PDA

View Full Version : எய்ட்ஸை விட கொடிய ஹெபடடைஸ் - பி - 2lavanya
12-02-2004, 10:16 PM
எய்ட்ஸை விட கொடிய ஹெபடடைஸ் - பி - 2

நோயின் அறிகுறிகள்:

1.இந்நோய் ஏற்பட்டவர்களுக்கு சிறுநீர் மஞ்சளாகவும் மலம் வெள்ளையாகவும் மாறும்

2.பசியின்மை,உற்சாகமின்மை இருக்கும்

3.கண்கள் படிப்படியாக மஞ்சளாக இருக்கும்

4.சோர்வு,தளர்ச்சி ஏற்படும்,சிலருக்கு சாப்பிட பிடிக்காது.

5.சிலர் சிறுநீரில் சோற்றை இரவில் போட்டு வைத்து சோதிப்பார்கள்.இதுவும் பலன்
அளிக்கும்.சோறு மஞ்சளாக மாறினால் அது பெரும்பாலும் மஞ்சள் காமாலையாகத்தான்
இருக்கும்.உடனே டாக்டரை அணுக வேண்டும்.

6. முதலில் சிறுநீர் பரிசோதனையும் பின்பு அதன் கடுமையை சோதிக்க இரத்தப்பரி
சோதனையும் செய்ய வேண்டும்.

மஞ்சள் காமாலை சியும் கடுமையானதுதான்.ஏ மற்றும் ஈ வகைகள் மலம்,நிலம் வழியாக பரவும் கிருமிகள் வாய் வழியாக சென்று தாக்கும். தூய்மையின்மையால் இது பரவுகிறது.
இந்நோய் தன்னைத்தானே கட்டுபடுத்திக்கொள்ளகூடியது.இது 95 சதவீதம் தீங்கு
விளைவிப்பதில்லை. 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளவர்க்கு இந்நோய் கல்லீரலை தாக்கி
அதை செயல் இழக்க செய்கிறது.

ஹெபடடைஸ் பி ரத்தத்தின் மூலம் உடலில் பரவி ஈரலை தாக்குகிறது.ஒருவருக்கு போட்ட
ஊசியை கிருமி நீக்கம் செய்யாமல் இன்னொருவருக்கு போடுதல்,ரத்த தானம் போன்றவற்றில்
மஞ்சள் காமாலை நோய்க்கிருமி உள்ளவரிடம் இருந்து பரவுகிறது.இதை சீரம் ஹெபடடைஸ்
என்று கூறுவர்.இந்த கிருமி உள்ள் ரத்தம் .00001 மி.லி அளவுக்கு ரத்தத்தில் கலந்தால் கூட
மஞ்சள் காமாலையை உண்டாக்கும் வீரியம் அதற்கு உண்டு.

குழந்தை பருவத்திலேயே இது ஏற்படுகிறது.எனினும் வந்து விட்டு போய் விடும்.சளி,மூட்டுவழி
பசியின்மை போன்றவை இருக்கும்.இதனால் ஈரல் புற்று நோயும் ஏற்படும்.இந்நோய் 60% முதல் 70 % வரை பெரியவர்களிடமே உருவாகிறது.குழந்தைகளில் 20 % முதல் 25 % வரை
உருவாகிறது.நீண்ட நாள் கல்லீரல் அலர்ஜி காரணமாக 20 % முதல் 30 % வரை மரணம்
விளைவிக்கும்.80 % கல்லீரலில் ஈடுபடும் புற்றுநோய்க்கு ஹெபடடைஸ் பி தான் காரணம்.

இந்த நோய் பெரும்பாலும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும்போது நோய் அறிகுறி தெரிவதில்லை.ஆனால் 90 சதவீதம் பேருக்கு கேரியர் எனப்படும் நோய்க்கிருமி உடலிலேயே தங்கியிருக்க வாய்ப்புண்டு.தாய்க்கு இருந்தால் 25 சதவீதம் குழந்தைக்கும் வர
வாய்ப்பு இருக்கிறது.30,40 வயது ஆகும்போது இது ஏற்படக்கூடும்.100 பேருக்கு இந்நோய்
ஏற்பட்டால் 90 பேருக்கு குணமாகிவிடுகிறது.5 முதல் 10 சதவீதம் பேர்தான் கேரியராக
இருக்கிறார்கள்.

குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு இந்நோய் வந்தால் மற்றவர்களுக்கும் வர 50 சதவீதம்
வாய்ப்பு இருக்கிறது.அறுவை சிகிச்சை சாதனங்கள்,போதை மருந்து,அக்குபஞ்சர் போன்ற
ஊசி பயன்படும் எல்லாவகையிலும் இது பரவும்.

தடுப்பு முறைகள்:

குழந்தை பிறந்த உடனே 6 வாரங்களுக்கு பிறகும்,மூன்றரை மாதங்களுக்கு பிறகு மூன்றாவது ஊசியும் என்று 3 தடுப்பூசிகள் போட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பாக
இருக்கும்.உலக சுகாதார நிறுவனம் 'பூஸ்டர் டோஸ் ' தேவை இல்லை என்று சொல்லி
விட்டது. வேண்டுமானால் முத்தடுப்பு ஊசியோடு இணைந்த தடுப்பூசியாக போட்டு
கொள்ளலாம்

தாய்க்கு மஞ்சள் காமாலை நோய் இருந்தால் பிறந்தவுடன் தடுப்பூசி போடவேண்டும்.
தாய்க்கு நோய்க்கிருமி இல்லாவிட்டால் ஒன்றரை மாதம் இரண்டரை மாதம் மூன்றரை
மாதங்களில் தடுப்பூசி போட்டால் போதுமானது.ஆனால் அத்தகைய்ய சோதனைகள் கருவுற்ற
காலத்தில் செய்யப்படாததால் குழந்தை பிறந்தவுடன் இந்த தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் போட்டு விட வேண்டும்.

விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக தொண்டை அடைப்பான்,கக்குவான் இருமல்,ரண ஜன்னி,மஞ்சள் காமாலை - பி,ஹிப் என்னும் நுண்கிருமியால் ஏற்படும் மூளைகாய்ச்சல் நோய்
ஆகியவற்றையும் ஒரு சேரத்தடுக்கும் ஒரே தடுப்பூசியை மேலை நாடுகளில் இருப்பது போல
இந்தியாவிலும் போட்டுக்கொள்ள வாய்ப்புகள் உள்ளன.

எனவே இந்நோய் வந்தால் தானே போய்விடும் என இல்லாமல்,நீரை காய்ச்சி குடிப்பதும்,
சூடான உணவை சாப்பிடுவதும் என அலட்சியமாக இருக்காமல் உடனடியாக உரிய
தடுப்பு மருதை எடுத்துக்கொள்வது அவசியம்.

நிலா
12-02-2004, 10:34 PM
உபயோகமானத்தகவல்கள்!மிக்க நன்றி லாவ்!

thiruarul
12-02-2004, 10:39 PM
மதிப்பிற்குரிய லாவண்யா அவர்களே,

மிகவும் முக்கியமான தகவல் இது. பாராட்டுகள்.

ஹெப்பரைற்றிஸ் B யின் வீரியம் HIV விட 100 மடங்கு அதிகம்.

அதாவது உடலில் 100 HIV வைரசுக்கள் ஒரு தடவையில் குடிபுகுந்தாலே நோயெதிர்ப்பு சக்தியை முறிடித்து நோயை உருவாக்குமெனில் ஹெப்பரைற்றிஸ் B (HBV) ஒரு வைரசுவே போதும் அதனைச் செய்துவிடும்.

அதேவேளை இது பிரதானமாகப் பாதுகாப்பற்ற பாலியல் நடத்தை மூலமும் பரவக்கூடியது.

மேலும் ஹெப்பரைற்றிஸ் C (HCV) அதனது கூட இருந்து சத்தமின்றிக் கொல்லும் தன்மையால் அழகிய கொலைஞன் (Pretty killer) என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.

இது இருந்தால் பெரிதாகக் குணங்குறிகள் தோன்றாது.ஆனால் ஈரல் புற்றுநோய் நிச்சயம்.

இளசு
12-02-2004, 11:10 PM
இன்னும் பிரமிப்பு நீங்கவில்லை லாவ்..

நீங்கியபின் கூடுதல் தகவல்கள் (இருந்தால்) தருகிறேன்..

karikaalan
13-02-2004, 07:26 AM
செலவைக் கருத்தில் கொள்ளாது, குழந்தைகளைக் காக்க என்னென்ன தடுப்பூசிகள் எப்போது போடவேண்டுமோ அப்போது உடனே போட்டுவிடுவது நல்லது. பிற்காலத்தில் அவர்கள் ஹாஸ்டலில் சேர்க்கப்படும்போது இரத்தப் பரிசோதனை செய்யும்போது, Anti-Bodies இருக்கின்றனவா என்று கண்டறிந்த பின்னரே அனுமதி கொடுக்கிறார்கள்.

இன்னும் சில இடங்களில் ஹெபாடிடிஸ் A தடுப்பூசியும் போட்டுக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள். ஒரு வியால் ரூ.1250. இருக்கட்டும் என்று போட்டுத்தான் எனது மகனை ஹாஸ்டலில் சேர்த்தேன்.

காடுகளில்தான் வாழ்கிறோமோ என்கிற சந்தேகம் நீங்கவில்லை.

நன்றிகள் லாவண்யாஜி, தங்களது இப்பதிவிற்கு.

===கரிகாலன்

இளசு
13-02-2004, 11:01 PM
நிச்சயம் உலகமாந்தர் அனைவருக்கும் இலவசமாய் தரவேண்டிய பரிசு இது அண்ணலே..

Dr. Agaththiyan
16-02-2004, 08:12 PM
பெரியம்மை போலவே இந்த நோயயும் விரட்டுவது முடியும். உலகம் முழுமையும்
தடுப்பூசியால் ஒருநாள் நோயை வெல்லும்.

லாவண்யா அவர்களுக்கு நன்றி.

முத்து
16-02-2004, 08:16 PM
லாவண்யா அவர்களுக்கு நன்றிகள் பல ..
மிக முக்கியமான தகவல் ...

பாரதி
17-02-2004, 01:22 PM
¦¸¡ïºõ ¦¸¡ïºÁ¡¸ ±øÄ¡ þ¼ங்¸Ç¢Öõ ¦ஹப்À¨¼ðÊஸ் நோய்க்கான சோ¾¨É¸û ¾£Å¢ÃÁ¡¸ ¿¼óÐ ÅÕõ þó¾ §Å¨Ç¢ø «Åº¢Âõ ¦¾Ã¢óÐ ¦¸¡ûÇ §ÅñÊ ¾¸Å¨Äò ¾ó¾ Ä¡ù-ìÌ ¿ýÈ¢¸û.

poo
17-02-2004, 05:30 PM
என்னங்கக்கா இப்படி மிரட்டீங்க... :mini023:

இந்த நேரத்தில் என் மனைவிக்கு போன் பண்ணி எழுப்பி என் மகளுக்கு இந்த ஊசி போட்டாச்சான்னு கேட்டேன்..

இன்னமும் போடலயாம்.. இப்ப வயசு 1 வருஷம் 3 மாசம்..

இனிமே போடலாமா.. தொடர்ச்சியா 1 மாத இடைவெளியில் 3 போடவேண்டுமா?!!

thiruarul
17-02-2004, 09:40 PM
இப்ப வயசு 1 வருஷம் 3 மாசம்..

இனிமே போடலாமா.. தொடர்ச்சியா 1 மாத இடைவெளியில் 3 போடவேண்டுமா?!!

ஆம் போடலாம்.

4 மாதத்திலிருந்து 06 வயது வரையான குழந்தைகளுக்கு பின்வரும் நிரலுக்கமையத் தடுப்பூசி ஏற்றுவது வழமை.

அன்புடன் திருவருள்

இளசு
17-02-2004, 10:57 PM
நன்றி திருவருள் அவர்களே.

மஞ்சள் காமலை பற்றி இன்னொரு இழை:
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1180

இளசு
09-03-2004, 07:15 PM
இந்த நோய் தாக்கப்பட்டவரில் 90 முதல் 95 சதம் வரை
தம் சொந்த நோய் எதிர்ப்புச்சக்தியால் வைரஸை வென்று விடுகிறார்கள்.
கடும் மஞ்சள் காமாலையால் கல்லீரல் மிக நலிவடைந்து 100 ல் ஒருவர்
மரணிக்க நேரலாம். மற்ற 94 பேர் எந்த நீண்ட கால பாதிப்பும் இல்லாமல்
கல்லீரல் உள்பட அன்றலர்ந்த ரோஜா போல் முழு நலம் பெற்றுவிடுகிறார்கள்.
இவர்களை இந்த வைரஸ் மீண்டும் தாக்காது.

வைரஸை வெல்லவும் முடியாமல், வெளியேற்றவௌம் முடியாமல் ஆண்டுக்கணக்கில்
நம் ஈரல் செல்களில் வளரவிடும் 5 சதத்தினரே ஆபத்துக்குரியவர்கள்.
நாள்பட்ட வைரஸ் குடித்தனத்தால் கல்லீரல் மெல்ல வெந்து ( Chronic Hepatitis),
பின் வெந்த புண்கள் ஆறும் வடுக்களால் மெல்ல இறுகி ( Fibrosis)
தன் சொந்த அடையாளம் இழந்து உருக்குலைந்து சுருங்கி ( Cirrhosis)
கல்லீரல் செயல் தோல்வியால் (Liver (Hepatic) Failure)
அல்லது வைரஸ் நம் ஜீனோமில் இரண்டறக்கலந்து செய்யும் சூழ்ச்சியால்
விளையும் கல்லீரல் புற்று நோயால் ( Liver Cancer - Primary)
நோயாளிக்கு ஆபத்து.

இவர்களால் மற்றவருக்கும் ஆபத்து.
இவர்கள் நோயின் கிடங்கு ( Human Reservoir)
பரவும் வழிகள் பல...
உறையற்ற உடலுறவு
சோதிக்கப்படாத ரத்த தானம்
பலமுறை பயன்படுத்தப்படும் ஊசிகள், சிரிஞ்சுகள்..
சவரக்கத்தி, சலூன் ரீசைக்கிள் பிளேடுகள்
ஆபரேஷன் உபகரணங்கள் ( ஸ்டெரிலைஸ் முறைகள் பலவீனமான மருத்துவமனைகள்)
சாலையில் கயம் பட்டவரின் ரத்தம் நம் மேல் படுவது
கர்ப்பிணியானால் குழந்தைக்கு சிறப்புப்பரிசாய் தாய் தருவது...

ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ ( A & E) பரவுவது வாய் வழி..குடல் மூலம்.
கழிவறை சென்று, பின் கைகழுவாத சர்வர் ஒரு நல்ல நோய் பரப்பாளி!

Gastro enterology - என்றால் வயிறு (Stomach = Gastro) மற்றும்
குடல் ( Intestine = Entero) பற்றிய கல்வி.

குடல் மூலம் தொற்றினால் - Enteral Transmission --ஹெபடைடிஸ் ஏ மற்றும் இ ( A & E)

குடல் அல்லாமல் மாற்று வழியில் தொற்றினால் - PARenteral - (parenteral) Transmission.
ஹெபடைடிஸ் பி மற்றும் சி ( B & C)

உலகநல நிறுவனம் 2000 -த்தில் வெளியிட்ட அறிக்கையின்படி

* உலகில் 37 கோடி பேர் இந்நாள்பட்ட பி வைரஸ் தாங்கி உலவுகிறார்கள்.

* அதிக பட்ச பாதிப்பு ( மக்களில் 10 சதம்) சீனா, கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா

*மத்திய நிலை பாதிப்புள்ள நாடுகள் : இந்தியா, அதன் அண்டை நாடுகள், சில கிழக்கு ஐரோப்பா
மற்றும் தென் அமெரிக்க நாடுகள்..

*ஏனைய ஐரோப்பிய நாடுகளிலும், வட அமெரிக்கா, கானடாவிலும் இது அரிதான நோய்.

*ஆனாலும் புலம் பெயர்ந்தோர், ஒரே ஊசியால் பலர் போதை மருந்து ஏற்றிக்கொள்வது, எய்ட்ஸ்,
முரணான உடல் உறவுகள் இவற்றால் இந்நோய் நீறு பூத்த நெருப்பாய் இங்கும் உலவத்தான் செய்கிறது.

* உலகில் 4 லட்சம் பேர் ஆண்டுதோறும் பி - சிர்ரோஸிஸால் சாகிறார்கள்.

* 3 லட்சம் பேர் அதனால் வந்த ஈரல் புற்றால் மறைகிறார்கள்.

* ஆக --- மொத்த காவு - ஆண்டுக்கு 7 லட்சம்!

**தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்..

**டிஸ்போஸபிள் ஊசி பயன்படுத்தாத மருத்துவரை டிஸ்போஸ் செய்யுங்கள்.

**இதில் கவனம் செலுத்தாத அறுவை அரங்கங்களை புறக்கணியுங்கள்..

sara
09-03-2004, 07:22 PM
தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள். (அப்படிப்பட்ட சர்வர்களையெல்லாம் எப்படி சமாளிக்கிறதுன்னுதான் தெரியல :lachen001:

தொடர்ந்து, தொடர்புடன் கொடுத்து வருவதற்கு மிக்க நன்றி!

இளசு
09-03-2004, 07:33 PM
நன்றி சரா

இன்னும் சில தகவல்கள்..

நாள்பட்ட பி வைரஸ் பாதிப்புக்கு
புழக்கத்தில் உள்ள மருந்துகள்

1) இண்ட்டர்·பெரான் - Interferon - Interferes with viral replication!
காரணப்பெயர்!
இந்த ஊசி மருந்து இரு வடிவங்களில் கிடைக்கிறது.
விலை அதிகம். வாரத்துக்கு 3 ஊசி.
சிகிச்சை காலம்: 56 - 12 மாதங்கள். (சில லட்சம் ரூபாய் சுவாகா!)
பலன் : நம்பர் 2 அல்லது 3 -உடன் கூட்டு சிகிச்சையால் 25 முதல் 50 சதம் வெற்றி.
பக்கவிளைவுகள் அதிகம்.

2) லாமிவுடின் (Lamivudine) -
தினமும் ஒரு மாத்திரை.
சிகிச்சை காலம்: புலிவால் பிடித்த கதை. நிறுத்தினால் வைரஸ் மீண்டும் பெருகும்.
மைனஸ் பாயிண்ட் : இதை டபாய்க்கும் வைரஸ்கள் சில மாதங்களில் இதை மீறி அருதிப்பெரும்பான்மையாகிவிடும். (Drug - resistant viral strains)

3) அடி·போவிர் (Adefovir)
நம்பர் இரண்டை விட தேவலாம். நீண்டநாள் (முடிவிலி? ) சிகிச்சைதான் வம்பு..

இம்மூன்றும் இப்போது கிடைப்பவை.

ஆராய்ச்சி நிலையில் இன்னும் பல ஏறக்குறைய தயாராய்..

நம்பிக்கை இருக்கிறது..

poo
11-03-2004, 11:16 AM
நிறைய தகவல்கள்.. நன்றிகள் அண்ணா...

இவ்வளவு இருக்கா...நான் மஞ்சள் காமாலையை சாதாரணமா நினைச்சிக்கிட்டு இருந்தேன்...

karikaalan
11-03-2004, 01:33 PM
இளவல்ஜி

நன்றிகள் இவ்வளவு விவரங்களைப் பலரும் அறியத் தந்ததற்கு.
தண்ணி ஜாஸ்தியா அடிச்சாலும் லிவர் சிர்ஹாஸிஸ் ஆகுதே, அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க. மன்றத்துல பலபேர் நான், நீ-ன்னு போட்டி போடறாங்கல்ல!!

===கரிகாலன்

பாரதி
11-03-2004, 04:47 PM
நல்ல தகவல்கள் அண்ணா...

நிலா
11-03-2004, 10:49 PM
மிக்க நன்றி தலை!

poo
12-03-2004, 09:44 AM
தண்ணி ஜாஸ்தியா அடிச்சாலும் லிவர் சிர்ஹாஸிஸ் ஆகுதே, அதையும் கொஞ்சம் சொல்லிடுங்க. மன்றத்துல பலபேர் நான், நீ-ன்னு போட்டி போடறாங்கல்ல!!

தலை.. சேரன்... அண்ணன் கரிகாலன்ஜி உங்களைத்தான் சொல்றார்!!!

பாரதி
03-05-2008, 08:25 AM
ஒருங்குறியாக்கப்பட்டு மன்ற உறவுகளின் மீள்பார்வைக்காக மேலெழுப்பப்படுகிறது.