PDA

View Full Version : பங்கு



rambal
09-04-2003, 06:10 PM
அடுத்தவர் மலத்தை
சுமக்க வைத்து
ஒரு பிரிவு மக்களையும்

அடுத்தவர் குப்பைகளை
அள்ளவைத்து
மற்றொரு பிரிவையும்..

வார் அறுந்த
செருப்பை தைப்பதெற்கென்றே
ஒரு கூட்டத்தையும்..

முடி வெட்டுவதற்கு என்றே
சில மனிதர்களை பழக்கப்படுத்தி
இன்னொரு பிரிவையும்..

அவர்களுக்கு அடுத்து
அவர்கள் வாரிசுகளையும்..
ஊருக்கு ஒதுக்குப் புறத்தில்..

அவர்களுக்கு கிடைத்த
69க்கு மட்டும்
பங்கு போட எல்லோரும்..

poo
09-04-2003, 06:22 PM
69????

madhuraikumaran
09-04-2003, 10:47 PM
இட ஒதுக்கீடு ??

இளசு
09-04-2003, 11:12 PM
பலவீனமானவர் முன்னேற தனி தடம் வேண்டும் என்றார் பெரியார்.
அதிலும் உண்மைப் பலவீனரை பல வீணர் ஒடுக்கி பலன் பெறும்
உண்மை நிலையச் சொல்லும் சாட்டையடிக் கவிதை.
சொடுக்கிய இளையகவிக்கு பாராட்டு.

குமரன்
10-04-2003, 01:38 AM
சாட்டையடி கவிதை...

-குமரன்

Narathar
10-04-2003, 07:48 AM
மனிதனேயக்கவி ராம்பாலின் கவிதைக்கு தமிழ் மன்றத்தின் சார்பில் நாரதரின் பாராட்டுக்கள்

gankrish
10-04-2003, 07:51 AM
நெத்தியடி கவிதை ராம்

chezhian
10-04-2003, 01:18 PM
சென்ஸிடிவ் பிரச்னை
அழகாக சொல்லிட்டீங்க.

Tamil_Selvi
21-07-2003, 10:53 PM
உண்மையி நல்லதோர் கவி!