PDA

View Full Version : காதலர் தின கலாட்டாக்கள்.....



lavanya
14-02-2004, 09:07 PM
காதலர் தின கலாட்டாக்கள்.....

இது பொதுவழி அல்ல
என என் இதயத்தில்
எழுதி வைத்தேன்
'நான் எங்கும் நுழைவேன்'
சிரித்துக்கொண்டே அதை
அழித்துப்போனது உன்
காதல்.....
----------------------------------------

கல்லூரி கால கட்டத்தில் இந்த காதலர் தினத்திற்கு நாங்கள் கொஞ்சம் சுவாரஸ்யங்களை மூன்று வருடமும் சந்தித்திருக்கிறோம்..எம்.சி.ஏ செய்யும் போது இதைப்பற்றியெல்லாம்
நினைத்து பார்க்க கூட முடியவில்லை...ஏனெனில் அந்த சமயத்தில் இந்த மாதத்தில் தான்
செம்மையாய் ஏதேனும் புராஜக்ட் ,செமினார் என கழுத்தறுபட்டு கொண்டிருப்போம்...அதனால்
யூ.ஜி படிக்கும் போது நடந்த ஒரு சில சம்பவங்கள் மட்டும் இங்கே....

தஞ்சையை பொறுத்தவரை ராபின் ஹட் காலேஜ் அல்லது சுதந்திர புருஷர்கள் வளைய வரும்
ஒரே கல்லூரி ராஜா சரபோஜி கல்லூரி தான்... எடுப்பாரும் இல்லை கேட்பாரும் இல்லை என ரகளையோடு தனித்துவம் கம்யூனிஸம் எல்லாம் பேசி தோழமையோடு ஆசிரியரை என்னடா மச்சி ரேஞ்சுக்கு பழகும் மாணவர்கள் சரபோஜி கல்லூரி மாணவர்கள் தான்...
நான் படித்த கல்லூரியோ மருந்துக்கு கூட ( ஏன் அப்படி சொல்றாங்க..?) ஆண்களை பக்கத்தில் அண்டவிடாத கல்லூரி...இவ்வளவுக்கும் இருபால் கல்லூரிதான்....கல்லூரி முழுக்க
ஸ்பைகள் உலாவும்..சில பெருக்குபவர்களாக...சில பேராசியர்களாக....ஆண்களிடம் எதற்கும் பேச கூடாது...காண்டீன் போக கூட ஆண்களுக்கு ஒரு நேரம்...பெண்களுக்கு ஒரு
நேரம்...ஹிட்லர்,இடி அமீன், இன்னும் பல உதாரண புருஷர்களின் நவ அவதாரமாய் எங்களை கண்காணித்து கொண்டே இருப்பார்கள்...

தவிர காம்பவுண்ட் வரை மட்டுமல்லாது பஸ் ஸ்டாப் வரை இந்த கண்காணிப்புகள்
தொடரும்...ஆனால் அழகான பெண்கள் எல்லாம் எங்கள் கல்லூரியில்தான்...கண்டிப்புக்கு பெயர் போனதால் இங்கு வந்து சேர்ப்பார்கள் ( பொண்ணை எவனும் தொந்தரவு செய்ய
மாட்டான்..பொண்ணும் யாரையும் பார்க்காது என்று மடத்தனமாய் எங்களை 'பெத்த
பெரிசுகளுக்கு ' ஒரு நம்பிக்கை - அதை காப்பாற்றுகிறேன் என்று சொல்லும் எந்த
ஜீவனையும் நாங்கள் கொஞ்சம் கேவலமாய் லுக் விடுவதுண்டு ) எனவே தஞ்சையின்
ராஜா சரபோஜி சிங்கங்களுக்கு எங்கள் கல்லூரி இடங்கள் தான் வேடந்தாங்கல்....
கிளாசுக்கு கட் அடித்தாலும் அடிப்பார்களே தவிர இங்கு வருவதை நிறுத்தவே
மாட்டார்கள்..அதுவும் இந்த மாதிரி காதலர் தினத்தன்று இவர்கள் செய்யும் ரகளை செம்மையாக இருக்கும்...

சின்ன சின்னதாய் நிறைய கவிதைகளை தொகுத்து புத்தகம் அடித்து வைத்து அதை
எல்லோர்க்கும் இலவசமாக விநியோகிப்பார்கள்....அந்த சின்ன புக்கினுள் நாலைந்து கூப்பன்கள் இருக்கும்...அதை கொண்டு போனால் திரையரங்கம்,ஸ்நாக்ஸ் சென்டர்,கார்டு
ஷாப் போன்ற இடங்களில் எல்லாம் நிறைய ப்ரி கிப்ட்ஸ் மற்றும் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
இந்த தினத்தை பற்றி பெரிய அளவில் வாசக்ங்கள் எழுதி கல்லூரிக்கு எதிரேயே பெரிய
பேனர் எல்லாம் கட்டி இருப்பார்கள்...பேர் மற்றும் எந்த வகுப்பு என்ற மேல்விலாசங்களுடன்
வரிகளுக்கு கீழே தம்மை விளம்பர படுத்திக்கொண்டிருப்பார்கள்...யார் என்று பார்த்தால்
ராஜா சர்போஜி சிங்கங்கள்தான்...

மாணவர்களுக்கு சட்டையில் சங்கேதங்கள்....இந்த வண்ண சட்டை போட்டிருந்தால் இந்த
தகுதியின் கீழ் இருக்கிறேன்..என்ற அறிவிப்புகளுக்காக ...அதில் ஏ கிரேடு பி கிரேடு என்பது போல் நான் செட் ஆயிட்டேன்..செட் ஆயிகிட்டிருக்கேன்..ஜோடிக்கு வெயிட் பண்றேன் என்ற மாதிரி எல்லாம் விஷயங்கள் சங்கேதங்களாக இருக்கும்...இந்த மூன்றாம்
நிலை மட்டுமின்றி மூன்று நிலையிலும் முன்னேற்றம் இல்லாதவர்களையும் வருஷாவருஷம் தவறாது பார்ப்போம்..அரிதாய் சில பேர்கள் மட்டுமே செட்டில்டு கேட்டகிரியில்..மற்றவை எல்லாம் தினமும் செட்யூல்ட் கேட்டகிரியில்..

மாணவிகளும் விதி விலக்கல்ல.... அவர்களுக்கு சட்டை என்றால் இவர்களுக்கு
ரோஸ்....மஞ்சள்,சிவப்பு நிறங்களில் ரோஸ் வைத்து கொண்டால் வெவ்வேறு பூவுக்கு வெவ்வேறு சங்கேதங்கள் ..ஏதாவது வைத்தே தீர வேண்டும்....என்பது போல் சிக்னல்
கேட்பார்கள் ( ரோஸ் வைக்காமல் வந்தால் சக- பால் ஓட்டும் வார்த்தைகளை மன்றத்தில்
பிரசுரிக்க முடியாது) .ஆனால் ரோஸ் வைத்து கல்லூரிக்குள் நுழைந்தால் க.பி.கோ விதிகள் படி கப்பம்,அபராதம் இன்னும் பிற தண்டனைகள் இலவச இணைப்பாக கிடைக்கும்..எனவே பூ வைத்துக்கொண்டு வாசல் வரை வந்து பின் எடுத்து ஹேண்ட் பேக்கில் வைத்து
கொள்வார்கள்...

இதில் பாவம் எங்கள் மாணவர்கள் தான்....அன்று அவர்களின் ஒவ்வொரு
நடவடிக்கையும் சிபிஐ க்காளால் (Site Protect Instructor) கண்காணிக்கப்படும்...
(வேறு யார் எங்கள் லெக்சரப்பெருமக்கள் தான்) ரொம்ப பாவமாக இருக்கும்..கொஞ்சம்
நிறையவே அறுத்துவிட்டேன் என்று நினைக்கிறேன்...விஷயத்திற்கு வருகிறேன்..முதல் வருடத்தில் பிரசவித்து மூன்றாம் வருடத்திலேயே முடிந்து போனவை ஏராளம்...அதில் ஒன்றிரண்டை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என்றிருக்கிறேன்.

(தொடரும்)

முத்து
14-02-2004, 09:22 PM
இது பொதுவழி அல்ல
என என் இதயத்தில்
எழுதி வைத்தேன்
'நான் எங்கும் நுழைவேன்'
சிரித்துக்கொண்டே அதை
அழித்துப்போனது உன்
காதல்.....


லாவண்யா அவர்களே ..
உங்க கவிதை நல்லா இருக்கு ..

நீங்க சொல்ற சம்பவமும் சுவாரசியமா இருக்கு ..
நான் படித்த இடத்தில் இதுபோல் சுவாரசியமா எதுவும்
நடக்கவில்லை ...
யு.ஜி படித்தது ஆண்கள் (பள்ளி.. ? ) கல்லூரியில்
பிஜி. படித்தது பல்கலைக்கழகத்தில் .. அதுவும்
உடன் படித்தவர்கள் மொத்தமே 15 பேர் ..
அதில் ஆண்கள் 6 பேர் ..
வாய்ப்புக்கள் அவ்வளவாய் இல்லாது போனது ... :(

sara
14-02-2004, 09:29 PM
ஏன் கூடாது.. தொடருங்கள். நீங்கள் சொல்லி முடித்ததும் எங்கள் கல்லூரி காதலர் தின அனுபவங்கள் வரும் (நேரமிருந்தால்) :)

இளசு
14-02-2004, 11:23 PM
ஹ்ம்ம்ம்ம்....

இந்த கொண்டாட்டம் நம்மூரில் அறிமுகமாகாத ஆதிகால மனிதன் நான்....

வயதை நினைத்து பொருமுவதைத் தவிர வேறு வழியில்லை...


நீங்கள் தொடருங்கள்..லாவ்.

மெய்நிகர் அனுபவ மகிழ்ச்சியை மனமாளிகையில் அமைத்துக்கொள்கிறேன்...

poo
22-02-2004, 06:32 AM
காதலர்தின கொண்டாங்கள் என்றாலே டாப்புதான்..

அன்னைக்குமட்டும் காலேஜ் பஸ் டாப்புல ஏறிக்கிட்டு வரலாம்..

கலக்கலா தொடருங்கள் அக்கா..

இளசு
22-02-2004, 11:46 PM
பெ.த: தொடருங்கள் லாவ்

சி.த: அதெல்லாம் அவங்க தொடருவாங்க..நீங்க மாயா மாயா, மரணமில்லாத
விந்தை மனிதன், மனமே கலங்காதே இதைக் கவனிங்க..

பாரதி
23-02-2004, 12:36 AM
இவ்வளவு தூரம் நடக்கிறதா....? ஆச்சரியமாக இருக்கிறதே...!!