PDA

View Full Version : தேவதையின் சாயல் நீ!



lenram80
07-11-2016, 11:40 AM
('ரெக்க' படத்தில் வரும் 'கண்ணம்மா.... கண்ணம்மா...' பாட்டிற்கு எனது வடிவம். தந்தை தன் மகளுக்காக பாடுவது போல)


செல்லம்மா... செல்லம்மா...
சிரிக்கும் வளர்பிறை!
சொல்லம்மா... சொல்லம்மா...
இனிக்கும் தமிழுரை!

துள்ளிக் குதித்து வந்தால் - அம்மம்மா
பூ கம்பமே
சொல்லிக் கொடுத்தது போல்
நெஞ்சுக்குள் கொஞ்சுமே!

தரை தொட்டு
துளிர் விட்டு
முகிழ் முட்டு நீ!

பாரதிய பாட்டு பாட
வச்ச துந்தன் பூவிழி!
தூரத்திலெ பாக்கும் போது
தேவதையின் சாயல் நீ!

சாமியே உனை தூக்கவே
தாயாகிப் போனதே!
பூமியே நீ தூங்கவே
பாயாகிப் போனதே!

செல்லம்மா... செல்லம்மா...
கவிச் சொல்லம்மா...
என் இதி காசம் நீயம்மா!

பொக்க வாயி சிரிப்பினிலே
சொக்கிப் போகும் உலகமே!
துக்கம் எனும் சொல்லைக் காணும்
அக்கம் பக்கம் அலசுமே!

வானமே உனை பாக்கவே
மழையோடு வந்து போகுமே!
கூடவே கொடி மின்னலும்
இடி வாழ்த்துப் பாடல் பாடுமே!

செல்லம்மா... செல்லம்மா...
கவி சொல்லம்மா...
என் விதி வாசம் நீயம்மா

செல்லம்மா... செல்லம்மா...
சிரிக்கும் வளர்பிறை!
சொல்லம்மா... சொல்லம்மா...
இனிக்கும் தமிழுரை!

- லெனின்

Mano60
26-11-2016, 12:43 PM
அருமை மகளின் போக்கை வாய் சிரிப்பை போற்றி பேசும் இந்த கவிதை சிறப்பாக உள்ளது. தந்தையின் பாசம் இயற்கையின் எழில் தோற்றங்களை எல்லாம் மகளின் வடிவத்தில் காண்பது பாசத்தின் உச்சம். சிறப்பான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே.

ravisekar
09-12-2016, 10:40 PM
பாரதியைப் பாட்டுப்பாட வச்சது உந்தன் பூவிழி.

உன்மன்த்தம் கொள்ள வச்ச வரிகள் ஐயா. மெச்சி மகிழ்கிறேன்.