PDA

View Full Version : உதிரிப்பூக்கள்...



இளசு
02-02-2004, 10:22 PM
படித்தவையா, நினைத்தவையா............

மனவறையில் தொகுக்கப்படாமல்
சிதறிக்கிடக்கும்....


உ தி ரி ப் பூ க் க ள்....


நின்றபின்னும் ஆக்கிரமிக்கும்
சில்வண்டின் பாட்டு போல..
சென்ற பின்னும்
சிந்தனையில் நீ..


****************************************

சற்றே திறந்த தெருஜன்னல் வழியே
வழிந்த பாடல் வரிபோல்
அவ்வப்போது உன் சாடைப் பேச்சுகள்..

ஒவ்வொரு வரியாய் என் சேமிப்பில்...
நம்பிக்கை இருக்கிறது
முழுப்பாடலும் வசப்படும் என்று..



************************************************

எவர் பேச்சுக்கும் நான் ஒலிநாடா
உன் பேச்சை சேமிப்பதில் எம்.பி.3!


***************************************************

நான் பாறைதான்
உன்னை
எதிரொலிப்பதால்

நிலா
02-02-2004, 11:05 PM
சற்றே திறந்த தெருஜன்னல் வழியே
வழிந்த பாடல் வரிபோல்
அவ்வப்போது உன் சாடைப் பேச்சுகள்..

ஒவ்வொரு வரியாய் என் சேமிப்பில்...
நம்பிக்கை இருக்கிறது
முழுப்பாடலும் வசப்படும் என்று..


இது ரொம்ப சூப்பர்!

உங்கள் மனதினில் உதிரிப்பூக்களாயிருப்பினும் எங்களுக்காய் எடுத்து தொடுத்துக்கொடுத்தமைக்கு மிக்க நன்றி!

இன்னும் வாசம் காண்பிங்க தலை!

பாரதி
03-02-2004, 12:22 AM
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா... பாராட்டுக்கள்.

kavitha
03-02-2004, 04:22 AM
நான் பாறைதான்
உன்னை
எதிரொலிப்பதால்

பாறை என்றால் நினைவுக்கு வருவது அதன் கடினத்தன்மை! வித்யாச சிந்தனை!

gankrish
03-02-2004, 04:49 AM
இளசு நன்றாக எழுதியுள்ளீர். என்ன அசந்தா ஒரு 5-இன்-1 ஆக்கிடுவீங்க போல தெரியுது.. Tape, CD, MP3ன்னு..

Nanban
03-02-2004, 05:14 PM
உதிரிப் பூக்கள் என்பது எப்போதுமே மனதினுள் மெல்லிய சோகத்தோடு இழையோடும் இன்பமான நினைவுகள் தான்.

தெருவழியே .... கவிதை நல்ல தாக்கத்துடன் இருக்கிறது....

பாராட்டுகள்....

(கொஞ்சம் மலரும் நினைவுகள் போல இருக்கிறது.....நன்றாக)

இளசு
09-02-2004, 08:38 PM
நன்றி..

நிலா
பாரதி
கவிதா
கான்கிரீஷ்
நண்பன்..

இளசு
09-02-2004, 08:40 PM
கரையோரம் உன்
கைப்பிடித்து நடந்த என் மேல்
நதிக்குப் பொறாமை

நிலவை அழைத்தபடி
அதுவும் கூடவே....

puppy
09-02-2004, 08:42 PM
ம்ம்ம்ம்ம்ம்ம்..ஆமாம் எத்தனை பேர் கூட தான் போகும் நிலா....

இளசு
09-02-2004, 08:42 PM
என்ன.. என் ஆயுள் எத்தனையா?
நீ என்னை
எத்தனை முறை செல்லமாய்
அழைக்கிறாயோ.. அத்தனை.......

puppy
09-02-2004, 08:43 PM
அத்தனை நிமடங்களா இளசு.....

இளசு
09-02-2004, 08:45 PM
யூகங்கள் உங்களுடையவை...
யுகங்களாயும் இருக்கலாம்..
மனம் காட்டும் காலமானியில்..

நன்றி பப்பி அவர்களே...

puppy
09-02-2004, 08:47 PM
ஆனால் நீ எப்படி
கூப்பிட்டாலும்
அவை செல்லமானவையே...

அப்படித்தானே இளசு....

gankrish
10-02-2004, 08:28 AM
இளசுவின் மனசிலிருந்து பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கிறது. பப்பியின் கிண்டலும் அழகு

poo
14-02-2004, 09:51 AM
நிறைய பதிவுகளில் படித்தவையாயென சந்தேகத்தை கிளப்புவதேனோ?!!

சரளமாய் பூக்கும் பூக்களை இந்த தோட்டத்தில் உதிர்த்துக் கொண்டே இருங்கள்... வாசத்தில் மயங்கிக் கிடக்க நான் தயார்..

முத்து
14-02-2004, 01:52 PM
எவர் பேச்சுக்கும் நான் ஒலிநாடா
உன் பேச்சை சேமிப்பதில் எம்.பி.3!


ஹா .. ஹா ..
இளசு அண்ணா ...
மனதில் கற்பனை செய்து பார்த்தால்
சுவாரசியசியமாய் இருக்கிறது ..
நன்றிகள் பல ...

இளசு
14-02-2004, 11:10 PM
பப்பி அவர்கள், இனிய நண்பன் கான்கிரீஷ், தம்பிகள் பூ, முத்து - நன்றிகள்.
பூ..எந்த வார்த்தை நமக்குச் சொந்தம்?
எந்த கருத்து நமக்குச் சொந்தம்..
இந்த மேனிபோல் எல்லாமே இரவல் வாங்கி வந்தவைதானே...

இளசு
14-02-2004, 11:12 PM
என் கண்ணீர்த்துளி ஒன்று
கடலில் விழுந்துவிட்டது
எவரேனும் அதைக்
கண்டெடுக்கும் தினம்
உன்னைக்
காதலிப்பதை நிறுத்துவேன்


--------------------------------------

உலகின் மிகச்சிறந்த பொருட்கள்
பொருட்கள் அல்ல

இக்பால்
15-02-2004, 07:16 AM
அண்ணா அமைதியாக தூள் கிளப்பிக் கொண்டு இருக்கிறார்.:)

poo
15-02-2004, 12:49 PM
மனசை அரிக்கிறீங்களே அண்ணா...

(யப்பா.. என்ன ஒரு சிந்தனை!!...)

இளசு
15-02-2004, 07:35 PM
இளவல்களே...என் நன்றிகள்..

சேரன்கயல்
16-02-2004, 08:09 AM
பூ..எந்த வார்த்தை நமக்குச் சொந்தம்?
எந்த கருத்து நமக்குச் சொந்தம்..
இந்த மேனிபோல் எல்லாமே இரவல் வாங்கி வந்தவைதானே...

அசத்தல் இளசு...

பாரதி
16-02-2004, 12:36 PM
என் கண்ணீர்த்துளி ஒன்று
கடலில் விழுந்துவிட்டது
எவரேனும் அதைக்
கண்டெடுக்கும் தினம்
உன்னைக்
காதலிப்பதை நிறுத்துவேன்


கவிதை மழையில்
தினம் தினம்
நனைகிறது மனம்.

மன்மதன்
16-02-2004, 12:50 PM
என் கண்ணீர்த்துளி ஒன்று
கடலில் விழுந்துவிட்டது
எவரேனும் அதைக்
கண்டெடுக்கும் தினம்
உன்னைக்
காதலிப்பதை நிறுத்துவேன்


கடல் மீதிலே துளி வீழ்ந்ததே.. அதை தேடி தேடி பார்த்தேன்..

மன்ற கவியரசு இளசு.. பாராட்டுக்கள்..

இக்பால்
16-02-2004, 02:52 PM
என் கண்ணீர்த்துளி ஒன்று
கடலில் விழுந்துவிட்டது
எவரேனும் அதைக்
கண்டெடுக்கும் தினம்
உன்னைக்
காதலிப்பதை நிறுத்துவேன்


இளசு அண்ணா: என்ன இக்பால்...என்ன தேடிக் கொண்டிருக்கிறீர்கள்?
இக்பால்: ஒண்ணுமில்லைங்க அண்ணா.
இளசு அண்ணா: என்னமோ தேடிக் கொண்டு இருக்கிறீர்கள்! சும்மா
சொல்லுங்க...என்ன அது?

மன்மதன்
16-02-2004, 03:03 PM
இளசு : மன்மதன் நீங்களாவது என்னன்னு கேட்டு சொல்லுங்க..

கொஞ்ச நேரம் கழித்து

மன்மதன் : அது ஒண்ணும் இல்லை, அவர் துணைவியார் பரிசளித்த பொருளை கடற்கரையில் தொலைத்து விட்டாராம்.. அது இல்லாம வீட்டிற்கு பானால் என்ன ஆகும்னு நினைத்து பார்த்துட்டு , தேடிக்கொண்டிருக்கிறாராம்..

இக்பால்
16-02-2004, 03:09 PM
மன்மதன் தம்பி... தண்ணீருக்குள் அல்லவா தேடிக் கொண்டிருக்கிறேன்.

இளசு
17-02-2004, 11:17 PM
அலம்பல் அலசல்.. ரசித்த மனதின் பாராட்டுகள்..

இளசு
28-02-2004, 05:29 PM
ஒரு பாரத்தை
இரு கைகளில் பிரித்து சுமந்து
நடப்பது போல்
நம் நட்பு..

gankrish
02-03-2004, 08:43 AM
ஒருவன்: ஏண்டா தீடிர் என்று கடல் நீர் இனிக்கிறது..

நான் (கான்கிருஷ்):அதுவா வேறு ஒன்றும் இல்லைடா.. என் இனிய நண்பன் இளசுன்னு ஒருத்தன் இருக்கான்.. அவன் அழுது.. அவனுடைய கண்ணீர் இந்த கடலில் சேர்ந்து விட்டதாம்.

kavitha
02-03-2004, 09:57 AM
ஒரு பாரத்தை
இரு கைகளில் பிரித்து சுமந்து
நடப்பது போல்
நம் நட்பு..
_________________

ஆஹா, நட்புப்பகிர்வை இதைவிட இலகுவாக சொல்லமுடியுமோ! அருமை! அருமை!!

இருகை பாரத்தை
ஒரு தலையில்
சுமத்தினால்
அது திருமணம்?!?!

இக்பால்
02-03-2004, 10:21 AM
ஒருவர் உழைப்பை
பலரும் பகிர்ந்து மகிழ
அது குடும்பம்.!

கவிதா தங்கை...இது எப்படி?
இளசு அண்ணாவும், நீங்கள் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள்.

kavitha
02-03-2004, 10:24 AM
மன்மதன் தம்பி... தண்ணீருக்குள் அல்லவா தேடிக் கொண்டிருக்கிறேன்.


கண்ணீர் முத்துக்களையா அண்ணா?

kavitha
02-03-2004, 10:28 AM
" ஒருவர் உழைப்பை
பலரும் பகிர்ந்து மகிழ
அது குடும்பம்.! "
நேர்மறைக்கண்ணோட்டம் ... உங்கள் பார்வை நலமாய் உள்ளது.

இக்பால்
02-03-2004, 10:50 AM
என்னைப் பற்றி
ஏன் கவலைப் படுகிறீர்கள்?
இது மகன்,மகளின் கேள்வி.

poo
02-03-2004, 03:23 PM
நட்புக்கு போட்ட பாதையில் திருமணத்தையும் குடும்பத்தையும் கொண்டுவந்த கவி உள்ளங்களுக்கு பாராட்டுக்கள்...

உங்களிடமிருந்து ஒரு பூ உதிர்கையில் இங்கே பல மொட்டுக்கள் முளைக்கின்றன..

பாராட்டுக்கள் அனைவருக்கும்!!

இளசு
09-03-2004, 07:10 PM
அனைவரையும் பாராட்டி தொடர்ந்து கோர்க்க வேண்டுகிறேன்..


இல்பொருள் உவமை அணி

அட, ஆரஞ்சு பழத்துக்குள்
மின் விளக்கை போட்டது யார்?

அதிகாலைச் சூரியன்!

kavitha
10-03-2004, 03:09 AM
அதெப்படி இளசு அண்ணா,
நானும் இதே போல் ஒன்று கொண்டு வந்தேன். நீங்களும் அப்படியே பதித்திருக்கிறீர்கள்!


இரவில் குளித்த நிலா
மேகத்தில் தலை துவட்டுகிறாள்
அதிகாலை பனி மூட்டமே
புகை போட வாருங்கள்!

இளசு
10-03-2004, 07:01 PM
சூரியன் பற்றி நான் சொல்ல
நிலவைப்பற்றி மிக அருமையாய் வர்ணித்த
தங்கை கவிதாவின் உதிரிப்பூ
கண்டு என் மனசுக்குள் மத்தாப்பூ!

இளசு
10-03-2004, 08:26 PM
ஒருவன்: ஏண்டா தீடிர் என்று கடல் நீர் இனிக்கிறது..

நான் (கான்கிருஷ்):அதுவா வேறு ஒன்றும் இல்லைடா.. என் இனிய நண்பன் இளசுன்னு ஒருத்தன் இருக்கான்.. அவன் அழுது.. அவனுடைய கண்ணீர் இந்த கடலில் சேர்ந்து விட்டதாம்.


இனிய நண்பா

உன் நட்பு என்னும் சர்க்கரை கலந்ததால்
வாழ்க்கைக்கடல் இனிக்கிறது

இளசு
27-03-2004, 08:26 PM
"பக்கத்துக்கு இலைக்கு பாயாசமா ஸார்?"
கேட்டவருக்குத் தெரியாது எனக்கு
சர்க்கரை நோயென்று.

பாரதி
28-03-2004, 12:36 AM
அருமை நண்பர்களே. அனைவருக்கும் பாராட்டுக்கள்.

இளசு
28-03-2004, 09:06 PM
கண்களில் காமிரா
மனசே ஆல்பம்
இவன் தான் பாலா

(இயக்குநர் பாலாவின் சுயசரிதத் தொடர் விகடனில்
படித்தபோது தோணியது.அப்படி ஒரு நேர்த்தியான வாழ்க்கைப்பதிவு
www.vikatan.com (http://www.vikatan.com))

kavitha
31-03-2004, 02:16 AM
"கண்களில் கேமிரா"
வியக்கும் அவயங்களில் முதன்மையானது இது!

ஒருவேளை என்
உணர்வுகளை முடக்கச்சொல்லினும்
உண்ணாமல் இருக்கச்சொல்லினும்
கேளாமல் போனாலும் - வலிய
நானாக பேசாது போனாலும்

அன்பே! உன்னை
தூரத்தில் காணும்
பேற்றை மட்டுமாவது
பெற்றிருக்கிறேனே!

இறைவா!
எத்தனை எத்தனை
அதிசயங்கள் உன் படைப்பில்?
இதையெல்லாம் காணாது
போய் விடின்
வீணல்லவா, என் பிறப்பு!

இறந்த பின்னும்
இறக்காதல்லவா
இக்கண்ணின் துடிப்பு!

மற்றவர்க்கு அளிப்பதற்கு
கண்டறிந்த விஞ்ஞானம்
வியப்போ வியப்பு!

இதை தானம் செய்தல்
நம் தலையாய பொறுப்பு!

நல்ல தொடர் அண்ணா, நானும் படித்திருக்கிறேன்.

kavitha
06-04-2004, 07:47 AM
பிறை நிலா
ஊஞ்சலாடுவோம்!
தென்றலே!
வீசி வா!

இக்பால்
06-04-2004, 07:57 AM
தங்கை அருமையான கவிதைகள். தொடருங்கள். -அன்புடன் அண்ணா.

இளசு
07-04-2004, 12:12 AM
உங்கள் படைப்புகள் கவனம் ஈர்க்கின்றன கவிதா...

வாழ்த்தி மகிழ்கிறேன்...

kavitha
07-04-2004, 04:06 AM
அண்ணாக்களுக்கு நன்றி!

உங்கள் அனுபவ கவிதைகளுக்காகவும் காத்திருக்கிறேன். தாருங்கள்!

இளசு
13-04-2004, 09:51 PM
என்னிரவு...


கதவில் தாழ்ப்பாள்
கனத்த போர்வை
விதிக்கப்பட்ட தனிமையில்
தகித்த வெப்பத்தில்
என் முன்னிரவு

கதவடி தரைவழி
ஊறிவரும் மழைக்கால ஓதம் போல்
சிலீரென உன் நினைவு...
கேட்பாரின்றி எனைத் தழுவ
விழித்துக்கிடந்தேன்
நள்ளிரவு

kavitha
14-04-2004, 04:12 AM
உங்களோடு இரவும் விழித்திருந்ததா? பலே பலே!

இளசு
14-04-2004, 11:24 PM
நன்றி கவிதா...
-------------------------------

நான் கேட்பதை நிறுத்தினேன்
அதுவும் பேசுவதை நிறுத்தியது -
சுவர்க்கோழி

kavitha
15-04-2004, 03:25 AM
சுவர்க்கோழி


இது உருவகமா/உண்மையா? இளசு அண்ணா

இளசு
18-04-2004, 10:17 PM
கண், செவி, வாய் பொத்தவில்லை
காரணம் கைகளே இல்லை -
காந்தியின் பொம்மைகள்.

kavitha
19-04-2004, 09:48 AM
புரியவில்லையே அண்ணா! காந்தியின் பொம்மைகளுக்கு கைகள் இல்லையா?

இளசு
12-05-2004, 11:01 PM
அல்லவை நாடும் நம் புலன்களைக் கட்டிப்போட
"புலன் அடக்கம்" என்ற கையை இழந்த நிலை கவிதா...


இனி இன்னொரு பூ...


வரதட்சணை ஸ்கூட்டரில் அமர்ந்து...
"சே கேவலம்"...
பிச்சைக்காரனை விரட்டினேன்..

இளசு
13-05-2004, 09:55 PM
ஆசிரியை விடுப்பில்
அடங்காப் பிள்ளைகள்
அமாவாசை வானம்

kavitha
17-05-2004, 09:52 AM
விளக்கத்திற்கு நன்றி அண்ணா!
'சுவர்க்கோழி' -க்கு இன்னும் தாங்கள் பதில் சொல்லவில்லையே! பதிலுக்காக காத்திருக்கிறேன்.


ஆசிரியை விடுப்பில்
அடங்காப் பிள்ளைகள்
அமாவாசை வானம்

அமாவாசை வானமா? 10 வது 12 வது வகுப்புகளில் எங்களுக்கு அன்று தான் பௌர்ணமி அண்ணா... விளையாடும் வகுப்பிற்கு அன்று மட்டும் தான் செல்லமுடியும்.ரசிக்கவைத்தன இரு கவிதைகளும்!

இக்பால்
17-05-2004, 11:31 AM
அமாவாசை வானமா? 10 வது 12 வது வகுப்புகளில் எங்களுக்கு அன்று தான் பௌர்ணமி அண்ணா... விளையாடும் வகுப்பிற்கு அன்று மட்டும் தான் செல்லமுடியும்.ரசிக்கவைத்தன இரு கவிதைகளும்!

நீங்கள் சந்தேகம் கேட்க கேட்க எனக்கு இப்பொழுது சந்தேகம்.
மேலே சொன்னதில் அர்த்தம் எனக்கு விளங்கவில்லையே தங்கை. :roll:

பரஞ்சோதி
17-05-2004, 01:07 PM
ஒன்னுமே புரியலை உலகத்திலே
மர்மமா இருக்குது, ஆனா மனதை மயக்குது.

பாராட்டுகள் இளசு அண்ணா.

kavitha
18-05-2004, 05:25 AM
நீங்கள் சந்தேகம் கேட்க கேட்க எனக்கு இப்பொழுது சந்தேகம்.
மேலே சொன்னதில் அர்த்தம் எனக்கு விளங்கவில்லையே தங்கை.


10,12 வகுப்புகளில் பொதுத்தேர்வு நடக்கும் என்பதால் வகுப்புகள் முடிந்த
பின்னரும் தனி வகுப்புகள் நடக்கும். மற்ற வகுப்பு பிள்ளைகள் போல விளையாடவோ, பிற போட்டிகளில் கலந்துகொள்ளவோ கவனம் சிதறும் என்று சாமான்யமாக அனுமதிக்கமாட்டார்கள். வகுப்பாசிரியர் வராத தினத்தில் தான் நாங்கள் மைதானத்தில் கால் பதிப்போம். அதைத்தான் சொன்னேன் அண்ணா!

இளசு
25-05-2004, 11:32 PM
காதல் முரசு கொட்டி
கவிதைக் கணைகளோடு
களம் இறங்கினேன்.....

எதிரில்......
நட்புக்கொடி பிடித்து
புன்னகையுடன் நீ...

kavitha
26-05-2004, 03:41 AM
பிறகென்ன... சுயம்வரம் தானே! :)

இளசு
26-05-2004, 10:47 PM
பிறகென்ன... சுயம்வரம் தானே! :)


சுயம்வரமா.. சுயக்கட்டுப்பாடுதான்.. (ஓட்டுக்குள் ஆமையாய்..)


இன்று ஒரு உதிர்ந்த பூ...

கடிதங்கள் - கிழித்தாச்சு
போன பிறந்தநாளுக்கு
பரிசாய் நீ தந்த சட்டை -
லைட்டராலேயே கொளுத்தி எரித்தாச்சு...

ஓ.. சிகரெட் பிடிப்பதே
உனக்கு பிடிக்கும் என்றுதானே
லைட்டர், சிகரெட் - விட்டு ஒழித்தாச்சு...

எல்லாம் செய்ய முடிந்ததே -
ஒரே ஓர் இரவுக்குள்...

மனதையும்.. கனவையும்
சுத்திகரிக்க மட்டும்...
ஏன் முடியவில்லை
இத்தனை ஆண்டாய்?

kavitha
27-05-2004, 03:53 AM
ஓ.. சிகரெட் பிடிப்பதே
உனக்கு பிடிக்கும்???? என்றுதானே
லைட்டர், சிகரெட் - விட்டு ஒழித்தாச்சு...
மிக நல்லது!

சேரன்கயல்
27-05-2004, 04:35 AM
காதல் முரசு கொட்டி
கவிதைக் கணைகளோடு
களம் இறங்கினேன்.....

எதிரில்......
நட்புக்கொடி பிடித்து
புன்னகையுடன் நீ...


காதல் படையெடுப்புகள் தடுமாறிப்போகும் வித்தை இதுதானே இளசு...

சேரன்கயல்
27-05-2004, 04:37 AM
மனதையும்.. கனவையும்
சுத்திகரிக்க மட்டும்...
ஏன் முடியவில்லை
இத்தனை ஆண்டாய்?


மறதிப் போர்வையில் மறைந்துகொண்டு திடீரென எட்டிப்பார்க்கும் இந்த மாயத்துக்கு ஏதாச்சும் தாயத்து கிடைக்காதா...

kavitha
27-05-2004, 04:39 AM
சேரன், பிச்சு உதர்றீங்க....!

இளசு
30-05-2004, 11:25 PM
நன்றி கவீ, இனிய சேரன்..
இன்றைய உதிரிப்பூ..

அன்றும் - இன்றும்...

அன்று ------
என் கால்கள் மேகத்தில்...
என் கைகள் பிரபஞ்சத்தையும் தாண்டி..
என் எண்ணங்களைப் படிக்க
முயன்று தோற்றவர் கோடி..
காற்றுக்கு முத்தமா?
வான்வில்லுக்கு விலையா?
என்னை அளக்கவா...?

ஒன்றா இரண்டா ..இல்லை மூன்றா
எத்தனை மன அடுக்கு இவனுக்கு..?
எண்ணிப் பிரமிக்க ஒரு கூட்டம்..

என் வீட்டுத் தோட்ட விளக்காய் நட்சத்ரம்
என் தோட்ட மரத்தில் குடியாய் தேவதைகள்
என் வீட்டின் வளர்ப்புச் செல்லம் சிங்கக்குட்டி
என் சிகரெட் சாம்பலிலும் அக்னிக்குஞ்சு

என் கண்ணில் தெறித்த பிம்பங்கள்...
எதிர்கொண்டு பார்த்தவரை
அதிரவைத்த அதிசயங்கள்....


இன்று --------

கூரையை வெறித்த வெற்றுப்பார்வை
வார்த்தைகளற்ற நிலை..
"அவள் போன பின் - இப்படித்தான்"
உங்கள் பேச்சு காதில் விழுந்தும்
என்னில் சலனமில்லை.

அறிஞர்
31-05-2004, 03:31 AM
கூரையை வெறித்த வெற்றுப்பார்வை
வார்த்தைகளற்ற நிலை..
"அவள் போன பின் - இப்படித்தான்"
உங்கள் பேச்சு காதில் விழுந்தும்
என்னில் சலனமில்லை.


அருமையாய் உள்ளது...... உம் கவிதை..

வாழ்த்துக்கள்.. இளசு.....

kavitha
31-05-2004, 05:04 AM
என் கண்ணில் தெறித்த பிம்பங்கள்...
எதிர்கொண்டு பார்த்தவரை
அதிரவைத்த அதிசயங்கள்....
..................
..................
உங்கள் பேச்சு காதில் விழுந்தும்
என்னில் சலனமில்லை.

அன்றும் இன்றும், உணர்வாய் வந்து உயிராய் போனவளின் உந்து விசைகளை காண்கிறோம்!
வார்த்தைகள் இல்லை.... பாராட்ட!
இனி பாராட்டி தான் என்ன? அவள் காதுகளுக்கு கேட்கவா போகிறது!

mythili
01-06-2004, 09:22 AM
என்ன அருமையான கவிதை.
மனதின் ரணத்திற்கு மருந்து போடுவது போல, இதமாக உள்ளது இளசு அண்ணா. அடுத்த கவிதைக்காக காத்திருக்கிறேன்.

அன்புடன்,
மைதிலி

பரஞ்சோதி
01-06-2004, 06:20 PM
இளசு அண்ணாவின் கவிதையை படிப்பதில் தனி சுகம் உண்டு, அந்த வகை கவிதை. நன்றி அண்ணா.

இளசு
01-06-2004, 09:14 PM
மனம் என்னும் விநோதம்..
இன்னும் எனக்கு விளங்காதது..

பார்க்கவில்லை.. படிக்கவில்லை.. பாராட்டவில்லை
என்றால் சவலைப்பிள்ளையாய் ஏங்கும்..

பாராட்டும் வாழ்த்தும் வந்தவுடனே
கூச்சத்தில், பருவப்பெண்ணாய் நாணும்...

இந்த மனமின்றி வாழ்வதரிது,
இந்த மனத்தோடு வாழ்வதரிது...


நன்றிகள்... இனிய அறிஞருக்கும்,
சகோதரிகள் கவி -கவீக்கும்,
இசைக்குயில் மைதிலிக்கும்
இளவல் பரஞ்சோதிக்கும்...

இளசு
01-06-2004, 09:17 PM
வழிய வழியின்றி தேங்கியதால்
உள்சென்று........
இதயத்தின் எடை கூட்டியது
கண்ணீர் !!

thamarai
02-06-2004, 01:42 PM
மனதைத் தொட்டுச் செல்கிறது கவிதை. வாழ்த்துக்கள்...

kavitha
03-06-2004, 03:42 AM
மனம் என்னும் விநோதம்..
இன்னும் எனக்கு விளங்காதது..

பார்க்கவில்லை.. படிக்கவில்லை.. பாராட்டவில்லை
என்றால் சவலைப்பிள்ளையாய் ஏங்கும்..

பாராட்டும் வாழ்த்தும் வந்தவுடனே
கூச்சத்தில், பருவப்பெண்ணாய் நாணும்...

இந்த மனமின்றி வாழ்வதரிது,
இந்த மனத்தோடு வாழ்வதரிது...
கவிதைகள் மட்டுமல்ல.. உங்கள் பேச்சும் நெஞ்சை உரசிப்பார்த்து செல்கிறது!

இளசு
04-07-2004, 11:11 PM
நன்றி தாமரை,கவீ..

__________________________


மருமகளாக்கி எரித்தது -
மாப்பிள்ளை வீடு..

கருவிலேயே அழித்தது -
பெண் வீடு

kavitha
09-07-2004, 12:11 PM
எந்த வீடும் பேறாகாதோ இவ்வினத்திற்கு மட்டும்!

kavitha
09-07-2004, 12:12 PM
தொடர்ந்து உதிரும் பூக்களுக்கு நன்றி

இளசு
24-08-2004, 07:34 AM
தொடரும் கவியின் ஆதரவிற்கு நன்றி..

__________________________________

பேருந்து சன்னல் வழி..
சரணாலய யானைக்கூட்டம்..
மழலையில் குழந்தை சொன்னது_
சேனலை மாத்தும்மா..

kavitha
24-08-2004, 07:55 AM
பேருந்து சன்னல் வழி..
சரணாலய யானைக்கூட்டம்..
மழலையில் குழந்தை சொன்னது_
சேனலை மாத்தும்மா..
_________________

நல்லவேளை கம்யூட்டரில் பார்க்கலை! :lol:

இளசு
13-11-2005, 11:13 PM
தலைப்பு மாலைகளில் சிக்காத
சின்ன சின்ன வரிகள்..

எனவே இவை

உதிரிப்பூக்கள்..

எவ்வளவு ஊற்றியும்
நிரம்பவில்லை-
கவிழ்ந்த பாத்திரம்.

****************************************************


விளக்கு ஏற்றியும்
இருட்டா?
இமை திற.

சேரன்கயல்
14-11-2005, 05:03 AM
வித்தியாசப் (சரியான) பார்வை...
மீண்டும் மன்றம் வந்து மகிழ்ச்சியூட்டும் இனிய இளசுக்கு, வாழ்த்துக்கள்...
(இமை மூடிக்கிடந்தேன்...எழுப்பினார் எங்கள் "தலை")

gragavan
14-11-2005, 05:46 AM
நல்ல கவிதைகள். மிளகு போல. சிறுத்தாலும் காரம்.

poo
14-11-2005, 08:27 AM
பூக்களெல்லாம் மாலைகளாட்டும் அண்ணா..

Shanmuhi
14-11-2005, 08:07 PM
மூன்று வரிக் கவிதை அருமை...

பாரதி
15-11-2005, 12:38 AM
உதிரிப்பூக்கள் - வண்ணம் வண்ணமாக, சிறிது பெரிதாக, தூவுவதற்கு வசதியாக - மூட்டை மூட்டையாய் உங்கள் உதிரிப்பூக்களின் வரவு இருக்க வேண்டும். உதிரிப்பூக்களின் வாசத்தில் நாங்கள் கிறங்கிக்கிடக்க வேண்டும். தலைப்புகளில் சிக்காத கவிதைகள் உங்கள் கைகளில் சிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். தொடரட்டும் உங்கள் தூவல். நன்றி அண்ணா.

அறிஞர்
15-11-2005, 03:58 AM
உதிரிப்பூக்கள்.. சிறியதானாலும்
சுவை அருமை...

சேரனை இங்கு கண்டது அதிலும் இனிமை

தாமரை
04-07-2006, 11:38 AM
தலைப்பு மாலைகளில் சிக்காத
சின்ன சின்ன வரிகள்..

எனவே இவை

உதிரிப்பூக்கள்..

எவ்வளவு ஊற்றியும்
நிரம்பவில்லை-
கவிழ்ந்த பாத்திரம்.

****************************************************


விளக்கு ஏற்றியும்
இருட்டா?
இமை திற.



காதலின் பாத்திரமும் அப்படித்தான்..

தேவதாஸ் எவ்வளவு ஊற்றியும்(!!!!) நிரம்பவில்லையே..
கவிழ்ந்த பாத்திரமும் மூடிய மனக்கதவும் ஒன்றுதான்...
என்ன ஊற்றினாலும் உபயோகமில்லை..

கண்திறப்பதற்கும் இமை திறப்பத்ற்கும் என்ன வித்தியாசம்.. இமை என்பதை மோனைக்காக எடுத்தாண்டீர்களா இல்லை இதற்கு வேறு அர்த்தம் உண்டா?

இரு கவிதைகளையும் ஒரு நூல் கொண்டு கோர்க்கலாம்..
இதுக்கு பேர் நூல் விடறது .....:rolleyes: :rolleyes: :rolleyes: இல்லை:D :D :D

இரண்டிலுமே ஏதோ ஒன்று மூடிக் கிடக்கிறது..

ஒன்றை நிமிர்த்தினால் நேராக்கினால் நம்முடையதைக் கொண்டு அதை நிரப்பலாம்

இன்னொன்றை சிறையிலிருந்து விடுவித்தால் மற்றதை அதுவே பார்த்துக் கொள்ளும்..

மூடிக் கிடக்கும் மனங்களும் கண்களும் உபயோகப்படுவதில்லை..

எதையும் ஒடுக்க எண்ணாதீர்கள்..

கண்களும் திறந்திருக்கட்டும்...
காதுகளும் திறந்திருக்கட்டும்...
மனதும் திறந்திருக்கட்டும்...

வாய் மட்டும்....

:cool: :cool: :cool: :cool: :cool:

ஓவியா
09-07-2006, 12:17 PM
அழகான குட்டி கவிதைகள்
ஆழமான கருத்து
நன்றி இளசு சார்

கவிதையை அலசி நூலில் காயப்போட்ட
செல்வன் சருக்கும் நன்றி

பென்ஸ்
14-07-2006, 12:05 AM
இளசு...

சொல்ல வருவதை கட்டுரை எழுதி சொல்ல வேண்டும் என்ற அவசியமில்லை மூன்று வரி கவிதையில் நறுக் என்று சொல்லி விட மூடியும் என்ரு மீண்டும் சொல்லுகிறது...

கவிழ்ந்த பாத்திரம்...
இதில் அவனது தவறு அதிகம் இல்லையோ, அவனிடம் "capasity" இருக்கு , ஆனா சரியான பாதையில் வழி நடத்த பட வேண்டும்...
பாத்திரம் திருப்பி வைக்க அவனுக்கு துனை தேவை...

மூடிய விழி:
இது முழுவதுமாக அறியாமை ... கண்களை மூடி கொண்டு விடியவில்லை என்று சொல்லி அலையும் கூட்டம்... இவர்கள் தானாக மட்டுமே திருந்த முடியும்... அடிச்சு வேணுமுன்னா திருத்தலாம்....

அருமையாக இருக்கு இளசு....


செல்வன்... இமை திறக்கும் போது கண்கள் காணும்... இங்கு இமை, அறியாமையோ????

இலையுதிர் காலத்தில்
காதல் பூக்கள் பொழியும்...
வசந்தகாலத்தில் ..
உதிரி பூக்களோ !!!!

றெனிநிமல்
15-07-2006, 06:49 PM
குட்டிக்கவிதை! வாழ்த்துக்கள்.

இளசு
01-08-2006, 09:10 PM
நன்றி நண்பர்களே...

------------------------------

ஆர்ப்பாட்ட அலைகடல்
அமைதியான குளம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்த நிலா?

அறிஞர்
01-08-2006, 10:23 PM
ஆர்ப்பாட்ட அலைகடல்
அமைதியான குளம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்த நிலா?
மீண்டும் இளசுவின் உதிரிப்பூக்கள் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.....

vckannan
02-08-2006, 03:47 AM
இளசு உம்ம சிந்தனை ரொம்ப புதுசு ..

பூக்கள் மேலும் குவியட்டும்
வாசம் எங்கும் கமழட்டும்

பென்ஸ்
02-08-2006, 04:08 PM
நன்றி நண்பர்களே...

------------------------------

ஆர்ப்பாட்ட அலைகடல்
அமைதியான குளம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்த நிலா?

அருமை இளசு....
அருமையான கருத்து....
ஆனாலும்...

எரிக்கும் சூரியனும்
இருட்டியதும்
அலையும் கடலின்
மடியில் சாய்வதேனோ???

குளிர் நிலவும்
தன்னை பிரதிபலிக்கும் குளத்தை
அலையும் கடலின் அடியில்
உறங்கும் வரை
தூர இருந்து மட்டும் பார்ப்பது ஏனோ???

இளசு....இவங்களை புருஞ்சுக்கவே முடியலையே....

தீபன்
02-08-2006, 06:15 PM
விளக்கு ஏற்றியும்
இருட்டா?
இமை திற.


நல்ல சிந்தனை.. ஆனால் இதிலும் முரண்பாடுள்ளதே...
மூடிய இமைகளுக்குள்ளேதான் சீரிய சிந்தனைகள் பிறக்கின்றன...
திறந்த விழிகளால்தான் உலகை அறியமுடியுமென்றில்லை...
அதைவிட மூடிய விழிகளுடன் ஞான நிலையிலிருக்கும் பலர் அதிக தெளிவை பெற்றிருக்கின்றனரே..!

pradeepkt
03-08-2006, 06:02 AM
நல்ல சிந்தனை.. ஆனால் இதிலும் முரண்பாடுள்ளதே...
மூடிய இமைகளுக்குள்ளேதான் சீரிய சிந்தனைகள் பிறக்கின்றன...
திறந்த விழிகளால்தான் உலகை அறியமுடியுமென்றில்லை...
அதைவிட மூடிய விழிகளுடன் ஞான நிலையிலிருக்கும் பலர் அதிக தெளிவை பெற்றிருக்கின்றனரே..!
அந்நிலையிலும் அவர்தம் உள்ளக் கண்கள் திறந்திருந்தனவே... உள்ளும் புறமும் ஐயந்திரிபறப் பார்க்கத் தெரிந்த மோன நிலையே தியானம்.
எனவே மூடிய விழிகள் என்பதை அப்படியே பொருள் கொள்ளத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

svenkat
03-08-2006, 11:11 AM
எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு;
கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில்
கிடக்கும் செருப்பு

pradeepkt
03-08-2006, 02:12 PM
வெங்கட்,
நீங்க தப்பா நினைக்கலைன்னா இதைக் கொஞ்சம் மாற்றட்டுமா?

எட்டப்பனின் வாரிசாய்
கடன்காரன் வருகையில்
வாசலில் செருப்பு

vckannan
03-08-2006, 02:17 PM
எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு;
கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில்
கிடக்கும் செருப்பு

காலமெல்லாம் உம்மால் மிதிபட்ட ஒருவனுடய பழிவாங்கும் உணர்ச்சியால் விளைந்த செயல் அது :D :D

1. யார் முதுகிலும் சவாரி செய்யாதிர்
2. யாரையும் மிதிக்காதிர்
3. வேலையாளை வீதியிற் விடாதீர்:p :p

ஓவியா
03-08-2006, 03:10 PM
நன்றி நண்பர்களே...

------------------------------

ஆர்ப்பாட்ட அலைகடல்
அமைதியான குளம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்த நிலா?


ஆர்ப்பாட்ட அலைகடலில் பிரதிபலிக்கும் நிலா
இலைமரை காய் போல் மங்கலாகவும்........பிரதிபலிக்கும்

அமைதியான குளத்தில் பிரதிபலிக்கும் நிலா
இருளில் வைத்த வைரம் போல் தெளிவாகவும்.....பிரதிபலிக்கும்,

இயர்க்கைக்கு ஏது அடைக்கும் தாள்........

அருமையான கவிதை .....
ஆனல் எனக்கு விளங்கியதா என்று எனக்கே தெரியவில்லை... :D

மீண்டும் இளசுவின் உதிரிப்பூக்கள் தொடர்வதற்கு வாழ்த்துக்கள்.....

இளசு
23-08-2006, 10:35 PM
அன்பு நண்பர்களின் ஊக்கம், கருத்துகளுக்கும் நன்றி.

வெங்கட்டின் கவிதை - பிரதீப்பின் கைவண்ணத்தில் மின்னுவதற்கு

பாராட்டுகள்.

இளசு
16-06-2007, 09:04 PM
என்றாவது ஒருநாள் மற்ற
எல்லா மரங்களைப் போல் வளர்வேன்..
காற்று சாய்க்கும்வரை
கனவில்...பொன்சாய்!

பிச்சி
12-07-2007, 06:34 AM
உதிரிப் பூக்கள் எல்லாம் என்றும் உதிரா பூக்கள்.. அழகிய கவிதைகள் இளசு அண்ணா.

இளசு
02-09-2007, 09:02 PM
நன்றி பிச்சி..


−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரம்பரைச் சொத்திலா
படமாய் நடுக்கூடத்திலா
திவசநாள் தானத்திலா
ஏகாதசி விரதத்திலா..

இங்கெல்லாம் நினைவுக்கு வர
எனக்கு விருப்பமில்லை..
துள்ளிவரும் உன் மகன் நடைகண்டு
''அப்படியே தாத்தா ஜாடை''
சொல்லும் ஒரு வரி போதும் எனக்கு!

இளசு
03-09-2007, 07:47 PM
கட்டிலை நகர்த்தும்போது
கட்டாயம் அகப்படும்
காகிதம், சீப்பு போல

ஆழ்நிலை உறக்கத்தின்
அதிகாலைக் கனவுகளில்
அவள் நினைவுகள்!

பென்ஸ்
04-09-2007, 07:17 AM
கட்டிலை நகர்த்தும்போது
கட்டாயம் அகப்படும்
காகிதம், சீப்பு போல

ஆழ்நிலை உறக்கத்தின்
அதிகாலைக் கனவுகளில்
அவள் நினைவுகள்!

இளசு நச்சென்று இருக்கிறது...
ரசித்து வாசித்தேன்...

மனகட்டிலை ஒரு முறை குனிந்து பார்த்தேன்...

இளசு
04-09-2007, 09:05 PM
மனகட்டிலை ஒரு முறை குனிந்து பார்த்தேன்...
நன்றி பென்ஸ்...

பல காகிதங்கள் கிடைத்தனவா????!!!!!:icon_blush:

இளசு
05-09-2007, 07:06 PM
பருத்தியோ பட்டோ
அரித்துக்கொண்டிருக்கும்
கரையானுக்கேது கவலை?

இளசு
06-09-2007, 06:36 PM
பாறை தடுத்தால் அலையாய் பெருக்கிறேன்
பசுந்தளிர் இலையிடம் துளியாய்ச் சிறுக்கிறேன்..
இரண்டும் நானே..என் பெயர் − நீர்!

ஷீ-நிசி
07-09-2007, 03:20 AM
இன்றுதான் பார்த்தேன்......


ஒவ்வொன்றும் உதிரிப்பூக்கள்தான்.... ஆனால் வீழ்ந்ததென்னவோ எங்களின் உள்ளச்சாலையிலே......

தொடருங்கள்.....

ஓவியன்
07-09-2007, 03:50 AM
அண்ணா!

இங்கள் கவிதைச்சாலையிலே நாங்கள் இன்னும் எவ்வளவோ கற்கவேண்டியுள்ளது.......
அதன் ஒரு பாடம் இந்த திரி..........
ஒவ்வொரு உதிரிப் பூவும் ஒரு கதை சொல்லுகிறதே...........
மிக்க நன்றிகள் தொடர்ந்து தாருங்கள் அண்ணா!.

இளசு
09-09-2007, 11:37 AM
நன்றி ஷீ, ஓவியன்..

------------------------------

எவ்வளவு சின்ன வீடு இது?
தரைக்கு ஓரடி மேலேயே கூரை..
கல்லறை!

பென்ஸ்
10-09-2007, 07:29 AM
பாறை தடுத்தால் அலையாய் பெருக்கிறேன்
பசுந்தளிர் இலையிடம் துளியாய்ச் சிறுக்கிறேன்..
இரண்டும் நானே..என் பெயர் − நீர்!

என் பெயர் − நீர் ...

நீ(ர்) என்னை தடுக்காதே, சிறகை விரிக்க விடு
நீ(ர்) என்னில் தவழு, உன்னில் மிதக்கிறேன்..
ஏனெனில் நானே நீ(ர்)...

அருமை இளசு....

இளசு
10-09-2007, 08:26 PM
என் பெயர் − நீர் ...

நீ(ர்) என்னை தடுக்காதே, சிறகை விரிக்க விடு
நீ(ர்) என்னில் தவழு, உன்னில் மிதக்கிறேன்..
ஏனெனில் நானே நீ(ர்)...

அருமை இளசு....

உண்மையில் அருமை
இனிய பென்ஸின் இன்னும் ஆழமான
எசக் கவிதைதான்!

லயித்தேன் பென்ஸ்!!

பாரதி
11-09-2007, 01:12 AM
எவ்வளவு சின்ன வீடு இது?
தரைக்கு ஓரடி மேலேயே கூரை..
கல்லறை!

இந்த வீடு கிடைக்காதவர்களும் அதிகம் பேர் உண்டே அண்ணா...
இன்னும் சிலருக்கு உடல் முழுக்க கூரை...!

வழக்கமாக பூக்கள் உதிருவதால் வருந்துவோம்.
ஆனால் இந்தத்திரியில் எப்போது பூக்கள் உதிரும் என்று காத்திருக்கிறோம் அண்ணா...!

aren
11-09-2007, 01:47 AM
இப்பொழுதுதான் இந்தத் திரியினைக் கண்டேன். என் கண்களைத் திறக்கிறது உங்கள் கவிதைகள் இளசு அவர்களே. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்கிறது.

இன்று காலையில்
நரி முகத்தில்
முழுத்திருக்கின்றேன்
என் மனைவிதான் அது!!!

பல நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்.

தொடருங்கள் இளசு.

நன்றி வணக்கம்
ஆரென்

அக்னி
11-09-2007, 02:45 AM
இளசு அவர்களின் உணர்விலிருந்து
உதிர்ந்த உதிரிப்பூக்கள்...
அருமை...
தொடரவேண்டும் உதிரிகளாய் மேலும் மேலும்...

தளபதி
11-09-2007, 03:48 AM
நிலா!! நிலா!! மெல்ல நட
உலா! உலா! செல்லும் போதிலே!!

இளசு
29-09-2007, 10:36 PM
நன்றி பாரதி, அன்பின் ஆரென், அக்னி..

தளபதி அவர்களே.. இன்னும் உதிருங்கள்.. பாராட்டுகள்!

--------------------------------------

வரும்போது காசிடலாம் எனக்
கடந்துபோன பிச்சைக்காரன்
திரும்பும்போது அங்கில்லை!

இளசு
28-01-2008, 08:06 PM
தினம் நூறு பேர் மலத்தில்
கைவைக்கிறேன்
தினம் ஒருவேளை சோற்றில்
கைவைக்க


இது இன்றும் நடக்கும் உண்மைச் சம்பவம்...

வந்தே மாதரம் என்போம்...

எங்கள் மாநிலத்தாயை வணங்குதல் என்போம்!

meera
28-01-2008, 11:19 PM
தினம் நூறு பேர் மலத்தில்
கைவைக்கிறேன்
தினம் ஒருவேளை சோற்றில்
கைவைக்க


இது இன்றும் நடக்கும் உண்மைச் சம்பவம்...

வந்தே மாதரம் என்போம்...

எங்கள் மாநிலத்தாயை வணங்குதல் என்போம்!

நன்றி இளசு அண்ணா,

உதிரி பூக்களை மீண்டும் தொடுத்தமைக்கு.இல்லையேல் இத்தனை அற்புதமான கவிதைகளை வாசிக்காமலே போயிருப்பேன்.

உங்கள் கவிதைகள் மனதில் ஊசியாய் தைக்கிறது அண்ணா

ஆதவா
29-01-2008, 02:13 AM
தினம் நூறு பேர் மலத்தில்
கைவைக்கிறேன்
தினம் ஒருவேளை சோற்றில்
கைவைக்க


இது இன்றும் நடக்கும் உண்மைச் சம்பவம்...

வந்தே மாதரம் என்போம்...

எங்கள் மாநிலத்தாயை வணங்குதல் என்போம்!

கூடை கூடையாக அள்ளிக் கொண்டு போகிறார்களாம்... சில வருடங்களுக்கு முன்னர், இதை ஒரு சானலில் போட்டுக் காண்பித்தார்கள். (அன்றே ஒரு கவிதையும் எழுதி வைத்தேன்) பீகாரில் என்பது என் நினைவு... ஒருவர் இருவரல்ல.. ஆயிரக்கணக்கில் இந்த தொழில் நடைபெற்று வருகிறது. நம் மன்றத்திலும் இதைப் பற்றிய குறிப்புகள் படித்ததாக நினைவு.....

நாடு எங்கே போகிறது???

நானோவில் தொடங்கி, மலம் வரை..

aren
29-01-2008, 03:00 AM
தினம் நூறு பேர் மலத்தில்
கைவைக்கிறேன்
தினம் ஒருவேளை சோற்றில்
கைவைக்க


இது இன்றும் நடக்கும் உண்மைச் சம்பவம்...

வந்தே மாதரம் என்போம்...

எங்கள் மாநிலத்தாயை வணங்குதல் என்போம்!

உண்மைதான் இளசு அவர்களே. இதையும் விவேக் அவர்கள் காமெடியாக கொஞ்சம் சாடியிருப்பார் ஒரு திரைப்படத்தில். அதைப் பார்த்துவிட்டு கலைஞர் அவர்களும் தமிழக அரசாங்கம் இதை கவனிக்கும் என்று கூறியிருக்கிறார்.

பூமகள்
03-02-2008, 04:33 PM
படித்தவையா, நினைத்தவையா............

மனவறையில் தொகுக்கப்படாமல்
சிதறிக்கிடக்கும்....


உ தி ரி ப் பூ க் க ள்....



ஆஹா ஆஹா...!!
இதை விட சிந்தையின் பூக்களை யாரால் சொல்ல முடியும்....??!!!

அருமை பெரியண்ணா. :)


என்னிரவு...


கதவில் தாழ்ப்பாள்
கனத்த போர்வை
விதிக்கப்பட்ட தனிமையில்
தகித்த வெப்பத்தில்
என் முன்னிரவு

கதவடி தரைவழி
ஊறிவரும் மழைக்கால ஓதம் போல்
சிலீரென உன் நினைவு...
கேட்பாரின்றி எனைத் தழுவ
விழித்துக்கிடந்தேன்
நள்ளிரவு

அப்படியே என் நினைவை தட்டி எழுப்பிவிட்டீரே...!!

சூப்பர் பெரியண்ணா...!!

எனக்கு விமர்சிக்க இயலவே இல்லை. .அத்துணை அபாரம்..!!

எல்லா கவிகளுமே அற்புதம்...!!
பாராட்டுகள்..!! தொடர்ந்து கொடுங்க அண்ணா..!!

இளசு
05-02-2008, 05:51 AM
ஒருங்குறிக்கு மாற்றி மறுபிறப்பளித்த அமரனுக்கும்
உரமிட்டு பூச்செடி வளர்க்கும் உறவுகளுக்கும் நன்றி..

**************************************************************************

சற்றே பின்வாங்கி பக்கம் நகர்வது
வெற்றி நோக்கியே...
குத்துச்சண்டையிலும்... வாக்குச்சண்டையிலும்!

அனுராகவன்
17-02-2008, 02:45 AM
உதிரிப்பூக்கள் நல்ல அருமையான கவிதை தொகுப்பு.....
நன்றி நண்பரே..
தொடருங்கள்..

இளசு
13-03-2008, 09:08 PM
மிக்க நன்றி அனு அவர்களே!
உங்கள் பணிச்சிக்கல் தீர்ந்து நலமாய் எல்லாம் அமைய வாழ்த்துகள்!

----------------------------
தோல்விகள் -
என் அகராதியில் இல்லை..
தள்ளிப்போன வெற்றிகள் உண்டு!

இளசு
19-03-2008, 10:01 PM
ஒளியிழந்து மங்கிவிட்டதென
அனைவருக்கும் தெரிந்தது
நட்சத்திரத்தைத் தவிர..

kavitha
27-06-2008, 10:02 AM
ஒளியிழந்து மங்கிவிட்டதென
அனைவருக்கும் தெரிந்தது
நட்சத்திரத்தைத் தவிர..
ஒளிர்வதால் தானே அது நட்சத்திரம்.
மங்குவதும் ஒளிர்வதும் பார்வைக்குறியீடு. நட்சத்திரம் என்றும் நட்சத்திரமே. தொடரும் இப்பதிவுக்கு வரவேற்புகள் அண்ணா.

இளசு
15-07-2008, 07:18 PM
நன்றி கவீ..

-------------------
பிரசவப் படுக்கையிலேயே துடித்து
மரணிக்கும் மழலை -
மின்னல்!

நாகரா
17-07-2008, 05:42 AM
என்னிரவு...


கதவில் தாழ்ப்பாள்
கனத்த போர்வை
விதிக்கப்பட்ட தனிமையில்
தகித்த வெப்பத்தில்
என் முன்னிரவு

கதவடி தரைவழி
ஊறிவரும் மழைக்கால ஓதம் போல்
சிலீரென உன் நினைவு...
கேட்பாரின்றி எனைத் தழுவ
விழித்துக்கிடந்தேன்
நள்ளிரவு

என் விடியல்

மனதை மூடிய
மாயப் போர்வை
சபிக்கப்பட்ட படுகுழியில்
நரக வேதனையில்
என் மரண வாழ்வு

இருளைக் கிழிக்கும்
ஒளிக்கீற்றாய் வள்ளலின்
திடீர் வருகை
வெள்ளங்கி எனைத் தழுவக்
குன்றின் மேல் விழிக்கிறேன்
கதிரவனாய்

உம் உதிரிப் பூக்களின் வாசத்தில்
உதிர்ந்த என் இருதயப் பூ
உமக்காக இளசு

வாழ்த்துக்கள், இன்னும் உதிருங்கள், எம்மை உசுப்புங்கள், நன்றி

நாகரா
17-07-2008, 05:46 AM
நன்றி கவீ..

-------------------
பிரசவப் படுக்கையிலேயே துடித்து
மரணிக்கும் மழலை -
மின்னல்!

மரணப் படுக்கையிலிருந்து
எழுகின்ற விதை -
செடி!

உம் மின்னலில் இம்மண்ணில் நான் கண் கூடாகக் கண்டது இது, இளசு.
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

நாகரா
17-07-2008, 06:41 AM
ஒளியிழந்து மங்கிவிட்டதென
அனைவருக்கும் தெரிந்தது
நட்சத்திரத்தைத் தவிர..

தன் கடந்த காலத்தையே
நமக்குக் காட்டிக்
கருந்துளையாய்த்(Black Hole)
தான் இருண்டு விட்ட நிஜத்தை
மறைக்குந் தாரகை

இன்னொரு உதிரிப்பூவுக்கு வாழ்த்துக்கள் இளசு

நாகரா
17-07-2008, 06:45 AM
ஒருங்குறிக்கு மாற்றி மறுபிறப்பளித்த அமரனுக்கும்
உரமிட்டு பூச்செடி வளர்க்கும் உறவுகளுக்கும் நன்றி..

**************************************************************************

சற்றே பின்வாங்கி பக்கம் நகர்வது
வெற்றி நோக்கியே...
குத்துச்சண்டையிலும்... வாக்குச்சண்டையிலும்!

தோல்விகளைப் படிகளாக்கி
நீ ஏறுவதே
வெற்றியின் உச்சம்

நன்னம்பிக்கைக் குறுங்கவிக்கு நன்றி உமக்கு, இளசு

நாகரா
17-07-2008, 06:58 AM
தினம் நூறு பேர் மலத்தில்
கைவைக்கிறேன்
தினம் ஒருவேளை சோற்றில்
கைவைக்க

மலச் சேற்றில்
மனம் மூழ்கிய
மரண வாழ்வு
மலச் சோற்றை
மனம் உண்ணும்
அவலத் தாழ்வு
மலம் விட்டு
குணக் குன்றாம்
பரம பதம்
போய்ச் சேர்வது
எந்நாளோ!

சிந்திக்க வைக்குங் குறுங்கவிக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 07:06 AM
பாறை தடுத்தால் அலையாய் பெருக்கிறேன்
பசுந்தளிர் இலையிடம் துளியாய்ச் சிறுக்கிறேன்..
இரண்டும் நானே..என் பெயர் − நீர்!

இளசு நீர்
எமக்குத் தந்த கவிதை நீர்
எம் தாகந் தீர்க்கும் அமுத நீர்
எம்மைக் குளிர்விக்கும் தண்ணீர்
தன் கதகதப்பால் எம்மை மென்மையாய்ச் சுடும் வெந்நீர்
தொடர்க நீர்
உம் கவிதைப் பன்னீர்

நாகரா
17-07-2008, 07:10 AM
உதிரிப் பூக்களில் ஒன்றாய்
சிதறிக் கிடக்கிறது
இதயம் எனது
அவற்றில் மனம் இலயித்து...............
உண்மையிது இளசு

நாகரா
17-07-2008, 07:16 AM
பருத்தியோ பட்டோ
அரித்துக்கொண்டிருக்கும்
கரையானுக்கேது கவலை?

சுத்தமோ அசுத்தமோ
உன் நிஜத்தை மறைக்கும்
மாயையைக் கிழி

பி.கு. : சுத்த மாயை(சத்துவம்), அசுத்த மாயை(தாமசம், ராஜசம்) என்ற திரிகுண மாயையைக் கிழித்து, உன் நிஜமான சச்சிதானந்தத்தைத்(சத்து, சித்து, ஆனந்தம்) தரிசி

சிந்திக்க வைத்த கரையானுக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 07:20 AM
கட்டிலை நகர்த்தும்போது
கட்டாயம் அகப்படும்
காகிதம், சீப்பு போல

ஆழ்நிலை உறக்கத்தின்
அதிகாலைக் கனவுகளில்
அவள் நினைவுகள்!

நோய்க் கிடங்காய்
மரணக் கட்டிலில்
கிடக்கும் போதும்

ஆழ்நிலை விழிப்பில்
பட்டப்பகல் வெளிச்சமாய்
வள்ளலின் வாய்மைகள்

வள்ளலை நினைவூட்டிய உம் அற்புதக் காதல் கவிக்குக் கோடானு கோடி நன்றி, இளசு

நாகரா
17-07-2008, 07:35 AM
நன்றி பிச்சி..


−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−

பரம்பரைச் சொத்திலா
படமாய் நடுக்கூடத்திலா
திவசநாள் தானத்திலா
ஏகாதசி விரதத்திலா..

இங்கெல்லாம் நினைவுக்கு வர
எனக்கு விருப்பமில்லை..
துள்ளிவரும் உன் மகன் நடைகண்டு
''அப்படியே தாத்தா ஜாடை''
சொல்லும் ஒரு வரி போதும் எனக்கு!

"பேரருளே பொருளாய்
அகண்ட வெளியே வீடாய்ப்
பேரறிவே உடம்பாய்
வெள்ளங்கியே உடையாய்

அங்கிங்கெனாதபடி எங்கும்
உம்மைப் போல் இருக்கவே எனக்கு விருப்பம்"
என்றே வள்ளலிடம் சொல்லிய மறு கணம்
என்னைத் தன்னுள் இழுத்துக் கொண்ட
அவன் பெருந்தயவை எப்படிச் சொல்வேன்!

மீண்டும் வள்ளலை நினைவூட்டிய பாசக் கவிக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 07:39 AM
நீ உதிர்த்த பூக்களில்
காயப்பட்ட(பரவசமூட்டும் காயம் தான்) என் இதயம்
சிந்திய சிவப் பூ
உனக்கென்றே இளசு

நாகரா
17-07-2008, 07:44 AM
என்றாவது ஒருநாள் மற்ற
எல்லா மரங்களைப் போல் வளர்வேன்..
காற்று சாய்க்கும்வரை
கனவில்...பொன்சாய்!

என்றாவது ஒரு நாள் குரு நாதர்
வள்ளலைப் போல் ஒளிர்வேன்..
மரணத்தை வென்று
நிஜமாகவே...நான்

வள்ளலை நினைவூட்டிய பொன்சாய்க்கு நன்றி. இளசு

நாகரா
17-07-2008, 07:49 AM
நன்றி நண்பர்களே...

------------------------------

ஆர்ப்பாட்ட அலைகடல்
அமைதியான குளம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்த நிலா?

ஆர்ப்பாட்ட அலைகடலாய் ஆடும் மனம்
அமைதியான குளமாய் அடங்கிய இருதயம்
எங்கே பிரதிபலிக்கும்
இந்தக் கடவுள் நிலா

இன்னொரு அற்புத உதிரிப் பூவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டும் நன்றியும்

நாகரா
17-07-2008, 07:55 AM
எவ்வளவு ஊற்றியும்
நிரம்பவில்லை-
கவிழ்ந்த பாத்திரம்.

****************************************************


விளக்கு ஏற்றியும்
இருட்டா?
இமை திற.


அமுதக் காற்றால்
நிரம்பியே வழிகிறது
காலியான பாத்திரம்

கும்மிருளில் விழி மூடி
நெற்றியில் பற்றிய
நெருப்பைப் பார்

சிந்தனையை உசுப்பும் நெருடும் குறுங்கவிகள், வாழ்த்துக்கள் இளசு

நாகரா
17-07-2008, 08:03 AM
பேருந்து சன்னல் வழி..
சரணாலய யானைக்கூட்டம்..
மழலையில் குழந்தை சொன்னது_
சேனலை மாத்தும்மா..

முட்டாள் பெட்டியில்(idiot box)
பிடித்த அலைவரிசைக்குப் பட்டென்று மாற்றுவதைப் போல்
மனமெனும் அறிவுப் பெட்டியில்
நல்லெண்ண அலைவரிசைக்குச் சட்டென்று மாறு நீ
ஞானப் பெண்ணே!

சிந்திக்க வைத்த மழலைப் பேச்சுக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 08:08 AM
மருமகளாக்கி எரித்தது -
மாப்பிள்ளை வீடு..

கருவிலேயே அழித்தது -
பெண் வீடு

பிறந்தது இறந்தது
இறந்தது மீண்டும் பிறந்தது

இம்மாயச் சுழல் அறுக்கவே
நல்வரமாய் வந்தது
வள்ளலின் வாய்மை

சமூக அக்கறைக் கவிதை அருமை, இளசு

நாகரா
17-07-2008, 08:15 AM
வழிய வழியின்றி தேங்கியதால்
உள்சென்று........
இதயத்தின் எடை கூட்டியது
கண்ணீர் !!

உள்ளே சுழியும் நீ தான்
வெளியே வழியும் அருள்
இதை அறியாது
வீணே
வெளியே நீ வழிந்தால்
இல்லாத சுழியே கடவுள்

அன்பின் வழியது உயிர்நிலை சொல்லும் அற்புதக் குறுங்கவி அருமை, இளசு

நாகரா
17-07-2008, 08:29 AM
மனம் என்னும் விநோதம்..
இன்னும் எனக்கு விளங்காதது..

பார்க்கவில்லை.. படிக்கவில்லை.. பாராட்டவில்லை
என்றால் சவலைப்பிள்ளையாய் ஏங்கும்..

பாராட்டும் வாழ்த்தும் வந்தவுடனே
கூச்சத்தில், பருவப்பெண்ணாய் நாணும்...

இந்த மனமின்றி வாழ்வதரிது,
இந்த மனத்தோடு வாழ்வதரிது...


இருதயம் என்னும் விநோதம்
இதயமாய் என் மெய்யில் விளங்கும்

பாராமுகமாய் நான் இருந்தாலும்
நல்ல தாயைப் போல்
பெருந்தயவாய்
என் முகம் நோக்கி
எப்போதும் இருக்கும்

தயவில் மனம் இலயிக்கப்
புரியும் நிஜம் இருதயம்
முடிவில் மனமடங்கும்
இடமே இருதயம்

இந்த இருதயமின்றி
வெந்து சாகும் சடலமே
என் மெய்யும்

மனத்தை உசுப்பிய மனம் பற்றிய கவிக்கு வாழ்த்துக்கள் இளசு

நாகரா
17-07-2008, 08:33 AM
தமிழ் மன்றத்தில் முதிர்ந்த உமக்கு
உம் உதிரிப் பூக்களையே மாலையாக்கி
உமக்குச் சூட்டி
இளையவன் நான் செய்யும்
முதல் மரியாதை இது
இளசு

நாகரா
17-07-2008, 10:05 AM
அன்றும் - இன்றும்...

அன்று ------
என் கால்கள் மேகத்தில்...
என் கைகள் பிரபஞ்சத்தையும் தாண்டி..
என் எண்ணங்களைப் படிக்க
முயன்று தோற்றவர் கோடி..
காற்றுக்கு முத்தமா?
வான்வில்லுக்கு விலையா?
என்னை அளக்கவா...?

ஒன்றா இரண்டா ..இல்லை மூன்றா
எத்தனை மன அடுக்கு இவனுக்கு..?
எண்ணிப் பிரமிக்க ஒரு கூட்டம்..

என் வீட்டுத் தோட்ட விளக்காய் நட்சத்ரம்
என் தோட்ட மரத்தில் குடியாய் தேவதைகள்
என் வீட்டின் வளர்ப்புச் செல்லம் சிங்கக்குட்டி
என் சிகரெட் சாம்பலிலும் அக்னிக்குஞ்சு

என் கண்ணில் தெறித்த பிம்பங்கள்...
எதிர்கொண்டு பார்த்தவரை
அதிரவைத்த அதிசயங்கள்....


இன்று --------

கூரையை வெறித்த வெற்றுப்பார்வை
வார்த்தைகளற்ற நிலை..
"அவள் போன பின் - இப்படித்தான்"
உங்கள் பேச்சு காதில் விழுந்தும்
என்னில் சலனமில்லை.

அன்று..........

படுகுழியில் கப்பிய இருளாய்
காமத் தினவில் புணரும் உடம்பாய்
வன்பில் தோய்ந்த இயந்திர இயக்கமாய்
மருளில் மயங்கி உறங்கும் மனமாய்
அன்பகத்தில்லா நாறும் உடம்பாய்
வன்சொல் நஞ்சைக் கக்கும் நாவாய்
துரிசே காணும் துச்ச நோக்காய்
மாயச் சுழலில் சிக்கிய நரக வாழ்வாய்

இன்று..........

குணக்குன்றின் மேல் ஒளிரும் விளக்காய்
கடவுட் காதலனைப் புணரும் மெய்யாய்
சச்சிதானந்த அருட்பேராற்றலாய்
தெருளில் விழித்துத் தெளிந்த அறிவாய்
அன்பகம் ஊறும் சுத்த தேகமாய்
இன்சொல் அமுதை உமிழும் நாவாய்
துகளளவும் துரிசற்ற தூய நோக்காய்
பூரண மெய்ஞ்ஞானப்ப் பெருஞ்சுக வாழ்வாய்

வள்ளல் தன் வெள்ளங்கியால்
என்னை ஆட்கொண்ட அதிசயம்!

அன்றும் - இன்றும் இகத்தில் நீர் காட்ட
அன்றை இகத்திலும்
இன்றைப் பரத்திலும்
வைக்கும் என் சிறு முயற்சி.

இகத்தைக் காட்டிப் பரத்தைப் புகுத்தத் தூண்டிய உம் கவிக்கு நன்றி.

நாகரா
17-07-2008, 10:12 AM
நான் கேட்பதை நிறுத்தினேன்
அதுவும் பேசுவதை நிறுத்தியது -
சுவர்க்கோழி

உதடுகளும் நாவும் உதிர்ந்த மௌன காலத்தில்
காதுகள் பூத்த வசந்தம் -
மனிதம்

மனிதத்துக்கு புது அர்த்தம் சொல்லத் தூண்டிய சுவர்க்கோழிக்கு நன்றி, இளசு.

நாகரா
17-07-2008, 10:17 AM
கண், செவி, வாய் பொத்தவில்லை
காரணம் கைகளே இல்லை -
காந்தியின் பொம்மைகள்.

மெய், வாய், கண், காது, மூக்கு
ஐம்புலன்கள் இருந்தும்
அறிவில்லா மனித பொம்மைகள்

சிந்திக்க வைத்த காந்தியின் பொம்மைகளுக்கு நன்றி, இளசு

நாகரா
17-07-2008, 10:24 AM
அல்லவை நாடும் நம் புலன்களைக் கட்டிப்போட
"புலன் அடக்கம்" என்ற கையை இழந்த நிலை கவிதா...


இனி இன்னொரு பூ...


வரதட்சணை ஸ்கூட்டரில் அமர்ந்து...
"சே கேவலம்"...
பிச்சைக்காரனை விரட்டினேன்..

காவிக்குள் மெய்யடங்கியும்
காமத்தில் மனம் புரளும்
சந்நியாசி

சந்நியாசிய்யைக் காட்டிய பிச்சைக்காரனுக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 10:28 AM
ஆசிரியை விடுப்பில்
அடங்காப் பிள்ளைகள்
அமாவாசை வானம்

இருதயம் மறந்த
அடங்காப் பிடாரி மனம்
ஆரிருள் உய்க்கும்

அமாவாசை வானம் உணர்த்தும் இருதய நெறிக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 10:33 AM
காதல் முரசு கொட்டி
கவிதைக் கணைகளோடு
களம் இறங்கினேன்.....

எதிரில்......
நட்புக்கொடி பிடித்து
புன்னகையுடன் நீ...

வெள்ளைக் கொடியாய் ஆடும் தாளில்
கருப்புக் கொடியாய் ஆடுது
என் கவிதை

என் கவிதையைப் பறை சாற்றும் காதல் முரசுக்கு நன்றி இளசு

நாகரா
17-07-2008, 10:44 AM
கடிதங்கள் - கிழித்தாச்சு
போன பிறந்தநாளுக்கு
பரிசாய் நீ தந்த சட்டை -
லைட்டராலேயே கொளுத்தி எரித்தாச்சு...

ஓ.. சிகரெட் பிடிப்பதே
உனக்கு பிடிக்கும் என்றுதானே
லைட்டர், சிகரெட் - விட்டு ஒழித்தாச்சு...

எல்லாம் செய்ய முடிந்ததே -
ஒரே ஓர் இரவுக்குள்...

மனதையும்.. கனவையும்
சுத்திகரிக்க மட்டும்...
ஏன் முடியவில்லை
இத்தனை ஆண்டாய்?

யுகயுகமாய்
அடங்காது
மனங்கருத்து
ஆரிருள் உய்ந்திருந்த என்னை
ஓர் நள்ளிரவில்
பட்டப்பகல் வெளிச்சமாய்த்
தன் வெள்ளங்கியில் அடங்கச் செய்து
மனம் வெளுக்க
இருதய அருள் நெறியில்
உய்த்த வள்ளலே!
கருத்த மனத்தை
வெளுக்கப்
பெருந்தயாளர்
உம்மால் மட்டுமே முடியும்!

வள்ளலின் தயவை நினைவுறுத்திய உம் கவிக்கு நன்றி, இளசு

நாகரா
17-07-2008, 10:49 AM
கண்களில் காமிரா
மனசே ஆல்பம்
இவன் தான் பாலா

(இயக்குநர் பாலாவின் சுயசரிதத் தொடர் விகடனில்
படித்தபோது தோணியது.அப்படி ஒரு நேர்த்தியான வாழ்க்கைப்பதிவு
www.vikatan.com) (http://www.vikatan.com))

கண்களில் அருளொளி
வெள்ளங்கியே உடம்பு
இவர் தான் வள்ளல்

நன்றி இளசு

நாகரா
17-07-2008, 10:59 AM
என் கண்ணீர்த்துளி ஒன்று
கடலில் விழுந்துவிட்டது
எவரேனும் அதைக்
கண்டெடுக்கும் தினம்
உன்னைக்
காதலிப்பதை நிறுத்துவேன்

கடலில் கலந்த
உம் கண்ணீர்த்துளியைக்
கண்டெடுக்கவே முடியாது
அவளைக் காதலிப்பதையும்
உம்மால் நிறுத்தவே முடியாது

இது சாபமா வரமா

வாழ்த்துக்கள் இளசு

நாகரா
17-07-2008, 11:07 AM
என்ன.. என் ஆயுள் எத்தனையா?
நீ என்னை
எத்தனை முறை செல்லமாய்
அழைக்கிறாயோ.. அத்தனை.......

காதலால் உயிர்ப்பு கூடும் உண்மை
எளிய வரிகளில்
தெளிவாக இம்மெய்யை அடைத்த உம் புலமை
இனிமை அருமை சேரட்டும் உம்மைப் பெருமை
காதலில் திளைப்போம் நமக்கது நன்மை

வாழ்த்துக்கள் இளசு

நாகரா
17-07-2008, 11:13 AM
கரையோரம் உன்
கைப்பிடித்து நடந்த என் மேல்
நதிக்குப் பொறாமை

நிலவை அழைத்தபடி
அதுவும் கூடவே....

இகத்திலே வள்ளல் உம்
வெள்ளங்கியுள் மனமடங்கி வாழும்
என்னை நசிக்குமா மரணம்

சாவுக்கு சவாலாய்
உம்மோடு கூடவே நான்....

சாவுக்கு சவால் விடத் தூண்டிய உம் காதலுக்கு நன்றி, இளசு

நாகரா
17-07-2008, 11:22 AM
ஒரு பாரத்தை
இரு கைகளில் பிரித்து சுமந்து
நடப்பது போல்
நம் நட்பு..

ஓருயிரை
இரு மெய்களில் பிரித்து
வாழ்வதோ
நம் காதல்..

காதலை உணர்த்திய நட்புக்கு நன்றி, இளசு

நாகரா
17-07-2008, 01:51 PM
படித்தவையா, நினைத்தவையா............

மனவறையில் தொகுக்கப்படாமல்
சிதறிக்கிடக்கும்....


உ தி ரி ப் பூ க் க ள்....


நின்றபின்னும் ஆக்கிரமிக்கும்
சில்வண்டின் பாட்டு போல..
சென்ற பின்னும்
சிந்தனையில் நீ..


****************************************

சற்றே திறந்த தெருஜன்னல் வழியே
வழிந்த பாடல் வரிபோல்
அவ்வப்போது உன் சாடைப் பேச்சுகள்..

ஒவ்வொரு வரியாய் என் சேமிப்பில்...
நம்பிக்கை இருக்கிறது
முழுப்பாடலும் வசப்படும் என்று..



************************************************

எவர் பேச்சுக்கும் நான் ஒலிநாடா
உன் பேச்சை சேமிப்பதில் எம்.பி.3!


***************************************************

நான் பாறைதான்
உன்னை
எதிரொலிப்பதால்

இருப்பு
எண்ணங்களாகி
எண்ணங்கள்
உணர்வுகளாகி
உணர்வுகள்
எழுத்துகளாகி
எழுத்துகள்
ஆக்கங்களாகி
இருப்பின் விரிவில்
தூவிய உதிரிப் பூக்கள்

இளசெனும் இருப்பே
இவ்வாறு முதிர்ந்தது
உதிர்ந்தது.
முதிர்ந்தும் உதிர்ந்தும்
இளசெனும் இருப்பு
தீர்ந்துவிடவில்லை.
இன்னொரு சுழற்சிக்கு
அனுபவத்தில் பக்குவப்பட்டு
அறிவில் சிறந்து
இளசெனும் இருப்பு
தயாராயிருக்கிறது

இளசு என்பது
நம் குறுகிய பார்வைக்கு
ஒரு ஆளாகத் தெரிந்தாலும்
உண்மையில்
அது ஒரு நியதி
இருப்பெனும் நியதி
முதிர்ந்தும்
சுழற்சியில் உதிர்ந்தும்
அழற்சியின்றி
என்றும்
அது இளசாய் இருப்பதால்
அந்நியதிக்கு
எந்த நிலையிலும் மரணம் இல்லை.
கவியரசு கண்ணதாசன்
"எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை"
என்று ஆணித்தரமாக அடித்துச் சொன்னது
அவன்
இந்த இளசெனும் இருப்பைப் புரிந்ததனால்.

இது
இளசு என்ற தனி நபர் துதியல்ல
இளசு என்ற நியதியின் துதி.
நியதியில் எல்லா ஆட்களும்
அதாவது
எல்லாத் தனி நபர்களும்
அடங்குவதால்
அவர்கள் எல்லோரின் துதியும் இது.
ஆக
அந்த வகையில்
இளசு என்ற ஆளின் துதியும் இது.

இருப்பின் சுழற்சி (http://bp2.blogger.com/_k_3kfyMJYQo/R6qTRIDKdTI/AAAAAAAAAAM/tizRf4EOMJk/s1600-h/suzal.GIF)
நாகத்தின் தலைக்குள்
அதன் வால் அடங்குதல்
நாகமாம் "நான்" என்ற
அந்த சுழிக் குறியை
மாலையாக்கி
இந்த இளசுவுக்குச் சூடுகிறேன்

இருப்பெனும் நியதியின்
உறுதியான குறியீடாம்
இளசென்ற ஆள் உன்னை
தலை நிமிர்த்தி
இருதயத்தில் கை கூப்பி
வணங்குகிறேன்

இது நான்
எனக்கும்
உனக்கும்
உலக உயிர்த்திரள்
அனைத்திற்கும்
செய்யும் முதல் மரியாதை
இருப்பெனும் இளசு நியதிக்குச்
செய்யும் தலை மரியாதை

உதிரிப் பூக்களின்
மகுடி நாத வாசத்தில்
படமெடுத்த நாகம்
சுழிந்து
சுழிக்குறி மாலையாகி
இளசென்ற
உம் கழுத்தில் விழுகிறது.
இத்தோடு
நாகத்தின் ஆட்டமும் முடிகிறது

ஆடிய ஆட்டத்தில்
தவறிருந்தால்
பொறுப்பீர்
மன்னிப்பீர்

நன்றி

இளசு
20-07-2008, 02:50 PM
இது நான்
எனக்கும்
உனக்கும்
உலக உயிர்த்திரள்
அனைத்திற்கும்
செய்யும் முதல் மரியாதை



நற்பொருளைத் தேடிச் சிவந்தன
ஞானியர் நெஞ்சம்...

இதுவும் கவியரசர் வரிகள்தாம்..

எப்பொருளை நான் செப்பியிருந்தாலும்
அத்தனை சிப்பிக்குள்ளும் புகுந்து
மெய்ப்பொருள் முத்துகள் காணும்
ஏக சிந்தனைச் சிற்பி நீங்கள்..

மதித்தல் - சக உயிர்களுக்கிடையே நிலவவேண்டும்
என நான் விரும்பும் முதல் உணர்ச்சி!
அன்பு கூட இதற்கு அடுத்த இடத்தில்தான்..


மதிக்கத்தக்கவர்கள் - முன்னுவந்து மதிப்பை வழங்குபவகள்..

மரியாதையும் அன்பையும் உங்களுக்கு அளிக்கிறேன் நாகரா அவர்களே!

இந்த பல்வேறு மனநிலைத் தீற்றல்களை வாசித்து
ஒளி அலசலிட்டு பெருமை செய்தமைக்கு என் நன்றிகள்...

பென்ஸ்
20-07-2008, 03:05 PM
உதிரிப் பூக்களின்
மகுடி நாத வாசத்தில்
படமெடுத்த நாகம்
சுழிந்து
சுழிக்குறி மாலையாகி
இளசென்ற
உம் கழுத்தில் விழுகிறது.
இத்தோடு
நாகத்தின் ஆட்டமும் முடிகிறது

ஆடிய ஆட்டத்தில்
தவறிருந்தால்
பொறுப்பீர்
மன்னிப்பீர்

நன்றி

உதிரிபூக்களின் மகுடிக்கு ஆடிய நாகம்
ஆடியது, மிக தகுந்ததே..!!!
பாராட்டும் வாழ்த்தும் இளசுக்கு இன்னும் கொடுத்தாலும் தகும்


ஆனால் உங்கள் அனெக பதிவுகளின் முடிவில்
மன்னிப்பு என்று சொல் வருவது வருத்தமளிக்கிறது
வாழ்த்து சொல்லவும், கருத்து சொல்லவும் வருத்தம் எதற்க்கு

துளி அமிர்தம் உண்டு களித்தவர் உண்டு
மரித்தவர் உண்டோ...!!!

இளசு
25-07-2008, 05:19 PM
பலரிடம் இருந்து பாராட்டு வரும்போது
கூசிக் கூம்பும் மனம் -
சிலரிடம் இருந்து அதைப் பெறும்போது மட்டும்
வாலைக் குழைத்து காலடி உரசும்...

அந்தச் சிலரில் எனக்கு இனிய பென்ஸும் ஒருவர்..

------------------------------------------

இளசு
25-07-2008, 05:26 PM
சில விகிதங்கள் :


காய்ந்த மணற்பரப்பு..
கால்கள் புதைந்தன..
பிரயத்தனம் அதிகம்.. சோர்வும்தான்..
பிரயாணம் சாத்தியம்..

ஈரமணல் வெளி
இதமாக.. திடமாக..
நீண்ட பயணமும் சுகமாக..

புதைமணல் குழி
மணலை மேற்தூவி
மறைந்திருக்கும் நீர்ச்சேறு..
மரணம் நிச்சயம்..


மணல் + நீரிலான பாதைகள்...
மாறிய விகிதங்களே நிர்ணயிகள்..

பூமகள்
25-07-2008, 05:38 PM
மணல் + நீரிலான பாதைகள்...
மாறிய விகிதங்களே நிர்ணயிகள்..விகித மாறிகள்... மாறிலிகளாக.. ஒவ்வொரு கட்டமைப்பிலும்...

காய்ந்த மணற் துகள் - சுழிய நீர் + அதிக வறட்சி மணல்
ஈரப் பத மணல் - குறைந்த நீர் + குறைந்த வறட்சி மணல்
புதை மணல் - அதீத நீர் - குழையும் மணல்..

ஏதோ புரிகிறது.. ஆனால் தெளிவாகவில்லை..

உள்ளர்த்தத்தை மறுபடி படித்து அறிந்து கொள்ள எத்தனிக்கிறேன் பெரியண்ணா..

முக்கனிகள் கொண்டு வந்து விருந்து படைத்துவிட்டீர்கள்..

நன்றிகள் அண்ணலே..!!

இளசு
25-07-2008, 05:44 PM
இயல்பியல் மட்டுமே சொன்னேன் பாமகளே!
அதை சிக்கெனப் பிடித்த பாந்தம் அழகு!

பிறன்மொழிதல் அணி என எண்ணினால்
பொருத்தமான எதையும் எண்ணிப் புரியலாம்..

ஷீ-நிசி
26-07-2008, 01:30 AM
இளசு அவர்களின் கவிதைகளுக்கு நாகராவின் புகழ்மாலைகள் அழகு!


Originally Posted by இளசு View Post
கரையோரம் உன்
கைப்பிடித்து நடந்த என் மேல்
நதிக்குப் பொறாமை

நிலவை அழைத்தபடி
அதுவும் கூடவே....

காதலன் தன் காதலியோடே நதியோரமாய் ஓர் மாலைப்பொழுதினிலே நடந்துசெல்கிறான்.. சற்றே இடப்பக்கமாய் திரும்புகிறான். அவன் அருகினில் ஓடிக்கொண்டிருக்கும் நதியோடு நிலவின் பிம்பமும் சேர்ந்தே செல்கிறது. காதலன் தன் காதலியிடம் கூறுகிறான்.... கரையோரம் நான் உன்னோடு செல்வதால், அதோ பார்.... அந்த நதியும் பொறாமையில் உன்னைப்போலவே ஒரு நிலவை உடன் அழைத்து செல்கிறது... நம்மை பின் தொடர்ந்தபடியே என்று... அவள் சிரிக்கிறாள்.....

என்ன வளமான கற்பனை இளசு ஜி!..... மிக அழகு!

இளசு
02-09-2008, 12:13 PM
ரசித்துச் சிலாகித்த அழகுக்கவிக்கு என் வந்தனம்..


-----------------------------------------------------

மனமும் ஆழ்மனமும் இணைந்து
எண்ணமும் நரம்புத்தசையும் இயங்கி
புடைத்துச் சலித்து, சுத்திகரித்து
படைப்போமே பிறர்க்கு ஒரு கருத்து -
படையலின் பெயர்- நம் எழுத்து!

இளசு
24-09-2008, 09:08 PM
தெய்வமே என்றழைத்தால் மயங்குவதுமில்லை!
தெருப்பொறுக்கி என வெறுத்தால் மருளுவதுமில்லை!
எனக்குத் தெரியும் - நான் இரண்டுமில்லை!
எல்லாரும்போல ஒரு மத்திமன்!

இளசு
16-10-2008, 08:12 PM
ஆட்கள் இறங்கவில்லை..
யாரும் ஏறவுமில்லை..
ஆனாலும் புகைவண்டி
அந்நிலையத்தில்
அமைதியாய் நின்று பின் கிளம்பியது...

தீபா
17-10-2008, 04:59 AM
ஆட்கள் இறங்கவில்லை..
யாரும் ஏறவுமில்லை..
ஆனாலும் புகைவண்டி
அந்நிலையத்தில்
அமைதியாய் நின்று பின் கிளம்பியது...

உங்கள் கவிதை படித்தபின்னர் எனக்கு இது தோன்றியது....

நன்றி நவில்கிறேன்.


மழைக்கொதுங்கிய
சிறு குருவி
நடுநடுங்கிய தேகம் தொட்டு
கூட்டினில் சேர்க்கையில்
ஈரம் காய்ந்து பறந்தது

ஈரமில்லாமல்..

---இன்னொன்று....--------

மழை முடிந்த பொழுதொன்றில்
சிறுபிள்ளை உதைத்த பந்து
சாலையில் சென்ற என்னைக் கவ்வ,
அவளிடம் சேர்க்கையில்
சிரித்தாள்..

அதற்கு என்ன அர்த்தம்?

Maruthu
17-10-2008, 07:55 AM
மழை முடிந்த பொழுதொன்றில்
சிறுபிள்ளை உதைத்த பந்து ..........

அதற்கு என்ன அர்த்தம்?

மாற்றம் நிச்சயம் எப்பொழுது வேண்டுமானாலும்...

அவள் சிறுபிள்ளையாயும்

தென்றல் உதைபந்தாயும்

கவனம் நண்பரே...

அன்புடன்...
மருது.

இளசு
18-10-2008, 12:11 PM
படித்தவுடன், ஒன்றுக்கு இரண்டாய் அழகிய கவிதைகளை வடித்திட்ட
தென்றலுக்கு நன்றியும், பாராட்டும்!

ஒரு படைப்புக்கான உச்ச அங்கீகாரம் இச்செயல்!

இளசு
08-11-2008, 08:38 AM
ஆடை அவிழ்ப்பு நடன அரங்கம்....
அவதானித்துக்கொண்டிருக்கிறேன் -
சகபார்வையாளர் பாவங்களை!

கீதம்
10-01-2011, 11:20 PM
மனமுதிர்ந்துதிர்த்த மலர்களை
மன்றிலிறைத்தீர்,
உதிரிப்பூக்களை என்
விழிநூலில் கோர்த்தெடுத்து
மனவறையில் பத்திரப்படுத்தினேன்,
கதம்பமாலை காய்ந்தாலும் வாசம் வீசும்
கவிமாலையாய் என்னுள்ளே வாசம் செய்யும்!