PDA

View Full Version : மருத்துவம்: என் சுவாசக்காற்றே



இளசு
12-02-2004, 09:26 PM
என் சுவாசக்காற்றே

இயற்கை (இறை) காற்றில் 20% ஆக்சிஜன் அளவை நிர்ணயித்தது -
ஒரு காரணத்தோடுதான்!

அதற்குமேலான விகிதத்தில் ஆக்சிஜன் இருந்தால் காய்ந்த மூங்கில் காடுகள்
தாமாகவே பற்றி எரிந்துவிடும்.. (Spontaneous Combustion)
கோடையில் நம் கூரைவீடுகளும்தான்..

காற்றுக்கும் ஆக்சிஜன் அளந்துதான் வச்சிருக்கு...

இந்த ஆக்சிஜன் அளவு காடுகளை , மரங்களை அழிப்பதாலும்
வேதிப்புகை,மாசு -தூசுகளை மனிதச் செயல்கள் கலப்பதாலும்
குறையும் என்பது அனைவரும் அறிந்ததே

கண்ணைத் தொறந்துகிட்டே கெணத்துல...

ஆரோக்கியமான சூழலில் காற்றும் சுத்தமே..
அதன் ஒரு சதம் வரை தூசு, தும்புகள் இருப்பது சகஜமே..
அண்ணா சாலை,கிண்டி...ஓஓஓஓஓஓஓ!
காற்று அங்கு மிக மிக அசுத்தமே...

ஆமாமாம். ஹிண்டுவில் சின்னதா அப்பப்ப அளவீடு வரும்..அதை
எல்லாம் அப்பப்ப மறந்திடுவோம்...

பழைய பல்லவனும், கெரஸினில் லாரி ஓட்டும் வல்லவனும்
விடும் புகையை தனிமனிதன் இப்பக்கி தடுக்க முடியாது..

ஏஸி கார், கர்ச்சீப் - பிளாஸ்டிக் மாஸ்க் முகமூடின்னு
மார்ஸ் கிரகவாசியாட்டம் மாறுவேஷத் தற்காப்பிருக்கே..

காற்றில் உள்ள புகை கலந்து சில சதம் அதிகரித்தாலே
உடல்நலக்கேடுன்னு தெரியும் மனுசனுக்கு
குறிவச்சு பாதிக்காற்று, பாதிப்புகைன்னு நுரையீரலை
இம்சிக்கும் சிகரெட் -பீடிகளை என்னன்னு சொல்ல?

கெட்டதுன்னு தெரிஞ்சும் ஒரு த்ரில் இருக்கே
சின்ன வயசில் பழகிட்டா சில தகா பழக்கங்கள்
பின்னால் விலக்குறது லேசா லேசா?
கட்டுரை எழுதற நீங்க மட்டும் ஒழுங்கா?

லாவ் இங்கே வாங்களேன்..

நம் இரண்டு நுரையீரல்களிலும் எந்நேரமும் 5 -6 லிட்டர்
காற்று நிரம்பி இருக்கு.

ஒரு சுவாசத்தில் அரை லிட்டர் காற்றை உள்ளே இழுத்து
அதே அளவை வெளியேத்துறோம் (Tidal volume = 500 ml)

ஒரு நிமிடத்துக்கு 10 -12 முறை சுவாசக்கணக்கு.
ஒரு நிமிடத்தில் 5 -6 லிட்டர் காற்று உள்ளே போய் வெளியே வருது.

ஒரு சதம்னாலும் இதில் உள்ள தூசு தும்பை அதோடு சேர்ந்துவரும்
பாக்டீரியா, வைரஸ், காளான் நுண்கிருமிகளை
கணக்கு பண்ணிப்பாருங்க...

சுவாசக்குழாய் (trachea) தலைகீழான மரமா கற்பனை பண்ணிக்குங்க.
வலது, இடது என இரு பிராதான கிளைகள். (Right and Left Main Bronchus)
ஒவ்வொரு கிளையும் பின் இரண்டு மூன்று துணைகிளைகள்..அப்புறம்
மேலும் கிளைகள்... இப்படி 20 தடவை கிளை பிரிங்க..
கடைசியா சின்ன கம்புகளில் இலைகள் இருக்குமில்லியா
அதைப்போல நம் சுவாசமண்டலமும் சிறு மெல்லிய குமிழ் இலைகளில் முடியுது.
(alveoli).

இந்த இலைத்தொகுப்பின் இந்தப்பக்கம் ஆக்சிஜன் நிறைந்த காற்றை நாம்
உள்ளிழுத்து பரவவிட

அந்தப்பக்கம் கொடியில் தொங்கும் சேலைக்கு
சாயம் போடுபவன் போல் மெலிசா, பரவலா, சீரா அசுத்த ரத்தம்
கார்பன் -டை-ஆக்ஸைடோடு காத்திருக்க...

ஆக்சிஜன் உள்ளாகி, கரியமில வாயு வெளியாகும்
ஆதார ஜீவச்செயல் இடைவிடாமல் நடக்குது அங்கே...

அது நடக்கும் ஆல்வியொலை( அதாங்க இலை) எல்லாம் விரிச்சு
பரப்பி அளந்தா... ஆத்தாடி..
100 -200 சதுரமீட்டர் இருக்குமில்ல..

ஒரு டென்னிஸ் கோர்ட் அளவு இலைப்பரப்பை
நம் நெஞ்சுக்கூட்டுக்குள் குன்சா அமுக்கி வைத்த
இயற்கை -இறை... ஆஹா

தூரப்பயணம் போகையில சூட்கேஸ் பேக் பண்ண
அவர் -அது ஹெல்ப் பண்ணா நல்லாருக்கும்னே..

லாவ், நம்ம

ஒரு சதுரமீட்டர் உள்ள வீட்டு தேக்குமேசையை
எத்தனை முறை தொடைச்சாலும் எப்படி விரைவா
தூசு படியுது...இத்தனைக்கும் காத்து மென்மையா
மேசையை வருடிப்போகும்போதே இப்படி!

வருடத்துக்கு எட்டு மில்லியன் முறை ஒரு சதம் தூசு
உள்ள காற்றை ஆக்டீவ்வா உள்ளிழுத்து
200 மீட்டர் இலைப்பரப்பில் வீசி அடிக்கிறோமே
அப்போ எவ்வளவு தூசு சேரும்..
யாரு அதைத் தொடைச்சி பராமரிக்கிறா?

மாசுக்கட்டுப்பாடு வாரியம்

முதல் பணியாளர்: நாசி
பெரிய தூசு வந்தால் தும்மல்..
நம் சட்டசபை எதிர்க்கட்சி உறுப்பினர் போல்
உடனே வெளியேற்றப்படுவார்.
கொஞ்சம் சின்னதா இருந்தால்
நாசிச் சளிப்படத்தில் சிக்கி
பொன்னிற அழுக்காய் வெளியேறிவிடுவார்.

(கோல்ட் டிக்கிங் கோவிந்து..)
லாவ்: சின்னதம்பி..இங்க வாங்க..

அடுத்து சுவாசக்குழாய் முழுமையும்
மெல்லிய மயிர்க்கால்கள் போல்
cilia இருக்கு. அதன் மேல் கன்வேயர் பெல்ட் போல்
ஒஎஉ மென்சளிப்படலம் இருக்கு. சிலியா எந்நேரமும்
தொண்டை நோக்கி இந்த பெல்ட்டை நகர்த்திட்டே
இருக்கு. மாட்டிய சின்னஞ்சிறு தூசு, கிருமிகள்
இந்த பசை பெல்ட்டில் படிந்து தொண்டை
வந்தவுடன் நம்மை அறியாமலே
"கூட்டி" விழுங்கிடுவோம்..

அமிலமுள்ள வயிறு கிருமிகளை கொன்றுவிட
அரைக்கிலோ கோழிக்கறி செரிக்கும்
வயிறு அந்த தூசுகளை தூசாய் மதித்து
செரிமான மயான வழியில் சேர்த்துவிடும்..

ஆனாலும் நுரையீரலில் வைரஸ், பாக்டீரியா
பாதிப்பால் அதிகமாய்க் கிருமிகள்
இந்த பசைப்படலத்தில் வந்து
வயிற்றில் சங்கமித்தால்
அமில தாக்குதல் தப்பித்த கிருமிகள்
வாந்தி பேதி உண்டுபண்ணும்..
(stomach flu, gastric flu)

எந்த அமிலத்துக்கும் சாகாத பாக்டீரியா
சில உண்டு. அதில் ஒன்று டி.பி. (TB)
(Acid-Fast Bacilli =AFB
அமிலத்தில் சாகாத நீள்பாக்டீரியா)
அதனால் சளியில் தேடி இக்கிருமி கிடைக்கலன்னா
இல்ல குழந்தையால் சரியா சளி துப்பி குடுக்க முடியலன்னா
விடியக்காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் நீரை
உறிஞ்சி (Gastric Aspirate)அதில் AFB தேடுவார்கள்.

thiruarul
12-02-2004, 10:08 PM
'காற்றடைத்த பையில்' குடிகொள்ளும் காற்றைப்பற்றிக் கவித்துவமும் வித்துவமும் கலந்து கட்டிக் கரிகால்இளவல் கடைந்தெடுத்துத் தந்த மாண்பைக் கண்டுகொண்டேன் 'கண்டு கொண்டேன்'.

குறிப்பு : alveoli := காற்றுச் சிற்றறை

அன்புடன் திருவருள்

நிலா
12-02-2004, 10:12 PM
சுவாசக்குழாய் (trachea) தலைகீழான மரமா கற்பனை பண்ணிக்குங்க.
வலது, இடது என இரு பிரதான கிளைகள். (Right and Left Main Bronchus)
ஒவ்வொரு கிளையும் பின் இரண்டு மூன்று துணைகிளைகள்..அப்புறம்
மேலும் கிளைகள்... இப்படி 20 தடவை கிளை பிரிங்க..
கடைசியா சின்ன கம்புகளில் இலைகள் இருக்குமில்லியா
அதைப்போல நம் சுவாசமண்டலமும் சிறு மெல்லிய குமிழ் இலைகளில் முடியுது.
(alveoli).

மிக அருமையான விளக்கம்!

மருத்துவத்தை மிக எளிதாய்,அழகாய்,நகைச்சுவை உணர்வோடு எல்லோருக்கும் புரியும்படியாய் உங்களுக்கே உரிய பாணியில் கலந்து கட்டி
கலக்கிவிட்டீர்கள் தலை!

சூப்பர்!மிக்க நன்றி!

அப்படியே மாயா மாயா,மனமே கலங்காதேயயும் கொஞ்சம் உங்கள் தமிழால் வருடிக்கொடுங்கள் தலை)

sara
12-02-2004, 11:14 PM
சுவாசம் எவ்வளவு முக்கியம், எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதை மிக அருமையாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறீர்கள். வழக்கமாக நீங்கள் கதை சொல்லி முடித்ததும் சந்தேகம் கேட்கும் சி.த, இப்பொழுது கதையின் ஊடே நடை பயில ஆரம்பித்திருக்கிறார். வாழ்க!

உங்களுக்கெல்லாம் இப்படி எழுதறதுக்கு எப்படித்தான் தோணுதோ.. இங்க வாரக்கணக்கில் மண்டை காய்ஞ்சாலும் எழுதறதுக்குன்னு ஒன்னும் கிடைக்க மாட்டேங்குது :(

இளசு
13-02-2004, 12:16 AM
நண்பர் திருவருள் அவர்களின் பாராட்டு தித்திக்கிறது.

நிலா, விரைவில் தருகிறேன்.

சரா, உங்கள் எழுத்தின் ரசிகன் நான்.இந்த பம்மும் வேலை வேண்டாம்.

பாரதி
13-02-2004, 12:40 AM
சுத்தமான காற்றை சுவாசிப்பது போல உங்கள் எழுத்து... நல்லா இருக்கு அண்ணா....

puppy
13-02-2004, 01:05 AM
¯ங்¸Ù즸øÄ¡õ þôÀÊ ±Ø¾ÈÐìÌ ±ôÀÊò¾¡ý §¾¡Ï§¾¡.. þங்¸ Å¡Ã츽츢ø Áñ¨¼ ¸¡öﺡÖõ ±Ø¾ÈÐìÌýÛ ´ýÛõ ¸¢¨¼ì¸ Á¡ð§¼ங்ÌÐ :(


þ¨¾த்¾¡ý ¦º¡øÄ Åó§¾ý.....¿£ங்¸ ¦º¡øÄ¢ðËங்¸ ºÃ¡.

karikaalan
13-02-2004, 07:08 AM
இளவல்ஜி

ஒவ்வொன்றையும் துல்லியமாக எளிதில் புரிந்து கொள்ளவைப்பதில் தாங்கள் வித்தகரே. வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

பி.கு.: கெரஸீன் டீஸலில் கலப்பதனால் சுற்றுப் புறச்சூழல் அதிகமாக (incremental) பாதிக்கப்படுவதில்லை. லாரியோட்டிகள், பெட்ரோல் பம்புகள் இதைச் செய்தால் கலப்படம்; Refineries இதையே செய்கிறார்கள் -- அங்கே கூறப்படுவது -- Blending.

இளசு
14-02-2004, 12:13 AM
தம்பி, தலைவி, அண்ணல் - நன்றிகள்!

poo
14-02-2004, 08:32 AM
10-ங்கிளாஸ் மாணவனுக்கு புரியும்படி சொல்லும்விதம் அழகு...

மருத்துவ கட்டுரையென்றால் மருந்தாய் நினைத்து முகம் சுளித்த காலம்போயே போச்.. இங்கே இளசு அண்ணாவின் இனிப்பான சொல்லடுக்கில்..

பாராட்டுக்கள் அண்ணா.. காதலர் தின சிறப்பு பதிவைக் கேட்டேன்.. காதலே சுவாசமென்பதுபோல்.. சுவாசத்தை பாசத்தோடு கவனித்துவிட்டீர்கள்....(தலைப்பைக்கண்டதும் காதலர் தின ஞாபகம்தான்!!)

- இப்போது விஜய் டி.வி செய்திகளில் தினமும் சென்னையில் காற்றில் உள்ள மாசுக்களின் அளவை (வானிலைபோல.., எவ்வளவு கூடியுள்ளதென..) சொல்கிறார்கள்!!

முத்து
14-02-2004, 01:26 PM
இளசு அண்ணா ...
நுரையீரலில் தூசியைத் துடைத்துச் சுத்தம் செய்யும் செயலைச்
சொன்ன விதம் மிக அருமை ...
புதிதாய்ப் பல விஷயம் அறிந்துகொண்டேன் ..
நன்றிகள் பல...

aren
14-02-2004, 02:35 PM
இந்த மாதிரி கட்டுரைகள் ஆங்கிலத்தில் எழுதுவது எளிது, ஏனெனில் வார்த்தைகள் எளிதாக வந்துவிழும். ஆனால் தமிழில், அதுவும் என்னைப்போன்ற ஜடங்களும் புரிந்துகொள்ளும் அளவில் அழகான எளிமையான தமிழில் எழுதி எங்களை அசத்திவிட்டீர்கள்.

20% சதவிகிதத்திற்கு மேல் ஆக்ஸிஜன் இருந்தால் எல்லாம் பற்றிக் கொள்ளும் அபாயம், நினைத்தாலே பகீரென்கிறது. அதுவே 15% சதவிகிதமாக இருந்து, கூடவே நைட்ரஜனும், கார்பனும் சேர்ந்துகொண்டால் எரியும் நெருப்பும் அனைந்துவிடும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இது உண்மையா?

அருமையான கட்டுரையை எங்களுக்கு வழங்கி புரியவைத்த இளசு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

karikaalan
15-02-2004, 04:35 PM
நைட்ரஜன் ஒரு போர்வை போல் (Blanket) பரவியிருப்பதால், ஆக்ஸிஜனுடைய இயல்பு கட்டுப்படுத்தப்படுகிறது.

Mono Ethylene Glycol (MEG) -- பாலியெஸ்டர் தயாரிப்பில் முக்கியமான கச்சாப்பொருள் -- தயாரிப்பதற்கு முன்னராக, எதிலீனும் ஆக்ஸிஜனும் ரீஆக்ட் செய்யும், எதிலீன் ஆக்ஸைட் ஆவதற்கு. முதலாவது தீப்பற்றினால் உடனே வெடிக்கும் -- அணுகுண்டுக்குத் தம்பி; இரண்டாவது அதற்கு உதவி செய்யும். ஆனால் இவ்விரண்டும் சந்தித்தால்தான் EO தயாரிக்கமுடியும். அதற்கு உதவி செய்வது குளிர்விக்கப்பட்ட திரவநிலையிலுள்ள நைட்ரஜன்.

===கரிகாலன்

இளசு
15-02-2004, 07:41 PM
தம்பிகள் பூ, முத்து, அன்பின் ஆரென் அவர்கள் -நன்றி.

அண்ணலின் கூடுதல் தகவலுக்கு சிறப்பு நன்றி!

ஜோஸ்
02-03-2004, 04:40 PM
இளசுவின் இனிய நடையில் இன்னுமொரு மருத்துவத் தொடர். வாழ்த்துக்கள் நண்பரே....

பாரதி
01-05-2008, 05:26 PM
மூச்சு முட்டும் இந்த நேரத்தில் படித்த இந்தப்பதிவு ஆக்ஸிஜன் போலத் தோன்றுகிறது அண்ணா.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இவ்வாறு எளிய முறையில் எங்களுக்கு பாடம் சொல்லித்தாருங்கள் அண்ணா.

பூமகள்
01-05-2008, 06:33 PM
இளசு அண்ணாவின் பல பொன்னான பதிவுகள் மீள வருவது கண்டு மனம் குதூகளிக்கிறது..!!

சுவாசக் குழாயின் கூட்டிற்குள் ஒரு மைதானமும் அதில் அமர்ந்திருக்கும் உயிர்க்காற்றின் உன்னதமும் இதைவிட அழகாய் வேறு எவரால் கற்பிக்க இயலும் பெரியண்ணா??!!

உங்களுக்கு நிகர் நீங்களே..!!

பாராட்ட வார்த்தைகளே கிட்டவில்லை..!! உங்களின் பல படைப்புகள் மேலும் மன்றத்தின் மேல் எழ.. அதை நல்முறையில் யுனிகோடாக்கம் செய்யும் மன்ற மூத்தோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..!!

உயிர்வாயுவின் சக்திக்கு நிகரேது??!! - இது
தெரியாத தடிமாடுகள்(பீடி,சிகரெட் குடிப்பவங்க தான்)
புரிந்தால் புகையேது??!!


(மன்னிக்கவும் இளசு அண்ணா, எனக்கு புகைப்பழக்கம் இருப்பவங்கள் இப்படி அழிந்து போவது சுத்தமாக பிடிக்காது.. ஆகவே தான் சற்று கடினமான வார்த்தை போட்டுவிட்டேன்.. தவறாயின் மன்னித்தருளுங்கள்.)

ஓவியா
01-05-2008, 10:07 PM
உயிர்வாயுவின் சக்திக்கு நிகரேது??!! - இது
தெரியாத தடிமாடுகள்(பீடி,சிகரெட் குடிப்பவங்க தான்)
புரிந்தால் புகையேது??!!


பூ இதில் எனக்கு ஒரு வருத்தம் மட்டுமே (தமாசு வருத்தம்) பாவம் அந்த மாடுகள், நமக்கு தேவையில்லாத புல்லை தின்று தேவையான பாலை கொடுத்து நம்மை காக்கும் அந்த ஜீவனை, தான் செத்தாலும் பரவாயில்லை நாலு பேரு நிற்க்கும் இடத்தில் என் சுகம் தான் எனக்கு முக்கியம் என்று சுயநலமாக புகையை ஊதிதள்ளுலும் பண்பற்ற மானிடனுடன் சமமாக பார்ப்பது ஒரு நல்ல பிள்ளைக்கு அழகல்லடா கண்ணா. வேறு எதாவது சொல்லி திட்டுமா.


பால்காரி அண்ணாமலி
ஓவியா

அனுராகவன்
02-05-2008, 01:24 AM
இளசுவின் மருத்துவத் தொடரை மீண்டும் உயிர்பித்தற்கு நன்றி பாரதி..
ம்ம் இன்னும் இளசு அவர்கள்தான் ஆரம்பிக்கனும்..

பூமகள்
02-05-2008, 07:59 AM
பூ இதில் எனக்கு ஒரு வருத்தம் மட்டுமே (தமாசு வருத்தம்) என் சுகம் தான் எனக்கு முக்கியம் என்று சுயநலமாக புகையை ஊதிதள்ளுலும் பண்பற்ற மானிடனுடன் சமமாக பார்ப்பது ஒரு நல்ல பிள்ளைக்கு அழகல்லடா கண்ணா. வேறு எதாவது சொல்லி திட்டுமா.

பால்காரி அண்ணாமலி
ஓவியா
அக்கா.. மன்னிச்சிருங்க.. திட்டியபின் இதே போல் தான் எனக்கும் தோன்றியது..:eek::eek::icon_ush: ஆனால், பூவுக்குத் திட்டும் வார்த்தை கூட தெரியாதே..??!! :redface::redface:
திட்டிப் பழக்கம் இருந்தா தானே??!! :icon_ush::icon_ush:

என் சார்பா நீங்களே திட்டிடுங்க அக்கா..!! :icon_rollout:

ஆமா.. எப்போதிருந்து அண்ணாமலி பால்காரி ஆனீங்க..??:rolleyes::aetsch013: சொல்லவே இல்ல...!! :D:D

அண்ணாமலி தங்கச்சி,
பால்கோவா காரி
பூ..!:icon_b::icon_b:

பால்ராஜ்
05-09-2009, 06:56 AM
நான் காற்றை ஆழமாகச் சுவாசித்து நேசிப்பது வழக்கம். (ஒரு காலத்தில் புகையையும் சேர்த்ததும் உண்டு.. பல வருட அனுபவத்துக்குப் பின்னர் தூய காற்று அதைவிட மேம்பட்டது என்று உணர்ந்து தினமும் முக்கால் மணிநேரம் சுவாசப் பயிர்ச்சி செய்து 'வாழும் கலை' பட்டறையில் கலந்ததின் பயனைத் துய்த்து வருகிறேன்..

அதானால் தானோ என்ன வோ..
காற்று வெளியிடைக் கண்ணம்மா...
காற்றின் மொழி
போன்ற பாடல்கள் அளவுக்கு மீறி ஈர்க்கின்றன.

vseenu
26-09-2011, 09:02 AM
இனிய நடையில் அனைவரையும் ஈர்க்கும் வகையில் தெளிவாக தந்துள்ளீர்கள்.மிக்க நன்றி