PDA

View Full Version : காதல் மொழிகள்..



இளசு
14-02-2004, 11:46 PM
காதல் மொழிகள்

(யாரோ சொல்லி எங்கோ படித்தவை)


என்றாவது ஒரு தினம்
நான் சொல்லவில்லை
என்றாலும் கூட
எப்போதும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை நினவிவில் வை


****************************

வீட்டுக்குள் காதல் இருந்தால்
இதயத்தில் மகிழ்ச்சி இருக்கும்


****************************

யாரும் காணவில்லை என நடனம் ஆடு
யாரும் கேட்கவில்லை என கானம் பாடு
வலியே வந்ததில்லை என காதல் தேடு

****************************


உன் நட்புதான் என் வேண்டுதல்களின் உச்சம்
உன் காதல்தான் என் கனவுகளின் உச்சம்


****************************


வாழ்க்கைப்பாதையில் வீசும் புயல்களை
விரட்டி அடிக்கும் காதலை விட எது அழகு?


****************************


சுகத்தின் முழுமையை உணர
உனக்குப்பாதி தரவேண்டும், வா!

****************************



கைகோர்த்து நீ உடன் வருவதால்
வாழ்க்கைப்பயணந்தான்
எத்தனை எளிமையாகிவிட்டது


****************************


உலகின் தலை சிறந்த காதலன்
நானில்லாமல் இருக்கலாம்
தலைசிறந்த காதலர்கள் பட்டியலில்
நாமிருக்கிறோம்


****************************


நீதிமன்றம், ஊர்க்கூட்டம்
எதையும் விட நம் காதல் பெரிது
காதல்தான் சொர்க்கம்
சொர்க்கம்தான் காதல்


****************************


காதல் காதல் காதல்
காதல் ஒன்றால் மட்டுமே
பூமி சுற்றுகிறது


****************************


வெறுக்க வைக்க
ஏராள மதங்கள் இருக்கின்றன
நேசிக்க வைக்க
இன்னும் காதல் தேவை


****************************



காதல் பார்வை - தொலைநோக்கிப் பார்வை
பொறாமைப்பார்வை - நுண்ணோக்கிப் பார்வை


****************************

மலர்களின் மொழியில்
மஞ்சள் ரோஜா - நட்பு
சிவப்பு ரோஜா - காதல்
பூங்கொத்து - திருமணம்


****************************


காதல் இல்லாமல் கொடுக்கலாம்
கொடுக்காமல் காதல் இல்லை


****************************


நிறைவான மகிழ்ச்சி வேண்டுமா
தேவை -
நேரிய எண்ணம்
நன்றியான ஆன்மா
நிர்மல மனசாட்சி
காதல் இதயம்


****************************


வீடு -
செங்கல், சிமிண்ட்டு போதும்..
இல்லம் -
காதலும் கனவும் வேண்டும்


****************************


உலகின் மிகத் தனிமையான இடம்
காதல் காலி செய்துவிட்ட இதயம்


****************************


கைகள் சேர்வதில் இல்லை
உண்மைக்காதல்
இதயங்கள் சேர்வதில் இருக்கிறது


****************************

இருந்தது என் வாழ்க்கை
மலைமுகட்டுப்பாறையாய்
இறைவன் காதல் சிற்பியை
அனுப்பி வைக்கும்வரை


****************************


காதல் குருடானது.. எனவே
கண்ணால் பார்க்காமல்
மனதால் பார்க்கிறது


****************************


மனித உணர்வுகளில்
மகத்தானது காதல்
மூளையையும் இதயத்தையும்
எல்லாப் புலன்களையும்
ஒரு சேரத் தாக்குவதால்


****************************


இரக்கம்,பச்சாத்தாபம்
அழும் எனக்கான அனுதாபம்
இவற்றுக்காக என்னைக் காதலித்துவிடாதே
காதல் ஒன்றுக்காக மட்டும் முடிந்தால் காதலி


****************************

கடவுளின் தோட்டத்தில்
இதுவரை பூத்தவற்றில்
மிக மிக அழகான பூ -
காதல்!


****************************



உண்மைக்காதலுக்கு
மகிழ்ச்சியான முடிவென்பது இல்லை
உண்மைக் காதலுக்கு
ஒரு முடிவென்பது இல்லை


****************************


நட்பு காதலில் சிலநேரம் முடியலாம்
காதலில் நட்பு முடிவதே இல்லை

sara
14-02-2004, 11:52 PM
மனங்கவர் வரிகளை தொகுத்து அளித்தமைக்கு நன்றி இளசு!

இளசு
15-02-2004, 10:11 PM
நன்றி சரா!

முத்து
15-02-2004, 10:14 PM
இளசு அண்ணா ..
இது காதலர் தின ஸ்பெஷலா ....
நல்லாயிருக்குது ... :D

இளசு
15-02-2004, 10:15 PM
சேமித்து வைக்கவும் முத்து
நிச்சயம் உதவும்!

முத்து
15-02-2004, 10:43 PM
சேமித்து வைக்கவும் முத்து
நிச்சயம் உதவும்!

அண்ணா ...
திருமணத்துக்கு அப்புறம் இது நிச்சயமாய்
உதவுமென்றுதான் நினைக்கிறேன் ... :D

இளசு
15-02-2004, 10:53 PM
ஆமாம் முத்து

காதலிச்சு மாலையிட்டா கொஞ்ச காலம் சந்தோஷம்
மாலையிட்டு காதலிச்சா மறையும் வரை சந்தோஷம்

kavitha
30-04-2004, 09:07 AM
இத்தனை நாள் என் கண்ணில் படாமல் போச்சே!



என்றாவது ஒரு தினம்
நான் சொல்லவில்லை
என்றாலும் கூட
எப்போதும் உன்னை
காதலிக்கிறேன்
என்பதை நினவில் வை

எல்லாமே அருமை!


மலர்களின் மொழியில்
மஞ்சள் ரோஜா - நட்பு
சிவப்பு ரோஜா - காதல்
பூங்கொத்து - திருமணம்


அட பூக்களிலும் குறியீடு உண்டா?



காதல் குருடானது.. எனவே
கண்ணால் பார்க்காமல்
மனதால் பார்க்கிறது

love is blind ...அருமையான விளக்கம்!
இங்கே தந்த இளசு அண்ணாவிற்கு நன்றியும்
எழுதியவர்களுக்கு பாராட்டும்!

gans5001
11-05-2004, 02:42 PM
நட்பு காதலில் சிலநேரம் முடியலாம்
காதலில் நட்பு முடிவதே இல்லை

இதில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை.. ஏனெனில் காதல் மலரும் கணத்தை யாரும் கண்டதும் இல்லை.. உணர்ந்ததும் இல்லை.. மெல்ல மனதைத் தாக்கி பிரிவில் உள்ளத்தை உணரத் தொடங்குவதால்.. நட்பும் காதலாய் மாற சந்தர்ப்பங்கள் மிக மிக அதிகம். (ஒத்த உணர்வலைகள் என்பதும் மற்றொரு காரணம்)

kavitha
18-05-2004, 06:08 AM
காதலில் நட்பு முடிவதே இல்லை...


காதலில் நட்பு முடிந்து போவதில்லை.... தொடர்ந்து கொண்டே இருக்கிறது என்ற பொருளில் வைத்துக்கொள்வோமா கண்ஸ்?