PDA

View Full Version : திருவாளர் பொறுப்பில்லா பொது ஜனங்களுக்கு.... ஒரு தெனாவட்டுக் கடிதம்



rambal
09-04-2003, 04:37 PM
திருவாளர் பொறுப்பில்லா பொது ஜனங்களுக்கு.... ஒரு தெனாவட்டுக் கடிதம்

அன்புள்ள பொது ஜனங்களுக்கு...
உங்களால் பாதிக்கப்பட்ட சக பொது ஜனம்...
நலமா?
ஆம் நலமாக இருப்பீர்கள்,
உங்கள் நலன் மட்டும் பார்ப்பதால்..
நான் தான் நலமாக இல்லை...
உங்களால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன்...

எப்படித்தெரியுமா?

பதிவான ஓட்டுக்கள் 52 சதவீதம்...
இதில் 30 சதவீதம் பெற்றவன்
ஆட்சிக்கு வருவதால்
பாதிக்கப்பட்டேன்...
கெட்டவனை ஆட்சியில் அமர்த்தினால்
கெட்டதுதான் நடக்கும்...

உடனே நல்லவன் எவன் நிற்கிறான்? என கேட்பீர்கள்...
ஏன் நீங்கள் நல்லவர் இல்லையா?
படிச்சவனை நிற்க சொல்லுங்கள்? என்பீர்கள்...
எத்தனை பேர் தன் மகனை
அரசியலில் ஈடுபடச் சொல்கிறீர்கள்?
ஏன் உங்க பையன் படிச்சவன் இல்லையா?

அரசியல்வாதிக்கு தகுதியே அடிதடிகாரன்னு
நீங்க ஏத்திவிட்டதுதான...

சரி,
அரசியலை விட்டுத்தள்ளுங்க...

பொதுப் பிரச்னைக்கு வருவோம்....
ரோட்ல ஒருத்தன் அடிபட்டுக் கிடக்கிறான்...
என்ன பண்ணனும்...
உடனே,
மருத்தவமனைக்கு தூக்கிட்டுப் போகனும்..
உடனே,
போலீஸ், கேசு, பிரச்னைன்னு வந்தா? இப்படி ஒரு கேள்வியைக் கேட்பீர்கள்...
அதே இடத்தில
உங்க பையனை வச்சுப் பாருங்க?
அப்ப என்ன பண்ணுவீங்க?
ஒரு காக்கா அடிபட்டுடுச்சுன்னா
எல்லா காகமும் கூடிடும்...
நாமலும் கூடுறோம்...
வேடிக்கை பாக்றதுக்காக மட்டுமே..
எங்க சார் போச்சு மனிதாபிமானம்...
நாமெல்லாம் மனிதர்களா? இல்லை வேற எதுவுமா?

சரி,
மனிதாபிமானத்தை விட்டுத்தள்ளுங்க...

அடுத்து பிரிவினைவாதத்துக்கு வருவோம்...
இந்த ஜாதி, மதம்லாம் எங்கிருந்து வந்துச்சு?
காட்டுமிராண்டிகளா
சுத்திக்கிட்டிருந்தப்ப
நமக்கு மேல ஒரு சக்தி இருக்குன்னு
நம்பி,
மனிதனை கடவுளின் பெயரால் திருத்தி
நாகரிகத்தைக் கொண்டு வந்தோம்...
இன்றும்
அதே கடவுளின் பெயரால்
மனிதனைத் திருத்தி
நாகரிகத்தைக் கொன்னு
காட்டுமிராண்டி ஆயிட்டிருக்கிறோம்...
மதங்கள் இப்படின்னா,
ஜாதியப் பத்திக் கேக்கவே வேணாம்...
ஒரு மதத்துக்குள்ளேயே பல ஜாதிகள்..
அந்த ஜாதிக்குள்ள ஆயிரத்தெட்டுப் பிரிவுகள்...
அதுல நான் பெரியவன் நீ தாழ்ந்தவன்...
என்ன சார் இது?
மொத்தத்துல மனிதன் ஒன்னுதானே...
பின்ன ஏன்?
பல எல்லைக் கோடுகளைப்போட்டு
ஒவ்வொரு மனிதனும்
தனித்தீவாப் போயிட்டான்...

சரி,
பெரிய பிரச்னைலாம் நமக்கு எதுக்கு?
இந்தியா புனித நாடு..
அதில் தமிழ்,
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி...
இந்தியாவிலேயே,
நம்மதாங்க இரண்டாவது இடம்..
பெருமையா இருக்கா?
நான் எதுலன்னு சொல்லவே இல்லையே?
அதாங்க எய்ட்ஸ்....
ஒருத்தனுக்கு ஒருதாரம்..
கண்ணகி வாழ்ந்த மண்.. (கண்ணகி சிலைக்கே வழியைக் காணோம்)
பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மண்..
எங்க சார் போச்சு..
நம்ம மாநிலத்தை விட்டு வெளியிலப்போனா
காரித்துப்புறாய்ங்க...

சரி,
நாமலாவது ஏதவது செய்யலாம்னு கிளம்பினா
உனக்கேன் இந்த வேண்டாத வேலை?
இது வீட்டில்...
அவனுக்கு மூளையே கிடையாது..
ஊர் வம்பை விலைக்கு வாங்கப் போறான் பாரு...
இது உங்கள் நடுவில்...( அதாங்க பொ.பா.ஜனம்)

இப்படி எதப்பத்தியுமே
கவலைப்படாமல் எப்படி சார்
இருக்க முடியுது?
இந்த மாதிரி உங்களால நிறைய
பாதிக்கப்பட்டதாலதான் இந்தக் கடிதம் எழுத வேண்டியதாயிடுச்சு...
எது வந்தாலும் எனக்கென்னன்னு
இருக்காம சட்டுபுட்டுன்னு
முடிவு எடுக்கிற வழியைப்பாருங்கள்...

மற்றவை அடுத்த கடிதத்தில்...

சரி வர்ட்டா...

இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட சக பொது ஜனம்..

poo
09-04-2003, 05:36 PM
கடிதத்தை மறக்காமல் போஸ்ட் செஞ்சிடு ராம்...

madhuraikumaran
09-04-2003, 06:57 PM
கடிதத்தை மறக்காமல் போஸ்ட் செஞ்சிடு ராம்...
அட்ரஸ் என்னங்க.. பூ... தமிழகமா?...

ராம்... வழக்கம் போல் 'உங்க கடிதம் அருமை... அற்புதம்... ஆஹா...' அப்படின்னு சொல்லிட்டு மட்டும் போக மனது வரவில்லை. உங்களுக்கு நன்றி சொல்லனும்னா, அது இந்தப் பொறுப்பில்லாத்தனத்தை விட்டொழித்து ஏதாவது செய்யனும்... செய்வேன் என்னாலானதை.

rambal
10-04-2003, 07:05 AM
நன்றி மதுரைக்குமரன் அவர்களே..
ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எல்லோரிடமும் உண்டு..
பொதுநல வழக்குகள் போடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் நான்.
அப்படி நான் பொதுநல வழக்குகள் தொடரும் பட்சத்தில் எத்தனை பேர் எனக்கு ஆதரவு தருவீர்கள்?

இளசு
10-04-2003, 07:11 AM
குடமுழுக்கு பால்குட கதையை மறக்க வேண்டாம் ராம்...

Narathar
10-04-2003, 07:48 AM
அட்ரஸ் என்னங்க.. பூ... தமிழகமா?...


இல்லை காதில பூ தமிழகம்!!

madhuraikumaran
10-04-2003, 04:53 PM
குடமுழுக்கு பால்குட கதையை மறக்க வேண்டாம் ராம்...
அது என்ன கதை இளையவரே?...

ராம்... எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு. !

gankrish
11-04-2003, 06:36 AM
ராம் நான் இருக்கேன். நீங்கள் கோடு போடுங்கள் நாங்கள் ரோடு போடுகிறோம்.

karikaalan
11-04-2003, 06:58 AM
ராம்பால்ஜி!

கடிதம் நல்லாவே இருக்குது; கருத்துக்களும் ஒப்புதலே.

கோர்ட், கீர்ட்டுன்னு போனா.... ஆட்டோ வரும் வீட்டுக்கு.

===கரிகாலன்

aren
12-04-2003, 03:52 PM
ராம், அருமை. ஒவ்வொருவரும் தங்களுடைய வாக்குச்சீட்டை சரியாக பயன் படுத்தினால் நாட்டில் நல்லாட்சி மலரும்.

unwiseman
12-04-2003, 06:30 PM
நலமா?
ஆம் நலமாக இருப்பீர்கள்,
உங்கள் நலன் மட்டும் பார்ப்பதால்..
நான் தான் நலமாக இல்லை...
உங்களால் நிறைய பாதிக்கப்பட்டுள்ளேன்...

அருமையான வரிகள். ஆனால் ஒரு சந்தேகம்:


பதிவான ஓட்டுக்கள் 52 சதவீதம்...
இதில் 30 சதவீதம் பெற்றவன்
ஆட்சிக்கு வருவதால்
பாதிக்கப்பட்டேன்...

இதில் சக பொ.ஜ. எதில் அடங்குவார்? 100-52=48%-லா? 52-30=22%-லா? எதுவானாலும் அவர் 100%க்குள்ளே அடங்கி விடுகிறார். பின் மற்றவரை அவர் எப்படி குற்றம் சொல்ல இயலும்?

நீங்கள் சொல்லும் பொதுநல வழக்குகள் நிச்சயம் முயற்சிக்கப்பட வேண்டியவை. சொல்லுங்கள் எங்கள் உதவி எப்படி தேவைப்படுமென்று.

rambal
13-04-2003, 12:49 PM
நான் இங்கு குறிப்பிடுவது
பொறுப்பில்லா பொதுஜனங்களைத்தான்..
சக பொது ஜனம் என்பது பொறுப்புள்ள என்ற அர்த்தத்தில்..
மற்றபடி உங்கள் ஆதரவிற்கு நன்றி..