்ஸ் (பாராட்டுகள் தம்பி பரணீ)

55. நான் ஒரு டால்பின். பரிணாமப்படி திமிங்கிலம் என் சொந்தமா?

சொந்தமே , பாலூட்டிகள், வெப்ப ரத்த பிராணிகள் (அண்ணல்)
முன்னது மனித நேயன்.. பின்னது பேயன்..

56. நான் குற்றாலக்குறவஞ்சி இயற்றியவன். அடியேன் பெயர் நினைவிருக்கா?
பரணீ அருமை..: திரிகூட ராசப்பக் கவிராயர்..
இன்னைக்கு லாவண்யா இவரின் பாட்டு தூவலை சினிமா பாடல் பதிவில்
தந்திருக்கிறார்..http://www.tamilmantram.com/board/viewtopic.php?p=61713&highlight=#61713

57. முன்னர் ஒலிம்பிக் போட்டி நடந்த நகரம் நான். ஒரு மில்லியன் மக்கள் கூடும்
சர்ச் என் பெருமிதம். நான் யார்?
சீயோல் (கொரியா - தென்)

58. அங்கோராவில் நான் பிறந்தால், உங்களுக்கு ஸ்வெட்டர் தருவேன். நான் யார்?
காஷ்மீர் போலவே செம்மறி ஆடு (சரியா அண்ணலே????)

59. 1983 கிரிக்கெட் உலக கோப்பை வாங்கித் தந்த என்னை நினைவிருக்கா மக்கா?
மக்கள் நாயகன் கபில் தேவ் (பரணீ...சபாஷ்)

60. நூலகத்தில் தவறி விழுந்து அடிபட்ட மகன் உயிரைக் காப்பாற்ற என் உயிரை எடுத்துக்கொள்ள
இறையை வேண்டிய மன்னன் நான்... நான் யார்?

முகலாயச் சிங்கம் பாபர் (பரஞ்சோதி.. அருமை..)

அடுத்து நண்பர்கள் தொடர வேண்டுகிறேன்...

thiruarul
31-03-2004, 12:23 AM
61) உலகின் முதலாவது விண்ஆய்வுகூடத்தின் (Space station) பெயர் இது. இதன் அர்த்தம் 'உலகம்' என்பதாகும்

62) ஏட்டுச் சுவடியிலிருந்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையினை முதன்முதலில் (1868 புரட்டாதி மாதம்) அச்சுவாகனமேற்றிய பெருமகன் இவர்.

63) சூரபதுமனின் பட்டத்தரசி

64) ஆங்கிலக் கால்வாயினை முதன்முதலில் நீந்திக் கடந்த தமிழர்.

65) யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னன்

66) 'மணிப்பிரவாள நடை' என்றால் என்ன?

67) அமெரிக்க சுதந்திரதேவி சிலை எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

68 ) முதலாம் இராசராச சோழனின் இயற்பெயர்

69) மருத்துவத்துறையில் ELISA எனப்படுவது .......?!

70) தமிழகத்தின் மொத்தசனத்தொகை (2001 குடித்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம்)

baranee
31-03-2004, 01:36 AM
61.சல்யூட் 1

64.குற்றாலீஸ்வரன்

67.பிரான்ஸ்

kavitha
31-03-2004, 03:51 AM
66. தமிழும், வடமொழியும் கலந்த நடை

இக்பால்
31-03-2004, 03:55 AM
68 ) முதலாம் இராசராச சோழனின் இயற்பெயர்

தங்கச்சி...இதுதானே நீங்கள் விடைக் கொடுத்திருக்கும் கேள்வி.
விடை சரிங்களா?

kavitha
31-03-2004, 05:44 AM
69.மருத்துவத்துறையில் ELISA எனப்படுவது .......?! = எயிட்ஸ் கண்டுபிடிப்பதற்கான சோதனை

அவசரத்தில் எண்ணை மாற்றி விட்டேன் அண்ணா. இப்போது சரி செய்து விட்டேன்.

இளசு
31-03-2004, 09:50 PM
தொடரும் நண்பர் திருவருள் அவர்களுக்கும்
தூள் கிளப்பும் நண்பர்களுக்கும்
பாராட்டுகள்...

(விடைகளா..? கொஞ்சம் வேலை இருக்கு.. அப்புறம் வா....ரேன்..)

sara
31-03-2004, 11:38 PM
68 ) முதலாம் இராசராச சோழனின் இயற்பெயர்

அருண்மொழி (தேவர்) ?? ('முதலாம்' அப்படின்னு சேர்த்ததால் கொஞ்சம் குழப்பமிருக்கு.)

பாரதி
01-04-2004, 12:37 AM
62. வீரமா முனிவர்

kavitha
01-04-2004, 02:53 AM
67) அமெரிக்க சுதந்திரதேவி சிலை எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது? = பிரான்ஸ்

karikaalan
01-04-2004, 11:09 AM
63) சூரபதுமனின் பட்டத்தரசி -- பதுமகோமளை

69) மருத்துவத்துறையில் ELISA எனப்படுவது .......?! -- மற்ற சோதனைகளில் சந்தேகமிருந்தால், எலிஸா முறைப்படி இரத்தத்தையோ, சிறுநீரையோ ஆய்வு செய்வது. enzyme-linked immunosorbent assay (ELISA)

எலிஸா பற்றிய ஆங்கில மூலம் திருவருள்ஜியின் வேறொரு பதிவிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது!

===கரிகாலன்

சேரன்கயல்
01-04-2004, 11:30 AM
இனிய இளசுவின் கேள்விகளுக்கு மக்கள் பதில்களை மழையா பொழிஞ்சிருக்காங்கப்பா...அசத்தலோ அசத்தல்...

பரஞ்சோதி
02-04-2004, 04:37 PM
70) 62,110,839. இதில் ஆண்கள் = 31,268,654 , பெண்கள் = 30,842,185.

நன்றி: தமிழக அரசாங்கம்.

பாரதி
02-04-2004, 05:25 PM
இனிய இளசுவின் கேள்விகளுக்கு மக்கள் பதில்களை மழையா பொழிஞ்சிருக்காங்கப்பா...அசத்தலோ அசத்தல்...

சேரன்.. இப்ப கேள்வி கேட்டிருப்பது திருவருள்தானே...!!
:lol:

சேரன்கயல்
03-04-2004, 11:48 AM
சேரன்.. இப்ப கேள்வி கேட்டிருப்பது திருவருள்தானே...!!
:lol:

ஆமாம் பாரதி...
இப்ப கேட்டிருப்பது திருவருள்தான்...
ஆனால் நான் குறிப்பிட்டது...அப்போ கேட்ட நபரைப்பற்றி... :wink:

சேரன்கயல்
03-04-2004, 12:10 PM
61) உலகின் முதலாவது விண்ஆய்வுகூடத்தின் (Space station) பெயர் இது. இதன் அர்த்தம் 'உலகம்' என்பதாகும்

MIR

kavitha
30-04-2004, 08:13 AM
திருவருள், விடைகளை சொல்லுங்கள்!!

thiruarul
25-06-2004, 02:04 AM
சரியான பதில்களை அளித்த மற்றும் கலந்து கொண்டுபதிலளித்த நண்பர்கட்கு எனது வந்தனங்கள்

61) உலகின் முதலாவது விண்ஆய்வுகூடத்தின் (Space station) பெயர் இது. இதன் அர்த்தம் 'உலகம்' என்பதாகும்

மிர் (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய சேரன்கயல் அவர்கள்)

62) ஏட்டுச் சுவடியிலிருந்த தொல்காப்பியம் சொல்லதிகாரம் சேனாவரையர் உரையினை முதன்முதலில் (1868 புரட்டாதி மாதம்) அச்சுவாகனமேற்றிய பெருமகன் இவர்.

சி.வை. தாமோதரம்பிள்ளையவர்கள்

63) சூரபதுமனின் பட்டத்தரசி

பதுமகோமளை (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய karikaalan அவர்கள்)

64) ஆங்கிலக் கால்வாயினை முதன்முதலில் நீந்திக் கடந்த தமிழர்.

ஆழிக்குமரன் ஆனந்தன்

65) யாழ்ப்பாண இராச்சியத்தின் கடைசித் தமிழ் மன்னன்

சங்கிலியன்

66) 'மணிப்பிரவாள நடை' என்றால் என்ன?

தமிழும், வடமொழியும் கலந்த நடை (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய கவிதா அவர்கள்)

67) அமெரிக்க சுதந்திரதேவி சிலை எந்த நாட்டில் வடிவமைக்கப்பட்டது?

பிரான்ஸ் (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய பரணி அவர்கள்)

68 ) முதலாம் இராசராச சோழனின் இயற்பெயர்

அருண்மொழிவர்மன்

69) மருத்துவத்துறையில் ELISA எனப்படுவது .......?!

enzyme-linked immunosorbent assay (ELISA)
அதாவது நிர்ப்பீடனப் பரிசோதனை முறை (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய karikaalan அவர்கள்)

70) தமிழகத்தின் மொத்தசனத்தொகை (2001 குடித்தொகைக் கணக்கெடுப்பின் பிரகாரம்)

62,110,839. (நன்றியும் பாராட்டும் :மதிப்பிற்குரிய பரஞ்சோதி அவர்கள்)

குறிப்பு சலிக்காது இரு தடவகைள் ஞாபகமூட்டிய மதிப்பிற்குரிய கவிதா அவர்கட்கு சிரம்தாழ்ந்த நன்றிகள். முதற்தடவை ஞாபகமூட்டியவுடன் மறுநாள் பதிப்பதாக எண்ணியபடி நித்திரைக்குச் சென்றவன் மறுபடி இன்றுதான் இரண்டாவது ஞாபகமூட்டலைக் கண்டதும் செயற்பட்டேன். முதற்தடவையோடு பதில் தராமைக்குப் பொறுத்தருள்வீர்கள் என நம்புகிறேன்.

அன்புடன் திருவருள்

kavitha
25-06-2004, 03:29 AM
முதற்தடவையோடு பதில் தராமைக்குப் பொறுத்தருள்வீர்கள் என நம்புகிறேன்.
:) :) :) :)

பதில்களுக்கு மிக்க நன்றி... கேள்விக்கேட்டுவிட்டு விடை தெரியாவிட்டால் எனக்கு 'சிந்துபைரவி' ஜனகராஜ் நிலை... அதனால்தான் உங்களை நச்சரித்துவிட்டேன்..மீண்டும் நன்றி

thiruarul
25-06-2004, 03:46 AM
கேள்விக்கேட்டுவிட்டு விடை தெரியாவிட்டால் எனக்கு 'சிந்துபைரவி' ஜனகராஜ் நிலை... அதனால்தான் உங்களை நச்சரித்துவிட்டேன்.

திரைப்படங்கள் பார்ப்பதில்லையாதலின் தங்கள் மறைகருத்துப் புரியாவிடினும் தலைவெடித்துவிடும் என்று சொல்ல வருகிறீர்கள் எனக் கருதுகிறேன்

அன்புடன் திருவருள்

இளசு
25-06-2004, 11:13 PM
நன்றி அன்பின் திருவருள் அவர்களுக்கு

இங்கோ மீண்டும் வினாடிவினா பதிவிலோ.. நீங்களும் நண்பர்களும் எப்போதும் தொடரலாம்...

இடைவெளி விழுந்தால் இட்டு நிரப்ப நானிருக்கேன்...